WHATSAPP ALTERNATIVE IN TAMIL – வாட்ஸ்அப்பை பாதுகாப்பில் ஓரங்கட்டும் அற்புதமான 6 செயலிகள்

WHATSAPP ALTERNATIVE IN TAMIL – வாட்ஸ்அப்பை பாதுகாப்பில் ஓரங்கட்டும் அற்புதமான 6 செயலிகள்

WHATSAPP ALTERNATIVE IN TAMIL:

2020ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்தே வாட்ஸ்அப் செயலியானது தனது பயனாளர்களின் தகவல்களை தனது தாய் குழுமமான FACEBOOK நிறுவனத்துடன் பகிரத்துடங்கியுள்ளது. இதனால் சில கணினி ஆய்வாளர்கள் மற்றும் CYBER SECURITY பாதுகாப்பாளர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக மற்றவர்களுக்கு விடுத்துள்ளனர். இதன் மூலமாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் 2 மில்லியன் பயனர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையாக விடப்படுகிறது.

whatsapp alternative in tamil
WHATSAPP ALTERNATIVE IN TAMIL

வாட்ஸ்அப் செயலியானது END-TO-END ENCRYPTION எனும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது அதாவது இதில் தாங்கள் எந்தவொரு குறுஞ்செய்தி, வீடியோ ஆடியோ போன்றவற்றை அனுப்பினாலும் அதை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே படிக்க இயலும். எந்தவொரு மூன்றாம் நபரோ ஏன் வாட்ஸ்அப் சர்வர் கூட அதை படிக்க இயலாது. ஆனால் வாட்ஸ்அப்பின் சமீபத்திய நடவடிக்கையானது இந்த மாதிரியான பாதுகாப்பு குறைபாட்டு காரணங்களுக்கு வழிவகுத்துள்ளது.

WHY WHATSAPP ALTERNATIVE IN TAMIL?

தாங்கள் எந்த சமூக குறுஞ்செய்தி செயலியை விரும்புகிறீர்கள் மேலும் தாங்கள் அவற்றின் தகவல்களை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.ஆனால் இந்த விஷயம் தாங்கள் நினைப்பதை விட அதிகம் அலசி ஆரய்ந்து மேலும் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். நமது இன்றைய உலகில் எதுவுமே இலவசம் கிடையாது அது நமது இன்டர்நெட் உலகிற்கும் பொருந்தும். நமது இன்றைய இணைய உலகில் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான செயல்களும் ஒரு விலையுண்டு நாம் அந்த விலையை பணமாகவோ அல்லது இணைய டேட்டாவாகவோ தருகிறோம்.

ஒருவேளை தாங்கள் பெறும் தகவல்கள் மூலமாக தங்களுக்கு பயன் இருந்தால் தாங்கள் பன்னாட்டு நிறுவனத்தை தங்கள் வாழ்வில் குறுக்கிட அனுமதியுங்கள். ஒருவேளை தாங்கள் இதைப்பற்றி நல்லவிதமாக நினைக்கவில்லையென்றால் அதாவது பன்னாட்டு நிறுவனமானது தங்களிடம் இருந்து அதிகப்படியான தகவல்களை எடுப்பதாக நினைத்தால் தாங்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது WHATSAPPக்கு மட்டும் பொருந்தாது அதைத்தவிர பல இணைய உலகின் ஜாம்பவான்களான AMAZON, GOOGLE, YAHOO, YOUTUBE போன்றவற்றிற்கும் பொருந்தும்.

Signal

மிகப் பெரிய திறமை வாய்ந்த ஒரு சிறந்த செயலி இந்த SIGNAL ஆகும். இந்த செயலியானது பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த SIGNAL செயலியானது OPEN WHISPER SIGNAL எனப்படும் ஒரு விதமான PROTOCOLஐ கொண்டுள்ளது. உண்மையிலேயே இந்த PROTOCOL ஆனது மற்ற புகழ்வாய்ந்த செயலிகளான TELEGRAM, VIBER மற்றும் SKPE போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

SIGNAL செயலியானது இலவசம் மற்றும் OPEN SOURCE எனப்படும் அனைவருக்கும் பொதுவானதாகும். இது SIGNAL FOUNDATION மூலமாக நிர்வகிக்கப்படும் ஒரு நிதிசாரா அமைப்பாகும் இது தனது இலக்காக “DEVELOP OPEN SOURCE PRIVACY TECHNOLOGY” அதாவது அனைவருக்கும் பொதுவான பாதுகாப்பான இலவச மென்பொருளை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இந்த இலவச மென்பொருளை அனைவரும் நம்புவதற்கான மற்றொரு காரணம் எந்த வித மிகப்பெரிய நிறுவனமும் இந்த செயலிக்குப் பின்னால் இல்லாததே இதன் காரணமாகும்.  

இந்த செயலியானது பின்வரும் முக்கியமான செயல்களைச் செய்கிறது TEXTING, VIDEO, VOICE CALLS, AND FILE SHARING. பாதுகாப்பு முறையில் இந்த செயலியானது மிகவும் பலமாக உள்ளது அதாவது தாங்கள் மற்றவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதை 5 நொடியில் தானாகவே அழியுமாறு இந்த SIGNAL APPல் வடிவமைக்க முடியும். தாங்கள் இந்த செயலியில் அனுப்பப்படும் அனைத்து தகவல்களும் END-TO-END ENCRYPTION முறையில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த செயலியானது தனது செர்வரில் எந்த விதமான பயனாளர் தகவல்களையும் சேமித்து வைப்பது கிடையாது.

இங்கே நாம் வாட்ஸ்ஆப்பைப் போல எந்த விதமான STICKERS மற்றும் CHATTING WALLPER போன்றவற்றை நாம் பயன்படுத்த முடியாது.ஆகையால் இது மிகவும் பாதுகாப்பாகும்.

Telegram

வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைந்ததைத் தொடர்ந்து TELEGRAM APP பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 25 மில்லியன் பயனர்கள் இதனால் பயனடைந்து உள்ளனர். இத்தகைய அசுர வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும் ஏனென்றால் TELEGRAM செயலியானது பாதுகாப்பில் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும் இது அனைவராலும் GOOGLE APP PLAY STORE மற்றும் APPLE’S APP STORE இரண்டிலும் பரவலாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தப்படும் ஒரு செயலியாகும்.

இந்த செயலியானது TEXTING, VOICE, VIDEO CALL, PUBLIC CHANNELS மற்றும் FILE SHARING போன்ற அனைத்தையும் வாட்ஸ்அப்பைப் போன்ற செய்வதால் பயனாளர் அனைவரும் ஒரு செயலியிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது மிக எளிதாகும்.

இந்த செயலி மேலும் END-TO-END ENCRYPTIONற்கு ஆதரவளிக்கிறது. செயலியில் ரகசியமாக அலவலாவும் போது ONE-TO-ONE ENCRYPTION PROTOCOL பயன்படுகிறது. இங்கே உரையாடும் போது எந்தவிதமான தடையமும் இங்கே விடப்படுவதில்லை. TELEGRAM SERVER ஆனது ஒரு குறுஞ்செய்தியை பெறுநருக்கு அனுப்பிய பிறகு அந்த ENCRYPTEDC MESSAGEஐ அழிக்கிறது.

இந்த END TO END ENCRYPTION எனப்பபடும் தொழில்நுட்பமானது பயனாளர்களை அவர்களது BACKUPகளை உடனடியாக பெற உதவுகிறது.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் என்ற இரண்டு செயல்களை ஒப்பிடும் போதும் வாட்ஸ்அப் செயலியானது தனது தகவல்களை சேமிக்க iCloud மற்றும் Google drive என்ற இரண்டு விதமான 3rd party செர்வர்ஸ்களைக் கொண்டுள்ளது.

Dust

இது மற்ற இரண்டு செயலிகளை விட அதாவது SIGNAL மற்றும் TELEGRAM இந்த இரண்டையும் விட குறைவாகப் புகழ் பெற்றதாகும். தாங்கள் தங்களுடைய தகவலை முடிந்தளவு பாதுகாப்பாக வைக்க முயற்சி செய்தீர்களானால் DUST என்பது ஒரு சிறந்த செயலியாகும். நீங்கள் உங்களுடைய மொபைலில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பிய 24 மணிநேரத்தில் அது தானாகவே அழிந்து விடும்.

இந்த செயலியில் ஒரு சமூக அந்தஸ்து உள்ளது இதன் மூலமாக நாம் FOLLOWERSஐ பெற முடியும். இதன் குறைபாடு என்னவென்றால் நம்மால் இந்த செயலியில் வீடியோ மற்றும் குரல் குறுஞ்செய்தி அனுப்ப இயலாது.

Threema

இதுவும் மேற்கூறிய மற்ற செயலிகளைப் போன்றே வேலை செய்கிறது மேலும் இது END TO END ENCRYPTIONற்கு ஆதரவளிக்கிறது. இந்த செயலியைப் பயன்படுத்த தங்களுக்கு வாட்ஸ்அப் போன்று போன் எண்கள் தேவையில்லை மாறாக இது QR-CODEஐ பயன்படுத்தி செயல்படுகிறது. இதன் மூலமாக பயனரின் இருப்பிடம் பாதுகாக்கப்படுகிறது.

இந்த செயலியானது TEXTING, VOICE & VIDEO CALLS போன்றவற்றிற்கு ஆதரவளிக்கிறது மேலும் இதன் தலைநகரம் ஆனது சுவிட்சர்லாந்தில் உள்ளது.

இந்த செயலியின் பிரச்சனை என்னவென்றால் நாம் இதைப் பயன்படுத்த இதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இந்த செயலியின் வடிவமைப்பாளர்கள் இதை விளம்பரம் இல்லாமல் உருவாக்குகிறார்கள்.

Viber

இந்த செயலியானது தங்களுடைய தகவல்களை E2E ENCRYPTION முறையில் பாதுகாக்கிறது. இந்த செயலியில் தாங்கள் ஒருவருடன் பேசினாலோ அல்லது ஒரு குழுவினருடன் பேசினாலோ E2E ENCRYPTION சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் இந்த செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால் தாங்கள் இந்த செயலியை UP-TO-DATE ஆக வைத்திருக்க வேண்டும்.

iMessage

தாங்கள் ஒரு APPLE பயனாளராக இருந்தால் தாங்கள் இயற்கையாக அந்த நிறுவனத்தின் E2E ENCRYPTED MESSAGING தொழில்நுட்பத்தைப் பெற தகுதி பெறுகிறீர்கள். IMESSAGE செயலியானது இந்த E2E பாதுகாப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இந்த IMESSAGE செயலியானது மற்ற செயலிகளுடன் இணைந்து நன்றாக செயல்படுவதில்லை.

Share the knowledge