JOB WEBSITE IN TAMIL-டிஜிட்டல் உலகின் வேலைவாய்ப்பை பெற்று தரும் அற்புதமான பத்து வலைத்தளங்கள்
JOB WEBSITE IN TAMIL:
வேலை வாய்ப்பு சம்பந்தமான வலைத்தளங்கள் அனைத்தும் தற்காலத்தில் அநேக வாலிபர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. தற்காலத்தில் இந்த டிஜிட்டல் உலகில் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செய்திதாள்களை விட வலைத்தளங்களே முன்னோடியாக உள்ளன. பல்வேறு துறைகளில் ஏற்படும் வேலை வாய்ப்பு காலி இடங்கள் போன்ற அனைத்து விதமான தகவல்களையும் தற்சமயம் இந்த வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் உடனுக்குடன் தங்களது சந்தாதாரர்களுக்கு எலக்ட்ரானிக் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்துகின்றன.
2020ம் ஆண்டின் தலைசிறந்த வேலைவாய்ப்பை பெற்று தரும் வலைத்தளம்
- Indeed: மிகச்சிறந்த வலைத்தளம்
- Monster: மிகச்சிறந்த இரண்டாவது வலைத்தளம்
- Glassdoor: மிகச்சிறந்த வேலையாளர்களுக்கான வலைத்தளம்
- FlexJobs: வீட்டிலிருந்து வேலைசெய்வோர்க்கான வலைத்தளம்
- The Ladders: அனுபவமிகுந்த மேலாளர்களுக்கு உகந்த வலைத்தளம்
- AngelList: புதிதாக தொழில் முனைவோர்க்கான வலைத்தளம்
- LinkedIn: நேரடியாக பணியமர்த்துவோருடன் இணைக்கிறது
- LinkUp: தகவல்களை உடனுக்குடன் update செய்கிறது
- Scouted: கல்லுாரி புதிதாக முடித்த பட்டதாரிகளுக்கானது
- Snagajob: பகுதிநேர மணி கணக்கு வேலைக்கு
INDEED:-
INDEED என்ற இந்த வலைத்தளமானது 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு வேலைவாய்ப்பை தேடுவோர்க்காக உருவாக்கப்பட்டது. இது தற்பொழுது வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் வலைத்தளங்களில் முன்னோடியாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 250மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள இந்த வலைத்தளம் ஒரு நொடிக்கு பத்து புதிய வேலைவாய்ப்பு செய்திகளை பயனர்களுக்கு கொடுக்கிறது. இது ஒரு மிகப்பெரிய வலைத்தளமாக பல்வேறுபட்ட துறைகளில் பல்வேறுபட்ட வேலைவாய்ப்பு செய்திகளை வழங்குகிறது. ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் வேலைவாய்ப்பை முதல் நிலையிலிருந்து இறுதி நிலை வரை பயனர்களுக்கு SALARY, LOCATION, EXPERIENCE LEVEL வாரியாகக் கொடுக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த வலைத்தளமானது 100% அனைவருக்கும் முற்றிலும் இலவசமாகும். எவ்வாறாயினும் தாங்கள் INDEED வலைத்தளத்தில் ஒரு கணக்கு தொடங்கிவிட்டால் உங்களுக்கு உடனுக்குடன் அறிவிப்பு அனைத்தும் வந்து சேரும்.
MONSTER WEBSITE:-
டிஜிட்டல் உலகின் வேலைவாய்ப்பின் ஒரு முன்னோடி இந்த MONSTER வலைத்தளமாகும். இந்த MONSTER வலைத்தளமானது 1994ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது அனைத்து விதமான வெற்றிகரமான நிறுவனங்களையும் ஒர் இடத்தில் ஒன்று சேர்க்கிறது. இங்கே ஒரு நிமிடத்திற்கு 29 RESUME பதிவேற்றப்படடுகின்றன மேலும் 7900 வேலைவாய்ப்பு தேடல்கள் தேடப்படுகின்றன. இந்த MONSTER வலைத்தளமானது தரத்திலும் பயன்பாட்டிலும் சமமாக இருந்த போதிலும் வேலைவாய்ப்பில் சற்று குறைவான வாய்ப்புகளை கொண்டுள்ளதால் இது இரண்டாம் இடத்தில் உள்ளது.
GLASSDOOR WEBSITE:-
இது 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த வலைத்தளமாகும். இது வெளிப்படையான சம்பளம் மற்றும் வேலை வழங்கும் நிறுவனத்தைப் பற்றி வெளிப்படையான கருத்துகளை நேர்மையாக தெரிவிக்கிறது. தற்சமயம் இந்த நிறுவனம் 1 மில்லியன் வேலைவாய்ப்பு நிறுவனத்தைக் கொண்டுள்ளது மேலும் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை பட்டியலிடுகிறது. தாங்கள் இந்த வலைத்தளத்தில் வேலை வாய்ப்பை தேட விரும்பினால் ஒரு கணக்கை உருவாக்கி தங்களுடைய RESUME பதிவேற்றம் செய்யுங்கள் உங்களுக்கு உடனுக்குடன் அறிவிப்பு குறுஞ்செய்திகள் அனுப்படும்,
FLEXJOBS:-
தாங்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு வேலையை வீட்டிலிருந்து கண்டுபிடிக்க எப்பொழுதாவது சிறமப்பட்டதுண்டா? அப்படியானால் தாங்கள் FLEXJOBS வலைத்தளத்தை அணுகி தங்களுக்கான வேலையை வீட்டிலிருந்தே கண்டறிய இயலும். இந்த வலைத்தளமானது சாரா சட்டன் என்பவரால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தளம் உருவாக்கப்பட்திலிருந்து இது சிறப்பாக செயல்படுகிறது இது 5000 நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களுடைய சிறப்பான சேவை மற்றும் உபசரிப்பு அநேக பயனர்களுக்கு எளிதில் வேலை கண்டறிய உதவுகிறது. இது 50 வகையான வெவ்வேறு வேலை சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வலைத்தளமானது தனது சேவைகளை இலவசமாக வழங்குவதில்லை. இங்கே ஒரு வாரத்திற்கு 6.95 டாலரும், ஒரு மாதத்திற்கு 14.95 டாலரும், மூன்று மாதத்திற்கு 29.95 டாலரும், ஒரு வருடத்திற்கு 49.95 டாலரும் வசூலிக்கிறது.
THE LADDERS WEBSITE:-
இந்த வலைத்தளமானது 2003ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த மேலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வலைத்தளம் மேலாளர்களுக்கு ஒரு லட்சம் டாலர் அளவிலான வேலை வழங்குகிறது. இந்த வலைத்தளமானது ஒரு மாத சந்தாவிற்கு 30 டாலரும் வசூலிக்கிறது.
THE ANGELLIST:-
இது 2010ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புதிதாக தொழில் தொடங்கி நிறுவனங்கள் எவ்வாறு திறமையான பணியாளர்களை பணியமர்த்தி வெற்றிகரமாக செயல்படுகின்றது என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தாங்கள் இந்த வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது தாங்கள் எவ்வாறு இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று ஒரு COVER LETTER எழுத வேண்டியுள்ளது.
LINKEDLN:-
2003ம் ஆண்டு நிறுவப்பட்டு தற்பொழுது உலகளவில் மிகப்பெரிய வேலை வழங்கும் வலைத்தளமாக உள்ளது. இது 690 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.இந்த வலைத்தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது வேலை தேடுவோருடன் வேலைவாய்ப்பை நேரடியாக இணைக்கிறது.
LINKUP:-
இது 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும் இது ஒருவகையான PROPRIETARY TECHNOLOGYயை பயன்படுத்துகிறது. இது மிகப்பெரிய தகவல்தரவைக் கொண்டுள்ளது அதன் மூலமாக வேலை தேடும் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
SCOUTED:-
SCOUTED என்ற வலைத்தளமானது 2014ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கீழ்க்கண்ட வாசகத்தோடு “PEOPLE ARE MORE THAN JUST THEIR RESUME” ஆரம்பிக்கப்பட்டது. இது கல்லுாரி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
SNAGAJOB:
இந்த வலைத்தளம் மற்ற வலைத்தளத்தைவிட சற்று வித்தியாசமானதாகும். இந்த வலைத்தளமானது தனது வாடிக்கையாளருக்கு பகுதிநேர வேலைவாய்பை HOURS BASISல் வழுங்குகிறது. இந்த வலைத்தளமானது 20 வருடமாக தனது சேவையை வழங்குகிறது. இந்த வலைத்தளம் 2000 ஆண்டிலிருந்து 2020 வரை செயல்படுகிறது. இந்த வலைத்தளம் 100மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது மேலும் 7 லட்சம் அளவிலான வெவ்வெறு வேலை வாய்ப்பை வழுங்கும் நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இந்த வலைத்தளமானது மணிக்கணக்கான வேலைகளை கீழ்க்கண்ட துறைகளில் வழங்குகிறது healthcare, customer service, hospitality, retail sales, security, and food delivery