ELEPHANTS IN TAMIL | யானைகளை பற்றிய உண்மை

ELEPHANTS IN TAMIL | யானைகளை பற்றிய உண்மை:

ELEPHANTS IN TAMIL:

பலம் பொருந்திய யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள்.

ELEPHANTS IN TAMIL | யானைகளை பற்றிய உண்மை

ELEPHANTS IN TAMIL:

இந்திய நிலப்பரப்பில் இருந்து தெற்கே இலங்கையில் தொடங்கி வடக்கே பூட்டான் வரை  கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம்  வரை பரவி வாழ்பவை நமது ஆசிய யானைகள். ஆப்பிரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை  ஆஃப்ரிக்க யானைகள். ஆப்பிரிக்கா கண்டத்தின் யானைகளை நமது யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்று சிறியவை ஆகும்.

யானைகளின் வித்தியாசமான  நடவடிக்கைகள் அவ்வப்போது  நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றிய விழிப்புணர்வுக்காக, யானை பற்றிய ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள் இங்கே.

ELEPHANTS IN TAMIL | யானை நீச்சல்:

யானைகள் பொதுவாக நீர்நிலைகளைக் கண்டால் ஒரு சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, தனது உடல் முழுவதும் நனைய ஆட்டம் போடக் கூடியவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை தனது உடலின் மீது பீய்ச்சி அடித்தும் மிகுந்த குதூகலத்துடன் விளையாடுபவை. உங்களுக்கு தெரியுமா? அனைத்து யானைகளுக்கும் மிகவும் ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

இவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன? யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானைகள் தங்களது பெரிய உடலைத்  தாங்குவதற்கு கால்களை எப்பொழுதும் பயன்படுத்தும். யானைகள் நீரில் மிதப்பதால் தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது.

ELEPHANTS IN TAMIL | யானையின் தோல்:

யானைகளின் தோலைப் பற்றி நாம் பார்க்கும் போது பலவிதமான சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரிய வருகின்றன. யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானைகளின் புறத்தோல் மிகவும் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சின்னஞ்சிறிய ஈ அமர்வதைக் கூட நன்றாக உணர்ந்து கொள்ளும்.

ELEPHANTS IN TAMIL | யானையின் கர்ப்ப காலம்:

நண்பர்களே பாலூட்டி வகைகளிலேயே மிக அதிகமான கர்ப்ப காலம் கொண்டது நமது யானை மட்டும் தான். 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. மிக மிக அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். யானைகளின் சராசரியாக  60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.

ELEPHANTS IN TAMIL | யானைக்குட்டி:

புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது. யானைக் குட்டி பிறக்கும் போது கிட்டத்தட்ட 115 கிலோ எடையைக் கொண்டு இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும். வனங்களில் இருக்கும் மற்ற பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து நம்மை தப்பிக்க சீக்கிரமாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம். யானைகளின் மரபணுவிலேயே தங்களது பரிணாம வளர்ச்சியால் உருவான எச்சரிக்கை குணத்தால் விரைவில் எழுந்து நிற்பது சாத்தியம் ஆனது.

ELEPHANTS IN TAMIL | யானை வாசனையை நுகரக்கூடியது:

யானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுப்புறத்தை  அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அருகில் இருந்தாலோ அல்லது வேறு எந்த வகையிலுமோ இருக்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில், கூட்டமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான வேறு இடத்துக்குச் சென்று விடும்.

ELEPHANTS IN TAMIL | யானையின் பிளிறல் சத்தம்:

யானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. யானை மிகுந்த உற்சாகத்தின் போதும், மிகுந்த துன்பத்தின் போதும், சில சமயம்  ஆக்ரோஷமாக இருக்கும் போதும் துதிக்கையை தூக்கி எழுப்பும் பிளிறல் சத்தம் ஆனது 9 கி.மீ க்கு அப்பால் இருக்கக் கூடிய மற்றொரு யானையால் கேட்க முடியும். இதைத் தவிர, தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளை கேட்கக்கூடிய பண்பைக் கொண்டது யானை. மேலும், தனது துதிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியது.

ELEPHANTS IN TAMIL | யானையின் தந்தம்:

யானையிடம் இருக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் அதன் தந்தம் ஆகும். வெட்டுப்பற்கள் தான் பெரிதாக வளர்ந்து தந்தமாகிறது. பிற விலங்குகளுடன் சண்டையிட தந்தத்தை பயன்படுத்துகிறது. சில நேரங்களில் சண்டையின் போது, தந்தங்கள் உடைந்து விடக்கூடும். பாதியளவு தந்தம் உடைந்தால் மீண்டும் வளர்ந்துவிடும்.

ஆனால், தன்னைப் போன்ற வலுவான மற்றொரு யானையுடன் மோதும் போது விலைமதிப்பில்லா தந்தம் முழுவதுமாக முறிந்து விடக்கூடும். அவ்வாறு ஒருவேளை முறிந்துவிட்டால், ரத்தம் கசிந்தவாறே வலியுடன் பிளிறிக்கொண்டு தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓடிவிட வேண்டியது தான்.

விழுந்த தந்தம் மீண்டும் முளைக்காது. அதற்குப் பிறகு காலம் முழுதும் யானையானது தந்தம் இல்லாமல் தான் வாழ வேண்டும். சரி! இவ்வளவு ஆபத்து இருக்கும் போது எதற்காக சண்டையிடுகின்றன என்கிறீர்களா? வேறென்ன… பெண் யானைக்காகத்தான்.

ELEPHANTS IN TAMIL | யானை துதிக்கை:

இதனுடைய துதிக்கையானது பல விதமான தசைகளால் ஆனது. யானை 40000 தசைகள் உள்ள தனது, துதிக்கையை மூலமாக ஒரு பொருளினுடைய அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரும் தன்மை கொண்டது. யானை துதிக்கையை உணவை எடுக்கவும், தண்ணீரை உறிஞ்சி அதன் வாயில் ஊற்றி  குடிக்கவும் பயன்படுத்துகிறது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.

ELEPHANTS IN TAMIL | தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்:

இந்த பூஉலகில் வாழும் விலங்குகளில், கண்ணாடியை பார்த்து தன்னை தானே அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய விலங்குகள் மொத்தம் 5 மட்டும தான். மனிதர்கள், குரங்குகள், மாக்பை(Magpie) என்னும் ஒரு வகை பறவை இனம், டால்ஃபின் தவிர கண்ணாடியை பார்த்து தன்னை தானே அடையாளம் கண்டு கொள்ளும் அறிவுள்ள விலங்கு யானை ஆகும்.

ELEPHANTS IN TAMIL | யானைகள் குடும்பம்:

யானைகள், வயது முதிர்ந்த பாட்டி யானையின் தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு  ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

வயது வந்த ஆண் யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே சுற்றித் திரியும், அல்லது, பெண் யானைகளே அதை கூட்டத்திலிருந்து பிரித்து அனுப்பி விடும். குடும்பத்தில் முழுதும் பெண் யானைகளின் ஆதிக்கம் தான். வயதிற்கு வந்த ஒரு ஆண் யானையைக் கூட யானைக் கூட்டத்தில் தாங்கள் பார்க்க முடியாது.

காட்டு யானையின் சராசரி வாழ்நாள் 50 முதல் 70 ஆண்டுகள். லிங் வாங் என்று பெயரிடப்பட்ட ஆசிய யானை மிக அதிகமாக 86 வயது வரை வாழ்ந்தது. மிகப் பெரிய யானை 11000 கிலோ எடையும், 13 அடி உயரமும் இருந்தது.

Share the knowledge