QUANTUM COMPUTING IN TAMIL – COMPUTER TRANSISTOR BITS டம்மி QUBITS தான் ரம்மி வேகத்தின் வேகம் அதிவேகம் QUANTUM COMPUTING
QUANTUM COMPUTING IN TAMIL:
நாம் சாதாரதண கணிணியில் ஒரு செயலைச் செய்ய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டால் அதே வேலையை குவாண்டம் கணிணியைப் பயன்படுத்தி செய்ய 1 நொடியே போதுமானது அவ்வளவு வேகமான மற்றும் துல்லியமான கணிணி இந்த குவாண்டம் கணிணியாகும். இந்த குவாண்டம் கணிணியானது பல செயற்கறிய செயல்களைக் கண்டறியப் பயன்படுகிறது இது இரண்டு கோள்களுக்கு இடையேயுள்ள தொலைவைக் கண்டறிய உதவுகிறது. இந்த குவாண்டம் கணிணியானது வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் துணை புரியக்கூடிய ஒரு கணிணியாகும். அதைத்தவிர மேலும் MEDICAL RESEARCH போன்ற துறைகளிலும் அதிகம் பயன்படுகிறது. இது மருத்துவத்துறையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உதாரணமாக இது மனித உடம்பில் உள்ள கேன்சர் கட்டிகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும் இதைப் பயன்படுத்தி நாம் மருத்துவ போதைப்பொருட்களைக் கூட மனித உடம்பில் கண்டறிய இயலும்.
மருத்துவத் துறையில் உள்ள ஒவ்வொரு மருந்திற்கும் ஒரு மூலக்கூறு கட்டமைப்பு உள்ளது அந்த மூலக்கூறு கட்டமைப்பு எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அதைக் கண்டறிந்து செயல்படுவதென்பது குவாண்டம் கணிணிக்கு மிகவும் எளிமையான செயலாகும். ஆகையால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்மால் ADVANCED DRUGS போன்றவற்றைக் கண்டறிய இயலும்.
நாம் பொதுவாக GOOGLE MAPல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உள்ள தொலைவைக் கண்டறிய இயலும் ஆனால் அதைக் காட்டிலும் துல்லியமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உள்ள தொலைவு அனைத்தையும் தெளிவாகக் கண்டறிய இந்த குவாண்டம் கம்யூட்டிங் பயன்படுகிறது.
தற்காலத்தில் இந்த குவாண்டம் கம்யூட்டிங்கை மிகப் பெரிய கம்யூட்டிங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர் கூகுள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களைப் போன்று மொத்தம் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இந்த குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். முக்கியமாகக் கூறினால் இந்த குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்றளவும் ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
WHETHER FORECASTING:
WHETHER FORECASTING எனப்படும் வானிலை அறிக்கைகளில் தற்பொழுது அதிகளவு இந்த குவாண்டம் கம்யூட்டிங் பயன்படுகிறது. முன்னாட்களில் நம்மால் ஒரு வானிலையை தெளிவாகக் கணிக்க இயலாது. ஆனால் தற்சமயம் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைக் காரணிகளை எளிதாகக் துல்லியமாகக் கண்டறிகிறோம்.
PROCESSOR:
ஏன் மற்ற கணிணியைவிட குவாண்டம் கணிணி மிகத் துல்லியமாக வேகமாக உள்ளது என்று பார்கையில் இங்கே PROCESSOR எனப்படும் கணிணி செயலிதான் முக்கியப் பயன்பாடு. தற்காலத்தில் INTEL PENTIUM 7, 8, 9 என்ற பல வகையான செயலிகள் உள்ளன. ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு மேல் நம்மால் PROCESSOR எனப்படும் செயலியின் அளவை எளிதில் அளக்க முடியாது ஏனெனில் செயலியின் உள்ளே இருக்கும் TRANSISTORகளே காரணமாகும். TRANSISTORன் அளவு குறைந்தால் செயலியின் வேகமும் குறைந்து விடும்.
0 மற்றும் 1:
நாம் சாதாரணமாக கணக்கிடும் கணிணிகளில் பிட்ஸ்கள் 0 மற்றும் 1 என்பவை தனித்தனியாக இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் குவாண்டம் கணிணிகளோ 0 மற்றும் 1 என்ற இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும். இதன் மூலமாக ஒரு சக்கி வாய்ந்த கணிப்பொறியாக குவாண்டம் உருவெடுக்கிறது.இது தன்னைத் தானே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் இது மனிதனின் நரம்பு மண்டலங்களைப் பற்றிப் படித்து தன்னைத்தானே வளர்த்துக் கொள்கிறது.
QUANTUM COMPUTING IN TAMIL TUNNELING:
பொதுவாக செயலியானது பல விதமான டிரான்சிஸ்டர்களால் ஆனது. ஒவ்வொரு டிரான்சிஸ்டர்களும் நமது ரத்த சிவப்பணுக்களை விட சிறியது. இதைத் தவிர MOORE’S LAW என்றொரு விதியுண்டு அதன்படி ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் PROCESSORல் உள்ள டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காகும் என்று மூர்ஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால் இந்த மூர்ஸ் விதியானது 1975 முதல் 2012 வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது அதன் பிறகு இதில் மாற்றம் ஏற்பட்டது. விஞ்ஞானிகளின் கருத்துப்படி நாம் டிரான்சிஸ்டர்களின் அளவை அதைவிட குறைத்தால் நமக்கு QUANTUM TUNNELING என்ற ஒரு சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் சாதாரண கணிணியில் ஏற்படும் இந்த QUANTUM TUNNELING என்ற சிக்கலானது QUANTUM COMPUTINGல் தீர்க்கப்படுகிறது.
QUANTUM COMPUTING PRINCIPLES:
QUANTUM COMPUTING இரண்டு விதமான தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது.
- QUANTUM SUPERPOSITION
- QUANTUM ENTANGLEMENT
QUANTUM SUPERPOSITION:
நிலையில்லாத நிலையில் நாம் நிகழ்த்தகவின் மூலம் ஒரு முடிவெடுப்பது QUANTUM SUPERPOSITION என்று கூறுகிறோம். உதாரணமாக நாம் ஒர் கண்ணாடிப் பெட்டியில் ஒரு பூனை மற்றும் விஷவாயு இரண்டையும் இட்டு மூடுகிறோம் தற்பொழுது அந்த பூனையானது சாவதற்கும் மற்றும் உயிரோடு இருப்பதற்குமான நிகழ்த்தகவு பாதி பாதி உள்ளது. இந்த சமன்பாட்டின் பெயரை நாம் SCHRODINGER’S CAT THEROY என்கிறோம். இந்த மாதிரியான சூழலை நாம் QUANTUM SUPERPOSITION என்று கூறுகிறோம்.
QUANTUM QUBITS:
நமது சாதாரண கணிணியில் உள்ள புராசஸரில் டிரான்சிஸ்டர் ஆனது மாறும் பொழுது 1 மற்றும் 0 என்ற இரண்டு பிட்ஸ்களையும் செயல்படுத்தும். அதேபோல் நமது குவாண்டம் கணிணியில் உள்ள புராசஸரில் பிட்ஸானது க்யூபிட்ஸ்(QUBITS) என்றழைக்கப்படுகிறது. சாதாரண கணிணியின் வேகத்தை நாம் அதிலுள்ள டிரான்சிஸ்டரின் அளவு மற்றும் ஜிகாபைட்ஸ் அதிர்வெண்ணின்(RAM) அலகு போன்றவற்றை வைத்துக் கணக்கிடுகிறோம். ஆனால் நமது குவாண்டம் கணிணியின் வேகமானது அதனுடை க்யூபிட்ஸின் அளவைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. எனவே குவாண்டம் கணிணியில் உள்ள க்யூபிட்ஸானது ஒரு எலக்ட்ரான் அல்லது போட்டான் ஆக இருக்கலாம். எலக்ட்ரான் என்பது ஒரு அணுவில் உள்ள உட்பகுதியாகும். சாதாரண இயற்பியல் விதிப்படி இயற்பியலானது மேக்ரோஸ்கோப்பிக் பொருளுக்கு மட்டுமே ஒத்துழைக்கிறது. மேலும் அணுவின் துணைப்பகுதியான எலக்ட்ரான் மற்றும் போட்டான் போன்றவற்றிற்கு ஒத்துழைக்காது இதற்கு ஒத்துழைக்க கூடிய ஒரு அறிவியலே QUANTUM PHYSICS ஆகும். ஒவ்வொரு எலக்ட்ரானிலும் ஒரு SPIN காணப்படும் இது 20% மேல் நோக்கியும் 80% கீழ்நோக்கியும் காணப்படும் அல்லது இதற்கு நேர்மாறாக 80% மேல் நோக்கியும் 20% கீழ்நோக்கியும் காணப்படும். இது போன்ற பல நிகழ்தகவுகளை வைத்து நாம் DATA PROCESSING செய்வதற்கு பெயர் QUBICS எனப்படும்.
இன்னும் புரியவில்லையா அதாவது சாதாரண கணிணியில் எலக்ட்ரான்கள் மாறும் பொழுது 0(OFF) மற்றும் 1(ON) என்ற நிலையில் மாறுகிறது அதைப்போலவே குவாண்டம் கணிணியில் QUBITS எலக்ட்ரான்கள் மாறும் பொழுது எலக்ட்ரான்கள் மேல்நோக்கியும்(ON) கீழ்நோக்கியும்(OFF) காணப்படுகிறது.
QUANTUM ENTANGELMENT:
அதாவது நாம் ஏற்கனவே பார்த்த SCHRODINGER’S CAT THEROY கொள்கையின் படி ஒரு பெட்டியில் ஒரு பூனை மற்றும் விஷவாயு இடப்படுகிறது ஆனால் இங்கே இரு பெட்டி இரு பூனை மற்று இரு விஷவாயு இடப்பட்டு அண்டத்தின் வெவ்வேறு திசைகளில் விடப்படுகின்றன. இங்கே QUANTUM ENTANGLEMENT கொள்கையின் படி ஒரு பெட்டியிலுள்ள பூனை இறந்தால் மறு பெட்டியிலுள்ள பூனையானது கண்டிப்பாக உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதுவே குவாண்டம் சமன்பாட்டின் அடிப்படை விஷயமாகும்.
அண்ட விதிகளின் படி நமது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் மற்றொரு துகளுடன் இணைப்பில் உள்ளது. மேலும் பெருவெடிப்புக் கொள்ளை என்று சொல்லப்படும் BIGBANG THEORY மூலமாக நமது அண்டமானது உருவானது எனவே இதற்கு சமமான மற்றொரு அண்டம்(MIRROR UNIVERSE) இந்த விண்வெளியில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த MIRROR UNIVERSEல் நேரமானது பின்நோக்கி நகர்கிறது என்று அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போலவே குவாண்டம் கணிணியில் உள்ள ஒவ்வொரு QUBITSம் மற்றொரு QUBITS உடன் இணைந்திருக்கும். ஒரு QUBITSன் மதிப்பு 0 வாக இருந்தால் மற்றொன்றின் மதிப்பு 1 ஆக இருக்கும்.
குவாண்டம் கணிணியில் அதன் செயல்பாட்டின் வேகமான 2n என்று கணக்கிடப்படுகிறது. இங்கே n என்பது எத்தனை ELECTORNS, PHOTOS, QUBITS போன்றவைகள் உள்ளன என்பதாகும்.
குவாண்டம் கணிணி பயன்பாடுகள்:
கீழே பட்டியலிடப்பட்டுள்ள பல துறைகளில் குவாண்டம் கணிணியின் பயன்கள் அளவற்றது. கீழ்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் தாங்கள் குவாண்டம் கணிணியில் நிபுணத்துவம் பெற்றால் தங்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சாதிக்கும் வாய்ப்பும் எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும்.
- Cybersecurity
- Drug Development
- Financial Modeling
- Better Batteries
- Cleaner Fertilization
- Traffic Optimization
- Weather Forecasting and Climate Change
- Artificial Intelligence
- Solar Capture
- Electronic Materials Discovery