VINAYAGAR 108 POTRI IN TAMIL | VINAYAGAR ALL MANTRAS
VINAYAGAR 108 POTRI IN TAMIL:
நமது வாழ்வின் தடைகள் அனைத்தையும் நீக்கும் முழு முதல் கடவுளான கணேஷரின் அவதார நாள் தான் இந்த விநாயகர் சதுர்த்தி, இந்த விஷேமான விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் விநாயகரை மனமுருக வேண்டினால் அவர்களின் தடைகள் அனைத்தையும் விநாயக பெருமான் தீர்த்து வைப்பார்.
தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான் ஆவார். இவரை முதலில் வணங்காமல் நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.
VINAYAGAR 108 POTRI IN TAMIL:
விநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் கீழே குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.
நாம் விநாயக பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கும் பொழுது அருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி கீழ்கண்ட இந்த விநாயகர் போற்றி மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக நன்றாக நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.
VINAYAGAR 108 POTRI IN TAMIL:
ஓம் விநாயகனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் அமிர்த கணேசா போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஆபத் சகாயா போற்றி ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
விநாயகர் துதி:
ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா
ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா..
ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா
ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா..
ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா
ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா..
ஓம் கருணாகரனே சரணம் கணேசா
ஓம் சுருதிப் பொருளே சரணம் கணேசா..
ஓம் கலியுக நாதனே சரணம் கணேசா
ஓம் கருணையூற்றே சரணம் கணேசா..
ஓம் துயர் துடைப்பவனே சரணம் கணேசா
ஓம் வேத முதல்வனே சரணம் கணேசா..
ஓம் வேதாந்த சாரமே சரணம் கணேசா
ஓம் ஞான மூர்த்தியே சரணம் கணேசா..
ஓம் தோஷம் தீர்ப்பவனே சரணம் கணேசா
ஓம் நவக்கிரஹ நாயகனே சரணம் கணேசா..
ஓம் வினை தீர்க்ககும் வினையாகனே சரணம் கணேசா
ஓம் எங்கும் நிறைந்த இறைவனே சரணம் சரணம் சரணம் கணேசா..!
விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்
பொருள்:
கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். மனித உடலும் யானை முகத்தையும் கொண்ட கஜமுகக் கடவுளே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள் என்று மனதிற்குள் நினைத்து கீழ்கண்ட கணபதியின் மூல மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக அருமையான பலன்களை நாம் பெறலாம். அதோடு நமது தோஷங்கள் அனைத்தும் விலகி எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
கணபதி மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
கணபதி மூல மந்திரத்தின் நன்மைகள்:
கணபதி மூல மந்திரம் இருபத்தெட்டு எழுத்துக்களை கொண்டுள்ளது இம்மந்திரம் ஏராளமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.
100 கோடி சூரியனுக்குச் சமமான மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் ஜம்
கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
வரேண்யம் கணபதயே க்லீம்
ஹசகசல ஹ்ரீம்
பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு சஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத் சர்வ
ஐனம்மே வசமானய ஸ்வாஹா.
விநாயகப் பெருமான் 12 ஸ்லோகங்கள்:
விநாயகப் பெருமான் கல்வி, செல்வம் போன்ற அனைத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். விநாயக பெருமானின் முழு அருளை பெறுவதற்கு இந்த பன்னிரெண்டு ஸ்லோகங்களை தவறாமல் கூறுங்கள்.
விநாயகர் ஸ்லோகம்:1
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
விநாயகர் ஸ்லோகம்: 2
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
விநாயகர் சகஸ்ரநாமம்: 3
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
விநாயகர் ஸ்லோகம்: 4
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
கணபதி ஸ்லோகம்: 5
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
விநாயகர் ஸ்லோகம்: 6
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
விநாயகர் ஸ்லோகம்: 7
ஓம் அதூன இந்த்ர லட்மந்தம்
சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தட்ணேன வாஞ்சா
கல்பலதா கணபதி.
விநாயகர் ஸ்லோகம் : 8
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
விநாயகர் ஸ்லோகம் : 9
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
விநாயகர் ஸ்லோகம் : 10
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
விநாயகர் ஸ்லோகம் : 11
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
விநாயகர் ஸ்லோகம் : 12
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.