HAPPINESS IN TAMIL | மகிழ்ச்சியாக இருக்க 10 முக்கிய காரணிகள்

HAPPINESS IN TAMIL | மகிழ்ச்சியாக இருக்க 10 முக்கிய காரணிகள்

 HAPPINESS IN TAMIL:

மகிழ்ச்சி என்பது தானாக வராது. அதை நீங்கள் தான் வளர்க்க வேண்டும். தாங்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பொருத்து மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சி என்பது ஏற்படும். நீங்கள் உணர்வுபூர்வமாக நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

HAPPINESS IN TAMIL

1. HAPPINESS IN TAMIL | முடிந்ததை மட்டுமே செய்யுங்கள்:

உங்களால் மாற்றக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் சிந்தியுங்கள். உங்களால் எந்த அளவு ஒரு விஷயத்தை நன்றாகச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நீங்கள் செய்ததை ஏற்றுக்கொண்டு பின்பு அதை அப்படியே விட்டுவிடுங்கள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு கொண்டு நீங்களே செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

2.  HAPPINESS IN TAMIL | பிடிக்காத விஷயங்களை சிந்திக்காதீர்கள்:

எப்பொழுதும் உங்கள் மனதிற்கு பிடிக்காத விஷயங்களை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விடுங்கள் அல்லது அவற்றை நீங்கள் முற்றிலும் மறந்துவிடுங்கள். மோசமான உணர்வுகளான மனக்கசப்பு மற்றும் எரிச்சல் போன்றவை அவைகளை உணரும் நபர்களை மட்டுமே வெகுவாகப் பாதிக்கிறது. அவற்றை உருவாக்கும் நபர்களை ஒரு பொழுதும் பாதிப்பதில்லை.

3.  HAPPINESS IN TAMIL | இயற்கையை நேசியுங்கள்:

தங்களின் உணர்வு வட்டத்தை விட்டு சற்று வெளியே வாருங்கள். பூமியில் உள்ள அழகான விஷயங்களான மரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள்  போன்ற அனைத்து உயிரினங்களும் மனிதர்களை மிகவும் மகிழ்விக்கின்றன. உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டால், இயற்கையை உங்களிடம் கொண்டு வாருங்கள். அது உங்கள் வீட்டிலுள்ள ஒரு ஜன்னல் வழியாக கூட இருக்கலாம். ஒரு மருத்துவமனை படுக்கையிலிருக்கும் நோயாளி, மரங்கள் அல்லது இயற்கையின் காட்சிகளை பார்வையிடுவதன் மூலம் விரைவாக குணமடைகிறார்களாம்.

4. HAPPINESS IN TAMIL | மக்கள்தொடர்பு:

மக்கள் தொடர்பானது மிகவும் முக்கியம் நாம் எல்லோருக்கும் எந்தவொரு விஷயத்தையும் விரைந்து முடிக்க மக்கள் தொடர்பு அவசியமாகும். நீங்கள் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டு இருந்தால், யாராவது உங்களுடன் நேரம் செலவழிக்க விரும்பினாலும் கூட உங்களால் அவர்களுடன் நேரம் செலவழிக்க முடியாது. மனதைத் திறந்து மற்ற மனிதர்களிடம் பேசுங்கள். நட்பாக இருங்கள். ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்குங்கள் அவர்களுடன் குழுவில் சேருங்கள் நன்றாக உரையாடி அவர்களுடன் புன்னகை செய்யுங்கள்.

5. HAPPINESS IN TAMIL | சிறிய விஷயங்களில் மகிழ்ச்சி:

சிறிய விஷயங்கள் உண்மையில் பெரிய விஷயங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சிறிய நிகழ்வுகள் சேர்ந்துதான் நம் வாழ்க்கையை உருவாக்குகிறது. ஒரு உரையாடல், ஒரு கப் காபி, ரோஜாக்களின் நறுமணம், புல் மீது பனித்துளி, இதமான குளியல், ஒரு நல்ல புத்தகம், நட்பு என எதுவாக வேணாலும் இருக்கலாம். சிறு விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை அலட்சியம் செய்யாதீர்கள்.

6. HAPPINESS IN TAMIL | சமூகத்தின் ஒரு அங்கம்:

எப்பொழுதும் சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பது நமக்கு மிகவும் நல்லது, நம் வாழ்க்கையில் நம்மை மற்ற மனிதர்களுடன் உட்பொதித்து, நமக்கு வாழ்வில் நல்ல நோக்கத்தையும் பண்பையும் இது அளிக்கிறது. மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதையாவது தங்களுடன் இணைத்திருக்க வேண்டும். அது உங்கள் குடும்பம், நட்பு வட்டாரம், தன்னார்வத் திட்டம்,புத்தகக் குழு, நண்பர்கள், அலுவலகம், உங்கள் சமூகம் என இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அவைகள் பயன்பெறும் விதத்தில் நல்ல விஷயத்தை செய்திருக்க வேண்டும்.

7. HAPPINESS IN TAMIL | நண்றியுணர்வு:

நன்றியுணர்வு. இருப்பதை கொண்டு வாழ்வில் எப்பொழுதும் நன்றியுடன் இருங்கள். உங்களிடம் சில விஷேச திறமைகள் மற்றும் நற்குணங்கள் உள்ளன என்பதை மனதில் கொள்ளவும். அந்த பண்புகள் நம்மிடம் இருப்பதற்கு நன்றியும், அதை நாமே அங்கீகரிப்பதும் நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு நல்லது. அது நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்வதற்கு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

மாதம் ஒருமுறை நம் மனதைத் தொட்ட ஏதாவது ஒரு நன்றி உணர்வை நினைவுபடுத்தும் நாளை நமது காலாண்டரில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நன்றியுடன் இருக்க வேண்டிய மூன்று விஷயங்களை நன்றாக கவனித்து குறித்து வைக்க வேண்டும். எப்போது நாம் வாழ்வில் மிகவும் விரக்தி நிலையை அடைகிறோமே அப்போது இந்த நன்றியுணர்வு நாளை நாம் திருப்பிப் பார்க்கும்பொழுது, அது மனச்சோர்வை நீக்கி, நாம் இழந்த மகிழ்ச்சியை நமக்கு மீட்டுத் தருகிறது.

8. HAPPINESS IN TAMIL | சமூக ஊடகம் எதிரி:

சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களுக்கான உங்கள் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதிகமாக காட்டப்படும் அல்லது திணிக்கப்படும் விஷயங்களினால், பதட்டத்தின் அளவு உயர்வதற்கும் மகிழ்ச்சியைக் குறைப்பதற்கும் இது காரணமாக அமைகின்றது. நகைச்சுவை உணர்வுள்ள மற்றும் நல்ல படங்களைப் பாருங்கள். மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படியுங்கள். முக்கியமாக உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இசையை கேட்கவும் மறக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடத்தில் நேரம் ஒதுக்கி பேசுங்கள்.

9. HAPPINESS IN TAMIL | நன்றாக கவனியுங்கள்:

உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுடை வண்டியில் தவறான எரிபொருளை தாங்கள் செலுத்தினால் அது மிகவும் மோசமான முறையில் இயங்கும். மனிதர்களும் அந்த வண்டியைப் போலவே தான். ஆகவே, நன்றாக உண்பது, போதுமான ஓய்வு, வழக்கமான மிதமான உடற்பயிற்சி போன்ற விஷயங்களைச் செய்யுங்கள். உங்களை சிரிக்க வைக்கும் நபர்களுடன் பேசிக்கொண்டிருங்கள். சில நபர்கள் தங்களுடைய ஆளுமைகளுக்கு பொருந்தாதவர்களாக இருந்தால் தாங்கள் எந்தவித தயக்கமுமின்றி அவர்களுடைய தொடர்பை குறைத்துக்கொள்ளுங்கள்.

10. HAPPINESS IN TAMIL | அன்பாக நடந்துகொள்ளுங்கள்:

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அன்பானவராக நடந்து கொள்ளுங்கள். உங்களை தரகுறைவாக விமர்சிக்கும் அல்லது உங்களை  முட்டாள் என்று அழைக்கும் ஒரு விமர்சனக் குரலை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அதற்கு பதில் தங்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டும் ஒரு செயற்கை குரலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதாவது, உங்களுக்கு நீங்களே ஒரு நண்பர், அன்பான செல்லப்பிள்ளை அல்லது ஒரு சிறு குழந்தையுடன் பேசும் விதம் போன்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம்:

வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் நமது நினைவுகளை மகிழ்ச்சியான நினைவுகளாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். ரயில் பயணங்கள் இனிமையாக இருக்க நாம் சிற்றுண்டியை அசைபோடுவது போல நமது வாழ்க்கைப் பயணம் அழகானதாக அமைய நாம் இனிமையான நினைவுகளை அசை போட வேண்டும். வாழ்வின் கசப்பான தருணங்களில் நமது மகிழ்ச்சியான தருணங்கள் நம் வாழ்வை மேலும் மகிழ்ச்சியாக்கும்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் அதிக கவனம் செலுத்தும் பல விதமான விஷயங்களைப்  வாழ்வில் பெறுவார்கள் என்பது அனைவரும் தெரியும். உங்கள் அருகிலுள்ள மூன்று நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். அதிலேயே நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். நம்முடைய மகிழ்ச்சி வளர நாம் எப்போதும் நல்ல விஷயங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்களை எந்த சூழ்நிலையிலும் வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.

Share the knowledge