ROBOT IN TAMIL | ARTS BASED ON HUMAN TEXT | FRIDA ROBOT IN TAMIL

ROBOT IN TAMIL | ARTS BASED ON HUMAN TEXT | FRIDA ROBOT IN TAMIL

INTRODUCTION TO AI ROBOT IN TAMIL:

செயற்கை தொழில்நுட்பம் தான் இனி நமது எதிர்காலம் என்ற கதை மாறி தற்பொழுது செயற்கை தொழில்நுட்பம் நமது நிகழ்காலமாக மாறிப்போய் உள்ளது.

AI POWERED ROBOT
AI POWERED ROBOT FRIDA IN TAMIL

HISTORY OF FRIDA ROBOT IN TAMIL:

தொழில்நுட்ப உலகின் அடுத்த புரட்சிகரமாக வருகிறது நமது FRIDA எனப்படும் இயந்திர ரோபாவின் கை. இதன் மூலமாக கலைஞர்கள் தமது கற்பனைகளை ஓவியமாக வண்ணம் தீட்ட இயலும். இது கலை உலகின் ஒரு புதிய தொழில்நுட்ப வருகையாக கருதப்படுகிறது.

THE STORY BEHIND FRIDA:

உலகப் புகழ்பெற்ற ஒரு மெக்சிகன் ஓவியரான FRIDA KAHLO என்பவரின் நினைவாக இந்த தொழில்நுட்பத்தின் FRIDA என்ற பெயர் வந்தது. இது மனிதர்களுடன் இணைந்து பலவகையான கலைநயமிக்க வேலைகளை தொழில்நுட்ப உதவியுடன் சிறப்பாக செய்ய இயலும்.

WHO CREATED FRIDA:

இந்த சிறப்பு வாய்ந்த கலைக்கு உதவிகரமாக இருக்கும் தொழில்நுட்பத்தை கணிப்பொறி ஆராய்ச்சி மாணவரான PETER SCHALDENBRAND என்பவர் கண்டுபிடித்தார். இவருக்கு துணையாக பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களான JEAN OH AND JIM MCCANN போன்றவர்களும் இத்தொழில்நுட்பம் வெற்றி பெற உதவிகரமாக இருந்தனர்.

AI POWERED ROBOT IN TAMIL:

CHATGPT தொழில்நுட்பம் இந்த உலகையே ஒரு குலுக்கு குலுக்கி கொண்டிருக்கும் வேளையில் கார்னகி மெலன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் AI POWERD ROBOT எனப்படும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கினர். நாம் இதன் மூலமாக ஒரு சிறிய வார்த்தையின் மூலமாக ஒரு கலைநயமிக்க ஓவியத்தை வரைவிக்க முடியும்.

AI POWERED PAINTING:

இந்த AI POWERED ROBOT நாம் கொடுக்கும் உள்ளீடு மற்றும் புகைப்படங்களில் இருந்து பிரத்யேகமான ஒரு ஓவியத்தை வரைய முடியும். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இசையிலிருந்தும் கூட அழகான ஓவியத்தை வரைய முடியும்.

REALISTIC OF FRIDA:

FRIDA ஓவியங்கள் அனைத்தையும் இறுதியாகப் பார்க்கையில் அது மனிதன் வரைந்ததை போலவே தத்ரூபமாக உள்ளது. FRIDA தனது ஓவிய கருவிகள் அனைத்தையும் நேரடியாக ஆராய்ச்சி செய்கிறது. இதனைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் “FRIDA IS A ROBOTIC PAINTING SYSTEM, BUT FRIDA IS NOT AN ARTIST” என்கிறார்.

COLLABORATION WITH FRIDA:

FRIDA புதியதாக எந்தவொரு கருத்தையும் உருவாக்குவதில்லை இது கலைஞர்களோடு இணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகையான தொழில்நுட்பம். ஒரு கலைஞர் FRIDA என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடலாம் அதை சிறப்பாக முடித்து காட்டுவதே FRIDAவின் பணியாகும்.

FRIDA IS TO HELP:

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக கலைஞர்கள் அனைவரும் தங்களின் வேலை பறிபோய் விடுமோ என்று எதிர்காலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். இது மனித கற்பனைக்கு மெறுகேற்றிட வந்த தொழில்நுட்பமேயன்றி மனித வேலைக்கு மாற்றாக வந்த தொழில்நுட்பம் கிடையாது.

CONCLUSION:

FRIDA என்பது மனித அறிவு மற்றும் இயந்திர அறிவின் கலவையாகும். இதன் மூலமாக மனிதர்களின் கற்பனைக்கு ஒரு வடிவம் கொடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் பலவகையான AI MODELS போன்றவற்றை உபயோகம் செய்கிறது. இதன் மூலமாக ஒரு கலைஞர்களுக்கு உருவாகும் பலவகையன GENERIC PROBLEMS போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.

இந்த FRIDA தொழில்நுட்பம் மூலமாக நாம் ரோபோவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மனிதனின் கற்பனைத் திறனை அதிகரிக்க முடியும். இது மனித குலத்திற்கும் மனித கற்பனைத் திறனுக்கும் ஊக்கம் அளிக்க வந்த ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் எப்பொழுதும் கலைஞர்களுக்கு ஒரு மாற்றாக இருக்காது.

Share the knowledge