WHAT IS CHATGPT-4 IN TAMIL | HISTORY OF CHATGPT-4 EXPLAINED IN TAMIL

WHAT IS CHATGPT-4 IN TAMIL | HISTORY OF CHATGPT-4 EXPLAINED IN TAMIL

WHAT IS CHATGPT-4 IN TAMIL:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OPEANAI தனது அடுத்த CHATGPTன் அடுத்த சக்திவாய்ந்த படைப்பான GPT 4 VERSIONஐ வெளியிட்டுள்ளது. செயற்கை அறிவின் அடிப்படையில் இயங்கும் இந்த தொழில்நுட்பம் தற்காலத்தில் அனைத்து தொழில்நுட்பத்திற்கும் முடிசூடா மன்னனாக உள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி OPENAI CHATGPT வெளியானது. தற்பொழுது வெளியாகியிருக்கும் இந்த GPT 4 எனப்படும் பதிப்பான “MULTIMODEL” எனப்படும் தத்துவத்தில் செயல்படுகிறது. MULTIMODEL மூலமாக இதன் மூலமாக TEXT மற்றும் IMAGE போன்றவற்றிலிருந்து ஒரு சாராம்சத்தை உருவாக்க முடியும்.

chatbot in tamil

DIFFERENCE OF CHATGPT-4 VS CHATGPT 3.5:

GPT 3.5ல் TEXT MESSAGE எனப்படும் குறுஞ்செய்தியை மட்டுமே உள்ளீடாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் நமது புதிய பதிப்பான GPT 4ல் IMAGES எனப்படும் படங்களையும் உள்ளீடாக ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. GPT 3.5ல் கிட்டத்தட்ட 3000 வார்த்தைகள் வரை தனது பயனர்களுக்கு பதில் அளிக்ககூடியது. GPT 4 ஆனது 25000 வார்த்தைகள் வரை தனது பயனர்களுக்கு பதில் அளிக்கக்கூடியது.

GPT 4 ஆனது அனுமதிக்கப்படாத உள்ளீடுகளுக்கு GPT 3.5 விட 82% பதில் அளிப்பதைத் தவிர்க்கிறது. மேலும் இது உண்மைத்தன்மையில் GPT 3.5 விட 40% முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது சாட்பாட் வளர்ச்சியாளர்களை தங்களின் வழியில் AIன் தொனியை தீர்மானிக்க அனுமதிக்கும்.

TONE AND STYLE CHATGPT-4 IN TAMIL:

GPT 4 ஆனது ஒருவகையான SOCRATIC STYLE எனப்படும் ஒரு பாணியை கையாள்கிறது. இதன் மூலம் இது பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுடன் உரையாடி தேவையான பதில்களை அளிக்கிறது. CHATGPT 3.5ல் ஒரு நிலையான TONE & STYLE கொண்டிருந்தது. தற்பொழுது இது பயனர்களுக்கு DYNAMIC STYLE ஆக உள்ளது.

CAPABILITIES OF CHATGPT-4 IN TAMIL:

இந்த புதிய பதிப்பான GPT 4 ஆனது U.S BAR EXAM மற்றும் GRADUATE RECORD EXAMINATION போன்றவற்றில் வெற்றியடைந்துள்ளது. மேலும் GPT4 ஆனது தனிநபர்களின் வருமான வரிகளை கணக்கிடவும் நன்கு பயன்படுகிறது. இதனின் மேலும் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால் தாங்கள் கையால் வரைந்த ஓவியத்தை பிரதி எடுத்து அதைப்போலவே உண்மையான ஒரு ஓவியத்தை உருவாக்க முடியும். மேலும் பார்வை இழந்தவர்களுக்காக ஒரு சிறப்பு செயலியாக “BE MY EYES” எனப்படும் மென்பொருள் டூல்ஸ் ஒன்றை GPT4 கொண்டுள்ளது.

LIMITATIONS OF CHATGPT-4 IN TAMIL:

GPT 4 ஆனது GPT 3.5ஐ விட பல விதமான சிறப்பம்சங்களை கொண்டிருந்த போதிலும். இதன் வரைமுறைகளைப் பொருத்தவரை இதன் முந்தைய பதிப்பான GPT 3.5 கொண்டுள்ள வரைமுறைகளையே பெற்றுள்ளது. மேலும் மனிதர்களின் அறிவோடு ஒப்பிடுகையில் இது மனித அறிவைக் காட்டிலும் குறைவான திறன் பெற்றவையாக உள்ளது.

ACCURACY OF CHATGPT-4 IN TAMIL:

ARTIFICIAL INTELLIGENCE அனைத்தும் பெரும்பாலும் “HALLUCINATIONS” எனப்படும் துல்லியமில்லாத பதில்களை பல நேரங்களில் தருவது ஒரு விதமான பின்னடைவாக கருதப்படுகிறது இது நமது CHATGPT4க்கும் பொருந்தும். எதிர்காலத்தில் இது நீக்கப்பட வேண்டிய முக்கியமான குறைபாடாக உள்ளது.

Read more about HISTORY OF CHATGPT

Share the knowledge