TECHNOLOGY ARTICLE IN TAMIL |கூகுள் ப்ளே ஸ்டோர்
TECHNOLOGY ARTICLE IN TAMIL:
ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கூகுள் ப்ளே எனப்படுவது அனைத்து வகையான முக்கியமான செயலிகளையும் தன்னிடம் கொண்டுள்ளது இங்கு பயனர்கள் அவர்களுக்கு தேவையான செயலிகளை தரவிறக்கம் செய்து உபயோகித்துக் கொள்ளலாம். இந்த கூகுள் ப்ளே ஆனது GOOGLE PLAY STORE என்றும் முன்பு ANDROID MARKET என்றும் அறியப்பட்டது. இது கூகுளால் இயக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒருவகையான ப்ரத்யேக டிஜிட்டல் விநியோகச் சேவையாகும். இந்த கூகுள் ப்ளே ஸ்டோர் ஆனது கூகுளின் அதிகாரப் பூர்வமான APPLICATION STORE ஆக செயல்படுகிறது.
பயனர்கள் இந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் அனைத்து விதமான ஷாப்பிங்களையும் செய்ய முடியும் அதைத்தவிர பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையுமே சிறப்பாக செய்ய முடியும். ப்ளே ஸ்டோர் ஷாப்பிங் சிறப்பானது தங்களது ஸ்மார்ட் போனின் பயன்பாட்டினை பல மடங்கு அதிகரிக்கிறது. இதன் மூலமாக ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் அழைப்பு விடுப்பது மற்றும் கால்குலேட்டர்கள் பயன்படுத்துவதைத் தவிர ஷாப்பிங் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்றவற்றையும் சிறப்பாகச் செய்கிறது.
தங்களுடைய செல்போன் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் தாங்கள் அதில் பயன்படுத்துகின்ற அப்ளிகேஷன்களை பொருத்து மட்டுமே அதன் மதிப்பு இருக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு நாளில் பலவிதமான அப்ளிகேஷன்கள் வருகின்றன மற்றும் செயல்படுகின்றன. அதனடைய பயன்பாட்டைப் பொருத்து அதன் தேவை அதிகரிக்கிறது. தாங்கள் ஒரு அப்ளிகேஷனின் பயன்பாட்டை அதனுடைய பயனர் ரேட்டிங்ஸை(User review) வைத்து அளவெடுக்க முடியும்.
கூகுள் ப்ளே ஒரு டிஜிட்டல் மீடியா கடைபோல் செயல்படுகிறது. இங்கே பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகள் மற்றும் இசை இ-புத்தகம் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை பெருமளவில் பயனர்களுக்கு தருகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் வாங்கப்பட்ட படங்கள் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை கூகுள் உலவி எனப்படும் கூகுள் குரோம் மூலமாக அப்ளிகேஷன் வாயிலாக உபயோகம் செய்யலாம். நமது ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து விதமான அப்ளிகேஷன்களும் ஒன்று இலவசமாக இருக்கலாம் அல்லது விலை கொடுத்து வாங்க நேரிடும்.
தாங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் அது குறிப்பிட்ட சில வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும். அது பெரும்பாலான சிறப்பம்சங்களை மறைத்துவிடும். ஒரு வேளை தாங்கள் கூகுள் அப்ளிகேஷன்களை காசு கொடுத்து வாங்கினால் தங்கள் அனைத்து வசதிகளும் முழு கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் மூன்றாம் நபரிடமிருந்தோ அல்லது வேறொரு வலைத்தளத்தில் இருந்தோ PROFESSION APP தரவிறக்கம் செய்து உபயோகிக்க விரும்பினால் அது தங்களுக்கு மிகப் பெரிய சிக்கலை கொடுக்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் நம்பகமான நபரிடமிருந்து மட்டுமே மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
HISTORY OF GOOGLE PLAYSTORE IN TAMIL:
கூகுள் ப்ளே ஸ்டோரின் முதல் பிரதியானது முதன் முதலில் 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. பிறகு கூகுள் ப்ளே ஸ்டோர் ஆனது 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி உருவாக்கப்பட்டது. 2016ம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் 82 பில்லியன் மென்பொருள்கள் தரவிறக்கம் செய்யப்பட்டது. பிறகு 2017ம் ஆண்டு கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மென்பொருள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த கூகுள் ப்ளே ஸ்டோரின் கீழ் கூகுள் மியூசிக், கூகுள் படங்கள், கூகுள் மின்-புத்தகம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு மென்பொருள் அதாவது அப்ஸ் வெளியிடப்படுவதற்கு முன்பு அது பலவகையான சோதனைக்கு ஆட்படுகிறது. சில சமயம் ஒரு மென்பொருள் வெளியிடப்படுவதற்கு முன்பே அந்த மென்பொருளின் TRAIL VERSION வெளியிடப்படுகிறது. அவைகள் ALPHA அல்லது BETA வெர்ஷன்கள் என்று அழைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரிஜினல் வெர்ஷன் வெளியிடப்படுகிறது.
2013ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சியாளர்கள் மாநாட்டில் கூகுள் நிறுவனம் GOOGLE PLAY GAMES அறிமுகப்படுத்தியது. இந்த GOOGLE PLAY GAMES எனப்படுவது ஆன்ட்ராய்டு நிறுவனத்தின் ஒரு ஆன்லைன் விளையாட்டாகும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டில் விளையாடலாம். அதேபோல் கூகுள் ப்ளே புகஸ் 75 நாடுகளுக்கு மேல் பயன் தருகிறது. ஒரு தனி நபர் கிட்டத்தட்ட 1000 மின்புத்தகங்களை இங்கு பதிவேற்றலாம்.
TECHNOLOGY ARTICLE IN TAMIL:
GOOGLE நிறுவனமானது அதன் PLAY STOREக்கு மிகவும் பிரபலமானது. ANDROID MOBILE பயனாளர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக GOOGLE PLAY STORE மூலம் தங்களது செயலிகளை தரவிறக்கி பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட இது ANDROID பயனர் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகும். ஆம் PLAY STOREல் கிடைக்கும் செயலிகள் நம்பிக்கைகுரிய செயலிகளாக உள்ளது.
GOOGLE நிறுவனமானது கடந்த திங்கள் கிழமையன்று எவ்வாறு தனது PLAY STORE செயலியில் APPLICATIONSகளுக்கான புதிய APP RATINGSகளை உருவாக்கியது. பயனர்களுக்கும் வடிவமைப்பாளர்களும் மிகவும் உதவிகரமாய் இருக்கும் வண்ணம் இந்த APP RATINGSல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் நாம் ஒரு குறிப்பிட்ட APPSக்கு மொத்தமாக ஒரு RATING கொடுத்து வந்தோம்.
தற்பொழுது RATING ஆனது பலவகையான காரணிகளைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக ஒரு செயலியின் APP RATING ஆனது அந்தந்த நாட்டை வைத்து அளவிடப்படுகிறது. இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டதற்கு தெளிவாகக் கூறப்படும் சில காரணங்களும் உள்ளன.
முதலில் ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு விதமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு செயலியும் ஒரு குறிப்பிட்ட அம்சங்களையும் மற்றும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு நாடும் அதன் பிரத்யேக NATIONAL LAW மற்றும் UNIVERSAL LAW ANDROID FRAGMENTATIONயை கொண்டுள்ளது.
உதாரணமாக நான் PLAY STOREல் MESSAGING APPSகளை விற்கும் DEVELOPER ஆக இருந்தால், என்னுடைய செயலியின் RATINGS குறைவதை நான் விரும்பவில்லை ஏனெனில் தற்பொழுது ஒரு நாட்டில் மட்டுமே செயலிகளுக்கு பணம் செலுத்தும் வசதி உள்ளது. அடுத்த காரணம் என்னவென்றால் சில செயலிகள் பெரிய TABLETல் மிகவும் செயலிழக்கிறது.
மொபைலின் அளவை விட மிகவும் பெரியதாய் இருக்கும் TABLET போன்றவற்றில் கூகிளின் செயலிகள் செயலிழக்கிறது. ஆகையால் இதை முன்கூட்டியே பயனர்களுக்கு தெரியபடுததும் முயற்சியிலும் இந்த PLAY STORE RATINGS வழங்கப்படுகிறது. ஆகையால் கூகிள் வருகிற நவம்பர் மாதத்திற்குள் இரண்டு விதமான மாற்றங்களை கொண்டு வர உள்ளது.
GOOGLE PLAY STORE RATINGS TYPES IN TAMIL:
- COUNTRY SPECIFIC RATING
- FORM FACTOR SPECIFIC RATING
COUNTRY SPECIFIC RATING என்பது ஒரு நாட்டை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இங்கே நாம் செயலிகளுக்கு அந்தந்த நாட்டில் இருந்து RATINGS அளிக்கிறோம். FORM FACTOR SPECIFIC RATING என்பது நாம் பயன்படுத்தும் பல விதமான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. எவ்வாறாகினும் இதன் மூலம் பல விதமான நன்மைகள் செயலி வடிவமைப்பாளருக்கும், பயனருக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
TECHNOLOGY ARTICLE IN TAMIL:
கூகுள் ப்ளே ஸ்டோரில் பல வகையான பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பிழைகள் அனைத்தும் நாம் ஒரு வகையான அப்ஸை ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்யும் போதும் ஆண்ட்ராய்டு பதிப்பில் மாற்றம் அதாவது UPDATE தேவைப்படும் போதும், ப்ளே ஸ்டோரின் தகவலில் மாற்றம் ஏற்படும் போதும் அல்லது தங்களின் கூகுள் மெயிலில் மற்றும் MEMORY CACHEல் வேறுபாடு காணப்பட்டாலும் ஏற்படுகிறது.
கீழ்காணும் பல வகையான பிழைகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் காணப்படுகிறது.
- Google Play Store error code 18
- Google Play Store error code 20
- Google Play Store error code 103
- Google Play Store error code 194
- Google Play Store error code 492
- Google Play Store error code 495
- Google Play Store error code 505
- Google Play Store error code 506
- Google Play Store error code 509
- Google Play Store error code 905
GENERATIVE AI TOOL:
தற்பொழுது கூகுளின் சோதனை அம்சமாக வழங்கப்படும் GENERATIVE AI கருவி, பயன்பாட்டு பட்டியல்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது. டெவலப்பர்கள் இப்போது இந்த GENERATIVE AI கருவி உதவியுடன் முக்கிய THEMES களைத் திறக்கலாம் மற்றும் மேலும் தனிப்பயனாக்கப்படலாம், நிராகரிக்கப்படலாம் அல்லது பயன்படுத்தக்கூடிய ஆரம்ப வரைவை உருவாக்கலாம். இந்த AI TOOL ஆனது தனியாக மட்டும் செயல்படாமல் மனித அறிவுடன் இணைந்து செயல்படம் வகையில் மனித நகல் எழுத்தாளர்கள் மற்றும் எடிட்டர்களுடன் இணைந்து இந்தக் கருவியைப் பயன்படுத்தும் வகையில் Google பரிந்துரைக்கும் அதே சமயம், இது குறைந்த தரம் வாய்ந்த உரையின் வருகைக்கு வழிவகுக்கும் என்ற கவலை உள்ளது. இருப்பினும், கூகுளின் இந்த GENERATIVE AI TOOL அப்ளிகேஷன் பட்டியல் செயல்முறையை மிகவும் திறமையாகவும் டெவலப்பர்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
TECHNOLOGY ARTICLE IN TAMIL:
ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனின் பயன்பாட்டு பட்டியல்களை உருவாக்குவதைத் தவிர இது பயனர்களின் மதிப்பளித்தலுக்கும் (USER REVIEW) முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலமாக அனைத்து கருத்துக்களையும் இது ஒன்று சேர்க்கிறது. மேலும் பல ஆயிரக்கணக்கான கருத்துக்களை ஒன்று சேர்த்து இது ஒரு கருத்தை உருவாக்கி அதை புதிய பயனர்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலமாக ஒரு அப்ளிகேஷனின் செயல்பாடு மற்றும் அதன் பின்னுாட்டத்தை சிறப்பாக முறையில் அறிந்து கொள்ள முடியும். மேலும் புதியதாக ஒரு நபர் ஒரு அப்ஸை பயன்படுத்துவதற்கு முன்பே அதன் செயல்பாட்டை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோரின் GENERATIVE AI TOOLS உதவியுடன் ஒரு அப்ளிகேஷனை முன்னேற்ற பல விதமான UPDATESகளை செய்துள்ளது அதைத் தவிர கூகுள் மொழிபெயர்ப்பிலும் பலவித மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது அனைத்து விதமான மொழிகளுக்கும் இது ஆதரவளிக்கிறது. இந்த GENERATIVE AI உதவியுடன் வருங்காலங்களில் அப்ஸ் அனைத்தும் தேடுவதற்கு எளிமையாக தோன்றும் வண்ணம் வடிவமைக்கப்படும். இது பயனர்களை உலகம் முழுக்க எளிதில் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.