ENTREPRENEUR IN TAMIL| தொழில்முனைவோரின் 10 பண்புகள்

ENTREPRENEUR IN TAMIL தொழில்முனைவோரின் 10 பண்புகள்

ENTREPRENEUR IN TAMIL:

வாழ்க்கையில் வெற்றி பெற்று ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை எவ்வாறு செய்வது வாழ்வில் எப்படி வெற்றி பெருவது என்பது யாருக்கும் தெரியாது. வாழ்வில் வெற்றியடைவதற்கு நாம் வெற்றியடைந்தவர்கள் என்ன முறையைக் கையாண்டார்கள் மற்றும் அவர்களுடைய குணங்களைப் பற்றி ஆராய வேண்டும்.

வாழ்வில் வெற்றியடைந்தவர்களைப் பற்றி நம்மில் பல தடவை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவர்கள் அதற்கு என்னென்ன பண்புகளைக் கொண்டு வாழ்வில் வெற்றியைப் பெற்றார்கள் என்பது தெரியாது. வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும் பெரும்பாலும் ஒரே மாதிரியான குணநலன்களை கொண்டிருக்கிறார்கள்.

ENTREPRENEUR IN TAMIL:

இந்த சிறந்த குணநலன்கள் மற்றும் பண்புகள் அனைத்தும் ஒரு சாதாரண நபரை சிறந்த நபராக மாற்றும். வாழ்வில் யாரெல்லாம் ஒழுக்க முறைப்படி செம்மையாக திட்டமிட்டு தனது தொழிலை செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒரு சிறந்த வெற்றிபெற்ற தொழில் முனைவோராக ஆகிறார்கள். இதை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

தொழிலில் வெற்றியடைந்த ‘பிஸ்னஸ்மேன்கள்’ அனைவரும், ஒரே மாதிரியான குணநலன்களையும் மனநிலையையும் கொண்டு தனது தொழிலை துவங்கியுள்ளனர். அந்த சிறந்த பண்புகளைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். வாழ்வில் வெற்றி அடைந்த நபர்களின் பொதுவான 10 பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. திட்டமிடுதல்
  2. வாடிக்கையாளர் சேவை
  3. தகவல் மேலாண்மை
  4. மாறா நிலை உடையவர்களாக இருப்பார்கள்
  5. சிந்தனையாளர்கள்
  6. வெற்றிக்கு, தோல்வியே முதல் படி
  7. சிக்கனமாக இருப்பது புதுமைக்கு உதவக்கூடும்
  8. சிக்கல் தீர்க்கும் நபர்கள்
  9. முடிவுகளை நீங்களே எடுங்கள்
  10. ஒரு விளையாட்டு வீரரைப் போல சிந்தியுங்கள்
ENTREPRENEUR IN TAMIL

ENTREPRENEUR IN TAMIL | திட்டமிடுதல்:

உங்கள்  திட்டம் நன்கு சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு நீங்கள் எப்படி செயல்படுத்த போகிறீர்கள் (execution) என்ற தெளிவான பார்வை இல்லையென்றால் உங்கள் திட்டம் நிச்சமாய்  தோல்வியடைந்து போகும். ஆகவே நன்கு திட்டமிடுதல் என்பது ஒரு வெற்றியாளரின் பண்பாகும்.

ENTREPRENEUR IN TAMIL | வாடிக்கையாளர் சேவை:

நமக்கு பலவிதமான விநோதமான திட்டங்கள் இருந்தாலும் அது வாடிக்கையாளர்களுக்கு பயன்படுமா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல தீர்வுகளை கண்டுபிடித்தாலும், உண்மையிலேயே அந்த தீர்வுகள் அவர்களுக்கு முக்கியம்தானா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ENTREPRENEUR IN TAMIL | தகவல்  மேலாண்மை:

நீங்கள் எடுக்கும் அனைத்து வகையான முடிவுகள் நீங்கள் கொண்டிருக்கும் தகவல்கள் மற்றும் விவரங்கள் இவை இரண்டையுமே பொருத்து அமையும். உங்கள் துறையில் அதிகபட்ச தகவல்களை எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. கற்றுக்கொள்வதற்கு அதிகமாக நேரம் செலவிடுங்கள். தொடர்ந்து வாழ்வில் கற்றுக்கொண்டேயிருங்கள்.

ENTREPRENEUR IN TAMIL | மாறாநிலை உடையவர்கள்:

தொழிலில் வெற்றியடைந்த பிஸ்னஸ்மேன்கள் எப்போதும் மாறாநிலை உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்து, எப்போதும் தங்களை வேறுபடுத்தி காட்டுவார்கள். பொதுவான விஷயங்களை கூட வித்தியாசமாகப் பார்ப்பவர்கள். அதீத தைரியம், அதீத நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

“சிலர் இவர்களை பைத்தியக்காரர்களாக பார்க்கும்போது, நாம் மேதைகளைப் பார்க்கிறோம். ஏனென்றால், உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் தான் சாதனை செய்கிறார்கள்.” – ஆப்பிள், இன்க்.

1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , “நெக்ஸ்ட்’ எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பியபோது, ‘வித்தியாசமாக சிந்தியுங்கள்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் தொடங்கினார். இவர், தற்காலத்திலும் கூட பெரும்பாலான தொழில்முனைவோர்களின், உத்வேகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

ENTREPRENEUR IN TAMIL | சிந்தனையாளர்கள்:

பிரபல தொழில்முறை எழுத்தாளரான மைக்கேல் ஹையாட் கூறுகையில், “பல ஆண்டுகளாக, இரண்டு வகைப்பட்ட சிந்தனைகள் இருந்து வருவதை நான் கவனித்தேன். ஒரு வகை வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மற்றொன்று தோல்வி, பயம் மற்றும் அதிருப்திக்கு வழிவகுக்கிறது.” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், தொழிலில் வெற்றி பெற நினைப்பவர்கள் ஒரு சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும் என்று வழியுறுத்தினார்.

சிந்தனையாளர்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:

  • யோசனைகள், அறிவு, தொடர்புகள் போன்றவற்றைப் பகிர்தல்.
  • நம்பிக்கையின் மூலம் எளிதில் உறவுகளை உருவாக்குதல்.
  • போட்டியைத் தழுவுதல். அதிக நம்பிக்கையுடன், பாராட்டுதலுடனும் இருத்தல்.

ENTREPRENEUR IN TAMIL | வெற்றிக்கு, தோல்வியே முதல் படி:

இது குறித்து ப்ரீட்ரிக் நீட்சே கூறும்போது, “ஒரு நாளில் பறக்கக் கற்றுக்கொள்பவர் முதலில் நிற்கவும், நடக்கவும், ஓடவும், ஏறவும், நடனமாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்; உடனே ஒருவரால் பறக்க முடியாது.” என்றார்.

நீங்கள் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். நாம் வெற்றி பெறுவது மற்றும் தோல்வி பெறுவது என்ற இரண்டுக்குமே நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டி, சந்தையில் தேவைகள் குறைவது, லாபம் மற்றும் வருமானம் குறைவது, முதலீட்டாளர்கள் கொடுக்கும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் (stress) ஏற்படலாம். அது எல்லாவற்றையும் எதிர்கொள்ள உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ENTREPRENEUR IN TAMIL | சிக்கனமாகஇருப்பது புதுமைக்கு உதவக்கூடும்:

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட மிகவும் அவசியமான இரண்டு விசயங்கள் “சோதனை” செய்து பார்ப்பது, மீண்டும் மீண்டும் “முயற்சிப்பது”. முற்றிலும் புதியதாக ஒரு தொழிலை நிறுவ நினைக்கும் தொழில்முனைவோருக்கும் இந்த இரண்டு விசயங்களும் மிகவும் முக்கியமானவை தான். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சிக்கனமாக இருப்பது புதுமைக்கு உதவக்கூடும் என்று நம்பினார்.

உதாரணமாக, வாரன் பபெட், என்பவர் விரும்பும் எதையும் வாங்க பணம் இருந்தபோதிலும், ஒரு சாதாரண வாழ்க்கை முறையை வாழ்ந்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையவராக இருந்தாலும் எளிமையாக இருந்துள்ளார்.

ENTREPRENEUR IN TAMIL | சிக்கல்தீர்க்கும் நபர்கள்:

“எனக்குத் பழக்கப்பட்ட  மகிழ்ச்சியான மற்றும் வாழ்வில் வெற்றிகரமான மக்கள் அவர்கள் செய்யும் செயலை மட்டுமே விரும்புவதில்லை. அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக ஈடுபாடுடன்  இருப்பார்கள்.” – ட்ரூ ஹூஸ்டன்

ENTREPRENEUR IN TAMIL | முடிவுகளைநீங்களே எடுங்கள்:

“எனக்குத் தெரிந்த வெற்றிகரமானவர்களில் பெரும்பாலோர் பேசுவதை விட அதிகம் கேட்பவர்கள்.” – என்று பெர்னார்ட் பருச் கூறியுள்ளார்.

மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு சொந்த முடிவுகளை நீங்களே எடுங்கள். நீங்கள் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே நீங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் (details) பொறுத்தே அமையும். எப்போதும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். இருந்தபோதிலும், நீங்கள் மட்டும் தான் இறுதியில் முடிவை எடுக்க வேண்டும்.

ENTREPRENEUR IN TAMIL | ஒருவிளையாட்டு வீரரைப் போல சிந்தியுங்கள்:

“என் வாழ்க்கையில் 9000 முறை கோல் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறேன். நான் எனது அணியை வெற்றி பெறுவதற்கு, கோல் போட்டு விடுவேன் என்று மைதானத்தில் உள்ள அனைவரும் நம்பிய வேளையில், 26 தடவை நான் அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன். அதனால்தான் நான் வெற்றி பெறுகிறேன்.” – என்று மைக்கேல்  ஜோர்டன் கூறியுள்ளார்.

Share the knowledge