EXERCISE TO BRAIN IN TAMIL | மூளையை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

EXERCISE TO BRAIN IN TAMIL | மூளையை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

EXERCISE TO BRAIN IN TAMIL:

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது ஒரு கணினியைப் போல் செயல்பட்டு மனிதர்களின் ஒவ்வொரு விதமான செயலுக்கும் அடிப்படையாக காணப்படுகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து விதமான அறிவு கொண்ட மிருகங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, ஆறு அறிவு கொண்ட மனித இனமாக மாற்றி நிலைநிறுத்தி வருவதே நம்முடைய இந்த மூளைதான்.

EXERCISE TO BRAIN IN TAMIL:

மனிதர்களின் 100 சதவிகித மூளை அளவில், மனிதர்கள் வெறும் 2 சதவீதம் முதல் 5 சதவீத மூளையையும், அறிவியல் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் வெறும் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. அப்படியிருக்க மீதிருக்கும் மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

எனவே, நல்ல விஷயங்களுக்கு உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், அதிக ஈடுபாட்டுடனும் வைத்திருக்க தேவையான 6 எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

EXERCISE TO BRAIN IN TAMIL:


1. கற்றலில் ஆர்வம் வேண்டும்:

பல்வேறு விதமான அறிவுத் தேடல் கற்றலைப்  பற்றிய சமீபத்திய ஆய்வானது, வெவ்வேறு பணி நிறுவனங்களில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 200 தொழிலாளர்களை இரண்டு வகையான குழுக்களாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் இறுதியில், முதல் குழுவானது புதுமையான கேள்விகள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட படைப்பாற்றல் நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது. அவர்கள், கற்றலில் அதிகமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டது கண்டறியப்பட்டது.

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, நீங்கள் ஒவ்வொரு புதிய நாளை துவங்கும் போதும், அன்றைய புதிய விஷயங்களில் கற்றலின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

2. புத்தகங்களைப் படியுங்கள்:

இணையத்தின் பிரபலங்களான வாரன் பபெட், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மார்க் கியூபன் போன்றோர் புத்தக படிப்பில் வெற்றி பெற்றவர்கள். இதனைப்பற்றி பபெட் தெரிவிக்கும் போது, “ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பக்கங்களைப் படியுங்கள்” இது கூட்டு வட்டி போன்றது என்று அவர் பல கையேடுகள் மற்றும் ஆவணங்களை குறிப்பிட்டுக் காட்டினார். மேலும், அவர்  “அறிவு நன்றாக வளர மேலும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட புத்தகங்களை தொடர்ந்து படிப்பது நல்லது” என்றார்.

சராசரியாக அமெரிக்கர் வருடத்திற்கு ஒரு புத்தகத்தைப் படிக்கிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரிகள் மாதத்திற்கு சராசரியாக ஐந்து புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆனால், ”தினமும் நாள்தோறும் செய்தித்தாள் அல்லது பல்வேறு வகையான புத்தகங்களை படிப்பவர்களுக்குத்தான் மிக நீண்ட ஆயுள்” என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நல்ல வாசிப்பிற்கு கவனம் மிக அவசியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல்களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது. இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும்.

வாசித்தலோடு கூடிய மொழியாற்றல் திறமை, பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல் இணைப்பு போன்றதொரு அனைத்து வகையான செயல்பாடுகளையும் இணைக்கும் மிகவும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே ஆயுதத்தால் செய்துவிட முடியும். மேலும், தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதால் மனஅழுத்தம் குறையும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

3. ஊட்டச்சத்துள்ள உணவுகளும், தூக்கமும் அவசியம்:

ஊட்டச்சத்துள்ள உணவுகள் நமது மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமாகும். குறிப்பிடுக் கூறினால் முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள்  மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது. முறையான ஓய்வு இல்லாமல் போனால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

4. மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்:

நமது கடந்த காலத்தில் என்ன நிகழ்வு நடந்தது, தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய சரியான புரிதல் வேண்டும். நாம் பொதுவாக அநேக புதிய நல்ல விஷயங்களை தொடர்ச்சியாக ஒரு அன்றாட பழக்கமாக கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

சரித்திரம் முதல் நிகழ்கால நடைமுறை வரை அத்தனையும் நினைவில் வைத்திருக்க, எந்தவொரு விஷயத்தையும் முதலில் நினைவில் நிறுத்தி, பின்னர் முறையானப் பயிற்சிகள் மூலம் நினைவை மீட்டெடுக்க வேண்டும். க்விஸ் போட்டி சிறந்த பயிற்சி. நம்முடைய குடும்பம், நண்பர்கள் என அனைவரும் இணைந்து குழுகுழுவாக ஒன்றாகி  ‘க்விஸ்’ பழகினால், மூளை நன்றாக புத்துணர்ச்சியாக இருக்கும்.

5. மீண்டும் வகுப்புக்குச் செல்வது:

தாங்கள் இன்றைய புதிய கால கட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த கல்வியை கற்பதற்கு கல்லூரி செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், ஏராளமான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தங்களுடைய பாடங்களை ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கச் செய்கின்றன.

கூகுளின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் லீ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் கல்வி தளத்தை வயது வந்த தொழில் வல்லுநர்களுக்கும், இளைய மாணவர்களுக்கும் நிச்சயமாக சந்தாக்களை சேர்க்க முடிவு செய்தார். அதைப்போன்று, லீ  தனது வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது ஒருவிதமான தீராத ஆர்வம் என்கிறார்.

6. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்:

நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது.

EXERCISE TO BRAIN IN TAMIL:

மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் கவலைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நாம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட இயலும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

ஏனென்றால், நாம் ஓர் இசையைக் புதிதாகக் கற்றுக்கொள்ளும் போதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் நம்முடைய மன அழுத்தம் நன்றாக குறைகிறது. உங்கள் மூளை எப்பொழுதும் முற்றிலும் சுறுசுறுப்பாக இயங்க மேற்கண்ட ஆறு வழிகளைக் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

Share the knowledge