10 KEYBOARD SHORTCUTS – கணிணியில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சிறந்த SHORTCUTS

கணிணியில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சிறந்த SHORTCUTS

10 KEYBOARD SHORTCUTS:

தாங்கள் கணிணியில் SHORTCUTS பயன்படுத்தும் போது அது உங்களை மிகவும் வேகமானவராக மாற்றிவிடும். அது உங்கள் கவனத்தை சீறாக வைப்பதோடு தாங்கள் செய்யும் வேலைகளையும் மிக எளிதாக மாற்றி விடுகிறது.

10 KEYBOARD SHORTCUTS
10 IMPORTANT KEYBOARD SHORTCUTS IN TAMIL

உதாரணமாக தாங்கள் கணினியில் ஒன்றை COPY செய்ய விரும்பினால் தாங்கள் தங்களது சுட்டி மூலமாக அந்த சொல்லை HIGHLIGHT செய்து பின்பு RIGHT CLICK செய்து அந்த சொல்லை COPY செய்வதைவிட தாங்கள் அந்த சொல்லை சுட்டி மூலமாக HIGHLIGHT செய்து தங்கள் விசைப்பலகையில் உள்ள CTRL+C SHORTCUT KEY மூலம் COPY செய்வது மிக எளிதானது.

கீழ்க்கண்ட முக்கியமான SHORTCUT KEYSகளை ஒவ்வொருவரும் தங்கள் நினைவில் வைத்து திரும்பத் திரும்ப பயன்படுத்துவது மிகவும் நலம்

Ctrl+C or Ctrl+Insert and Ctrl+X:

இங்கே CTRL+C or CTRL+INSERT போன்ற இரண்டும் நமது கணினியில் சுட்டி(MOUSE) மூலம் HIGHLIGHTED செய்யப்பட்ட வார்தைகளையோ அல்லது வாக்கியங்களையோ COPY செய்ய பயன்படுகின்றன. தாங்கள் தங்கள் கணினியில் COPY செய்வதன் மூலம் அந்த வார்த்தையானது அந்த இடத்திலும் இருக்கும் பின்பு தாங்கள் PASTE செய்யும் மற்றொரு இடத்திலும் இருக்கும். ஒருவேளை தாங்கள் தங்களின் வார்த்தைகளை முற்றிலுமாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற நினைத்தால் அப்பொழுது தாங்கள் CTRL+X(CUT) SHORTCUT KEY பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த SHORTCUT KEYஆனது WINDOWS OS கணினிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

APPLE OS போன்றவற்றில் தாங்கள் COPY மற்றும் PASTE செய்வதற்கு CTRL KEYக்கு பதிலாக CMD KEYயை பயன்படுத்த நேரிடும்.

CTRL+V or SHIFT+INSERT:

இங்கே CTRL+V OR SHIFT+INSERT இந்த இரண்டு SHORTCUTS KEYகளும் வார்தை அல்லது வாக்கியங்களை PASTE செய்யப் பயன்படுகிறது.

APPLE OSல் தாங்கள் CMD+V என்ற SHORTCUT KEYஐ பயன்படுத்த வேண்டும்.

CTRL+Z and CTRL+Y:

CTRL+Z என்ற SHORTCUT KEY ஆனது UNDO செய்யப் பயன்படுகிறது. UNDO என்றால் தாங்கள் மாற்றம் செய்ய ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதாகும்.

CTRL+Y என்ற SHORTCUT KEY ஆனது REDO செய்யப் பயன்படுகிறது. REDO என்றால் தாங்கள் மாற்றம் செய்ய ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை மீண்டும் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருவதாகும்.

APPLE OSல் UNDO மற்றும் REDO செய்வதற்கு தாங்கள் CMD+Z and CMD+Y என்ற SHORTCUT KEYS பயன்படுத்த வேண்டும்.

CTRL+F and CTRL+G:

CTRL+F என்ற SHORTCUT KEYஆனது ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க(SEARCH) பயன்படுகிறது. இது ஒரு வார்தையை CURRENT PAGEல் கண்டறியப் பயன்படுகிறது. பெரும்பாலும் இந்த SHORTCUT KEYஆனது இணையத்தில் மிகவும் பயன்படுகிறது.

CTRL+G என்ற SHORTCUT KEY ஆனது ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

APPLE OSல் நாம் CMD+F என்ற SHORTCUT KEYயைப் பயன்படுத்துகிறோம்.

ALT+TAB or CTRL+TAB:

தாங்கள் பல PROGRAMSகள் திறந்து வைத்திருந்தால் அந்த திறந்து வைத்திருந்த PROGRAMகளுக்கு இடையில் நமக்கு வேண்டிய PROGRAMகளை தேர்ந்தெடுக்க ALT+TAB என்ற SHORTCUT KEYS பயன்படுகிறது. இதன் மூலமாக நமக்கு வேண்டிய PROGRAMகளை நாம் CYCLE முறையில் தேர்ந்தெடுக்க முடியும்.

CTRL+BACKSPACE AND CTRL+LEFT OR RIGHT ARROW:

CTRL+BACKSPACEஅழுத்துவதன் மூலமாக அது ஒரே சமயத்தில் ஒரு எழுத்திற்கு பதிலாக ஒரு வார்த்தையையே முழுமையாக அழிக்கிறது.

CTRL+S:

CTRL+S இந்த ஷார்ட்கட் ஆனது நமது ஆவணங்களை சேமிக்கப் பயன்படுகிறது. எந்தவொரு கோப்பு அல்லது ஆவணங்களை சேமிக்க இந்த SHORTCUT KEY பயன்படுகிறது.

CTRL+HOMEPAGE, CTRL+END:

CTRL+HOME SHORTCUT KEY ஆனது CURSORயை ஆவணத்தின் முதல் பக்கத்திற்கு மாற்றுகிறது. CTRL+END SHORTCUT KEY ஆனது CURSORயை ஆவணத்தின் கடைசி பக்கத்திற்கு மாற்றுகிறது.

CTRL+P:

CTRL+P என்ற SHORTCUT KEY ஆனது ஒரு பக்கத்தைப் PRINT PREVIEW செய்யப் பயன்படுகிறது. தாங்கள் ஏதேனும் ஒரு பக்கத்தைப் PRINT எடுக்க விரும்பினால் இந்த SHORTCUT KEY மிகவும் பயன்படும்.

MAC OPERATING SYSTEMல் PRINT எடுக்க தாங்கள் CMD+P என்ற SHORTCUT KEYS பயன்படுத்த வேண்டும்.

 

 

 

Share the knowledge