WI-FI IN TAMIL – இவன் IoTன் முதுகெலும்பு சும்மா இணையத்தை தெறிக்கவிடும் WIFI பற்றிய ஒரு பார்வை

WI-FI IN TAMIL – இவன் IoTன் முதுகெலும்பு சும்மா இணையத்தை தெறிக்கவிடும் WIFI பற்றிய ஒரு பார்வை

WI-FI IN TAMIL:

WIFI என்பது Wireless networking protocol குடும்பத்தை சேர்ந்ததாகும். இது IEEE 802.11குழுமத்தை சார்ந்ததாகும். இதை பெரும்பாலும் நாம் LAN மற்றும் INTERNETயை பெற பயன்படுத்துகிறோம். Wifi என்பது நிதி சாரா Wifi Alliance குழுமத்தை சார்ந்ததாகும். இக்குழுமம் இணையத்தின் தகவல் பரிமாற்றத்தின் போது Wifi certified என்ற சொல்லை பயன்படுத்துவதை தடுக்கின்றது. 2009ம் ஆண்டு நிலவரப்படி ஒரு ஆண்டிற்கு சுமார் 350 மில்லியன் அளவிலான Wifi Integrated Chips தயாரிக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் Smartphone, Tablets, Smart TV, Printers, Android போன்ற அனைத்து மின்சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது 2010ம் ஆண்டு கணக்கின் படி இந்த Wifi Alliance என்ற குழுமமானது 350ற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிறுவியுள்ளது.

WI-FI IN TAMIL
How wifi works in tamilogy

Wifi ஆனது IEEE 802 ப்ரோடோகாலின் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த Wifi ஆனது Wireless Access Point அல்லது Wired Device போன்றவற்றோடு இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. அனைத்து மின் சாதனங்களும் Access point உடன் இணைந்து இணைய வலையை உருவாக்க முடியும். இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் நெட்ஒர்க்களில் Wifi ஆனது அதிகப்படிய தாக்குதலுக்கு உள்ளாகிறது. Wifiன் அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் இருக்கும் யாரேனும் Wifi network interface controller உடன் இருந்தால் அவரால் எளிதாக இணையத்தின் தகவலை திருட முடியும். பயனர் Wifi உடன் இணைய விரும்பினால் அவர்க்கு அந்த Wifiன் SSID மற்றும் Password தெரிந்திருக்க வேண்டும். Wifiன் Packetகளை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க நாம் Passwordயை பயன்படுத்துகிறோம். மேலும் Wifiன் பாதுகாப்பை பலப்படுத்த நாம் WPA(Wifi protected access), WPA2 போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.

HISTORY OF WI-FI IN TAMIL:-

கம்பியில்லா தொழில்நுட்பத்தின்(WIFI) தொழில்துறை யுகத்தின் முதல் படியாக ரேடியோ அலைகள் உருவானது. மேலும் இது IEEE802.11 உருவாக வழிவகை செய்தது. இந்த கம்பியில்லா 802.11ஆனது பலவிதமான தரத்தினை(802.11a, 802.11b, 802.11g) ஏற்படுத்தியது. இந்த தரத்தின் அடிப்படையிலேயே கம்பியில்லா இணையம் இயங்குகிறது. மேலும் இது உபகரணங்களுக்கு இடையில் ஒரு நொடியில் 2MB அளவிலான தகவல்களை பரிமாற்றம் செய்கிறது. மேலும் நொடிக்கு 2mb எனப்படும் அதிவேக தகவல் பரிமாற்றமானது ப்ரோட்டோடைப்பின் வளர்ச்சிக்கு உதவி ROUTERரை WIFIனுடன் இணைய வழிகோலியது. அதனால் 1999ம் ஆண்டு வீடுகளுக்கு கம்பியில்லா இணையம் WIFI கொடுக்கப்பட்டது.

கம்பியில்லா இணையமானது தகவல் தொடர்புக்கு எலெக்ட்ரோமேக்னெட் அலைக்கற்றைகளை(Electromagnetic waves) பயன்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரோமேக்னெட்டிக் அலைக்கற்றையானது இரண்டு விதமான அதிர்வெண்ணின் அடிப்படையில் இயங்குகிறது 802.11b(2.4 Ghz), 802.11a(5 Ghz). பல ஆண்டுகளாக 2.4 Ghz அதிர்வெண்ணானது பயனாளர்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏனெனில் இது பல விதமான எலக்ட்ரானிக் கருவிகளுடன் ஒத்துப்போக கூடியது.

2003ம் ஆண்டு வாக்கில் கம்பியில்லா இணையத்தின் பழைய பதிப்புகளான வேகம்(speed) மற்றும் தொலைதூர இணைப்பும்(distance coverage) இணைந்து 802.11gயை உருவாக்கியது. இதன் காரணமாக Routerம் சிறந்து விளங்கியது. Wifi ஆனது வேகத்தில் கம்பி தொழில்நுட்பத்தை விட முன்னேறி விளங்கியது.

802.11n ன் வருகைக்கு பிறகு:

802.11n ஆனது 2009ம் ஆண்டு வருகை தந்தது. இந்த 802.11nன் வேகமானது இதன் முந்தைய பதிப்புகளான 802.11a, 802.11b, 802.11g போன்றவற்றை காட்டிலும் வேகமாக இயங்கியது. இது(802.11n) அதனின் செயல் வேகத்தை அதிகப்படுத்தியது அதாவது ஒரே நேரத்தில் பல உள்ளீடு மற்றும் பல வெளியீடுகளை(MIMO) நாம் செய்ய இயலும். இங்கு நாம் Higher Bandwidth இல்லாமலேயே சிறந்த டேட்டாக்களை பெற இயலும்.

802.11 5Ghzன் பிரபலம் :

நாம் ஏற்கனவே பார்த்தது போல 802.11ல் இரண்டு விதமான அதிர்வெண்கள்(frequencies) உள்ளன. அவை 2 Ghz & 5 Ghz ஆகியவை ஆகும். இதில் 802.11 2Ghz frequency ஆனது மிகவும் பிரபலமாக இருந்தது ஏனென்றால் அது மிகவும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த 2.5 Ghzயை அதிகமாக பயன்படுத்திய காரணத்தால் அதன் செயல்படும் வேகமானது மிகவும் குறைவானது அதனால் மாற்றாக 5 Ghzயை மக்கள் பயன்படுத்த தொடங்கினார்கள்.

Dual Band Routersன் அறிமுகம்:

இவ்வாறாக இந்த Frequencyன் பிரச்னையை சரி செய்ய பின்னாளில் Dual Band Routerகள் பயன்படுத்தப்பட்டது. இந்த Routerகள் இரண்டு விதமான Wireless radiosகளை கொண்டுள்ளது அதன் மூலமாக இது இரண்டு விதமான அதிர்வெண்களும்(2.5Ghz & 5Ghz) இயங்க ஆதரவளிக்கிறது. இதனால் இந்த Deviceகளை பயன்படுத்தும் Routerகள் ஸ்திரமாக 5 Ghz அலைக்கற்றையில் இணைப்பை முதலில் ஏற்படுத்தும். பிறகு இணைப்பின் வேகம் குறையும் போதோ அல்லது இணைப்பு சரிவர கிடைக்காத போதோ இது தானாக 2.5Ghzற்கு மாறிவிடும்.

801.11acன் புது வருகை:

801.11ac ஆனது இந்த 5Ghz அலைக்கற்றையை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. இது 802.11nயை போல நான்கு மடங்கு அதிக வேகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரே நேரத்தில் அதிகப்படியான ஆன்டெனாக்களுக்கு இணைப்பை ஏற்படுத்துவதால் அதிக Bandwidthயை கொடுக்கிறது. Eric Geierஆல் 2012ம் ஆண்டு வருகை தந்த Beamforming concept தொழில்நுட்பமானது அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல் மற்றும் சமிஞைகளை பெற உதவியது. இந்த தொழில்நுட்பம் மூலமாக நாம் வான் வெளியில் சமிஞைகளை பரப்பி அந்த சமிஞை Target Deviceயை அடைவதற்கு பதிலாக நேரடியாக நாம் சமிஞைகளை Target Deviceயை நோக்கி அனுப்புகிறோம்.

Wi-Fi GENERATIONS:

Generations of WIFI

WORKING OF WI-FI IN TAMIL:-

WIFI என்பது Wired Networkற்கு மாற்றாக கூறப்பட்ட இணையம் ஆகும் இது சாதனங்கள் அனைத்தையும் Wire இல்லாமல் இணைக்க பயன்படுகிறது. WIFI என்பதின் உண்மையான அர்த்தம் Wireless fidelity ஆகும். இது IEEE 802.11 என்பதை குறிக்கிறது. இதை WLAN என்றும் அழைக்கலாம். WIFI என்பது கணினியை ஒன்றுடன் ஒன்று இணையத்துடன் இணைக்கிறது. இது Wired Network அல்லது Wireless போன்ற அனைத்து ஊடகத்துடனும் இணையத்தை ஏற்படுத்தும். WIFI அதிவேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய ரேடியோ டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. இது கீழ்கண்ட தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கிறது

i) IEEE 802.11b

ii) IEEE 802.11a

iii) IEEE 802.11g

IEEE 802.11b:

1999ம் ஆண்டு இறுதியில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் radio spectrum 2.4GHZஆகும். இதன் வேகமானது 30மீட்டர் இடைவெளியில் 11Mbps அளவில் இருக்கும். ஆனால் பொதுவாகவே இதன் உண்மையான வேகம் 6mbps ஆகும். இதனுடைய தகவல் பரிமாற்ற திறனானது 150 அடிக்குள் தான் சிறப்பாக இருக்கும். இந்த IEEE802.11b அனைத்து மிகவும் பிரபலமானதும் குறைந்த செலவினதும் ஆகும்.

IEEE 802.11a:

இது 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இதன் ரேடியோ அலைக்கற்றையானது 5.0Ghzஆகும். இதன் தகவல் பரிமாற்ற வேகம் 20mbps ஆகும். மேலும் 75அடி வரை சுற்றளவில் நன்கு செயல்படும் எனினும் இதன் தொழில்நுட்ப விலை கொஞ்சம் அதிகமாகும்.

IEEE 802.11g:

2003ம் ஆண்டு இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டது. இது 802.11a, 802.11b போன்ற இரண்டினுடைய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் வேகம் 54mbps ஆகும். இதன் ரேடியோ அலைக்கற்றையானது 2.4Ghz ஆகும்.

WI-FI ELEMENTS:

Access Point என்பது ஒரு Wireless LAN Transceiverஅல்லது Base Station ஆகும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Wireless சாதனங்களை இணையத்துடன் ஒருங்கிணைக்க பயன்படுகிறது.

WI-FI CARDS:

WIFI CARDS மூலமாகத்தான் WIFI ஆனது Wireless சமிஞைகளையும் அது சார்ந்த தகவல்களையும் பெறுகிறது.

SAFEGAURDS:

இங்கு நாம் Firewall அல்லது Antivirus Softwareகளை பயன்படுத்துகிறோம். இது தேவையற்ற பயனரிடம் இருந்து இணையத்தை காக்க பயன்படுகிறது.

WI-FI TOPOLOGY:

இங்கு இரண்டு விதமான Topologies காணப்படுகின்றன .

1. Peer to peer topology (Adhoc mode)

2. Ap based topology (Infrastructure mode)

Peer to peer topology:(Adhoc mode)

இங்கே Access point தேவை கிடையாது. இம்முறையில் Client Deviceகள் ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம் நாம் Wireless சேவையை எளிதாக தொடங்க முடியும்.

Ap based topology:(Infrastructure Network)

பயனர் Access point மூலமாக மற்றவருடன் தொடர்பு கொள்கிறார். எந்தவித Communication நீங்கள் ஏற்படுத்த விரும்பினாலும் அதை நீங்கள் Access point மூலமாகத்தான் ஏற்படுத்த முடியும். எலக்ட்ரானிக் கருவிகளான Mobileகள் மற்றொரு மொபைலோடு தொடர்பு கொள்ள விரும்பினால் அது முதலில் தகவலை Access Pointற்கு அனுப்பும் பிறகு தகவலை மற்றொரு Mobile Stationற்கு அனுப்புகிறது.

Hotspots:

Hotspots என்பது ஒரு விதமான புவியியல் சார்ந்த பகுதியாகும் அது கம்பியில்லா இணையத்தை எப்பொழுதும் கொண்டிருக்கும். இந்த Hotspot Broadbandடோடு தொடர்புடைய இணையமாகும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Acccess Pointகள் இணையத்தை பெற உதவுகிறது. Hotspotகள் மூலமாக நாம் எந்தவொரு பொது இடத்திலும் இணையத்தை பெற நிறுவ இயலும்.

Share the knowledge