Chocalate in Tamil | சாக்லேட் உருவான கதை
அறுசுவை உணவுகளிலேயே இன்பகரமான சந்தோஷமான தருணங்களில் பகிர்ந்து கொள்வது இனிப்பு பண்டங்களையே! சிறுவயதில் இருந்தே எல்லோருக்கும் பிடித்த இனிப்பு பண்டம் என்றால் அது சாக்லேட் மட்டும் தான். அதிலும் மெக்சிகோ நகரத்தில் சாக்லேட் பிடிக்காதவர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டால் பதில் இல்லை என்பது தான். காதலர் தினமாக இருந்தாலும் பிறந்த நாளாக இருந்தாலும் நாம் ஒருவருக்கு ஒருவரிடையே அன்பைப் தெரிவிக்கும் விதத்தில் பகிர்ந்துகொள்வது இந்த சாக்லேட்டைத்தான்.
சாக்கொலேட் என்பது கொக்கோ எனப்படும் மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு வகையான பொருட்களைக் குறிக்கும் ஒருவித மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு விதமான இனிப்புகள், அணிச்சல்கள், பனிக்கூழ்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு இன்றியமையாத இடுபொருளாகும். இந்த உலகில் மிகவும் விரும்பப்படும் சுவை மணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும்.
மத்திய அமெரிக்காவில் இருந்து உருவாகி இருக்கின்ற கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவையனைத்தும் ஒரு வகையான வீரியமிக்க சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை ஆகும்.
சாக்கொலேட் என்று அழைக்கப்படும் இனிப்புப் பண்டம் எவ்வாறாக தாயாரிக்கப்படுகிறது என்றால், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது.
Chocalate in Tamil:
சாக்கொலேட்டைப் பயன்படுத்தி பல்வேறு பானங்கள் தயாரிக்கப்படுகின்றன கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் மத்திய காலத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களாலும் அங்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன.
சாக்கொலேட் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. திருவிழாக் காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல்வேறு வகையான வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஈஸ்டர் பண்டிகையின் பொழுது முட்டை அல்லது முயல் போன்ற வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் பொழுது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் பொழுது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றது.
சாக்லேட், நமது மனித குலத்தின் மிகச்சிறந்த ஒரு படைப்பு ஆகும். சாக்லேட்டுகளை பார்த்தாலே நம்மில் சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கியம் நல்கும் நன்மைகளை கொண்டுள்ளது. சாக்லெட் நமது உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற ஒரு விஷேசமான வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இதே வேதிப்பொருள் நாம் பிறரை கட்டிப்பிடித்தால் சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்லெட் முதன் முதலில் வட அமெரிக்காவில் உள்ள மெசோ அமெரிக்காவில் தோன்றியது. முதல் புளித்த சாக்லேட் பானமானது கிமு 450க்கு முற்பட்டது. மெக்ஸிகோவில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவாகியுள்ளது. சாக்லெட் செய்ய பயன்படுத்தும் கோகோ விதைகள் கடவுளிடமிருந்து கிடைத்த தெய்வீகப் பரிசு என்று அந்த காலத்து மெக்ஸிகோவினர் மனதார நம்பினர். அது மிகவும் விரைவாக பிரபலமடைந்தது. மெக்ஸிகோவில் வசித்து வந்த மாயன்களினுடைய கால கட்டத்தில் சாக்லேட்கள் நாணயமாக பயன்பட்டு வந்தது.
20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க வீரர்களுக்கு சாக்லேட் மிகவும் ஒரு அத்தியாவசிய பொருளாக கருதப்பட்டது. உலக சாக்லேட் தினமானது 2009 ஆம் ஆண்டு முதல் ஜூலை 7 ஆம் தேதியன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்நாளானது கி.பி 1550 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளை நினைவு கூறும் விதமாகவுள்ளது என்றும் சிலர் நம்புகிறார்கள்.
Chocalate in Tamil | சாக்லேட் உருவான வரலாறு:
இதன் வரலாற்றைப் பற்றிப் பார்க்கையில் கொக்கோ பீன்ஸ் அல்லது தியோப்ரோமா கொக்கோ மரத்தின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொக்கோ பழத்தில் கிட்டத்தட்ட 20-60 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகள் கடைசி நிலையான தயாரிப்பாக மாற நொதித்தல், உலர்த்துதல், வறுத்தல் மற்றும் அரைத்தல் போன்ற பல்வேறு செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாக்லேடானது ஆரம்ப கால கட்டத்தில் பான வடிவில் மட்டுமே உட்கொள்ளப்பட்டது மேலும் இதனுடைய சுவை மிகவும் கசப்பாக இருந்தது. ஒரு முறை மசாலா மற்றும் சோளம் கூழ் இரண்டும் கலந்த ‘சிலேட்’ (Chilate) என்ற பானம் அதிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது குடிப்பவருக்கு மிகுந்த வலிமை அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
கி.பி 1519 ஆம் ஆண்டு வாக்கில், ஆஸ்டெக்கின் பேரரசரான மான்டெசுமா, ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளரான ஹெர்னான் கோர்டெஸுக்கு XOCOLĀTL என்ற பானத்தை வழங்கினார் . கோர்டெஸ் அவருடன் ஸ்பெயினுக்கு மீண்டும் அந்த பானத்தை எடுத்துச் சென்று சர்க்கரை, வெண்ணிலா மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றைக் கூடுதலாக சேர்த்து அதன் சுவையைத் மெறுகேற்றினார். அதற்கு பிறகு சாக்லேட் இன்று வரை உலகை ஆண்டுகொண்டு இருக்கிறது.
ஸ்பானிஷ் அத்தியாயத்திற்குப் பிறகு கி.பி 1600 களில் இந்த பானமானது பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் நாட்டில் நன்றாக பிரபலமானது. கி.பி 1800 களில் தான் மக்கள் முதன் முதலில் சமையல் சாக்லேட்டுகளை தயாரிக்க கற்றுக்கொண்டனர். தற்பொழுது சாக்கலேட்டானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சுவைகளில், நிறங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஷேச நாட்களான பிறந்த தினம், காதலர் தினங்கள் போன்றவை சாக்லெட் இல்லாமல் கொண்டாடப்படுவதே இல்லை. நாம் விரும்பும் காதலிக்கு சாக்லேட் தரவில்லை என்றால் நம்முடைய காதலே முறிந்துவிடும் அளவிற்க்கு சாக்லேடானது மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.
Chocalate in Tamil | கொக்கோ:
நீங்கள் வெறுமனே சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டால், அது ஒருவிதமான தூண்டுதலை ஏற்படுத்துகிறது, சாக்கலேட்டானது மிக வினோதமான வகையில் தூண்டுதலை ஏற்படுத்துகின்ற ஒரு வித உணவுப்பொருள். அதனால் நன்மைகள் பல இருக்கிறது. சாக்கலேட் உண்பதினால் தங்கள் மூளை நன்றாக வேலை செய்யலாம், உண்மைதான். நீங்கள் கொக்கோ எடுத்துக்கொண்டால் உங்கள் மூளை இன்னும் கொஞ்சம் நன்றாகவே வேலை செய்யும். அதிக சர்க்கரையோடு சாப்பிடும் போது நன்றாக வேலை செய்யாது. சர்க்கரையானது எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிறது.
கொக்கோ உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகும். நீங்கள் வெறும் கொக்கோ மட்டுமே எடுத்துக்கொண்டாலும் சரி, நீங்கள் கொக்கோ விதைகளை மென்று சாப்பிட்டாலும் சரி, அதன் சுவை பழகிவிட்டது என்றால், அது உண்பதற்கு நன்றாக இருக்கும். அந்த சாக்லேட் கொக்கோ விதைகளை நீங்கள் சாப்பிட்டால், அது தங்களுக்கு மிக மிக நல்லது.
Chocalate in Tamil | மிளகும் கொக்கோவும்:
மிளகைப் பற்றி பார்க்கையில் கருப்பு மிளகிற்கும், கொக்கோ விதைகளுக்கும் இடையே ஒரே மாதிரியான குணம் இருக்கிறது. இந்தியாவில் தேனையும் குறுமிளகையும் ஒன்றாகக் கலந்து பலவித பிரச்சனைகளுக்கு நிவாரணியாய் பயன்படுத்துகிறோம். மக்களுடைய பலவித அன்றாட பிரச்சனைகளுக்கு இதை பயன்படுத்தினால், அற்புதமான பலன்களை தரும்.
கொக்கோவிற்கும், அதேபோன்று ஒரு தனித்தன்மை உண்டு. 100% சாக்லேட்டும் சர்க்கரை இல்லாமல் கொக்கோவில் தற்பொழுது கிடைக்கிறது. ஆனால் உங்களில் பலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். ஏனெனில், இது கசக்கும். நீங்கள் சர்க்கரை இல்லாமல் சாப்பிட முடிந்தால் நல்லது. இல்லையேல், மிகக் குறைவான சர்க்கரையோடு என்றாலும் பரவாயில்லை. ஆனால், பொதுவாக கடையில் கிடைக்கின்ற சாக்லேட்டில் சர்க்கரை மிகவும் அதிகம்.
சாக்கொலேடானது ஒரு மிகப் பிரபலமான இடுபொருளாக உள்ளதால் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதன் தயாரிப்பின் போது உட்பொருட்களின் விகிதத்தை மாற்றுவதன் மூலமாக பல நிலைகளாக சுவை மணம் கொண்ட சாக்கொலேடுகள் கிடைக்கிறது. மேலும், அதிக வகை சுவை மணங்களை, கொட்டைகளை வறுக்கும் நேரம் மற்றும் வறுக்கப்படும் வெப்ப நிலைகளை மாற்றுவதால் உருவாக்க முடியும்.
Chocalate in Tamil | இனிப்பூட்டப்படாத சாக்கொலேட்:
இது ஒருவகையான தூய வெளிப்பொருள் கலக்கப்படாத சாக்கலேட் கூழ் ஆகும். கொக்கோ கொட்டைகளை நன்றாக அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழானது, கசப்பு அல்லது பேக்கிங் சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கொலேட் சுவை மணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க-வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Chocalate in Tamil | கரும் சாக்கொலேட்:
பால் பொருள்கள் கலக்கப்படாத இவ்வகை சாக்கொலேடானது, கலப்பிலா சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கமானது இவ்வகையான சாக்கொலேடில் 15% சாக்கொலேட் கூழ் இருக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கொலேட் என்றும் அழைக்கிறது. ஐரோப்பிய விதிகளின்படி இவ்வகையான சாக்கொலேட்டில் குறைந்தது 35% சாக்கொலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன.
Chocalate in Tamil | கூவெர்சர்:
இவை அதிக கொக்கோ வெண்ணெயுடன் சேர்ந்த உயர் தர சாக்கொலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கொலேட்டுகள் மிக அதிக சதவீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணெய் கொண்டனவாகவும், இதனை உருக்கும் போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக இவை மிக உயர்தர சாக்கொலேட்களின் சுவை மணம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தகைய தரமிகு சாக்கொலேடுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவை மண வேறுபாடுகளைத் தெளிவாகக் இனங்காண முடிவதால் இவை இதே பண்புகளைக் கொண்டுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையல் வல்லுநர்களால் இனிப்புப் பண்டங்களில் உபயோகப்படுத்தப்படும் மிகப் பிரபலமான தயாரிப்புகள்: வால்ரோனா, லின்ட் & ஸ்ப்ருங்க்லி, கெக்கோ பெர்ரி, எஸ்பிரிட் டெ ஆல்ப்ஸ் மற்றும் கிட்டார்ட்.
Chocalate in Tamil | பால் சாக்கொலேட்:
இவ்வகையான சாக்கொலேட்டுகள் பெயருக்கேற்றாற் போல பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றது. அமெரிக்க நாட்டினுடைய அரசாங்கமானது இவற்றில் குறைந்தது 10% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டும் என்றும், ஐரோப்பிய விதிகளின் படி குறைந்தபட்சம் 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் சட்டங்களை விதிக்கின்றது.
Chocalate in Tamil | மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கொலேட்:
இவ்வகையான சாக்கொலேட்டுகள் நாள்தோறும் நமது சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாகவே அதிகப்படியான சர்க்கரை கொண்ட கரும் சாக்கொலேட்டுகளேயாகும். ஆனால் இவற்றில் கரும் சாக்கொலேட்டை விட குறைந்த அளவுவே கொக்கோ இருக்கிறது.
Chocalate in Tamil | கசப்பு-இனிப்பு சாக்கொலேட்:
இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், லெசித்தின் மற்றும் வனிலா போன்ற பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கொலேட்டுகளை விட குறைந்த சர்க்கரையும், அதிகமான சாக்கொலேட் கூழும் கொண்டவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கொலேட்டுகள் கூவெர்சர் வகையாக தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கொலேட் கூழ் வீதம் அடிப்படையில் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கொலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவையில் இருக்கும்.
Chocalate in Tamil | வெள்ளை சாக்கொலேட்:
இவ்வகையன சாக்லெட்டுகள் கொக்கோ திடப்பொருட்களை கொண்டு இல்லாமல் கொக்கோ வெண்ணெய் மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் ஒரு வகையான இனிப்பு பண்டங்களாகும்.
Chocalate in Tamil | கொக்கோ தூள்:
இரண்டு வகையான சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளது ஒன்று இயற்கையான கொக்கோ மற்றொன்று டச்சு-முறை கொக்கோ ஆகும். இவை இரண்டுமே மிதமான கொழுப்பு நீக்கிய சாக்கொலேட் கூழை பொடித்து கொக்கோ வெண்ணெயானது நீக்கப்பட்டு தயாராகின்றது. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமாகவும், சற்றே அமிலத்தன்மை கொண்டதாகவும், மிக அதிக சாக்கொலேட் சுவை மணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் செய்யப்படும் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் பொழுதே காரம் அதனுடன் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமன் செய்யப் படுகிறது. இவ்வகை கொக்கோ சற்று குறைந்த சுவைமணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும்.