EDGE COMPUTING IN TAMIL – கிளவுட் கம்ப்யூட்டிங்கின் செயல்திறன் மற்றும் வேகத்தின் திருப்புமுனை எட்ஜ் கம்ப்யூட்டிங்

EDGE COMPUTING IN TAMIL – கிளவுட் கம்ப்யூட்டிங்கின் செயல்திறன் மற்றும் வேகத்தின் திருப்புமுனை எட்ஜ் கம்ப்யூட்டிங்

EDGE COMPUTING IN TAMIL:

1990ம் ஆண்டில் அகாமை(AKAMAI) என்னும் கணினி அறிஞர் தனது CONTENT DELIVERY NETWORK(CDN) என்னும் நெர்வொர்க்கை கண்டுபிடித்ததிலிருந்து EDGE COMPUTING தொழில்நுட்பத்திற்கான புள்ளி ஆரம்பமாகிவிட்டது. இந்த CDN எனப்படும் தொழில்நுட்பமானது NODE எனப்படும் தகவலை பயனர் இருக்கும் இடத்திற்குள்ளேயே கிடைக்கச் செய்வதது. இந்த CDNன் NODE ஆனது CACHED STATIC CONTENT எனப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைக்கப் பயன்பட்டது.

EDGE COMPUTING IN TAMIL
EDGE COMPUTING INTAMIL

ஆனால் EDGE COMPUTING எனப்படும் தொழில்நுட்பமானது இந்த CDN NODEயை சிறிது மாற்றி அதில் BASIC COMPUTATIONAL TASK செய்யுமளவிற்கு மாற்றியது. பிறகு 1997ம்ஆண்டு BRAIN NOBEL எனப்படும் கணினி அறிவியலாளர் நாம் MOBILE TECHNOLOGYயை பயன்படுத்தி எவ்வாறு சிறந்த விதமாக SPEECH RECOGNITIONயை EDGE COMPUTING தொழில்நுட்பம் மூலமாக செய்ய முடியும் என்று விளக்கிக் காட்டினார். அந்நாட்களில் இந்த முறைக்கு CYBER FORAGING என்று பெயர். பிறகு இந்த முறை படிப்படியாக மாற்றமடைந்து தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பாட்டை அதிகரிக்க EDGE COMPUTING பயன்படுகிறது.

 EDGE COMPUTING IN TAMIL:

EDGE COMPUTING எனப்படுவது ஒரு தகவலானது எங்கே உருவாக்கப்படுகிறதோ அங்கே உருவாக்கப்படும் அதனுடைய நெட்வொர்க்கின் எட்ஜிற்குள்(NETWORK EDGE) சேமிக்கப்பட்டு புராசஸிங் செய்யப்படுகிறது.

EDGE COMPUTING என்பது கிளவுட் கம்ப்யூட்டிங்கின் ஒரு விரிவுபடுத்தப்பட்ட பிரதி அல்லது ஒரு முன்னேறிய அமைப்பு என்று கூறலாம். இனி எதிர்காலத்தில் தொழில்நுட்பங்கள் அனைத்தும் பெரும்பாலும் EDGE COMPUTINGயை அடிப்படையாக வைத்து இயங்கும். குறிப்பாக IOT எனப்படும் INTERNET OF THINGS எனப்படும் தொழில்நுட்பமானது இந்த EDGE COMPUTINGயை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் இயங்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

WHY EDGE COMPUTING?

நாம் பொதுவாக ஒரு தகவல் சேமிப்பையோ(DATA STORAGE) அல்லது ஆன்லைன் அப்ளிகேஷனின் சேவையையோ(ADOBE CC) பெற விரும்பினால் அதை நாம் CLOUD PROVIDER இடமிருந்து பெற இயலும். இதையே நாம் CLOUD COMPUTING என்று கூறுகிறோம்.

நாட்டில் பல வித பிரபலமான CLOUD PROVIDER உள்ளனர். உதாரணமாக அமேசான் என்ற நிறுவனமானது கிளவுட் சேவையை வழங்கக்கூடிய ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும். அமேசானில் தாங்கள் கிளவுட் ஸ்டோரேஜை(CLOUD STORAGE) வாங்குகிறீர்கள் அங்கே தங்களுக்கு வேண்டிய தகவலை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தங்களைப் போன்ற பலரும் அமேசானில் தகவலை(STORAGE) வாங்கி சேமித்தால் அதன் திறன் மற்றும் வேகம் குறையுமல்லவா? இவ்வாறாக தகவலின் செயல்திறன் மற்றும் அதன் வேகம் குறைவதை LATENCY என்கிறம்ம. இந்த LATENCY எனப்படும் சிக்கலை சரி செய்யவே நாம் EDGE COMPUTING என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

DATA STORAGE:

DATA STORAGE என்பது தகவல் சேமிப்பாகும். நாம் ஆன்லைனில் நமக்கு வேண்டிய தகவல்களை சேமித்து நிர்வகிக்கலாம். CLOUD COMPUTING தொழில்நுட்பத்தில் தகவல்கள் அனைத்தும் CENTRALIZED LOCATIONல் சேமிக்கப்படுகின்றன. EDGE COMPUTING தொழில்நுட்பத்தில் தகவல்கள் அனைத்தும் DISTRIBUTED METHODல் சேமிக்கப்படுகின்றன.

AUTOMATIC SEF DRIVING CAR:

நாம் இங்கே AUTOMATIC SEF DRIVING CAR என்னும் தன்னைத்தானே இயக்கிக் கொள்ளும் மகிழுந்தை எடுத்து CLOUD COMPUTING மற்றும் EDGE COMPUTINGன் வித்தியாசத்தை உணரலாம்.

AUTOMATIC SEF DRIVING CAR ஆனது CLOUD COMPUTINGயை அடிப்படையாக வைத்து இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். தற்பொழுது வண்டியானது வண்டியானது நெரிசலில்(TRAFFIC) நிற்கிறது. அப்பொழுது RED SIGNAL டிராபிக்கில் விழுகிறது. அப்பொழுது வண்டியானது இந்த செய்தியை சிக்னலாக கிளவுடிற்கு அனுப்பி பிறகு பதில்(RESPONSE) வந்தவுடன் செயல்பட வேண்டியுள்ளது. ஒருவேளை கிளவுடிடம் இருந்து RESPONSE சற்று தாமதமாக வந்தால் அங்கே மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பொழுது AUTOMATIC SEF DRIVING CAR ஆனது EDGE COMPUTINGயை அடிப்படையாக வைத்து இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். இங்கே EDGE COMPUTINGல் தகவலானது கிளவுடில் சேமிக்கப்படாமல் மாறாக அது உருவாக்கப்படும் இடத்திற்குள்ளேயே சேமித்து பிராசஸிங் செய்யப்படுகிறது அதாவது இங்கே தகவலானது வண்டியினுள்ளேயே சேமித்து உடனுக்குடன் செயல்படுத்தப்படுவதால் விபத்து நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

VIDEO CALL CONFERENCING:

தாங்கள் ஒரு VIDEO CALL CONFERENCINGல் தங்களுடைய நண்பர்களுடன் உரையாடினால் தகவலாது LOCAL STORAGEல் சேமிக்கப்படாமல் CLOUDல் சேமிக்கப்பட்டு பின்பு DATA PROCESSING எனப்படும் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இங்கே VIDEO CALLல் தகவலானது CLOUDல் சேமிக்கப்பட்டு DATA PROCESSING நிடைபெறுவதால் LATENCY ஏற்படும். LATENCY என்பது DATA மற்றும் SPEED போன்றவற்றில் ஏற்படும் இழப்பாகும்.

ஆனால் இந்த VIDEO CALL CONFERENCING முறையை நாம் EDGE COMPUTINGல் செயல்படுத்தினால் தகவலானது அது உருவாக்கப்படும் நெட்வொர்க்கின் மூலத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால் எந்த வித LATENCY ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

IOT DEPENDS ON EDGE COMPUTING:

எதிர்காலத்தில் IOT எனப்படும் INTERNET OF THINGS எனப்படும் தொழில்நுட்பமானது EDGE COMPUTINGயை அடிப்படையாக வைத்து இயங்கும் என்று கணினி அறிஞர்கள் கூறுகிறார்கள்.

IOT எனப்படுவது அனைத்து விதமான ELECTRONICS DEVICEகளையும் ஒரு SMART DEVICE ஆக மாற்றி நாம் அதை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வைக்கும் தொழில்நுட்பமே IOT எனப்படும்.

அவ்வாறாக IOTல் ELECTRONIC DEVICEகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் பொழுது தகவலானது ஒரு எலக்ட்ரானிக் கருவியிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படும். இது DATA EXCHANGE என்று அழைக்கப்படும். இந்த DATA EXCHANGE நிகழ்வு நடைபெறும் பொழுது AUTOMATION எனப்படும் செயல் நடைபெறும் இதையே நாம் INTERNET OF THINGS என்கிறோம்.

தற்பொழுது IOT அனைத்துமே CLOUD COMPUTING முறையில் இயங்குகிறது. இந்த முறையில் கட்டாயம் LATENCY ஏற்படுகிறது. இந்த LATENCY எனப்படும் தகவல் தாமதம் மற்றும் வேகமின்மை போன்ற அனைத்துமே நமது EDGE COMPUTING தொழில்நுட்பத்தில் தீர்க்கப்படுகிறது.

WILL EDGE COMPUTING DUMP CLOUD COMPUTING?

EDGE COMPUTING எனும் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துவதால் அது எதிர்காலத்தில் CLOUD COMPUTINGயை இல்லாமல் செய்யுமா என்றால் பதில் கண்டிப்பாக இல்லை. ஆம் நண்பர்களே CLOUD COMPUTINGன் இடத்தை யாராலும் எடுக்க இயலாது. CLOUD COMPUTING என்பது நாம் நீண்ட நாள் நமக்கு தேவையான தகவலை சேமிக்கப் பயன்படும் தொழில்நுட்பமாகும். EDGE COMPUTING என்பது தகவலின் செயல்திறன் மற்றும் அதனுடைய வேகம் என்ற இரண்டையும் அதிகரிக்கப் பயன்படும் தொழில்நுட்பமாகும்.

EDGE COMPUTING IN TAMIL ADVANTAGES:

  • QUICK RESPONSE
  • WE CAN STORE PARTICULAR DATA ON CLOUD

EDGE COMPUTING நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தும் துரிதமாக புராசஸிங் செய்யப்பட்ட விரைவாக பதில்(RESPONSE) கிடைக்கிறது.

CLOUD COMPUTINGல் நாம் தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக சேமிப்போம் ஆனால் இங்கே EDGE COMPUTINGல் நாம் அனைத்து தகவலையும் சேமிக்காமல் நமக்கு வேண்டிய குறிப்பிட்ட தகவலை மட்டும் சேமிக்க முடியும்.

ஆகையால் எதிர்காலத்தில் CLOUD COMPUTING மற்றும் EDGE COMPUTING என்ற இரண்டுமே கைகோர்த்து இணைந்து செயல்படும்.

OTHER ADVANTAGES OF EDGE COMPUTING:

COST EFFECTIVE:

இங்கே EDGE COMPUTINGல் அனைத்து விதமான தகவலையும் சேமிக்காமல் நமக்கு வேண்டிய குறிப்பிட்ட தகவலை மட்டும் சேமிப்பதால் நாம் குறைவான CLOUD STORAGE இடத்தைப் பயன்படுத்துகிறோம் இதனால் இது COST EFFECTIVE ஆக உள்ளது.

SECURITY:

CLOUD COMPUTINGயை பொறுத்தவரை அனைத்து விதமான தகவல்களும் ஒரு CENTRAL LOCATIONல் சேமிக்கப்படுகின்றன. ஆகையால் ஒருவேளை கணினி திருடர்கள்(HACKERS) தகவலைத் திருட முற்பட்டால் அனைத்து விதமான தகவல்களும் மொத்தமாக CLOUDல் இருந்து மொத்தமாக பறிபோகும். ஆனால் EDGE COMPUTINGல் நாம் குறிப்பிட்ட தகவலை மட்டும் DISTRIBUTED METHODல் புராசஸிங் செய்வதால் மற்ற தகவல்களுக்கு SECURITY கிடைக்கிறது.

RELIABLITY:

CENTRALIZED DATA CENTERல் உள்ள SERVER ஆனது DOWN ஆனால் மொத்த தகவல் பரிமாற்றத்தின் செயல்பாடும் DOWN ஆகும். ஆனால் EDGE COMPUTINGல் ஒரு இடத்தில் தகவலானது DOWN ஆனால் நாம் மற்றொரு இடத்தில் உள்ள SERVER மூலமாக நாம் DATA PROCESSING செய்ய இயலும்.

DISADVANTAGE OF EDGE COMPUTING:

நாம் முன்பே பார்த்தவாறு EDGE COMPUTINGன் தகவல்கள் அனைத்தும் அது உருவாக்கும் மூலத்திற்குள்ளேயே அதாவது நெட்வொர்க்குள்ளேயே சேமிக்கப்படுகிறது. CLOUD COMPUTINGன் தகவல்கள் அனைத்தும் CENTRALIZED LOCATIONல் சேமிக்கப்படுகிறது.

ஆகையல் கணினி தகவல் திருடர்கள் CLOUD COMPUTINGயை அவ்வளவு எளிதாக HACK செய்ய இயலாது. ஆனால் ஹேக்கர்கள் மிக எளிதாக EDGE COMPUTINGயை ஹேக் செய்ய இயலும். இது EDGE COMPUTINGன் மிகப் பெரிய DISADVANTAGE ஆகக் கருதப்படுகிறது.

Share the knowledge