SMTP IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மூலம் தகவலை சேர்க்கும் போக்குவரத்து SMTP ஒரு பார்வை

SMTP IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மூலம் தகவலை சேர்க்கும் போக்குவரத்து SMTP ஒரு பார்வை

INTRODUCTION TO SMTP IN TAMIL:

SMTP என்பது இணையத்தின் இன்றியமையாத ஒரு விதமான புரோட்டோகால் ஆகும். பொதுவாக புரோட்டோகால் என்பது SET OF RULES AND REGULATIONSயைக் குறிப்பதாகும். இந்த புரோட்டோகால் குறிப்பாக இணையத்தில் மின்னஞ்சல் சேவையில் ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. இது இணையத்தில் மின்னஞ்சல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு பெரிதும் பயன்படுகிறது. இந்த SMTP எனும் புரோட்டோகாலை அனைவரும் PUSH PROTOCOL என்று கூறுகின்றனர். இந்த புரோட்டோகாலானது அனுப்புநர் பக்கம் ஒரு மின்னஞ்சலை அனுப்ப பயன்படுகிறது.

SMTP IN TAMIL BASICS:

SMTP என்பது ஒரு வகையான APPLICATION LAYER PROTOCOL ஆகும். இது APPLICATION LAYERல் செயல்படும் அப்ளிகேஷனில் இருந்து உதாரணமாக ஏதேனும் BROWSER மூலமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பப் பயன்படுகிறது. ஒரு பயனர் அதாவது CLIENT என்பவர் ஒரு மின்னஞ்சலை அனுப்ப விரும்பினால் முதலில் அவர் ஒரு பாதுகாப்பான இணைப்பை அதாவது TCP CONNECTION எனப்படும் ஒரு இணைப்பை நேரடியாக SMTP செர்வருக்கு உருவாக்க வேண்டும்.

SMTP SERVER எனப்படுவது எப்பொழுதும் LISTENING MODEலேயே இருக்கும். இங்கு LISTENING MODE என்பது ஒரு இணைப்பை பெற செர்வர் தயாராக இருப்பதைக் குறிப்பதாகும். SERVER ஏதேனும் ஒரு CLIENT வசம் இருந்து ஒரு வேண்டுகோளை பெற்றவுடன் SMTP ஆனது PORT 25 வழியாக தனது இணைப்பை தொடங்குகிறது. SERVER வெற்றிகரமாக ஒரு TCP இணைப்பை ஏற்படுத்தியவுடன் CLIENT ஆனது உடனடியாக தனது மின்னஞ்சலை அனுப்புகிறது.   

SMTP IN TAMIL MODES:

SMTPல் இரண்டு விதமான முக்கிய MODEகள் உள்ளன.

  1. END TO END METHOD
  2. STORE AND FORWARD METHOD

இந்த END TO END METHOD எனப்படுவது இரண்டு விதமான வெவ்வேறு நிறுவனங்களக்கிடையே தொடர்பு கொள்வதற்குப் பயன்படுகிறது. அதேபோல் STORE AND FORWARD METHOD எனப்படுவது ஒரே நிறுவனங்களுக்குள் தொடர்பு கொள்ளப் பயன்படுகிறது. ஒரு மின்னஞ்சலை அனுப்பும் பொழுது CLIENT SIDEல் இருக்கும் SMTP ஆனது ஒரு SERVER SIDEல் இருக்கும் SMTPயை தொடர்பு கொள்ளும். SMTP SERVER ஆனது வரக்கூடிய ஒரு மின்னஞ்சலை தானே வைத்துக் கொள்ளும். மேலும் அதன் பிரதியை மட்டும் SMTP CLIENTக்கு அனுப்பும்.

இங்கே CLIENT SMTP ஒரு SESSIONயை தொடங்கியது எனலாம் எனவே இதை CLIENT-SMTP என்கிறோம். அதேபோல் ஒரு SERVER SMTP என்பது ஒரு SESSIONக்கு பதிலளித்தது எனலாம் எனவே இதை RECEIVER-SMTP என்கிறோம்.

MODELS OF SMTP SYSTEM:

இந்த SMTP MODELல் பயனர் ஒரு USER AGENT உடன் தொடர்பு கொள்கிறார். உதாரணமாக: Microsoft Outlook, Netscape Navigator, Mozillar Firefox etc. TCP மூலமாக ஒரு மின்னஞ்சலை மாற்றிக் கொள்வதற்கு நமக்கு MTA பயன்படுகிறது. MTA என்பது ஒரு சிறிய அளவிலான QUEUEவை நிர்வகிக்கிறது. MTA மின்னஞ்சல் பெட்டிக்கு தனது மின்னஞ்சலை அனுப்புகிறது. பிறகு தகவலானது USER AGENTS மூலமாக பின்பு தரவிறக்கம் செய்யப்படுகிறது.

SMTP IN TAMIL
SMTP IN TAMIL

SMTP CLIENT & SMTP SERVER:

SMTP CLIENT மற்றும் SMTP SEVER என்பவை இரண்டு வகையான COMPONENTSகளைக் கொண்டுள்ளது. அனுப்புநர் வசமுள்ள USER AGENT ஆனது ஒரு குறுஞ்செய்தியை SENDER MTAவிற்கு அனுப்புகிறது. பின்பு அது நேரடியாக RECEIVER MTAவிற்கு அனுப்பபடும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே ஒரு மின்னஞ்சலை அனுப்புவதற்கு அனுப்புநரிடம் ஒரு CLIENT MTA இருக்க வேண்டும். அதே போல் பெறுநரிடம் ஒரு SERVER MTA இருக்க வேண்டும்.

SENDING EMAIL:

மின்னஞ்சல் அனுப்புதல் என்பது CLIENT மற்றும் SERVERக்கு இடையே தொடர்ச்சியான SERIES OF REQUEST AND RESPONSE MESSAGES ஆகும். ஒரு குறுஞ்செய்தி என்பது அதில் HEADER மற்றும் BODY SECTIONஐ வைத்திருக்கும். இங்கே NULL LINE என்பது MAIL HEADERயை குறிப்பிடுவதாகவும் NULL LINEக்கு பின்பு வரும் ஒவ்வொன்றும் ஒரு BODY OF THE MESSAGE என்று அறியப்படுகிறது. இந்த MESSAGES அனைத்தும் SEQUENCE OF ASCII CHARACTERS ஆகும். இந்த MESSAGE BODY பெறுநர் பெற வேண்டிய உண்மையான குறுஞ்செய்தியைக் கொண்டிருக்கும்.

RECEIVING EMAIL:

SERVER வசம் உள்ள USER AGENTS ஆனது ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தனது மின்னஞ்சல் பெட்டியை சரிபார்க்கிறது. பெட்டியில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருந்தால் செர்வர் அதை பயனருக்கு தெரிவிக்கிறது. பயனர் ஒரு செய்தியை திறப்பதற்கு முன்பாகவே அது பற்றிய SHORT DESCRIPTIONயை காட்டுகிறது.

SMTP IMPORTANT COMMANDS:

HALO – இது சம்பந்தப்பட்ட செர்வருக்கு கிளைன்ட் யார் என்று தெரிவிக்கிறது. இது SESSIONல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்.

MAIL – இது ஒரு வகையான MESSAGE TRANSFERயை பயன்படுத்துகிறது.

RCPT – இது ஒரு மெயிலை பின்பற்றுகிறது, ஒரு முகவரியை அடையாளம் காண்கிறது. ஒரு முகவரியின் FULLY QUALIFIED NAMEயை அடையாளம் காண்கிறது.

DATA – இது ஒரு தகவலை செயல்படுத்துகிறது மேலும் அந்த குறிப்பிட்ட தகவலை வரி வரியான மற்றொரு முகவரிக்கு அனுப்ப பயன்படுகிறது.

CHARACTERISTICS OF SMTP:

  • SMTP PROTOCOL ஆனது PORT 25யை பயன்படுத்துகிறது.
  • இது ஒரு PERSISTENET TCP CONNECTIONயை பயன்படுத்துகிறது. இதன் மூலமாக நாம் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சலை ஒரே நேரத்தில் அனுப்ப இயலும்.
  • இது ஒரு STATELESS PROTOCOL ஆகும்.
  • இது ஒரு வகையான CONNECTION ORIENTED PROTOCOL ஆகும்.
  • இது TRANSPORT LAYERன் TCPயை பயன்படுத்துகிறது.
  • இது ஒரு வகையான PUSH CONTROL PROTOCOL ஆகும்.

ADVANTAGES OF SMTP:

  • இது OUTGOING EMAIL MESSAGEக்கு ஒரு RELIABILITY வழங்குகிறது.
  • மின்னஞ்சல் மூலமாக பல்வேறு வகையான கணிப்பொறிகளுக்கு இடையே நடக்கும் ஒரு எளிமையான தொலைத்தொடர்பு ஆகும்.
  • ஒரு வேளை தாங்கள் அனுப்பும் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலானது போய்ச் சேரவில்லை என்றால் தங்களின் மின்னஞ்சல் போய்ச் சேரும் வரை இது திரும்ப RESEND செய்யும்.
Share the knowledge