DNS IN TAMIL – இவன் வலைத்தளத்தின் முகவரி இணையத்தின் PHONE BOOK | DNS PROTOCOL IN TAMIL EXPLAINED
DNS IN TAMIL:
DOMAIN NAME SYSTEM என்பது இணையத்தின் PHONE BOOK என்று அழைக்கப்படுகிறது. மனிதர்கள் ஒரு வலைத்தள தகவலை இதன் மூலமாகப் பெறுகிறார்கள் உதாரணமாக: WWW.GOOGLE.COM, WWW.FACEBOOK.COM. வலைத்தள உலவிகள் அனைத்தும் INTERNET PROTOCOL எனப்படும் IP ADDRESS உடன் இணைந்து செயல்படுகிறது. DNS எனப்படுவது ஒரு DOMAIN NAMEயை IP ADDRESS ஆக மாற்றுகிறது. அதாவது குறிப்பிட்ட DOMAIN NAMEற்கு இணையான IP ADDRESSஐ கண்டறிவதன் மூலம் அந்த வலைத்தளத்தை BROWSERல் LOAD செய்கிறது.
நண்பர்களே இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் ஒரு பிரத்யேக IP ADDRESS உள்ளது. அந்த IP ADDRESS மூலமாக இணையத்தில் ஒரு சாதனம் மற்றொரு சாதனத்தைக் கண்டறிகிறது. DNS SERVER மனித குலத்திற்கு ஒரு மிகப் பெரிய நன்மையைச் செய்கிறது. ஆம் நண்பர்களே நாம் அனைவரும் ஒரு வலைத்தளத்தின் IP ADDRESSஐ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் DNS PROTOCOL அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்கிறது.
DNS ஒரு வகையான APPLICATION LAYER PROTOCOL ஆகும். இங்கே எவ்வாறு ஒரு APPLICATION PROCESS வெவ்வேறு MACHINEல் வேலை செய்கிறது மேலும் அது எவ்வாறு தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புகிறது போன்றவற்றை குறிக்கிறது.
CHARACTERISTICS OF DNS IN TAMIL:
- DNS என்பது ஒரு DOMAIN NAME SYSTEM ஆகும்.
- DNS என்பது ஒரு DIRECTORY SERVICE ஆகும். இது IP ADDRESSயை HOST ADDRESS உடன் MAPPING செய்கிறது.
- ஒரு இணையம் வேலை செய்வதற்கு DNSன் தேவை கட்டாயமாக உள்ளது.
- இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு IP ADDRESSற்கும் ஒரு DOMAIN NAME உள்ளது.
- ஒவ்வொரு IP ADDRESSம் SEQUENCE OF SYMBOL மூலமாக DECIMAL DOTS மூலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
- DNS எனப்படுவது முதலில் ஒரு சேவையாகும் இது ஒரு DOMAIN NAMEயை IP ADDRESSற்கு மாற்றுகிறது. இது இணையப் பயனாளர்களுக்கு மிகவும் பழக்கமான பெயர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தை நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- உதாரணமாக தமிழாஜி வலைத்தளத்தில் IP ADDRESS ஆனது 43.255.154.28 என்று இருந்த போதிலும் வாசகர்கள் நமது வலைத்தளத்தை WWW.TAMILOGY.COM என்று எளிதாக நினைவில் கொள்கிறார்கள்.
DNS என்பது ஒரு TCP/IP PROTOCOL ஆகும். இது பல்வேறு PLATFORMSகளுக்கு இடையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் மூன்று விதமான பிரிவுகள் உள்ளது. அந்தப் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
3 TYPES OF DNS IN TAMIL:
- INVERSE DOMAIN
- GENERIC DOMAIN
- COUNTRY DOMAIN
DIAGRAM FOR TYPES OF DOMAIN SPACE:
GENERIC DOMAINS:
இது பதிவு செய்யப்பட்ட ஒரு கணினியை அதன் பொதுவான பண்புகளைப் பொறுத்து வரையறுக்கிறது. ஒரு TREEல் இருக்கும் ஒவ்வொரு NODEம் ஒரு DOMAIN NAMEயை குறிக்கிறது. அவைகள் அனைத்தும் DNS DATABASEல் INDEX செய்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மூன்று எழுத்து உள்ள LABELஐ ஆதரிக்கிறது இந்த LABELS அனைத்தும் ஒரு வலைத்தளம் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்று கூறுகிறது. உதாரணமாக ஒரு வலைத்தளம் கல்வி சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வர்த்தகம் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம்.
EXAMPLE: .COM, .IN, .ORG, .GOV, .INFO
COUNTRY DOMAIN:
COUNTRY DOMAIN என்பது முழுக்க முழுக்க GENERIC DOMAIN சார்ந்து செயல்படுவதாகும். இது இங்கே மூன்று எழுத்து LABELSக்கு பதிலாக இரண்டு எழுத்து COUNTRY LABELS (EX: US) பயன்படுத்துகிறது.
INVERSE DOMAIN:
INVERSE DOMAIN எனப்படுவது ஒரு வலைத்தள முகவரியை அதற்கு இணையான பெயருடன் MAPPING செய்வதாகும். இங்கே MAPPING என்பது ஒரு IP ADDRESSயை அதன் DOMAIN NAME உடன் பொருத்துவதாகும்.
DNS வேலை செய்யும் விதம்:
DNS என்பது ஒரு CLIENT மற்றும் SERVERஐ தொடர்பு கொள்ள பயன்படும் NETWORK COMMUNICATION PROTOCOL ஆகும். DNS CLIENT ஒரு செர்வருக்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது. DNS SERVER CLIENTற்கு ஒரு பதிலை அனுப்புகிறது.
ஒரு கிளைன்ட் வேண்டுகோளானது ஒரு DOMAIN NAME கொண்டிருந்தால் அது IP ADDRESS ஆக மாறுகிறது. ஒரு கிளைன்ட் வேண்டுகோள் ஒரு IP ADDRESS கொண்டிருந்தால் அது DOMAIN NAME ஆக மாறுகிறது.
ஒரு இணையத்தில் காணப்படும் அனைத்து வகையான கணினியின் பெயர்களையும் சேமிக்க DNS ஒரு வகையான DISTRIBUTED DATABASE கொண்டுள்ளது.
DNS RESOLVER ஆனது DNS SERVERக்கு ஒரு கணினியின் IP ADDRESSஐ பெறுவதற்கு வேண்டுகோளை அனுப்புகிறது. ஒருவேளை DNS SERVER ஆனது அதனிடம் ஏதும் IP ADDRESSஐ கொண்டிருக்கவில்லை என்றால் அது வேறொரு DNS SERVERக்கு DNS RESOLVERன் வேண்டுகோளை அனுப்புகிறது.
DNS QUERY:
DNS QUERY அல்லது DNS REQUEST என்பது ஒரு பயனர் தனது கணினியில் இருந்து செர்வருக்கு கொடுக்கும் ஒரு வகையான வேண்டுகோளாகும். ஒரு DOMAINஐ அடைவது என்பது ஒரு DNS CLIENT ஒரு DNS SERVER இடம் அதன் வலைத்தளத்திற்கு உண்டான IP ADDRESSஐ பெறுவதாகும். மூன்று வகையான DNS QUERIES உள்ளன.
- RECURSIVE QUERY
- ITERATIVE QUERY
- NON-RECURSIVE QUERY
RECURSIVE QUERY:
இங்கே CLIENT ஆனது SERVER இடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறது. அதற்கு செர்வர் தேவையான பதிலை அனுப்புகிறது. ஒரு வேளை பதில் கிடைக்கவில்லை என்றால் பிழை செய்தியை அனுப்புகிறது.
ITERATIVE QUERY:
இந்த வகையான ITERATIVE QUERYல் DNS CLIENT ஆனது DNS SERVERக்கு மிகச் சிறந்த பதிலை அளிக்கிறது. இங்கே செர்வருக்கு தேவைப்படும் DOMAIN NAME கிடைக்கவில்லை என்றால் அது கீழேயுள்ள LOWER LEVEL DOMAIN SPACEல் தகவலைத் தேடும்.
NON-RECURSIVE QUERY:
DNS RESOLVER CLIENT ஆனது DNS SERVER இடம் தனக்கு தேவையான பதிலை அதாவது ஒரு குறிப்பிட்ட தரவை வினவுகிறது. செர்வரானது குறிப்பிட்ட தரவை கண்டறிந்த உடன் அது UPSTREAM SERVERல் UPLOAD செய்கிறது.
DNS CACHING:
DNS CACHING எனப்படுவது ஒரு தரவை தற்காலிகமாக சேமிக்கப் பயன்படும் ஒரு வகையான தொழில்நுட்பம் ஆகும். அதன் மூலமாக இது தரவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. இந்த DNS CACHINGல் தகவலானது DNS CLIENTற்கு மிக அருகில் சேமிக்கப்படுவதால் பின்னாளில் தரவானது துரிதமாக சரிசெய்யப்படுகிறது.
இரண்டு விதமான DNS CACHINGகள் உள்ளன.
- BROWSER DNS CACHING
- OS LEVEL DNS CACHING
BROWSER DNS CACHING:
நவீன வலைத்தள உலவிகள் (WEB BROWSER) அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் DNS RECORDஐ பெறுமளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையில் ஒரு IP ADDRESSஐ பெறுவது மிகவும் எளிமையானதாகம்.
OS LEVEL DNS CACHING:
DNS QUERYல் நடக்கும் அனைத்து விதமான செயல்களிலும் இது கடைசியான OPERATION ஆகும். இவைகள் எப்பொழுதும் STUB RESOLVER அல்லது DNS CLIENT என்று அழைக்கப்படும். STUB RESOLVER ஆனது முதலில் ஒரு வேண்டுகோளைப் பெற்றவுடன் தரவானது CACHEல் இருக்கிறதா என்று பார்க்கும் இல்லையென்றால் அது DNS QUERYஐ LOCAL NETWORKற்கு வெளியே அனுப்புகிறது.