WORDPRESS IN TAMIL | ROBOTS.TXT

WORDPRESS IN TAMIL | ROBOTS.TXT

WORDPRESS IN TAMIL:

நாம் நமது வீட்டை அழகாக வைத்திருக்க விரும்புவது இயற்கையே அதே போல் நாம் நமது வலைத்தளத்தையும் அழகாக வைத்திருக்க விரும்வோம். நாம் நமது வீட்டில் எந்ததெந்த வஷயத்தை மற்றவர்களக்கு காட்ட விரும்புகிறோமோ அதை தெரியும்படி வைக்கிறோம். மேலும் என்னென்ன விஷயத்தை மறைவாக வைக்க விரும்புகிறோமோ அதை நாம் ரகசியமாக மற்றவர்களுக்கு தெரியாமல் வைக்கிறோம்.

WORDPRESS IN TAMIL
SEO TIPS FOR BLOGGING

இங்கே நாம் தங்களுக்கு மேற்சொன்ன அதே கதைதான் நமது ROBOTS.TXT கோப்பை பயன்படுத்தி வலைத்தளத்தில் செய்கிறோம். ஆம் நண்பர்களே நமது வலைத்தளத்தில் எந்தெந்த விஷயத்தை காட்ட வேண்டும் எந்தெந்த விஷயத்தை மறைக்க வேண்டும் போன்ற அனைத்தையும் செய்ய இந்த ROBOTS.TXT கோப்பு பயன்படுகிறது.

இந்த கோப்பில் பல வகையான PROPERTIES எனப்படும் பண்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளைச் செய்கின்றன. அவற்றை பற்றி நன்கு அறிந்து கொண்டாலே தாங்கள் தங்களின் வலைத்தளத்தை எவ்வாறு மற்றவர்களுக்கு காட்டலாம் என்று சிறப்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு PROPERTIESகும் ஒரு அர்த்தம் உள்ளது.

இந்த ROBOTS.TXT எனப்படும் கோப்பை பயன்படுத்தி தாங்கள் தங்களின் வலைத்தளத்தை நன்றாக எஸ்.ஈ.ஓ எனப்படும் “சர்ச் இன்ஜின் ஆப்டிமைஷேசன்” செய்ய முடியும். இதன் மூலமாக தாங்கள் தங்களின் வலைத்தளத்தில் முக்கியமாக இடுகைகளை தெளிவாக மற்றவருக்கு எடுத்துக் காட்ட முடியும். மேலும் தேவையில்லாதவற்றைக் குறைக்க முடியும்.

இந்த ROBOTS.TXT கோப்பு பல்வேறு வேலைகளைச் செய்கிறது. இது தேடுபொறி இயந்திரம் எனப்படும் SEARCH ENGINEகளுக்கு எவ்வாறு ஒரு பக்கத்தையோ அல்லது இடுகையையோ CRAWL செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பல வகையான தேடு பொறிகள் உள்ளன உதாரணமாக கூகிள், பிங்க், யாஹூ உள்ளன.

WORDPRESS IN TAMIL ROBOTS.TXT HISTORY:

முதலில் ROBOTS.TXT என்பது ஒரு TEXT FILE ஆகும். இந்த கோப்பின் மூலமாக வலைத்தள உரிமையாளர்கள் தங்களின் வலைத்தளங்கள் எவ்வாறு CRAWL செய்யப்பட வேண்டும் என்று தேடுபொறி இயந்திரங்களுக்கு கூறுகிறார்கள். இங்கே CRAWL என்பது ஒவ்வொரு பக்கத்தையும் இடுகையையும் எவ்வாறு எடுத்து முகப்பில் காட்டுவது என்பது ஆகும்.

இந்த கோப்பு பொதுவாக ROOT DIRECTORYல் சேமிக்கப்பட்டு இருக்கும் அல்லது தங்களின் MAIN FOLDERல் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த ROBOTS.TXT கோப்பின் பொதுவான வடிவமானது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

wordpress in tamil
ROBOTS.TXT GENERAL CODING

ஒரு குறிப்பிட்ட URL அல்லது SITEMAPயை அனுமதிக்க மற்றும் மறுக்கவும் தாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை பெறலாம். தாங்கள் ஒரு குறிப்பிட்ட URLயை மறுக்கவில்லை என்றால் அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அர்த்தம்.

ROBOTS.TXT கோப்பானது கீழ்க்கண்டவாறு திரையில் உள்ளவாறு காணப்படும்.

wordpress in tamil
MOSTLY EVERYONE USING THIS TEXT

மேலே கொடுக்கப்பட்டுள்ள கோடிங் மூலமாக நாம் நமது வலைத்தளத்தில் உள்ள அனைத்து விதமான இடுகைகளையும் மேலும் கோப்புகளையும் பெறுவதற்கு உரிய அனுமதி அளிக்கிறோம். ஆனால் இங்கே ஒரு சில அனுமதிகளை உதாரணமாக INDEXING PLUGINS மற்றும் ADMIN FOLDER போன்றவைகளை பெறுவதற்கு உண்டான அனுமதிகளை மறுக்கிறோம்.

இறுதியாக நாம் நமது வலைத்தளத்திற்கு உண்டான SITEMAP XML தொடர்பு சுட்டியையும் வழங்கியுள்ளோம்.

IMPORTANTCE OF ROBOTS.TXT WORDPRESS?

தங்களின் வலைத்தளத்தில் ROBOTS.TXT எனப்படும் கோப்பு இல்லை என்றாலும் தேடுபொறி இயந்திரம் தங்களின் பக்கத்தை கண்டறிந்து முன்னிலைப்படுத்தும். எவ்வாறு இருப்பினும் எந்த பக்கத்தை அது தேடக்கூடாது என்று தாங்கள் அதற்கு அறிவிக்காமல் இருந்தால் சிறிது குழப்பம் ஏற்படும்.

முதன் முதலில் தாங்கள் ஒரு வலைத்தளத்தை தொடங்கையில் இது தங்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தங்களின் வலைத்தளம் சிறிது சிறிதாக வளர்கையில் இது தங்களுக்கு தலைவலி ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். தங்களிடம் நிறைய பக்கங்கள் இருக்கையில் எது தேவை எது தேவையில்லை என்ற தாங்கள் தேடுபொறிக்கு தெளிவாக கூற வேண்டும்.

ஏனெனில் தேடுபொறிக்கு என்று தனியே ஒருவகையான CRAWL QUOTA ஒன்று உண்டு. இது அந்த CRAWL SESSION இருக்கும் வரை CRAWL QUOTA காணப்படும். ஆகையால் தாங்கள் தேவையில்லாத கோப்புகளான WORDPRESS ADMIN PAGE, PLUGIN FILES, THEME FOLDER போன்றவற்றை தேடுவதை தவிர்ப்பதன் மூலம் தாங்கள் தங்களுக்கு தேவையான கோப்பை முன்னிலைப்படுத்தலாம்.

மேலும் இதன் மற்றொரு பயன் என்னவென்றால் தாங்கள் ஏதேனும் ஒரு இடுகையையோ அல்லது பக்கத்தையோ காட்டாமல் இருக்க விரும்பினால் இந்த ROBOTS.TXT கோப்பின் மூலமாக அந்த பக்கத்தை மறைக்கலாம். இதனால் தாங்கள் மறைக்க வேண்டிய தேவையில்லாத அந்தப் பக்கம் மட்டும் இணையத்தில் இருந்து மறைக்கப்படும்.

ROBTOS.TXT WORDPRESS IN TAMIL:

பெரும்பாலான வலைத்தளங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான ROBOTS.TXT கோப்பைப் பெற்றுள்ளன.

GENERALLY USING SITEMAP

இணையத்தில் உள்ள அனைத்து விதமான பயனாளர்களும் பெரும்பாலும் இந்த வகையான பொதுவான அமைப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது அனைத்து வகையான பக்கங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. மேலும் அவைகள் அனைத்தையும் INDEX செய்கிறது.

BEST TEXT FOR ROBOTS

நண்பர்களே மேலே கொடுக்கப்பட்டுள்ள கோடிங் ஆனது மிகவும் பயனள்ள ROBOTS.TXT கோப்பு ஆகும். இதை தாங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தும் போது தங்களின் அனைத்து விதமான இடுகைகள் மற்றும் பக்கங்கள் அனைத்தையும் INDEXல் முன்னிலை செய்கிறோம். ஆனால் இது ஒரு சிலவற்றை குறிப்பாக வேர்ட்பிரஸ் ப்ளகின்ஸ், வேர்ட்பிரஸ் அட்மின் பகுதி, அப்பிளியேடிவ் லிங்க் போன்றவற்றை INDEX செய்யாது.

தங்களுடைய வலைத்தளத்திற்கு தாங்கள் SITEMAP தொடர்பான சுட்டியை இணைக்கையில் தங்களுடைய வலைத்தளம் சிறப்பாக செயல்படும். தங்களின் வலைத்தளத்திற்கு தொடர்புடைய அனைத்து சுட்டிகளும் தெளிவாக INDEX செய்யப்படும்.

ROBOTS.TXT EDITING WORDPRESS IN TAMIL?

தாங்கள் தங்களுடைய வலைத்தளத்தில் ROBOTS.TXT கோப்பை இரண்டு வழிகளில் மாற்றம் செய்யலாம்.

  • ஏதேனும் ஒரு SEO மூலமாக தாங்கள் மாற்றம் செய்யலாம்.
  • தாங்களாகவே FTP மூலமாக மாற்றம் செய்யலாம்.

மேற்கண்ட இரண்டு வழிகளில் தங்களுக்கு எது சிறந்ததோ அந்த வழிகளில் தாங்கள் தங்களின் ROBOTS.TXT கோப்பை மாற்றலாம். நான் என்னுடைய கோணத்தில் தங்களுக்கு அறிவுறுத்த விரும்பினால் தாங்கள் அனைவரும் ஏதேனும் ஒரு SEO பயன்படுத்துவதன் மூலமாக தங்களுடைய ROBOTS.TXT கோப்பை மாற்ற முடியும். இதன் மூலமாக தாங்கள் அனைத்து விதமான லிங்கையும் முன்னிலைப்படுத்த முடியும்.

Share the knowledge