CALCIUM IN TAMIL | ஆரோக்கியத்தில் கால்சியத்தின் பங்கு

CALCIUM IN TAMIL | ஆரோக்கியத்தில் கால்சியத்தின் பங்கு  

CALCIUM IN TAMIL:

நமது உடல் பல விதமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அவையாவன கால்சியம் தாது, பொட்டாசியம் தாது, சோடியம் பாஸ்பரஸ் தாது, மெக்னீசியம் போன்ற பலவகையான மாக்ரோ மினரல்ஸ் நமது உடலில் உள்ளது. எலும்பு வலுபெற கால்சியம் மிகவும் அவசியம். பெரும்பாலான  சதவீதத்தில் கால்சியம் நமது உடலில் எலும்பு மற்றும் பற்களில் உள்ளது. மீதமுள்ள ஒரு சதவீதம் மட்டும் ரத்தம் மற்றும் தசைகளிலும் அதை தவிர முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் இதயத்திலும் கால்சியம் காணப்படுகிறது. நமது இரத்தத்தில் இருக்க வேண்டிய கால்சியத்தின் அளவு 9-11 mg/dl ஆகும். இரத்தத்தில் இருக்க வேண்டிய கால்சியத்தின் அளவு எப்பொழுதெல்லாம் குறைகிறதோ அப்பொழுது அவையனைத்தும் எலும்புகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

CALCIUM IN TAMIL
  1. ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ளும் கால்சியத்தின் அளவு?
  2. கால்சியத்தின் RDA மதிப்பு mg/day:
  3. கால்சியத்தின் செயல்பாடு
  4. நாம் அருந்தும் பால் நமக்கு தேவையான கால்சியம் தருகிறதா?
  5. பாலைத் தவிர கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்!
  6. பச்சை இலை காய்கறிகள்
  7. மீன்கள்
  8. தானியங்கள்
  9. நட்ஸ் மற்றும் எண்ணெய் விதைகள்
  10. பருப்பு வகைகள்
  11. வைட்டமின் டி
  12. அமிலத்தன்மை
  13. லாக்டோஸ்
  14. கால்சியம் உறிஞ்சுதலுக்கு தடையாக இருக்கும் காரணிகள்:

CALCIUM IN TAMIL| ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ளும் கால்சியத்தின் அளவு?

மனித உடலுக்கு பல விதமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச் சத்துக்களில் ஏதேனும் குறை ஏற்பட்டால் நாம் பலவிதமான நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க நாம் குறைந்த பட்சம் அளவிற்கு கட்டாயம் கால்சியத்தை எடுத்துக் கொள்வது இன்றியமையாதது.

கால்சியத்தின் RDA மதிப்பு mg/day:

        ஆண்கள்-600 mg, 

        பெண்கள்-600 mg,                                    

       கர்ப்பிணி பெண்கள் -1200 mg,

       பாலூட்டும் தாய்மார்கள்-1200 mg,

       பிறந்த குழந்தை(0-1) _500 mg,

       குழந்தைகள் (1-9வயது)-600 mg,

       ஆண்& பெண்(10-17வயது)-800 mg.

CALCIUM IN TAMIL | கால்சியத்தின் செயல்பாடு:

கால்சியம் எலும்பு உருவாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகளில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் முக்கியமானவை. அதில் 39.9% கால்சியம் எலும்பு எடையில் உள்ளது. கால்சியமானது பல் உருவாக்கத்திலும், உடலின் வளர்ச்சியிலும், இரத்தம் உறைதலிலும், தசை சுருக்கத்திலும், மற்றும் ஹார்மோன் சுரத்தலிலும் முக்கியமான பங்கை வகிக்கிறது.

CALCIUM IN TAMIL | நாம் அருந்தும் பால் நமக்கு தேவையான கால்சியம் தருகிறதா?

நாம் தினமும் அருந்தும் பாலில் கால்சியம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் நம்மில் பல பேர் தினந்தோறும் பால் அருந்தினால் மட்டும் போதும் நம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தினந்தோறும் அருந்தும் மாட்டு பாலில் கிட்டத்தட்ட ஒரு டம்ளர் 100 ml பாலில் 120 mg கால்சியம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு தேவையான கால்சியத்தை நம் உடல் பெற வேண்டும் என்றால் நாம் பாலை லிட்டர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு எடுத்துக் கொள்வது சாத்தியமில்லை மற்றும் உடல் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாம் அருந்தும் பாலில் இருந்து நம் உடலுக்கு தேவையான கால்சியமானது போதுமானளவு கிடைக்கிறது என்பது உண்மை. ஆனால் ஒரு நாளைக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை.

பாலைத் தவிர கால்சியம் அதிகம் உள்ள உணவுகள்!

பச்சை இலை காய்கறிகள்:

அகத்திக்கீரை, கறிவேப்பிலை, காலிஃப்ளவர் இலை, முருங்கை கீரை, வெந்தயக்கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் உள்ளன.

மீன்கள்:

மாமிசத்தில் கட்டலா மீனிலும், இறாலிலும் கால்சியம் கிடைக்கின்றன.

தானியங்கள்:

தானியங்களில் கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளன.

நட்ஸ் மற்றும் எண்ணெய் விதைகள்:

நாம் உணவில் அன்றாடம் சேர்க்கும் முக்கியமான சமையல் பொருள்களான எள்ளு, உலர்ந்த தேங்காய், சூரிய காந்தி விதைகள், சோயா பீன்ஸ், பாதாம் ஆகியவற்றில் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது.

பருப்பு வகைகள்:

பயிரு வகைகளாக கருதப்படும் கொள்ளு, ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அதைத்தவிர அனைவரும் விரும்பி உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்தும் நமக்கு குறைந்த அளவு கால்சியமே கிடைக்கிறது.

நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலுக்கு சில காரணிகள் உதவுகின்றன

வைட்டமின் டி:

வைட்டமின் டி ஆனது புரத உற்பத்தியை சரி செய்கிறது. 1-25 டிஹட்ராக்சிகோலி கால்சிபெரால் கால்சியமானது பைண்டிங் புரத உற்பத்தியை நமது உடலில் நன்றாக சரி செய்கிறது. இந்த புரத உற்பத்தியை சரி செய்வதினால் நமது உடலில் கால்சியம் உறிஞ்சுதல் அதிகரிக்கப்படுகிறது.

அமிலத்தன்மை:

நமது வயிற்றினில் பலவகையான அமிலங்கள் உள்ளன. ஒவ்வொரு அமிலமும் ஒவ்வொரு விதமான பணியைச் செய்கின்றன. நமது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையில் கால்சியமானது எளிதாக கரையக்கூடிய மற்றும் உறிஞ்சக்கூடிய பண்பைக் கொண்டுள்ளது .

லாக்டோஸ்:

லாக்டோஸ் பலவிதமான பணிகளைச் செய்கிறது. இது நமது வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி மற்றும் எலும்பு உறுதியிலும் முக்கியப் பங்காற்றுவதோடு குழந்தைகளுக்கு லாக்டோஸ் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

CALCIUM IN TAMIL | கால்சியம் உறிஞ்சுதலுக்கு தடையாக இருக்கும் காரணிகள்:

  • ஆக்சாலிக் அமிலம் இவை அரைக்கீரை, சிறுகீரை ஆகியவற்றில் காணப்படுகிறது. ஆக்சாலிக் அமிலமானது கால்சியம் தனிமத்துடன் வினையுரியும் சமயத்தில் கரையாத்தன்மை கொண்ட கால்சியம் ஆக்சலேட் ஆக மாற்றம் அடைவதினால் நமது உடல் மூலமாக  உறிஞ்சப்படுவதில்லை.
  • பைடிக் அமிலம் முழு தானியங்களில் இருப்பதால் இவை கால்சியம் உறிஞ்சுதல் குறைகிறது.
  • நமது மனச்சோர்வு சமயத்தில் மற்றும் பதற்றம் அடையும் சமையம் ஆகியவற்றின் போது கால்சியம் உறிஞ்சுதலானது மிகவும் குறைவாக இருக்கும்.
  • எப்பொழுதெல்லாம் நமது உடலில் குடல் இயக்கமானது  மிக அதிகமாக இருக்கிறதோ அப்பொழுது கால்சியம் உறிஞ்சுதலானது மிகவும் குறைவாக இருக்கும்.              
  • உடற்பயிற்சி இல்லாத பொழுதும் உறிஞ்சுதல் குறைவாக இருக்கும்.
  • பெரியவர்களுக்கு கால்சியம்  உறிஞ்சுதல்  குறைவாக நடைபெறும். முக்கியமாக மங்கையர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் குறைவதால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.
  • நாம் குடிக்கும் காபியில் உள்ள கஃபைன் அதிக அளவு எடுத்துக் கொள்வதால் கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும் இதனால் உறிஞ்சப்படுவது குறைகிறது.
  • சில மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் கால்சியம் உறிஞ்சுதல் பாதிக்கப்படுகிறது.
Share the knowledge