PETRICHOR IN TAMIL | மண்வாசனை அறிவியல் விளக்கம்
Petrichor in Tamil | மண்வாசனை:
மழை பெய்வதால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் மழை பெய்வதால் சமூகத்தில் பலவிதமான நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கின்றன. தண்ணீர் மக்களின் இன்றியமையாதவாழ்வாதாரமாக அனைவரும்கும் உள்ளது.
மழை பெய்வதினால்மரங்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அன்று பெய்த மழைத்துளியில் தோன்றிய காலான்கள் மற்றும் சிறு சிறு செடிகள் வானில் அழகாய் தென்படும் வானவில் இது எல்லாவற்றிற்கும் மேல் கிடைக்கும் மண்வாசனை.
மழை பெய்வதினால் வரும் மண்வாசனை நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். அந்த மண்வாசனை நம் அனைவரையும் ஒரு விதமான ஒரு புதுவித உணர்வினை வழங்குகிறது. அந்த மண்வாசனை அந்த ஊரின் பெருமையை குறிப்பதாய் நறுமணம் வீசும்.
Petrichor in Tamil | காரணங்கள்:
நீண்ட நாட்களுக்குப் பின்பு மழை பெய்யும் பொழுது மழைத்துளி மண்ணில் பட்டதும் ஒரு இனிமையான மண்வாசனை வெளிவருகிறது. நம்மில் பலருக்கு விருப்பமான அந்த வாசனையில் மயங்கி சிலருக்கு கவிதைகள் கூட தோன்றும். சரி, அந்த வாசனைக்கு என்ன காரணம் என்று தெரியுமா?
1 பாக்டீரியாக்கள்
2 செடி கொடிகள்
3 ஓசோன் படலம்
4 போன்றவகை மண்வாசனைக்கு காரணம்
மண்வாசனை என்று நாம் சொல்லும் அந்த வாசனைக்கு காரணம் நாம் நினைப்பது போல நிஜமாகவே மண் கிடையாது. உண்மையில் இந்த நறுமணத்திற்கு சில வகையான பாக்டீரியாக்கள், செடிகள் கூடவே மின்னலும் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்!!!
மண்வாசனைக்கு ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் பெட்ரிகோர் (Petrichor) என்று பெயர் சூட்டினர். 1964 வது வருடம் Isabel Joy Bear மற்றும் R. G. Thomas என்ற இரண்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இந்த வாசனை குறித்து ஆராய்ச்சி செய்து அதற்கு பெட்ரிகோர் என பெயரும் வைத்து விட்டார்கள்.
Petrichor in Tamil |பாக்டீரியா:
வளமான மண்ணில் வாழும் ஆக்டினோமைசெட்ஸ் (Actinomycetes), ஸ்டிரெப்டோமைசீஸ் (Streptomyces) என்ற பாக்டீரியாக்கள் தான் இந்த வாசனைக்குக் காரணம். இந்த வகையான பாக்டீரியாக்கள் மண் முற்றிலும் வறண்டு காய்ந்து போகும் பொழுது அதன் வித்துக்களை உருவாக்கும்.
அப்போது அவை ஜியோஸ்மின் (Geosmin) என்னும் சேர்மத்தை சுரக்கின்றன. அவை அப்படியே மண்ணில் தங்கி விடுகின்றன. வறண்டு போன காலங்களுக்குப் பிறகு மழையானது பெய்யும் போது மழை நீர் வேகமாகப் நிலத்தினில் இந்த வித்துக்களுடன் பட்டு ஜியோஸ்மின் காற்றில் கலந்து வேதிவினை நடப்பதால் அந்த இனிய வாசனையை தருகின்றன.
பொதுவாகவே பல நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக மழை பெய்யும் போது தான் இந்த மண் வாசனையை நுகர முடியும். அதற்குக் காரணம் அப்போது தான் நிலத்தில் அதிக அளவு வித்துக்கள் இருக்கும். முதல் முறையாக மழை பெய்த பிறகு பாக்டீரியாவின் வித்துக்கள் காற்றினில் கலந்து விடுவதனால் ஜியோஸ்மின் அளவு குறைந்து இரண்டாவது மழைக்கு நாம் வாசனையை உணர முடியாது.
ஜியோஸ்மின் மிகவும் ஆற்றல் மிக்க மூலப்பொருளாக இருப்பதால் மழை நீர் இதன் வாசனையை நீர்த்து போகச் செய்தாலும் கூட நம்மால் எளிதாக அந்த வாசனையை கண்டுபிடித்து விட முடியும். மனிதர்களில் குறிப்பிட்ட நபர்களால் மட்டும் மிக மிக சிறிய அளவு அதாவது ஒரு ட்ரில்லியனில் 5 பகுதிகள் என்ற அளவிற்கு ஜியோஸ்மினைக் நுகர முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மருத்துவத்தில் இதன் பங்கு அதிகமாக உள்ளது. வாசனைக்கு காரணமான இந்த பாக்டீரியாக்கள் தற்போது பல ஆன்டிபயாடிக் மருந்து தயாரிப்பில் பயன்படுகின்றன. அதே போல ஜியோஸ்மின் தற்காலத்தில் பல விதமான வாசனை திரவியங்களில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
Petrichor in Tamil |செடிகள்:
வறட்சியான கால கட்டங்களில் சில தாவரங்கள் நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஒருவிதமான எண்ணெய் போன்ற கலவையை சுரக்கின்றன. பல தாவர இனங்களில் ஸ்டீரியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் (Stearic acid, palmitic acid) போன்ற எண்ணெய்கள் தான் பரவலாக காணப்படுகிறது.
தாவர இலையின் முடியில் இந்த தாவர எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வறட்சிக்குப் பிறகு மழை பெய்யும் பொழுது இந்த எண்ணையில் உள்ள சேர்மங்கள் காற்றினில் கலந்து வெளியேற்றப்படுவதால் மண்வாசனை உருவாகிறது.
இது கால நிலையைப் பொருத்து மாறுபடுகிறது. அதாவது வறண்ட காலநிலையில் தாவரத்தின் வளர்சிதை மாற்றம் தாமதமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மழை பெய்யும் போது அவை புத்துணர்வு அடைவதால் கூட தாவரங்கள் இந்த வாசனையை வெளிவிடுகின்றன என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் விஞ்ஞானிகளின் வேறு சில ஆய்வகள் கூறுகையில் இந்த மண்வாசனைக்கு வேறு சில காரணங்கள் நமக்கு கிடைக்கின்றன. செடிகளின் இயல்பான வாசனைக்குக் காரணமான டெர்பென்களுக்கும் (Terpene) ஜியோஸ்மின் மூலக்கூறுகளுக்கும் கூட இந்த மண்வாசனை உருவாவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
Petrichor in Tamil |ஓசோன்:
சில சமயம் மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அதனைக் கொண்டே மழை வரும் என்று சிலரால் சொல்ல முடியும். அது ஓசோனின் (O3) வாசனை. மேலும் குறிப்பாக இடி மற்றும் மின்னலுடன் சேர்ந்து மழை வரும் போது உருவாகும் மின்சாரம், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளைப் தனியே பிளக்கிறது.
அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக (NO) மாறி வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்கும். ஒரு திசையை நோக்கி புயல் மேகங்கள் இணைந்து வரும் பொழுது இவ்வாறாக உருவான ஓசோனைக் கூடவே கொண்டு வரும். அதனால் தான் இந்த வாசனையை நம்மால் மழை வருவதற்கு முன்பே நுகர முடிகிறது.
Petrichor in Tamil |மண்வாசனைக்கு காரணம்:
ஆதி காலத்தில் இருந்தே உலகத்திற்கு கிடைத்த ஒரே வளம் கடவுள் கொடுத்த இந்த மழை தான் என்பதால் நமது முன்னோர்களுக்கு மழை மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. அவர்களுக்குப் பிடித்த அந்த மழையானது அவர்களின் மரபணுக்கள் மூலம் சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு, நமக்கும் மண்வாசனை பிடித்தமான விஷயமாக இருக்கிறது என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் இந்த வாசனைக்கு காரணங்கள் பல இருந்தாலும் அது மனிதர்கள் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. மழை பெய்வதால் வரும் மண்வாசனையானது மனிதர்களின் மனதில் உள்ள நினைவுகளின் வாசனையாகும். இது நம்மை இனிமையான நினைவுகளுக்கு கூட்டிச் செல்கிறது.