WHATSAPP BOT IN TAMIL | WHATSAPP CHATGPT IN TAMIL EXPLAINED | TECHNOLOGY ARTICLE IN TAMIL

WHATSAPP BOT IN TAMIL | WHATSAPP CHATGPT IN TAMIL EXPLAINED | TECHNOLOGY ARTICLE IN TAMIL

WHATSAPP BOT IN TAMIL:

தற்காலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு செயற்கை அறிவின் அடுத்த பரிணாமமான CHATGPT ஒவ்வொரு எலக்ட்ரானிக் மற்றும் நெட்வொர்க் சாதனத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளது. சாட்ஜிபிடி தொழில்நுட்பம் முதலில் சிரியில் பயன்படுத்தப்பட்டது பிறகு படிப்படியாக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் கைக்கடிகாரத்தில் பயன்படுத்தப்படுவது வரை இந்த AI CHATBOT அனைத்து இடத்திலும் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் GPT-4 அறிமுகப் படுத்தியதிலிருந்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் பலவிதமான CHATGPT தற்பொழுதும் WHATSAPP பயனர்களுக்கு இன்றும் ஒரு கானல்நீராகவே உள்ளது. எவ்வாறாயினும் இறுதியாக நமக்கு கிடைத்த சிறப்பான செய்தியானது தாங்கள் எந்தவொரு சிக்கல் இல்லாமல் AI BOT அனைத்தையும் தற்பொழுது WHATSAPPல் பயன்படுத்த முடியும். மேலும் எந்தவித நேர விரயமும் இல்லாமல் CHATGPTஐ எவ்வாறு வாட்ஸ்அப்பில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

WHATSAPP BOT IN TAMIL USING JINNI BOT:

எந்தவித காலதாமதமும் இல்லாமல் CHATGPTயை எவ்வாறு ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்ட் வாட்ஸ்அப்பில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நாம் இங்கு முதலில் CHATGPT POWERED WHATSAPP BOT அதாவது சாட்ஜிபிடி மூலமாக இயங்கக்கூடிய வாட்ஸ்அப் ரோபோவான JINNI பற்றி பார்க்கவிருக்கிறோம். இந்த JINNI BOTயை நாம் MESSAGING APPவுடன் இணைத்து வைத்துள்ளோம்.

தங்களது மொபைலில் முதலில் தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட JINNI WEBSITEற்கு செல்லுங்கள். அங்கு தென்படும் “LAUNCH WHATSAPP” எனப்படும் பொத்தானை அழுத்தவும், தங்களுடை வாட்ஸ்அப் தானாகவே திறக்கும். ஒருவேளை தங்களிடம் ஏதேனும் அனுமதி கேட்டால் “OPEN BUTTON”யை அழுத்தவும்.

Whatsapp bot in tamil

தங்களுடைய வாட்ஸ்அப் தானாகவே JIINI CHAT SCREENல் திறக்கும். அங்கே தாங்கள் HELLO என்று தட்டச்சு செய்தால் உடனே அது உங்களுக்கு பதிலளிக்கும்.

Whatsapp bot in tamil

மேற்கண்ட மாதிரியே தாங்கள் CHATGPTல் எவ்வாறு பேசுவீர்களோ அதே மாதிரியே இங்கே தாங்கள் ஜின்னியிடம் பேசலாம். தாங்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் ஜின்னியிடம் பத்து குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப இயலும். எவ்வாறாயினும் தாங்கள் மேற்கொண்டு பேச விரும்பினால் 6$ கொடுத்து SUBSCRIPTION பெறலாம்.

Using Shymooz AI How to Use ChatGPT on WhatsApp:

நம்முடைய அடுத்த சேவையாக Symooz AI எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இது GPT-3யை தன்னுடைய வலைத்தளத்தில் ஒருங்கிணைத்து வைத்துள்ளது. இதனுடைய API பயன்படுத்தை இது அனுமதிக்கவில்லை எனினும் இந்த Shmooz AI கீழ்க்கண்ட படிகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் CHATGPTல் பயன்படுத்தலாம்.

தங்களுடைய மொபையில் தாங்கள் முதலில் SHMOOZ AIன் நிர்வாக வலைத்தளத்திற்கு வருகைதரவும். பின்வு “START SHMOOZING” என்ற பொத்தானை அழுத்தவும். பிறகு தங்களுடைய வாட்ஸ்அப் தானாகவே திறக்கும்.

பின்பு இரண்டாவது திரையில் உள்ளது போல் “CONTINUE TO CHAT” என்ற பொத்தானை அழுத்தவும். பின்பு தாங்கள் பேசும் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

ஒரு குறுஞ்செய்தி தங்களுடைய MESSAGE BOXல் தானாகவே தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். அந்த குறுங்செய்தியை அனுப்பிய பிறகு தானாகவே BOT உங்களுக்கு பதிலளிக்கும்.

Whatsapp bot in tamil

அவ்வளவுதான் நண்பர்களே பிறகு தாங்கள் CHATGPTயிடம் எவ்வாறு பேசுவீர்களோ அதைப்போலவே SHYMOOZ AIயிடமும் பேச முடியும். ஆனால் முன்பு போலவே சைமூசும் ஒரு PAID SERVICE ஆகும். இங்கே ஐந்து குறுஞ்செய்திகளுக்கு மேல் தாங்கள் பயன்படுத்த விரும்பினால் SUBSCRIPTION பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Shmooz AI for WhatsApp: Initial Impressions

SHMOOZ AI ஒரு சிறந்த CHATBOT ஆக இருந்தபோதிலும் அதைத்தவிர இது பல நிலைகளில் சிறந்து விளங்குகிறது. உதாரணமாக தாங்கள் ஒரு குறிப்பிட்ட சமையலுக்கு தேவையான மூலப்பொருள்களை கொடுத்தால் அதனுடைய சரியான RECIPEஐ சில நொடிகளில் கொடுக்கிறது. பிறகு தாங்கள் ஒரு அழகான இசையை அமைக்கச் சொன்னால் அது மிகவும் அருமையான இசையை சில நொடிகளில் அமைத்து பிரமிக்க வைக்கிறது. அதைவிட தாங்கள் இதன் மூலமாக மிகச் சிறந்த IMAGESகளை உருவாக்க முடியும்.

SHMOOZ பொருத்தவரையில் பயனர்களிடம் இருந்து மிகச்சிறந்த வரவேற்பே வந்துள்ளது. SYMOOZ பதிலளிப்பதில் எந்தவொரு தாமதத்தையும் இதுவரை செய்ததில்லை. மேலும் அதனுடைய பதில்கள் துரித நேரத்தில் உடனடியாக பயனர்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் எந்த கேள்விகளைக் கேட்டாலும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத பதில்களையே பெரும்பாலும் நமது SYMOOZ தருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திலும் பயனர்களின் தனியுரிமையிலும் நம்பகத்தன்மையாக உள்ளது. இதன் மூலமாக பயனர்களின் விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது.

Other Famous ChatGPT WhatsApp Bots:

நாம் பலவகையான CHATGPT POWERED WHATSAPP BOTS பயன்படுத்துவது எப்படி என்று பார்த்தோம். அதைத்தவிர வேறென்ன BOTSகள் உள்ளன என்று இங்கு பார்க்கலாம். அந்த வரிசையில் MobileGPT, WhatGPT போன்றவை முன்னிலையில் உள்ளன.

MOBILEGPT: இந்த MOBILEGPT ஆனது பயனர்களுக்கு ஒரு சிறந்த சேவையை வழங்குகிறது. ஒரு சில குறிப்பிட்ட WHATSAPP BOTகளே GPT-4 பயன்படுத்துகிறது அந்த வரிசையில் இந்த மொபைல்ஜிபிடி முன்னிலை வகிக்கிறது. இது பயனர்களின் அனைத்துக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இந்த மொபைல்ஜிபிடி GPT-4யை பயன்படுத்துவதால் இதனுடைய வேகம் மற்றும் பதிலளிக்கும் முறை துரித நேரத்தில் இருக்கும்.

WhatGPT: இந்த வகையான CHATGPT BOTகள் பயனர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்காமல் அவர்களின் AUDIOவை TEXT ஆக மாற்றுகிறது. ஆம், நண்பர்களே தாங்கள் தங்களின் ஆடியோவை எளிதாக TEXT வடிவில் நொடி நேரத்தில் மாற்ற இயலும். மேலும் இது YOUTUBE வீடியோக்களை தொகுத்து சுருக்கமாக வழங்குகிறது அதைத்தவிர அருமையான படங்களை உருவாக்குகிறது.

ChatGPT on Whatsapp:

நண்பர்களே தாங்கள் இந்த கட்டுரையில் வாட்ஸ்அப்பில் எவ்வாறு CHATGPT பயன்படுத்துவது என்பதை பற்றி நன்கு அறிந்துள்ளீர்கள் என்று நம்புகிறோம். இவ்வகையான CHATGPTகளை வாட்ஸ்அப்பில் பயன்படுத்தும் போது தங்களுக்கு 20 குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே பதில் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு மேல் சேவையை பயன்படுத்த விரும்பினால் தாங்கள் சந்தாதாரர் ஆக வேண்டும் என்பதை மறக்காதீர்கள். ஒருவேளை சாட்ஜிபிடியை இலவசமாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதற்கு மாற்றான CHATGPT ALTERNATIVES போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மேற்சொன்ன ஒவ்வொரு WHATSAPP CHATGPTயும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகிறது. சில சாட்ஜிபிடி CHATGPT-3 பதிப்பையும் மற்றும் சில CHATGPT-4 பதிப்பையும் பயன்படுத்துகிறது. இந்த CHATGPTகள் அனைத்தும் WHATSAPPஉடன் இணைந்து செயலாற்றுகிறது. ஒவ்வொரு வகையான வாட்ஸ்அப் ஜிபிடியும் ஒரு குறிப்பிட்ட வரையறை வைத்துள்ளது பயனர்கள் அந்த குறிப்பிட்ட வரையறை வரை அவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கு மேல் அவர்களுக்கு எது சிறந்த ஜிபிடியாக உள்ளதோ அதற்கு மட்டும் சந்ததாரர் ஆகி சேவையை உபயோகிக்கலாம்.

இவ்வாறாக சாட்ஜிபிடிகள் வாட்ஸ்அப்புடன் இணைவதால் பலவிதமான நன்மைகள் உள்ளன. பயனர்கள் தங்கள் அறிவை விஸ்தாரமாக்கி கொள்ளலாம். முன்னால் அரட்டையடிக்க மட்டுமே ஒரு இடமாக இருந்த அப்ளிகேஷன் தற்பொழுது அறிவுத்தேடலுக்கான ஒரு ஸ்தலமாக மாறி உள்ளது. இங்கே அனைத்து விதமான சந்தேகங்களையும் பயனர்கள் சாட்ஜிபிடியின் உதவியுடன் தெளிவாக்கிக் கொள்ள முடியும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

Visit here to know more about CHATGPT IN TAMIL….

Share the knowledge