JEE IN TAMIL | JEE ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு
JEE IN TAMIL | ஜேஇஇ அறிமுகம்:
ஜேஈஈ JEE எனப்படும் ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் என்ற ஒரு தேர்வானது, மத்திய அரசின் என் டி ஏ எனப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்ற ஒரு அமைப்பால் நடத்தப்படுகிறது.
இந்த NDA (National Testing Agency ) எனப்படுவது தேசிய அளவில் பொறியியல், மருத்துவம் மற்றும் பார்மசி, விவசாயம் போன்ற படிப்புகளுக்கான பல்வேறு விதமான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
JEE IN TAMIL | 2020-21 மாணவர்களுக்கு விலக்கு:
தமிழ்நாட்டில் தற்பொழுது JEE எனப்படும் முதன்மை தேர்வானது முக்கியமான பேசும் பொருளாகியுள்ளது, முன்னதாக, 2023 ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயமாக இருந்தது. ஆனால், மாணவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் SSLC பொதுத் தேர்வின் பொழுது மதிப்பெண்கள் வழங்கப்படாமல் தேர்ச்சி பெற்றதாக மட்டும் அறிவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் இதர அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு விலக்கு கொடுப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
JEE IN TAMIL | ஜேஇஇ என்றால் என்ன?
தமிழ்நாட்டில் அநேக பெற்றோர்களும், மாணவர்களும் உயர்கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இருந்த போதிலும், உயர்தரமான, வலிமையான உயர்கல்வி நிறுவனங்களைப் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை போதுமான அளவில் கொண்டிருப்பது அவசியமானதாகிறது.
தமிழ்நாட்டில் நடந்து வரும் அண்ணா பல்கலைக்கழகத்தை தவிர, உயர்கல்வி வழங்குவதில் இந்திய அளவில் புகழ் பெற்ற மற்றும் ஆராய்ச்சிப் பணியில் பல சாதனைகள் புரிந்து மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரபல உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது என்பது பல இளைஞர்களின் கனவாகும்.
நாட்டினுடைய உயர்கல்வி சேவையில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT), இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது. மிகச்சிறந்த முறையில் கற்பித்தல், சிறந்த அனுபவம் மற்றும் திறனும் கொண்ட கல்லுாரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் திறன்களை அதிகரிக்கும் உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றை இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.
JEE IN TAMIL | தேர்வு நடத்துவது யார்?
தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில் நுட்ப கழகங்கள் மற்றும் பிற மத்திய நிதியுதவியை பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட கல்லுாரி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு(BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது.
இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம் இந்தத் தேர்வை நாடு முழுவதும் நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த கல்லுாரி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், இத்தேர்வு இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், இந்தியாவில் இயங்கி வரும் ஐஐடி கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வானது அவசியமாகும். குறிப்பாக ஜேஇஇ முதன்மை தேர்வினில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் இணைந்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெற முடியும் என்பது மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
JEE IN TAMIL | எங்கே படிக்கலாம்?
BE/BTech படிப்புகளில் சேர்க்கை பெற 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75% பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு (SC/ST) இந்த எண்ணிக்கை 65% ஆகும். மேலும், கணிதம், இயற்பியலை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். வேதியியல்/ உயிரியல்/ உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
20 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
JEE IN TAMIL | என்ன படிக்கலாம்?
அறுபதுக்கு மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது. B.Tech. B.Pharm, B.Design, B.Arch., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். M.Pharm, M.Sc, M.Tech, M.B.A, போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளிலும் இணைந்து படிக்கலாம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம்.
JEE IN TAMIL | யார் எழுதலாம்?
12ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இந்த தேர்வை எழுதலாம். அதாவது 12ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த அந்த அண்டைத் தொடந்து வருகின்ற அடுத்த இரண்டு ஆண்டிகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும்.
JEE IN TAMIL | தேர்வு திட்டம்:
இந்த நுழைவுத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதற் தாள் BE/Btech படிப்பதற்காக நடத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இருக்கும்.
முதற் தாள் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு ‘அ’ வில் வெளியிலிருந்து கேள்விகள் வரும், பிரிவு’ ஆ’ வில் ஆப்டிடியூட் கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்கள் ஆகும். இதில் இரண்டாவது தாளானது ஆர்க்கிடெக்சர் படப்பில் சேருவதற்காக நடத்தப்படுகிறது.
JEE IN TAMIL | தயார் செய்வது எப்படி?
12ம் வகுப்பில் வரும் கணிதம், அறிவியல், வேதியல் பாடங்களை அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். வலுவான அடிப்படை கொண்டிருக்க வேண்டும்.முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் மூலம் தேர்வின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எழுதுவது நல்லது. JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு, மத்திய கல்வி அமைச்சகம் நேஷனல் டெஸ்ட் அபியாஸ் எனும் கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் உயர்தர மாதிரித் தேர்வுகளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். தேர்வுகளை சுலபமாகப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவற்றை இணையத் தொடர்பு இல்லாதபோதும் எழுதலாம்.
CBSE மற்றும் STATE BOARD பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படும். எனவே, பள்ளியில் பாடங்களை ஆர்வமுடன் படித்து ஆழமாகப் படித்து புரிந்து வைத்திருந்தால் மட்டும் போகும் பேறெதும் மிகப்பெரிய தயாரிப்பு ஏதும் இல்லாமல் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முடியும். ஒருசில மாணாக்கர்கள் இத்தேர்வை இலக்காக குறிவைத்து உயர்நிலை வகுப்புக்கு வந்த உடனேயே தங்களின் தயாரிப்பை ஆரம்பித்து விடுவார்கள்.
பாடத்திட்டத்தை ஊன்றி படித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டு படிக்க வேண்டும். பழைய வருடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்தால் மட்டும் போதாது. எல்லா விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வண்ணம் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப் பழகுவது அவசியம். பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு பல மாதிரித் தேர்வுகளை எழுதலாம். இதற்காக சிலர் பயிற்சி மையகளில் சேர்ந்து தயாரிப்பை மேற்கொள்வார்கள். இது போன்ற பயிற்சி மையங்களில் ஒரு நாளில் இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
JEE IN TAMIL | தேர்வு நடைமுறை:
இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. இரண்டு மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மாணாக்கர்கள் இத்தேர்வுகளை எழுத முடியும்.
JEE IN TAMIL | ஜே.இ.இ. மெயின்:
இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் இரு நாள்களுக்கும் தேர்வு நேரம் 3 மணி நேரம். முதல் தாள் ஆன்லைன் தேர்வாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். இதில் MATHS, PHYSICS, CHEMISTRY ஆகிய பாடங்களிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். மூன்று பாடங்களுக்கும் சம அளவு மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.
இரண்டாவது தாளில் கணக்கு, வரைபடம் மற்றும் ஆப்டிடியூட் ஆகியவைகளில் இருந்து கேள்விகள் வரும் ஆப்டிடியூட் கேள்வியானது விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும்.
சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே பதில் தெரியாத கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிடலாம்.
JEE IN TAMIL | ஜே.இ.இ. அட்வான்ஸ்:
JEE Main தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 2,24,000 பேர் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 30. 2 ஆண்டுகளுக்குள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டிலோ நடப்பு ஆண்டிலோ 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த ஐ.ஐ.டியிலும் ஏற்கெனவே அட்மிஷன் பெற்றிருக்கக் கூடாது.
ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்திற்கு மேல் மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு அதிகபட்சமாக 13.5 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
JEE IN TAMIL | தேர்வு மையங்கள்:
தமிழ் நாட்டைப் பொறுத்தளவில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை போன்ற மாநகராட்சிகளில் இத்தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் அவர்களின் இருப்பிடத்திற்கு எந்த தேர்வு எழுதும் மையம் அருகினில் உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். மாணவர்கள் அனைவரும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாதாகவே சென்று விடுவது அவர்களின் பரபரப்பைக் குறைக்கும்.