Shasthi Viratham in Tamil | சஷ்டி விரதம் ஒரு பார்வை
Shasthi Viratham in Tamil:
முருக கடவுளுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி திருவிழாவின் போதே ஏராளமான விரதம் இருந்து, தமிழ் கடவுளான முருக கடவுளை வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதிகளிலும் முருக பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்றும் , தேய்பிறை திதியில் மற்றொன்று என மாதத்திற்கு இரண்டு தடவை சஷ்டி விரதம் வருவதுண்டு.
கந்த சஷ்டி விரதமனது தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் துவங்குகிறது.சுருக்கமாக தீபாவளி வந்தால், கந்த சஷ்டி விரதம் வருகிறது என்பதை நினைவில் வைத்தால், மறக்காது. வருடம் முழுவதும் ஓய்வின்றி நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சிறிது ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் முறைப்படும்.
கொடூரமான சூரபத்மனை எதிர்த்து ஓம்கார ரூபமான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இத்திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வானது ஆறு தினங்கள் விரதமுறையைக் பின்பற்றுவது ஆகும். நன்மை தரும் சஷ்டி விரதமனது நவம்பர் 13, 2023 முதல் நவம்பர் 19, 2023 தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டி விரதம் கந்த சஷ்டி விழா என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாகவே குழந்தை செல்வதை விரும்பி வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று கூறுவார்கள். ஆனால் குழந்தை பிரச்னை தவிர உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண் கண்ட உண்மையாகும்
நமது உடலை ஆட்டி படைக்கும் ‘உயிர்சக்தி’ முக்கியமாக மூன்று சக்திகளாகப் தனித்தனியே பிரிந்து வேலை செய்து வருகிறது. நமது உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதைத் துல்லியமாகச் செய்து முடிக்கும்.
கீழ்க்கண்டவை தான் அந்த மூன்று சக்திகள்
1. செரிமான சக்தி
2. இயக்க சக்தி
3. நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மூன்று சக்திகளும் ஒவ்வொன்றாக எவ்வாறு வேலை செய்கிறது என்று சின்ன உதாரணத்துடன் பார்க்கலாம்.காய்ச்சலின் போது உங்களுக்குப் பசி எடுக்குமா எடுக்காத? காய்ச்சலின் பொது உங்களுக்கு பசிக்காது, அப்போது உங்கள் உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது.
சரி, காய்ச்சலால் அவதிப்படும் போது உங்களால் நன்றாக வேலை செய்ய முடியுமா ? முடியாது, தங்களின் உடலில் இயக்க சக்தி முற்றிலும் குறைந்துவிடும். எனவே இந்த இரண்டு சக்திகாலன் செரிமான சக்தியும். இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
மதிய நேரத்தில் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக உங்களால் வேலை செய்ய முடியுமா? முடியாதல்லவா! அப்போது தங்களின் உடல் இயக்கம் சக்தியைக் குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்புச் சக்தி மட்டும் வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.
Shasthi Viratham in Tamil | உண்ணா நோன்பு:
தாங்கள் உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். அப்போது செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? கண்டிப்பாக இல்லை. அதே நேரத்தில் இயக்க சக்தியும் தனது வேலையை குறைத்துக்கொள்ளும் .இப்பொழுது செரிமான சக்தி மற்றும் இயக்கச் சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனைகள் இருந்தாலும் அதை முற்றிலும் குணப்படுத்திவிடும்.
இவ்வாறாக மூன்று சக்திகளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடமிருந்து சக்திகளை பெற்று, தங்களுக்குள்ளே மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும். நமது உடலானது முதல் முக்கியத்துவத்தை செரிமானத்திற்குக் கொடுப்பதால் ஒவ்வொறு முறையும் நாம் உணவு எடுத்து கொள்ளும் போதும், உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும்.
இதற்கு காரணம் என்னவென்றால் வெளியிலிருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் சரிபார்த்து சீரமைக்க வேண்டும். உண்ணா நோன்பு இருக்கும் சமயத்தில் செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இந்த செரிமான சக்தியும், இயக்கச் சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும்.
இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துப் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
இந்த காரணத்திற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாட்களை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த குறிப்பிட்ட ஆறு நாட்களுமே ஆறுமுக பெருமானை மையப்படுத்தியே ஒரு அழகான திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.
ஆம் நண்பர்களே, அதைதான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை ஒட்டி வருகின்ற அடுத்த ஆறு நாட்களுமே ‘கந்த சஷ்டி விழா’ என்று கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா என்றாலே நமது ஞாபகத்திற்கு வருவது ‘சஷ்டி விரதம்’ தான்.இந்த சஷ்டி விரதத்தின் உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறு நாட்களுமே மிக சிறப்பானதாகும்.
Shasthi Viratham in Tamil | நோய் எதிர்ப்புச் சக்தி:
‘செரிமான சக்தி’ தான் ‘முருகனின் தாய்’. ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ தான் ‘முருகன்’. ‘நோய்’ தான் ‘அரக்கன்’. இங்கே முருகனுக்கும் அரக்கனும் இடையே வெளியில் நடக்கும் அதே போர் தங்கள் உடலிலும் நடக்கிறது.
இந்த விழாவில் எப்படி ‘முருகப்பெருமான்’ தனது தாயிடமிருந்து சக்தி பெற்று அசுரனை வதம் செய்கிறாறோ, அதே போல நமது உடலில் உள்ள ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ தனது தாயான செரிமான சக்தியிடமிருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.
வெளியே முருக பெருமானுக்கும், சூராபத்மன் அரக்கனுக்கும் நடக்கும் அதே போரானது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியாக வெல்வது யார் என்ற உண்மை உலகிற்கே தெரியும்.
எவ்வாறு ஒவ்வொரு தினமும் ‘முருகன்’ சக்திகளைப் பெற்று ஆறாவது நாள் தீய அசுரனை வதம் செய்கிறாரோ, அதைப்போல தான் ஒவ்வொரு நாட்களும் நமது உடலிலுள்ள ‘நோய் எதிர்ப்பு சக்தி’ வலிமையடைந்து ‘வைரஸ் கிருமிகள், நோய்கள்’ இருந்தால் அவை அனைத்தையும் வதம் செய்துவிடும்.
நமது உடலில் நடக்கும் இந்த மிகப்பெரிய அறிவியல் உண்மையை நமக்குச் சூட்சமமாகச் சொல்லவோ என்னவோ, இத்திருவிழாவில் வரும் ஆறு நாட்களையும் ‘உண்ணா நோன்புடன்’ ஒரு அழகான திருவிழாவாக நமது முன்னோர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
Shasthi Viratham in Tamil | யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கொடிய வறுமையில் வாடுபவர்கள், தொழிலில் வளர்ச்சி நன்றாக வளர வேண்டும் என்பவர்கள், தீராத நோய் குணமடைய வேண்டும் என்பவர்கள், வாழ்வில் திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் நல்ல ஞானம் பெற வேண்டுபவர்கள், நம் எல்லோர்க்கும் எங்கு சென்றாலும் யாரோ ஒருவரால் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் ஒவ்வொரு மாதந்தோறும் சஷ்டி விரதம் இருக்கலாம். அதை தவிர இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை உள்ளதோ அந்த குறை, பிரச்சனை தீர சஷ்டி விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் முறை :
* முருக பெருமானுக்குரிய சஷ்டி விரதம் கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்த உடன் குளித்து விட்டு, விளக்கேற்றி, தங்களது வீட்டில் உள்ள முருக பெருமானின் திருவுருவப் படத்திற்கு பய பக்தியுடன் பூ அணிவிக்க வேண்டும்.
* கடவுளுக்காக நைவேத்தியமாக காய்ச்சிய பாலுடன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து படைக்கலாம். அதோடு ஏதாவது ஒரு பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சிறந்த பக்தியுடன் நமது பிரார்த்தனையை முருகப் பெருமானிடம் முறையிட்டு, வேண்டிக் கொண்ட விரதத்தை தொடங்க வேண்டும்.
* அண்மையில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கட்டாயம் வணங்க வேண்டும்.
* விரதம் இருப்பவர்கள் பழம் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம். தங்களது உடல்நிலையை பொருத்து பக்தர்கள் எந்த முறையில் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.
* விரதம் இருப்பவர்கள் மாலையில் வீட்டில் சட்கோண கோலம் அமைத்து அதில் 6 அகல் விளக்குகளில் நெய்தீபம் ஏற்ற வேண்டும். இதை முக்கியமாக ஆறும் நெய் தீபமாக ஏற்றலாம் அல்லது ஒரு தீபமாவது நெய் தீபமாக ஏற்ற வேண்டும்.
எவ்வாறு உண்ணா நோன்பு இருக்க வேண்டும் ?
- உங்கள் வழக்கப்படி இருக்கலாம்.
- சமய விதிமுறைப்படி இருக்கலாம்.
- ஆறு நாட்களும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
- ஆறு நாட்களும் பாலும், பழமும் மட்டுமே உண்டு இருக்கலாம்.
- ஆறு நாட்களும் பழங்களை உண்டும் இருக்கலாம்.
இதில் உங்களுக்குப் எந்தமுறை பழக்கம் இருக்கிறதோ, அந்த முறைப்படி இருக்கலாம். அனைத்து வயதினருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.
பசிக்கும் பொழுது தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், உங்கள் பசி அடங்கிவிடும். மீண்டும பசித்தால் திரும்பத் தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும்.
அந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுங்கள். மீண்டும் பசிக்கும் போது பழங்களை ரசித்து ருசித்துச் சாப்பிடலாம்.
இங்கே நேரக்கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். அதைப்போல் ஆறு நாட்களும் இறைவனுக்காக சமைத்த உணவை மட்டும் கூட சாப்பிட்டு வரலாம். இறைவனுக்காக சூரிய அடுப்பைக் கொண்டு சமைத்த உணவான கனிகளை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.
அன்றாட வேலைக்குச் செல்வோருக்கு, வேறு சாப்பாடு தேவைப்பட்டால், தேங்காய் அல்லது வேர்கடலை சாப்பிடலாம், இதனால் அதிக நேரம் வேலை செய்ய இயலும். எதையெல்லாம் நாம் சமைக்காமல் உட்கொள்ள முடியுமோ அதை எல்லாம் புசிக்கலாம்.
கனிகள், இளநீர், நாட்டுக் காய்கனிகள், தேங்காய், வேர்கடலையெனப் பச்சையாகச் புசிக்ககூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்களுக்கு எடுக்கலாம்.
உடலில் பல்வேறு உபாதைகள் உள்ளவர்கள், ஆங்கில மருந்து உண்பவர்கள், நோயாளிகள், ஆறு நாட்கள் பழங்களை கூட எடுக்க முடியாதவர்கள் போன்ற அனைவரும் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற பண்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.
நோன்பின் போது என்ன நேரிடும் ?
- வருடக்கணக்கில் தங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.
- சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறமாக வெளியேறலாம்.
- மலம் கருப்பு நிறமாக வெளியேறலாம்.
- சளி வெளியேறலாம்.
- உடல் ஓய்வு கேட்கலாம்.
- காய்ச்சல் வரலாம்
- வலிகளை உணரலாம்.
என்ன மாற்றங்களை உணரலாம்?
- உடல் எடை சீராகும்
- முகம் அழகாக மிளிரும்
- கண்ணில் ஒளி வீசும்
- உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்
- இரத்தம் துாய்மையடையும்
- தோலின் நிறம் அழகாகும்
- மன உளைச்சல் குறைகிறது
- கவலை, பயம், கோபம் குறைகிறது
- புத்துணர்வு கிடைக்கிறது
- உடல் பலம் பெறுகிறது
- மன அமைதி பெறுகிறது
- ஆழ்ந்த தூக்கம் வரும்
ஆக மொத்தத்தில் தங்களது உடலில் ஆரோக்கியமும்! எண்ணும் எண்ணத்தில் அழகும்! மனதில் முழு நிம்மதியும்! கிடைக்கும். நீங்கள் நினைக்காத பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.
கந்த பெருமான், சூரபத்மனை அழிப்பது போல் உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை நீக்கிவிடும். நமது கலாச்சாரத்தையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பிணைக்கப்பட்டவை.
நமது உடலின் அபாரமான பேராற்றலை புரிந்து, அதன் அற்புதமான அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக ஒரு புதையலைப் போல நமக்கு வடிவமைத்துத் தந்த நமது முன்னோர்களுக்குக் கோடான கோடி நன்றிகளைச் சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
உலகின் தலைசிறந்த மருந்துவர் – உங்கள் உடல்.
உலகின் தலைசிறந்த மருத்துவம் – உண்னாவிரதம்.
உண்ணாவிரதம் கடவுளுக்காக இருப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்.