ANIMALS IN TAMIL | உலகில் மிகவும் ஆபத்தான 10 விலங்குகள்!

ANIMALS IN TAMIL | உலகில் மிகவும் ஆபத்தான 10 விலங்குகள்!

ANIMALS IN TAMIL :

உலகில், மனிதர்களை போல் விலங்குகளும் பெருமளவில் வாழ்கின்றன. அவை மனிதர்களுக்கு கொடுக்கும் பிரச்சனையின் அளவைப் பொறுத்து அவை ஆபத்தானவையா இல்லையா என்பதைப் பொருத்து மனிதர்கள் அதனுடன் பழகுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விலங்குகள் இறங்கு வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ANIMALS IN TAMIL |

 10. கேப் எருமை (Cape Buffalo)

 9. கூம்பு நத்தை (Cone Snail)

 8. தங்கநிற டார்ட் விஷ தவளை (Golden Poison Dart Frog)

 7. பெட்டி ஜெல்லிமீன் (Box Jellyfish)

 6. பஃபர்ஃபிஷ் (Pufferfish)

 5. கருப்பு மாம்பா (Black Mamba)

 4. உப்பு தண்ணீர் முதலை (Saltwater Crocodile)

 3. டெட்ஸே ஈ (Tsetse Fly)

 2. கொசு (Mosquito)

 1. மனிதர்கள் (Human)

10. ANIMALS IN TAMIL | கேப் எருமை (Cape Buffalo)

கேப் எருமை தனியாக இருந்தால் எப்போதும் யாரையும் தாக்குவதில்லை. ஆனால், தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் உணவுக்காக செல்கையில் கூட்டமாக கடக்கின்றன. அந்த நேரத்தில் தனது குட்டியையோ அல்லது கூட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு எருமை தாக்கப்பட்டாலோ, தாக்கிய நபரை கூட்டமாக சேர்ந்து கடுமையாக தாக்கி கொன்றுவிடும். எனவே இந்த விலங்கு மிகவும் ஆபத்தானது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சினிமா திரைப்படங்களில் மரணத்தின் அறிகுறியாக எருமைகள் காட்டப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

9. ANIMALS IN TAMIL | கூம்பு நத்தை (Cone Snail)

வெப்பமண்டலத்தில் உள்ள சூடான நீரில் கூம்பு நத்தைகள் காணப்படுகிறது. இது பழுப்பு வெள்ளை பளிங்கு கற்கள் போல் காட்சியளிக்கும். பாறைகளின் இடுக்கில் அல்லது பாறைகளுக்கு அருகில் உள்ள மணல் அடியில் புதைந்து இருப்பதை காணமுடியும். இந்தவகை நத்தையானது உயரத்தில் 4 முதல் 6 அங்குலங்கள் வரை வளர்கிறது. அதன் பற்களில், கொனோடாக்சின் எனப்படும், விஷம் உள்ளது. இந்த நத்தை கடித்தால், நரப்பு செல்களின் செயல்பாடுகள் முடங்கி பக்கவாதம் ஏற்படும்.

8. ANIMALS IN TAMIL | தங்கநிற டார்ட் விஷ தவளை (Golden Poison Dart Frog)

தவளை இனத்தில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே மிகவும் ஆபத்தானதாகும். அதில், ஒன்று தான் தங்க டார்ட் விஷத் தவளை. இதன் விஷம் டாட்ராச்சோடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஒரு தவளையானது 10 நபர்களைக் கொல்லும் அளவிற்கு விஷம்தன்மையைக் கொண்டிருக்கும். இந்த வகை தவளைகள், கடல் அரிப்பினால் அழிந்து வருகிறது. எனவே இது அழிவுநிலை விலங்கின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும், 6,300 க்கும் அதிகமான தவளை இனங்கள் உள்ளன!

7. ANIMALS IN TAMIL | பெட்டி ஜெல்லிமீன் (Box Jellyfish)

இந்தோ-பசிபிக் கடலில் பெரும்பாலும் இந்த பெட்டி ஜெல்லி மீன்கள் காணப்படுகிறது. இந்த முதுகெலும்பற்ற ஜெல்லி மீன்கள், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் உலகின் விஷமான மீன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 10 அடி நீளம் வரை வளர்கின்றன. ஒரே சமயத்தில், இதனுடைய விஷத்தன்மையானது மனிதர்களின் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் தோல் செல்களை தாக்கி செயலிழக்கச் செய்யும் அளவிற்கு நச்சுத் தன்மையை கொண்டுள்ளது.

6. ANIMALS IN TAMIL | பஃபர்ஃபிஷ் (Pufferfish)

பஃபர்ஃபிஷ் உலகம் முழுவதும் வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. இது உலகின் மிகவும் விஷத்தன்மை கொண்ட மீனாக கருதப்படுகிறது. ஆனால், இந்த மீன் வகையை உலகின் மிகச் சிறந்த பயிற்சி பெற்ற சமையல்காரர்கள் மட்டுமே உணவாக தயாரிக்க முடியும். இந்த மீ்ன் டெட்ரோமோடாக்சின் சயனைடை காட்டிலும் 1,200 மடங்கு விஷத்தன்மையை கொண்டதாக இருக்கும். இதனுடைய நாக்கு மற்றும் உதடுகளை நாம் தொட நேரிட்டாலும் கூட நாம் இறக்க நேரிடலாம்.

5. ANIMALS IN TAMIL | கருப்பு மாம்பா (Black Mamba)

இது பாம்பு வகையை சேர்ந்ததாகும். கிங் கோப்ரா போன்ற பாம்பு இனங்கள் மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும், கருப்பு மாம்பா வேகமாக பாய்வதால் மிகவும் ஆபத்தானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது 14 அடி நீளம் வரை வளரக்கூடியது. இந்த பாம்பு இனம், அச்சுறுத்துபவரை மட்டுமே தாக்குகிறது. இந்த பாம்பினம் மனிதர்களை தாக்கும் பொழுது பத்து நபருக்கு பயன்படும் விஷம் ஒருவர் உடலில் மட்டுமே பாயும் அளவிற்கு தாக்கும்.

4. ANIMALS IN TAMIL | உப்பு தண்ணீர் முதலை (Saltwater Crocodile)

இந்த வகை உப்பு தண்ணீர் முதலையானது தனது பாதையில் கடந்து போகும் எந்த ஒரு உயிரினத்தையும் மிகவும் ஆக்ரோசமாக தாக்கும் குணம் கொண்டது. இது எளிதில் இரையை துண்டாக்கவும் செய்யும். இந்த பயங்கரமான முதலையானது 23 அடி நீளம் வரை வளரும். ஆண்டுதோறும் உப்பு தண்ணீர் முதலையால் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இதன் தாடை உப்பு தண்ணீரால் வலிமையாக இருக்கிறது.

உப்பு நீர்ல் வசிக்கும் முதலையால் தாக்கப்பட்டு, குறிப்பாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர்

3. ANIMALS IN TAMIL | டெட்ஸே ஈ (Tsetse Fly)

இது மிகச்சிறிய வகை பூச்சியாகும். இது உலகின் மிக ஆபத்தான பூச்சியாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சஹாரா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த வகையைச் சேர்ந்த ஈ தான் முக்கியமாக ஆப்பிரிக்காவில் ஸ்லீப்பிங் நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளது. இந்த ஈயை தவிர்பதற்கு அடர் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

2. ANIMALS IN TAMIL | கொசு (Mosquito)

உலகில் 3000 க்கும் மேற்பட்ட இனங்கள் பரவி காணப்படுகிறது. இது ஒவ்வாரு ஆண்டும் இரண்டாவது அதிகப்படியான மரணங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இதன் மூலம் தான் உலகின் பல கொடிய வைரஸ்கள் பரவியுள்ளன. இந்த உலகினில் வாசிக்கும் மக்களில் சரிபாதி விகிதத்தினர் கொசுவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது.

1. ANIMALS IN TAMIL | மனிதர்கள் (Human)

எல்லாவற்றிக்கும் மேலாக மனிதர்களான நாமும் விலங்குகளாக தான் நடந்துக் கொள்கிறோம். பத்தாயிரத்திற்குகும் அதிகமான வருடங்களாக மனிதர்களால் மனிதர்களுக்கு இறப்பு ஏற்படும் விகிதமானது அதிகமாகி கொண்டே செல்கிறது. இயற்கையை அழிப்பது, புவி வெப்பமடைதலுக்கு காரணம், காடுகள் மற்றும் பவளப்பாறைகளை பணத்திற்காக அழிப்பது போன்ற அனைத்து குற்றங்களிலும் மனிதனே முக்கியமான காரணமாகிறான்.

அது மட்டுமல்லாமல் இன்னும் அநேக விஷயங்களில் நாம் மிகவும் அரக்கத்தனமாக நடந்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து வருகிறோம்.இவை அனைத்திலும் மனிதர்கள் மனிதனை அழிப்பதே கொடூரமானதாக உள்ளது. எனவே தான் மனித இனமானது, மிகவும் கொடூரமான விலங்குகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

Share the knowledge