BLINKING EYES IN TAMIL | கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?

BLINKING EYES IN TAMIL | கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?

 BLINKING EYES IN TAMIL:

நாம் நமது கண்களை நாள்தோறும் அடிக்கடி இமைக்கிறோம் அல்லவா?  அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா? பெரும்பாலும் பரவலாக நாம் அனைவருக்கும் தெரிந்த காரணம் யாதெனில் நாம் தினம்தோறும் கண் இமைப்பதால் நமது கண்கள் தூசு, பாக்டீரியா, அதிகப்படியான வெளிச்சம் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன என்பதே ஆகும்.

BLINKING EYES IN TAMIL:

மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அதாவது நமது கண்கள் வறண்டு விடாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் நாம் அடிக்கடி கண் சிமிட்டுகிறோம். நம் கண்களில் ஈரப்பதம் கண்ணீரின் உதவியால் தக்கவைக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால் நாம் அழாமல் இருக்கின்ற போதும் நம் கண்கள் கண்ணீரை தொடர்ந்து சுரக்கின்றன. நம்ப முடியவில்லையா?. ஆனால் அது தான் உண்மை. நாம் அதை உணர்வது தான் இல்லை .

BLINKING EYES IN TAMIL | எப்படி கண்ணீர் சுரக்கிறது?

நம் கண்களில் இரு கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவை புருவம் முடியும் இடத்திற்கு மேற்பக்கத்தில் உள்ளன. நாம் கண்களை அடிக்கடி இமைப்பதால் அதனால் சுரக்கப்படும் கண்ணீர் நமது கண்களில் பரவி கண்களின் ஈரப்பதத்தை நன்றாக தக்க வைக்கிறது. பிறகு இமைகளின் விளிம்பில் உள்ள சிறு திறப்பு வழியாக கண்ணீர்ப் பையை அடைந்து அங்கிருந்து மூக்கிற்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிறது. இது எப்போதும் நடக்கிற ஒரு நிகழ்வு.

BLINKING EYES IN TAMIL | கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா?

 மேலே காணப்படும் படத்தில், Lacrimal Gland என்று காணப்படுவது தான் நமது கண்ணீர் சுரப்பியாகும். இந்த வகையைச் சேர்ந்த சுரப்பியானது நம்முடைய அதிகப்படியான மனித சம்பந்தப்பட்ட உணர்வுகளின் காரணமாக நாம் கவலையாய் அழும் போது கண்களில் இருந்து கண்ணீராய் சுரக்கிறது. எனவேதான் வெளியேற முடியாத அந்த அதிகப்படியான நீரானது நம்முடைய கன்னங்களின் வழியாக வெளியேறுகிறது.

BLINKING EYES IN TAMIL |அழுவதால் மூக்கில் தண்ணீர் வருவது ஏன்?

வீட்டில் குழந்தைகள் சில சமயம் நீண்ட நேரம் அடம் பிடித்து அழும் போது அவர்களின் மூக்கில் தண்ணீர் வருவதை பார்த்திருப்பீர்கள். நம்முடைய கண்ணுக்கு தேவையான தண்ணீர் போக மீதம் உள்ள தண்ணீரானது கண்ணீராக வெளியே வழிந்தோடுகிறது. வழியும் அளவை விட அதிகம் சுரக்கும் கண்ணீரானது Lacrimal Punctum எனப்படும் இரு சிறு துளைகள் வழியாக Lacrimal Canal மூலமாக நம்முடைய சுவாச மூக்கினை வந்தடைகிறது. பின் அந்த நீரானது மூக்கின் வழியே வெளியேறுகிறது.கண்ணில் தூசி விழுந்தாலும் கண்ணீர் அதிகம் சுரந்து தூசியை வெளியேற்றிவிடுகிறது.

BLINKING EYES IN TAMIL | கண்ணீரில் என்ன உள்ளது?

நமது கண்கள் பல விதமான வேதிப்பொருட்களை கண்ணீரில் கொண்டுள்ளது. கண்ணீரில் லிப்போகலின் (Lipocalin), லேக்டோஃபெரின், (Lactoferrin), லிபிட் (Libid) என்னும் கொழுப்பு, லைசோசைம் (Lysozyme) என்னும் நுண்ணுயிர் கொல்லி போன்ற அனைத்து விதமான வேதிப் பொருட்களும் உள்ளன.

இந்த வேதிப்பொருட்கள் தான் கண்ணிற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் ஒரு வித வழவழப்பு தன்மை போன்றவற்றை தருகின்றன. மேலும் நாம் எல்லோருமே கண் இமைக்கும் தருணத்தில் நமது கண்கள் அந்த குறிப்பிட்ட நொடியில் மட்டும் இருட்டை காண்கின்றது.

ஆனால் மனித மூளை அந்த நிகழ்வை அழகாக புறக்கணித்து விடுவதால் தான் நாம் தொடர்ந்து பார்ப்பது போல உள்ளது. நாம் இமைக்கும் போது இரு இமைகளையும் சேர்த்து தான் இமைப்போம். ஆனால், கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள் மற்றும் சில எலி வகைகளால் (வெள்ளெலி) மனிதர்களுக்கு நேர் எதிராக ஒரு கண்ணை மட்டுமே இமைக்க முடியுமாம்.

இமைப்பது என்பது அனிச்சையான செயல் தான். பொதுவாக நாம் ஒரு நிமிடத்தில் பதினான்கு முறை இமைக்கிறோம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறுகையில் நமது மன உணர்வுகளை பொறுத்து இதிலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன என்கின்றனர். அதாவது நாம் மிகவும் அதிக மன அழுத்தத்தில் அல்லது பதற்றத்தில் உள்ள போது வழக்கத்தை விட குறைவாகவே இமைக்கிறோம்.

அதிலும் குறிப்பாக கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வோர் இமைக்கும் அளவானது சராசரி அளவை விட குறைவாகவே  காணப்படுகிறது. இதுவே பல கண் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. ஏனென்றால் மனிதர்கள் நாம் அன்றாடம் இமைக்கும் தருணத்தில் தானாகவே நமது கண்ணில் சுரக்கும் கண்ணீரானது நம்முடைய கண்கள் முழுவதும் பரவி கண்களுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்கிறது.

BLINKING EYES IN TAMIL | கண்கள் சிவப்பாக காரணம் என்ன?

பொதுவாகவே மென்பொருள் பொறியாளர்கள், முக்கியமாக கணிப்பொறியில் வேலை செய்யும் பலரும் கண்ணை இமைக்க மறந்துவிடுவதால் கண்ணில் சுரக்கும் நீர் வற்றி, கண் மிகவும் எரிச்சலுற்று சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. கண்களில் நீர் வற்றிப் போய், பின்னர் கண்கள் முற்றிலும் சிவப்பாவதை தவிர்க்க, ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் 20 நொடிக்கு கண் சிமிட்டுவது அவசியமாகும்.

இங்கே குறிப்பிடுவது யாதென்றால் கணிப்பொறி பயன்படுத்துபவர் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 நொடிகள், 20 அடி தொலை துாரத்தில் உள்ள பொருளைப் பார்த்து நன்றாக கண்களை இமைத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை 20-20-20 என்று நாம் குறிப்பிடலாம். நீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை ஒருவேளை பயன்படுத்தினால், eyeCare – Protect your vision என்ற இந்த நீட்டிப்பை (Extension) இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதும்.

உங்கள் கண்களுக்கு ஓய்வு தர நீங்கள் மறந்து விட்டாலும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த நீட்டிப்பே உங்களுக்கு நன்றாக நினைவூட்டும். எனவே, நாம் அனைவரும் அடிக்கடி நமது கண்களை இமைப்பதன் மூலம் நம் கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது மிகத் தெளிவாகிறது. நண்பர்களே கண்களின் மகத்துவம் மிகவும் இன்றியமையாதது நமது கண்கள் தான் இந்த ரம்மியமான உலகத்தை நாம் அனைவருக்கும் காட்டுகிறது அப்படிப்பட்ட அழுகான மனிதக் கண்களை நாம் போற்றி காப்போம் நீடுடி வாழ்வோம்.

 

Share the knowledge