ChatGPT in Tamil | இவன் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்பம் சாட்ஜிபிடி |OPENAI தொழில்நுட்பம் தமிழில்

ChatGPT in Tamil | இவன் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்பம் சாட்ஜிபிடி |OPENAI தொழில்நுட்பம் தமிழில்

OPENAI CHATGPT IN TAMIL:

2022ம் ஆண்டின் இறுதியில் வந்து கணினி உலகத்தை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் இந்த CHATGPT தொழில்நுட்பமாகும். நாம் கணினியில் பலவிதமான CHATBOTகளை பார்த்திருந்தாலும் இந்த CHATBOT பல விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

OPENAI CHATCPT TECHNOLOGY NOVERMBER 30 2022

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது வந்திருந்தாலும் பல விதமான பயனர்களின் வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. NATURAL LANGUAGE PROCESSING மூலமாக சக்தி ஊட்டப்பட்ட இந்த தொழில்நுட்பம் மனிதர்களைப் போலவே நம்முடன் கலந்துரையாடும் சக்தி பெற்றள்ளது.

WHY CHATGPT IN TAMIL:-

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் பலவகையான நவீன தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில்அவர்களில் தொழில்நுட்ப சிக்கலுக்கு உடனடித் தீர்வு தேவையாக உள்ளது.ஏற்கனவே தொழில்துறையில் பயன்படுத்தப்படும் CHATBOT இந்த சிக்கலுக்கு தீர்வு தரகூடியதாக இல்லை, இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்யகூடியதாக இந்த OPENAI CHATGPT உள்ளது.

இந்த பழைய CHATBOTகளை உடனடியாக மாற்றியமைக்கும் இடத்தில் தொழில்நுட்ப உலகம் உள்ளது. அதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் அடித்தளத்தை முதலில் அமைத்தது OPENAI எனப்படும் நிறுவனம். அனைத்து விதமான வணிக மற்றும் தொழில்நுட்ப சிக்கலுக்கு தீர்வை கண்டுபிடிக்கும் வழியை CHATGPT மூலம் கொண்டுவந்தது.

நாம் வங்கி மற்றும் இ வணிகத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் பழைய முறையை ஒழித்து இது புதிய முறையை அதாவது இயற்கையாக மனிதரிடம் உறையாடுவது போல் உள்ள உணர்வை ஏற்படுத்துகிறது. இது பதில்களை உணர்வு பூர்வமாக தருகிறது. இது வெகு விரைவில் அனைத்து பிளாட்பார்ம்களிலும் வரும் என்பதில் ஐயமில்லை.

WHAT IS CHATGPT IN TAMIL:-

ChatGPT தொழில்நுட்பம் என்பது செயற்கை தொழில்நுட்பத்தின் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும் இது OPENAI மூலமாக உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க சிலிக்கான் வேலி பள்ளத்தாக்கின் முதலீட்டாளர்களான அல்ட்மென் மஸ்க் போன்றோர்கள் 2015ம் ஆண்டு ஒரு விதமான செயற்கை தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதனுடைய ஆராய்ச்சி முடிவை அவர்கள் 2022 நவம்பர் மாதம் 30ம் தேதியன்று இந்த உலகத்திற்கு வெளியிட்டனர்.

MICROSOFT WITH CHATGPT:-

இந்த CHATGPT தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏராளமான நிதியினை இதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பம் GENERATIVE AI தொழில்நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. செயற்கை நுண்ணறிவின் இந்த OPENAI CHATGPT தொழில்நுட்பம் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த CHATGPT முன்பே பயிற்சி கொடுக்கப்பட்ட தகவல் செறிவுமிக்க டிரான்ஸ்பார்மர்களைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் இதன் மூலமாக தங்கள் ASSIGNMENTS முடிக்க மிகவும் உதவிகரமாக உள்ளது.

LANGUAGE OF CHATGPT IN TAMIL:

செயற்கை தொழில்நுட்பத்தின் OPENAI மூலமாக உருவாக்கப்பட்ட இந்த ChatGPT “GPT-3” எனப்படும் கணினி மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த சேவை முதன்முதலாக “San Francisco–based OpenAI” எனப்படும் நிறுவனத்தால் முதன் முதலில் இலவசமாக சிறிது காலத்திற்கு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ChatGPT Technology தன்னகத்தே 1 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சிறிது காலத்திலேயே பெற்றுள்ளது.

REINFORCEMENT LEARNING OF OPENAI:

இந்த தொழில்நுட்பம் மனித அறிவு மற்றும் செயற்கை தொழில்நுட்பத்தின் அறிவால் விளைந்த ஒரு மாடலாக கருதப்படுகிறது. இது பயனர்கள் கொடுக்கும் உள்ளீடு மற்றும் பதில்களின் மூலமாக தன்னைத் தானே மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. இந்த தொழில்நுட்பம் REINFORCEMENT LEARNING எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. REINFORCEMENT LEARNING எனப்படுவது தவறாகக் கொடுக்கப்படும் உள்ளீடுகளை இது நிராகரிக்கிறது மேலும் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு பயனர்கள் கேட்கும் வினாக்களுக்கு சரியான தீர்வு அளிக்கிறது.

OPENAI CHATGPT ACCURACY:

இந்த தொழில்நுட்பம் பலவிதமான தானியங்கி செயல்களை துரிதமாகச் செய்தாலும் பயனர்களுக்கு இதன் நம்பகத்தன்மை பற்றி பலவிதமான குழுப்பங்களே ஏற்படுகிறது. மேலும் தாங்கள் இந்த வலைத்தளத்தில் நுழைந்தவுடனே தங்களுக்கு செய்தி வருகிறது “CHATGPT IS NOT 100% ACCURATE”. இது பயனர்களுக்கு பொருந்தாக முடிவு அல்லது தீர்வுகளைக் கூட சில நேரங்களில் பயனர்களுக்கு தரம் வாய்ப்புள்ளது.

PERFORMANCE OF CHATGPT:

இந்த உலகில் பலவிதமான CHATBOT உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய இந்த CHATBOT செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் இயங்க கூடிய அற்புதமான ரோபோ ஆகும். இது தகவல்களை பல விதமான மூலத்திலிருந்து பெறுகிறது. சிறந்த வலைத்தளங்களாக கருதப்படும் WIKIPEDIA, NEWS ARTICLES, JOURNALS, BOOKS போன்றவற்றிலிருந்து தகவல்களை பெறுகிது.

RESPONSE OF CHATGPT:-

CHATBOT எனப்படுபவை பொதுவாகவே செயற்கை தொழில்நுட்பம் மற்றும் மனித மொழியை புரிந்து கொள்ளும் (NATURAL LANGUAGE PROCESSING) போன்ற தொழில்நுட்பத்தின் மூலமாக பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகின்றன. ஆனால் நம்முடைய OPENAI CHATGPT அதற்கும் மேலாக பயனர்களின் தேடும் நேரத்தை குறைத்து அவர்கள் தேடும் பதிலயே முழுவதுமாக கிடைக்கச் செய்கின்றது.

OPENAI GPT-3 Model:-

இவ்வாறு பல பெருமைகளை பெற்ற இந்த தொழில்நுட்ப கருவிக்கு தனியாக பயிற்சி ஏதும் தரப்படவில்லை. இது GPT-3 பிரத்யேகமாக மாற்றம் செய்யப்பட்ட GPT-3.5 எனப்படும் பதிப்பாகும். இந்த GPT-3 MODEL எனப்படும் பதிப்பானது இணையத்திலிருந்து பலவிதமான தகவல்களை சேகரித்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும்.

BENEFITS OF CHATGPT:

இந்த தொழில்நுட்பம் பல துறைகளில் பலவிதமான சிக்கல்களைக் தீர்க்கவும் துரிதமாக பதில் அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மற்றும் நிருபர்களுக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல கணிப்பொறியாளர்களுக்கு கணினி மொழி எழுதவும் இது பெரிதும் உதவுகிறது. C, C++, JAVA, PYTHON போன்ற கணினி மொழிகளில் கோடிங் எழுதுகிறது.

ADVANTAGES OF CHATGPT IN TAMIL:

  • இது பலவிதமான மொழிகளின் உள்ளீடுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும் திறன்.
  • தன்னைத் தானே முன்னேற்றப்படுத்திக் கொள்ளும் திறன்.
  • கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன்.
  • மேம்படுத்தப்பட்ட விளக்கம் அளிக்கும் திறன்.
  • கூகுள் தேடுபொறிக்கு சிறந்த மாற்றாக உள்ளது.
  • சிறந்த கட்டுரைகளை வரையும் திறன்.
  • சிறந்த விர்ஷுவல் உதவியாளராக செயல்படும் திறன்.

DRAWBACKS OF CHATGPT IN TAMIL:

இந்த தொழில்நுட்பம் அனைத்தும் பல விதமான தகவல் தொகுப்பிலிருந்து தங்களது முடிவை பதிலாக பயனர்களுக்கு கொடுக்கிறது. ஆகையால் சில நேரங்களில் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தவறாகப் பதில் அளிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் TRAIL-AND-ERROR முறையில் செயல்படுவதால் அது வைத்திருக்கும் தகவல்களைப் பொருத்தே பதில்கள் அமைகிறது.

CONCLUSION:

OPENAI CHATGPT தொழில்நுட்பம் பல வகையான நிலைகளில் பல தரப்பட்ட தொழில்களின் அறிவைப் பெற்றுள்ளது. இதனால் இது பயனர்களின் சந்தேகங்களை மற்றும் அவர்கள் விரும்பும் பதில்களைக் எளிதே கொடுக்கிறது. இருப்பினும் இது மனித ஆற்றலுக்கு மாற்று ஆகிவிடாது ஆனால் ஒரு குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை இணைய உலகில் ஏற்படுத்த முடியும். தகவல்களை துரித நேரத்தில் கொடுக்கும் இந்த தொழில்நுட்பம் இந்த உலகை எதிர்காலத்தில் மாற்றியமைக்கும் தன்மையுடையது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

Share the knowledge