FOG COMPUTING IN TAMIL – CLOUD COMPUTING மற்றும் EDGE COMPUTING இரண்டின் இணைப்புப் பாலம் இந்த FOG COMPUTING

FOG COMPUTING IN TAMIL – CLOUD COMPUTING மற்றும் EDGE COMPUTING இரண்டின் இணைப்புப் பாலம் இந்த FOG COMPUTING

HISTORY OF FOG COMPUTING:

2015ம் ஆண்டு CISCO நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட், டெல், இன்டெல் போன்றவற்றுடனும் மேலும் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்துடனும் இணைந்து OPEN FOG என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து மேலும் உலகின் தலைசிறந்த நிறுவனங்களான GENERAL ELECTRIC, FOXCONN, HITACHI போன்ற நிறுவனங்களும் இந்த OPEN FOG கூட்டமைப்பிற்கு தங்கள் பங்களிப்பை அளித்தது. இந்த கூட்டமைப்பின் நோக்கமானது FOG COMPUTINGயை நிலைப்படுத்துவதும் மற்றும் முன்னேற்றுதும் ஆகும்.

fog computing in tamil
FOG COMPUTING IN TAMIL

INTRODUCTION TO FOG COMPUTING:

FOG COMPUTING என்ற சொல்லானது CISCO நிறுவனம் மூலமாக தோன்றியது. இந்த FOG COMPUTING அர்த்தம் என்னவென்றால் இது CLOUD COMPUTING தொழில்நுட்பத்திற்கு மாற்றாக வந்தது என்பதாகும். இந்த தொழில்நுட்பம் CLOUD COMPUTINGல் ஏற்படும் DATA STORAGE TRAFFIC எனும் சிக்கலைத் தீர்க்கிறது. மேலும் EDGE COMPUTINGன் தகவல் பரிமாற்றம் மற்றும் அதன் செயல் திறன் மேம்பாட்டிற்கும் மிகவும் உதவியாக உள்ளது.

FOG COMPUTING அல்லது FOG NETWORKING சில சமயம் இந்த தொழில்நுட்பம் FOGGING என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது COMPUTATION, STORAGE, மற்றும் LOCAL AND ROUTED OVER INTERNET COMMUNICATION போன்ற அனைத்து விதமான செயல்களையும் EDGE DEVICE உதவியுடன் செயல்படுத்துகிறது.

CLOUD COMPUTING அமைப்பானது ஒரு DECENTRALIZED COMPUTING STRUCTURE ஆகும். இந்த FOG COMPUTING ஆனது CLOUD COMPUTING மற்றும் EDGE COMPUTING என்ற இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. அதாவது இது செயல்படும் விதமானது இந்த CLOUD COMPUTING & EDGE COMPUTING என்ற இரண்டிற்கும் நடுவில் செயல்படுகிறது.

FOG COMPUTINGன் இந்த மாதிரியான FLEXIBLE STRUCTURE அமைப்பானது பயனாளர்களை பல விதமான செயல்கள் செய்ய மிகவும் உதவியாக உள்ளது. உதாரணமாக பயனாளர் தங்களது பல வித தகவல் மூலங்கள்(RESOURCES) மற்றும் ஆன்லைன் செயலிகள்(APPS) போன்ற அனைத்தையும் செயல்படுத்த மிகவும் ஏதுவாக உள்ளது. செயலிகள் அனைத்தும் FOG COMPUTERன் LOGICAL LOCATIONல் செயல்படுவதால் ஒட்டுமொத்த கணிணியில் செயல்திறன் அதிகரிக்கிறது.

EDGE COMPUTER போன்றே FOG COMPUTING தொழில்நுட்பமும் CLOUD STORAGEன் செயல்திறன் மற்றும் நினைவக தகவல் சேமிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. பல கணினி பயனாளர்கள் FOG COMPUTING மற்றும் CLOUD COMPUTING என்ற இரண்டையுமே ஒன்று என்று நினைக்கிறார்கள் ஏனென்றால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விதமான செயல்களைச் செய்வதால் அதாவது தகவல் ஆனது அது உருவாக்கப்படும் நெட்வொர்க்கிலேயே சேமிக்கப்படுவதால் அவ்வாறு கருதுகிறார்கள்.

ஒவ்வொரு FOG COMPUTINGம் எட்ஜ் கம்ப்யூட்டிங்கின் “EDGE OF THE NETWORK”ல் செயல்படுவதால் அதை நாம் FOG METAPHOR என்றழைக்கிறோம். FOG COMPUTINGல் பல விதமான PERIPHERAL DEVICEகள் DISTRIBUTED ENVIRONMENT முறையில் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அதைத்தவிர இந்த தொழில்நுட்பத்தின் FOGGING NETWORKல் CONTROL PLANE AND DATA PLANE என்ற இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

FOG COMPUTING ஆனது IOT எனப்படும் INTERNET OF THINGS எனும் தொழில்நுட்பத்திற்கு மிகவும் ஆதரவு அளிப்பதால் பலவிதமான கணினி மற்றும் மொபைல் பயனாளர்கள் IOT மூலமாக FOG COMPUTING உடன் இணைக்கப்பட்டுள்ளனர். பயனர் பெரும்பாலும் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகளாவன MOBILE, WEARABLE SMART DEVICE, CONNECTED VECHILES & AUGUMENT REALITY DEVICES, GOOGLE GLASS போன்றவைகள் ஆகும். CLOUD COMPUTING உடன் ஒப்பிடுகையில் FOG COMPUTING ஆனது SCALABILITY எனும் பண்பிற்கு மிகவும் சக்தியளிக்கிறது.

HOW FOG COMPUTING WORKS:

FOG COMPUTING ஆனது ஒருபோதும் CLOUD COMPUTINGற்கு மாற்றாக செயல்படாது மாறாக FOG COMPUTING ஆனது ஒரு விதமான SHORT TERM ANALYTICS ஆகும் ஆனால் CLOUD COMPUTING ஒரு LONG TERM ANALYTICS ஆகும்.ஆனால் இந்த EDGE COMPUTING தகவல்களை துரிதமாக செயல்படுத்தி CLOUD COMPUTINGன் TRAFFICயை குறைத்த போதிலும் இதைப் பயன்படுத்தி நம்மால் ADVANCED ANALYTICS மற்றும் MACHINE LEARNING தொடர்புடைய செயல்களைச் செய்ய இயலாது. CLOUD COMPUTINGஆல் இந்த ADVANCED ANALYTICS மற்றும் MACHINE LEARNING செயல்களைச் செய்வதற்கு போதிய திறன் இருந்த போதிலும் RESPONSE TIME மிகக் குறைவாக இருப்பதால் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

ADVANTAGES OF FOG COMPUTING:

BANDWIDTH CONSERVATION:

FOG COMPUTING ஆனது நாம் CLOUDற்கு அனுப்பும் தகவலின் BANDWIDTHயை குறைப்பதால் தகவலானது விரைவாக செயல்படுவதுடன் இதற்கான செலவினங்களும் குறைகிறது.

IMPROVED RESPONSE TIME

தகவலானது அது உருவாக்கப்படும் இடத்திற்கு அருகிலேயே CLOUDல் STORE செய்யப்படுவதால் தகவல் தாமதமாக சென்றடைவது(LATENCY) தடுக்கப்படுகிறது.

NETWORK-AGONISTIC:

FOG COMPUTING ஆனது அதன் தகவல்கள் அனைத்தையும் LANல் தேக்கி வைப்பதால் FOG COMPUTING தொழில்நுட்பம் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. FOG COMPUTING ஆனது NETWORK AGONISTICக்கு ஆதரவளிக்கிறது அதாவது இந்த FOG COMPUTINGயை நாம் 5G, WIFI, அல்லது WIRED முறையில் CLOUD உடன் இணைக்க இயலும்.

DISADVANTAGES OF CLOUD COMPUTING:

PHYSICAL LOCATION:

FOG COMPUTING ஆனது PHYSICAL LOCATION எனும் பண்பிற்கு ஆதரவளிப்பதால் இதன் மூலம் CLOUD COMPUTINGன் முக்கியமான பண்பான ANYTIME/ANYWHERE எனும் பண்பிற்கு ஆதரவளிக்க இது தவறுகிறது.

POTENTIAL SECURITY ISSUES:

FOG COMPUTING பயன்படுத்துவதால் இங்கே சில குறிப்பிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளும் தகவல்களுக்கு வருகிறது. உதாரணமாக INTERNET PROTOCOL ADDRESS SPOOFING AND MAN IN THE MIDDLE ATTACK.

STARTUP COSTS:

FOG COMPUTING ஆனது EDGE COMPUTING AND CLOUD COMPUTING என்ற இரண்டையும் இணைத்து செயல்படுவதால் இதனுடன் தொடர்புடைய சில HARDWARE COSTS ஏற்படக் கூடும்.

AMBIGUOUS CONCEPT

FOG COMPUTING ஆனது பல வருடங்களாக இருந்த போதிலும் இன்னும் அது சம்பந்தப்பட் DEFINITION ஆனது பல விதமான நபர்களிடம் வேறுபட்டு காணப்படுகிறது.

APPLICATIONS OF FOG COMPUTING:

FOG COMPUTING மூலமாக பலவிதமான பயன்கள் இருந்த போதிலும் மிகவும் முக்கியமான பயனானது TRAFFIC CONTROL ஆகும். அதைத் தவிர AUTONOMOUS VECHILE எனப்படும் தானியங்கி வாகனங்களுக்கும் இது மிகவும் ஆதரவளிக்கிறது. பின்பு அனைத்து வகையான REAL TIME DATA ANALYSISகளுக்கும் இது உதவுகிறது. இது REAL TIMEல் செயல்படும் போதும் இதனுடைய RESPONSE TIMEமும் மிக சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share the knowledge