PERIYALWAR PASURAM IN TAMIL | பெரியாழ்வாரின் பாசுர போதனைகள்
PERIYALWAR PASURAM IN TAMIL:
12 ஸ்ரீ வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், ஸ்ரீமன் நாராயணனைப் புகழ்ந்து ஏராளமான பாசுரங்களைப் பாடியுள்ளார்; அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு “திருமொழி” என்று அழைக்கப்படுகின்றன; “பல்லாண்டு” பாடிய ஒரே ஆழ்வார், அதே சமயம், பக்தர்களின் எதிர்காலத்தைப் பற்றியும், பல்வேறு சமயங்களில் அவர்களின் மனம், எண்ணங்கள் பற்றியும் அறிந்து, பல உயர்வான சிந்தனைகளைத் தூண்டும் வகையில் தனது பாசுரங்களில் விளக்கியுள்ளார்.
ஒருவரின் வாழ்வில் தனது கடமைகளைச் செய்ய போதிய நேரமில்லாமல் ஜீவாத்மாக்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று பெரியாழ்வார் விளக்கியிருக்கிறார், அதே ஜீவாத்மா பரமாத்மாவுக்கு அருகில் இருந்தால் அந்த ஜீவாத்மாவின் நிலை என்னவாகும் என்பதை ஆழ்வார் விளக்குகிறார். பெருமாளை நினைக்காத ஜீவாத்மாக்கள், மற்றும் தங்கள் சம்பிரதாயத்தை கடைபிடிக்காதவர்கள், செய்ய வேண்டியதை ஆழ்வார் மிகத் தெளிவாகச் சொல்கிறார், இது ஒவ்வொரு ஜீவாத்மாவின் தலையாய கடமை. ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளின் மகத்துவத்தையும், சரணாகதியையும் உலகுக்கு விளக்குகிறார்.
PERIYALWAR PASURAM IN TAMIL:
பக்தியில் பெரியவரான பெரியாழ்வார் இங்கே முக்கியமான சில தத்துவங்களை தனது பாசுரம் மூலமாக விவரிக்கிறார் அதாவது ஜீவாத்மாவின் பிற்கால அல்லது இறுதிக் காலத்தைப் பற்றி விளக்கும் சில பாசுரங்களைப் பற்றி இங்கே கூறுகிறார்; ஒருவரின் இறுதிக் காலத்தில் மரணம் ஏற்படும் போது அந்த கொடூரமான நிலைமையைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்வில் அடைய வேண்டிய சிறந்த முக்திக்கான பாதையை விளக்குகிறார்.
மேலே குறிப்பிட்ட பாசுரத்தின் முதல் நான்கு வரிகள் வாழ்க்கையின் முடிவில் மனித உடலின் ஏற்படும் நிலைகளையும் மாற்றங்களையும் விளக்குகின்றன.
“உடல் முழுவதும் காயங்களால் சீழ் வெளியேறுகிறது; வீட்டு ஈக்கள் அதில் கூடு கட்டத் தொடங்குகின்றன. ஜீவாத்மா இது ஒரு மோசமான சூழ்நிலை என்று நினைக்கும்.
PERIYALWAR PASURAM IN TAMIL:
ஆழ்வார் இதை வாழ்க்கையின் இறுதிக் கட்டம் என்று குறிப்பிட்டாலும், தற்போது இருக்கும் இன்றைய காலகட்டத்தில் – இந்த நிலை இறுதிக் காலத்தில் தான் வர வேண்டும் என்ற அவசியமில்லை, எப்போதும் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு மனிதனுக்கு அவனுடைய இறுதிக்காலம் தோன்றலாம்.
ஆனால் பாசுரத்தின் அடுத்த நான்கு வரிகளில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நம் யாவருக்கும் தெரியாததால், வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தை எப்போதும் உச்சரிப்பது நல்லது என்று ஆழ்வார் தானே முன்வந்து பக்தர்களுக்கு தீர்வு சொல்கிறார்.
சக்தி வாய்ந்த மஹா மந்திரமான “ஓம் நமோ நாராயணா” என்ற மாபெரும் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஏனோ தானோ என்று கடமைக்கு ஜபிக்காமல், முழு மனதோடு கைகோர்த்து வணங்கி உறுதியான நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார். அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜெபிப்பவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தெய்வீக எண்ணங்களைக் கொண்டிருப்பதால், அது எப்போதும் நமக்கு ஒரு சிறந்த பாதையைத் தரும், மேலும் நாளடைவில் உங்களுக்கு வயது ஏறி முதுமை நிலையை அடையும் போதும் தங்களுடைய பக்தி மீதான கடவுள் நம்பிக்கை மிகவும் ஆழமாக வேரூன்றும். மேலும், இதே மாதிரியான மனிதர்களின் இறுதி காலத்தை கடப்பதை விளக்கும் வகையில் கீழ்காணும் மற்றொரு பாசுரத்தில் ஆழ்வார் விளக்குகிறார்.
“வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், யார் வந்து நமக்கு உதவுவார்கள்? மனிதனின் ஆரம்ப காலம் எப்படி இருந்ததோ, அதே போல அவர்களுடைய இறுதிக் காலம் அவர்களுக்கு இறுக்காது! ஆயுளின் கடைசி நிமிடத்தில் ஒருவரால் கைகளை உயர்த்தி, இறைவனின் தெய்வீக நாமத்தை ஜபிக்கக்கூட நேரம் இருக்காது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இறைவனைப் பணிவதையும் வணங்குவதையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அவர்களின் அலட்சியமே காரணமாகும்.
மனிதர்கள் தான் என்று ஆணவம் கொண்டு இறைவனை வணங்கிட ஏராளமான நேரமும் அவகாசமும் இருக்கிறது என்று குருட்டு நம்பிகையை வைத்து கொண்டு இறைவனை மனதார வணங்குவதை தள்ளிப்போடுவதால் நிறைய பிரச்சனைகள் நடக்கின்றன; நமது கடைசி நாட்களைப் பற்றி அறிந்த ஆழ்வார், ஒரு ஜீவாத்மா எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.
நாம் அனைவரும் நமது முதலீடுகளை இன்ஷூரன்ஸ் பாலிசிகளாக வைக்கிறோம் – ஏன்? இப்போது நாம் செய்யும் ஒரு சிறிய முதலீடுகள் கடைசி நாட்களில் நமக்கு நல்ல வருமானத்தைத் தரும் என்று நாம் நினைக்கிறோம், ஒரு மனிதன் திடீரென்று கடைசி நேரத்தில் அதிகம் சம்பாதிக்க முடியாது.
கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்று நாம் யாருக்குமே தெரியாது என்று ஆழ்வாரும் கூறுகிறார். எனவே நீங்கள் உங்களுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனின் தெய்வீக நாமத்தைச் சொல்வது நல்லது, ஏனெனில் அது பொருள் சார்ந்த நன்மைகளை விட எல்லையற்ற பலனைத் தரும்; ஸ்ரீமன் நாராயணனின் திருவடி நமக்கு நித்திய வாழ்வைத் தருகிறது.
எனவே, வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் போதிய நேரம் கிடைக்கும் போதே எதையும் செய்வது சிறந்தது. கோயிலுக்குச் செல்வது, பகவான் நாமத்தை ஜபிப்பது, இறைப்பணியில் ஈடுபடுவது, பாகவதங்களால் சூழப்பட்டிருப்பது போன்ற உன்னதாமான கிரியைகளைச் செய்து வாழ்வின் இறுதிக் காலத்தில் ஏற்படும் சங்கடங்களை தகர்த்தெறிந்து முக்தி பேறு அடைவோம்.