INTERNET IN TAMIL – டிஜிட்டல் உலகை இணைக்கும் இணையம் தோன்றிய வரலாறும் அதன் இயங்கும் முறைகளும்
INTERNET IN TAMIL:
இன்டர்நெட் உருவாக்கத்திற்கு நாம் ஒரு தனி நபருக்கு நன்றி சொல்வதென்பது இயலாததாகும். இன்டர்நெட் என்பது பல வகையான அறிவியலாளர்கள் ப்ரோக்ராமர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து உருவாக்கியது ஆகும்.
பல அறிவியலாளர்களுக்கு உலகம் முழுக்க ஒரு World Wide Networkயை உருவாக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 1900ம் ஆண்டு வருடத்தின் தொடக்கத்தில் Nikola Tesla என்பவர் World Wireless System என்ற கருத்திற்கு முதலில் அடித்தளமிட்டார். அதனை தொடர்ந்து Paul Otlet & Vannevar Bush போன்ற அறிஞர்கள் 1930, 1940ம் ஆண்டுகளில் World Wireless System என்ற கருத்திற்கு உதவினார்கள்.
முதல் இணையமானது 1960ம் ஆண்டின் இறுதியில் ARPANETன் உருவாக்கத்திற்கு பிறகு தோன்றியது. இந்த இணையம் உருவாக நிதி உதவி அளித்தது அமெரிக்காவின் U.S Defense Department ஆகும். இந்த ARPANETஆனது Packet Switchingயை பயன்படுத்தி பல கணினிகள் ஒரு இணையத்துடன் இணைய வழிவகை செய்தது. Packet Switching என்பது Electronic Dataவை திறம்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற பயன்படும் ஒரு தொழிநுட்பம் ஆகும். இன்டர்நெட் என்பது பல வகையான அறிவியலாளர்கள் ப்ரோக்ராமர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து உருவாக்கியது ஆகும்.
அக்டோபர் 29, 1969ம் ஆண்டு தனது முதல் குறுஞ்செய்தியை ARPANET அனுப்பியது. இந்த குறுஞ்செய்தி ஒரு Node to Node வகையை சேர்ந்ததாகும். அதாவது இது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு குறுஞ்செய்தியை அனுப்பியது. முதல் கணினியானது UCLAவின் ஆய்வு கூடத்தில் வைக்கப்பட்டது இரண்டாம் கணினியனானது Standfordல் வைக்கப்பட்டது அவர்கள் அப்பொழுது “Login” என்ற ஒரு குறுஞ்செய்தியை ஒரு கணினியிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பினார்கள் எனினும் இது ARPANETயை முற்றிலும் சேதமடைய செய்தது பின்பு Standford Destination கணினி ஆனது குறுஞ்செய்தியில் முதல் இரண்டு எழுத்தை மட்டும் பெற்றது.
அறிவியல் அறிஞர்களான Robert Kahn, Vinton Cerf போன்றவர்கள் TCP/IP PROTOCOL கண்டுபிடிப்பிற்கு பிறகு தொழில்நுட்பமானது தொடர்ந்து 1970களில் வளரத்தொடங்கியது.
TCP/IP MODEL ஆனது தகவல்களை பல விதமான இணையங்களுக்கு அனுப்ப உதவி புரிந்தது. தெளிவாக கூறினானால் நாம் இன்றளவும் இணையத்தில் TCP/IP Modelயை பயன்படுத்தி வெவ்வேறு நேட்வொர்களுக்கு நாம் தகவல்களை அனுப்புகிறோம்.
1983 ஜனவரி 1ல் ARPANET ஆனது TCP/IP MODEL யை தத்தெடுத்து கொண்டது. அங்கிருந்து ஆராய்ச்சியாளர்கள் NETWORK OF NETWORK என்ற கொள்கையை வளர்த்தார்கள். அது பின்னாளில் “INTERNET”ஆக அவதாரமெடுத்தது. ஆம் நண்பர்களே உங்களிடம் யாராவது இன்டர்நெட் என்றால் என்ன என்று கேட்டால் தாங்கள் NETWORK OF NETWORK என்று கூறலாம்.
பிறகு 1990ல் டிம் பெர்னெர்ஸ் லீ WORLD WIDE WEB(WWW) என்பதை கண்டுபுடித்தார் அதன் பிறகு இன்டர்நெட்டின் வளர்ச்சி அசுர வளர்ச்சி மேலும் இன்டர்நெட் என்ற வார்த்தை உலகம் முழுக்க பிரபலமானது.
சரி நண்பர்களே இணையம் தோன்றிவிட்டது தற்பொழுது இந்த 2020ம் நூற்றாண்டின் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருக்கிறோம் தாங்கள் எப்பொழுதாவது இந்த இணையம் எவ்வாறு இயங்குகிறது என்று யோசித்ததுண்டா?
நாம் இணையத்தில் பார்க்கும் பாட்டு, படம், செய்தி போன்ற அனைத்து தகவல்களும் தங்களை பல்லாயிரக்கணக்கான மயில்கள் கடந்து வந்து உங்களை சேர்க்கிறது. வாருங்கள் தகவல்களின் இன்றியமையாத பயணத்தை பற்றி நாம் பார்க்கலாம். நாம் இணையத்தில் பார்க்கும் அனைத்து தகவல்களும் GOOGLE DATA CENTERல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மயில்களை கடந்து தங்களை வந்தடைகிறது. இவ்வாறாக நமக்கு வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் 0 மற்றும் 1ஆக(Machine Language) நம்மை வந்தடைகிறது.
GOOGLE DATA CENTER:
உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் Google Data Centerல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். Google Data Center தான் உலகத்திலுள்ள அனைத்து தரவுகளின் டேட்டாபேஸ் ஆகும். ஆகையால் தான் கூகிள் இன்றைய நூற்றாண்டின் முன்னணி நிறுவனமாக உள்ளது. நமக்கு வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் முதலில் செயற்கைகோளிற்கு அனுப்பப்படும் பிறகு அனைத்து தகவலும் பயனர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் இந்த முறையில் Data Latency எனப்படும் தகவல் தாமதம் ஏற்பட்டது மேலும் தகவல்களை பெறுவதிலும் மிகவும் சிக்கல் ஏற்பட்டது.
OPTICAL FIBER CABLE:
ஆகையால் தகவல்களை விரைவாக வேகமாக பெற நமக்கு மாற்று வழி தேவைப்பட்டது அதற்கு உதவிய தொழில்நுட்பம் தான் OPTICAL FIBER CABLEஆகும். இந்த OPTICAL FIBER CABLE ல் தகவல்கள் அனைத்தும் ஒளி வடிவில் அனுப்பப்படுவதால் தகவல்கள் இலக்கை வேகமாக அடைகிறது. இந்த GOOGLE DATA CENTER ஆனது OPTICAL FIBER CABLEல் இருந்து உலகம் முழுக்க பல்வேறு இடங்களுக்கு அமைக்கப்படுகிறது. மேலும் இந்த OPTICAL FIBER CABLE மூலமாக இது நேரடியாக உங்கள் வீட்டிலுள்ள ANTENNA அல்லது HOME ROUTERயை இணைக்கிறது. இதனால் தகவல்கள் அனைத்தும் தாமதமின்றி பயனரை வந்தடைகிறது. தற்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரை கூட நேரடியாக GOOGLE DATA CENTERலிருந்து தான் உங்களை வந்தடைகிறது.
GOOGLE’S SERVER:
இந்த GOOGLE DATA CENTERல் ஒரு MAIN SERVER ஒன்று இருக்கும். அது தான் மற்ற எல்லா சர்வர்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த சர்வர் ஒரு Solid State Deviceல் இருக்கும் இந்த சர்வர் தான் அனைத்து தகவல்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது. இது அனைத்து விதமான தகவல்களையும் 0 மற்றும் 1ஆக வைத்திருக்கிறது. இந்த அனைத்து தகவல்களும் பயனரை நம் மேற்கூறியது போல Optical Fiber Cable மூலமாக வந்தடைகிறது.
What is IPADDRESS:
நாம் தகவல் பரிமாற்றம் பற்றி பார்க்கையில் IPADDRESS பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம் எந்த ஒரு கணினி சம்பந்தப்பட்ட சாதனத்தை எடுத்தாலும் உதாரணமாக ANDROID, APPLE, COMPUTER, SMART TV போன்றவற்றிற்கு IPADDRESS என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். எவ்வாறாக மனிதர்களுக்கு பெயர் இருக்கிறதோ அதை போலவே கணினி சம்பந்தப்பட்ட கருவிகளுக்கு IPADDRESS இருக்கும் அதன் மூலமாக தான் அது இணையத்தில் அடையாளம் காணப்படும்.
தபால்கள் எவ்வாறு பயனரை வந்தடைகிறது அதைப்போலவே தகவல்கள் அனைத்தும் IPADDRESSயை பயன்படுத்தியே உங்களை வந்தடையும். உதாரணமாக தாங்கள் இணையத்தில் ஒரு விஷயத்தை தேடும் பொழுது உங்களுடைய Internet Service Provider (ISP) உங்களுக்கு ஒரு IPADDRESSயை கொடுப்பார்கள். அந்த IPADDRESS மூலம் தான் தங்கள் அனைத்தையும் இணையத்தில் தேட முடியும் ஒவ்வொன்றிற்கும் ஒரு IPADDRESS உண்டு உதாரணமா GOOGLE SERVERக்கு கூட ஒரு IPADDRESS உண்டு.
நம் சில பிரபலமான வலைதளத்தின் IPADDRESS பற்றி இங்கு பார்க்கலாம்
208.65.153.238 – www.youtube.com
66.220.149.25 – www.facebook.com
72.21.211.176 – www.amazon.com
173.0.84.3 – www.paypal.com
How IPADDRESS works?
அனைத்து IPADDRESSம் நான்கு இலக்க எண்களால் ஆனது இதனுடைய எண்களை ஞாபகம் வைப்பதென்பது இயலாத காரியமாகும் ஆகையால் நமக்கு இங்கே மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது அவர் தான் DNS SERVER ஆவார். இந்த DNS SERVER ஆனது நமது வலைதத்தலதினுடைய சரியான IPADDRESSயை கண்டறிய பயன்படுகிறது. நாம் இணையத்தில் தேடும் எந்த தகவல்களும் முதலில் DNS SERVERக்கு அனுப்பப்படும் பிறகு அது சரியான வலைதள சர்வருக்கு அனுப்பப்பட்டு தகவல்கள் பெறப்படுகிறது.
How Data travels?
நம் முன்பு பார்த்ததை போல தகவல்கள் அனைத்தும் Google Data Centerலிருந்து Optical Fiber Cable மூலமாக நம்மை வந்தடைகிறது இந்த Optical Fiber Cable ஆனது பல விதமான காடு, மலை, மேடு, பள்ளம் போன்றவற்றை கடந்தும் மேலும் கடலுக்கு அடியிலும் PLOW எனும் உபகரணம் மூலமாக அமைக்கப்படுகிறது. இந்த OPTICAL FIBER CABLEலிலிருந்து தகவல்கள் அனைத்தும் ஒளி வடிவில் தங்களை வந்தடையும். இவ்வாறாக வருகின்ற Light Signalகள் அனைத்தும் Electric Signalஆக மாற்றப்பட்டு தாங்கள் கணினியை வந்தடைகிறது.
ஒருவேளை தாங்கள் இணையத்தை WIFI மூலமாக பெற விரும்பினால் அப்பொழுது OPTICAL FIBER CABLE ஆனது ஆன்டெனாவுடன் இணைக்கப்படும் பிறகு ELECTRO MAGNETIC SIGNAL மூலமாக அது தங்கள் ELECTRONIC DEVICE யை வந்தடைகிறது.
Companies that form Optical fiber cable under Sea:
AT&T, ORANGE, VERIZON, GOOGLE போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் இணைய கேபிள்கள் கடலுக்கு அடியில் நிறுவப்படுகிறது.
ICANN:
இந்த INTERNET, DATA, DOMAIN போன்ற அனைத்தையுமே நிர்வகிக்கிற ஒரு அமைப்பு தான் ICANN ஆகும். ICANN என்பதன் விரிவாக்கம் INTERNET CORPORATION FOR ASSIGNED NAMES AND NUMBERS ஆகும்.
USAGE OF PACKETS:
இணையத்தில் உள்ள அனைத்து தகவல்களும் GOOGLE DATA CENTERல் பைனரி வடிவத்தில்(0’s & 1’s) சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்கள் அனைத்துமே சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு Packetகளும் 6 பிட்களாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படும். இந்த Packetகள் அனைத்துமே ஒரு விதமான Router Algorithmயை பயன்படுத்தி பயனர்களை வந்து விரைவாக அடைகிறது.