DARK NET IN TAMIL-நான் உன்ன HACK பண்ணியே 10 நிமிஷம் ஆச்சு கண்ணு

DARK NET IN TAMIL-நான் உன்ன HACK பண்ணியே 10 நிமிஷம் ஆச்சு கண்ணு

DARK NET IN TAMIL KALI LINUX:

2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் காளி லினக்ஸ் Mati Aharoni மற்றும் Deavon Kearns(programmers) என்பவர்களால் உருவாக்கப்பட்டது. காளி லினக்ஸ் Backtrack எனும் Operating Systemலிருந்து உருவாக்கப்பட்டது. இது Debian குடும்பத்தை சேர்ந்ததாகும் மேலும் இதனுடைய பெரும்பாலான Coding மற்றும் Updatesகள் Debian repositoryயை சார்ந்து இருக்கிறது. இந்த Linuxன் Software Packagesகள் அனைத்தும் தேந்தெடுக்கப்பட்ட கணிப்பொறி பொறியாளர்கள் மூலமாக ஒரு பாதுகாப்பான நல்ல சூழலில் வடிவமைக்கப்பட்டது. பிறகு 2013ம் ஆண்டு இந்த OS வெளியானது அன்றிலிருந்து இன்று வரை பல விதமான Updatesகளை பெற்றுள்ளது.

DARK NET IN TAMIL
Working with Kali Linux

DARK NET IN TAMIL:

Kali linux என்பது டெபியன் வகையை சேர்ந்த ஒரு வகையான ஒபெரடிங் சிஸ்டம் ஆகும். இது முக்கியமாக network analysts மற்றும் penetration testers போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஏராளமான டூல்ஸ்கள் காளி ஒபெரடிங் ஸிஸ்டெமில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன பயனர்கள் அதை தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனால் காளி லினக்ஸ் ஒரு வகையான கூர்மையான ஆயுதமாக ஹேக்கர்களுக்கு மாறியுள்ளது.

காளி லினக்ஸ் முன்பு Backtrack என்ற பெயரால் அறியப்பட்டது பிறகு இது தன்னை தானே பலதரப்பட்ட டூல்கள் மூலமாக காளி லினக்ஸ் என்று அடையாளப்படுத்தியது. Backtrackல் பல விதமான டூல்கள் இருந்த போதிலும் அனைத்து டூல்களும் ஒரே மாதிரியான வேலைகளையே செய்தன. ஆகையால் kali linuxல் பல விதமான டூல்ஸ்கள் மூலமாக வேலை சுலபமானது.

Usages of Kali Linux:

Kali Linux மிக முக்கியமாக Penetration testing மற்றும் Security auditing போன்றவற்றிற்கு பயன்படுகிறது. Kali Linux தன்னுள் ஏராளமான டூல்ஸ்களை(Penetration Testing, Security research, Computer Forensics and Reverse Engineering) கொண்டுள்ளது. மேலும் இவைகள் அனைத்தையும் சிறந்த தகவல் பாதுகாப்பிற்காக பயன்படுத்த முடியும். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நெருப்பு மூலம் நீங்கள் நல்லதும் செய்யலாம் கெட்டதும் செய்யலாம் அதே போல Kali Linuxயை பயன்படுத்தி தகவல் பாதுகாப்பும் செய்யலாம் தகவல் திருடும் செய்ய இயலும்.

Legal or Illegal:

சிலபேர் நம்மில் Kali Linuxயை பயன்படுத்துவது சரியா தவறா என்று கேள்வி எழுப்புகின்றனர். கண்டிப்பாக இணையத்தில் கிடைக்கும் எந்த ஒரு Licensed Software & Open source Softwareகளை பயன்படுத்துவது தவறல்ல ஆகையால் தாராளமாக Kali Linuxயை பயன்படுத்தலாம். இந்த Operating system மற்ற Operating systemகளை போன்றதாகும். இங்கே கூடுதலாக சில Inbuild Hacking Tools காணப்படும். இந்த Hacking Tools களை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தவறல்ல அது Ethical Hacking ஆகும் மேலும் உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும். ஒருவேளை தவறான வழியில் பயன்படுத்தினால் அது தவறாகும் நீங்கள் சிறைவாசம் கூட செல்ல நேரிடலாம்.

Why Use Kali linux:

Open Source:

Kali Linux என்பது Open Source மென்பொருள் வகை Operating System ஆகும். ஆகையால் யார் வேண்டுமானாலும் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அதனுடைய Codingகளை மாற்றலாம். Open Source என்பது யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தக்கூடிய Free Softwares ஆகும். தற்பொழுது உலகம் முழுக்க Open Source Softwares பிரபலமடைந்து வருகின்றன.

More Tools:

Kali Linux வரும்பொழுதே பல விதமான Hacking Tools உடன் வருகிறது. இதனால் பயனர்கள் அனைவரும் தனியே எந்த ஒரு Hacking Software Toolsகளையும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. இதனால் பயனர்கள் அனைவரும் நேரடியாக Operating System நிறுவிய பிறகு Tools களை பயன்படுத்த முடியும்.

Multilanguage Support:

நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கவலை இல்லை. இது பலவிதமான உலக மொழிகளுக்கு ஒத்துழைக்கிறது ஆகையால் தாங்கள் எந்த மொழி பேசுபராக இருந்தாலும் கவலை இல்லை தங்கள் மொழியிலேயே இந்த Operating Systemயை பயன்படுத்த முடியும்.

Completely Customizable:

ஒவ்வொரு பயனருக்கு ஒவ்வொரு விதமான Designகள் பிடிக்கும் ஆகையால் இது ஒரு முழுமையான Customizationற்கு ஒத்துழைக்கிறது. பயனர்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய வடிவத்தில் இந்த Operating Systemயை வடிவமைத்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

System Requirements for Kali installation:

* குறைந்தது 20GB Hard Disk தேவை

* குறைந்தது 1G RAM நினைவகம் தேவை

* CD/DVD (or) Bootable Linux USB

List of Tools comes with Kali Linux:

Kali Linuxல் ஏராளமான Toolsகள் உள்ளன அதனை பற்றி முழுவதும் இந்த ஒரு கட்டுரையில் கூற முடியாது. ஆகையால் முக்கியமான சில Toolsகளை பற்றி மட்டும் தங்களுக்கு விளக்கமாக கூறியுள்ளேன்.

1. Aircrack-ng

2. Nmap

3. THC Hydra

4. Nessus

5. Wireshark

1. Aircrack-ng:-

Aircrack-ng என்ற இந்த டூலை பயன்படுத்தி Hackingயை செய்ய முடியும். இது நெட்ஒர்க்கில் உள்ள Wifi Passwordயை Hacking செய்கிறது. மேலும் Railway Station, Bus stand, Airport, College Campus போன்ற முக்கியமான இடங்களில் உள்ள Wifi-Hotspotயை Hacking செய்வதற்கு இந்த Aircrack-ng tools பயன்படுகிறது.

DARK NET IN TAMIL
Hacking with Aircrack-ng

இது கீழ்கண்ட வேலைகளை செய்கிறது Monitoring, Attacking, Testing, Hacking.

Monitoring:

இது இணையத்திலுள்ள Packetகளை Hack செய்து தகவல்களை Text fileகளாக Third Party Toolsகளுக்கு அனுப்புகிறது.

Attacking:

இணைய Packetகளுக்கு தவறான Sql Injection செய்வதன் மூலமாக Replay attacks, Deauthentication attacks, Fake access points இது போன்ற பலவிதமான Attacksகளை செய்கிறது.

Testing:

இது இணையத்தின் Wifi Cards & Driver Capabilities போன்ற அனைத்தையும் Testing செய்கிறது. எந்தெந்த Wifi, Wifi Cards, Hotspot areas நெட்ஒர்க்கில் அருகிலிருக்கிறது எதற்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது போன்ற அனைத்தையும் Testing செய்கிறது.

Cracking:

WEP, WPA PSK (WAP1, WAP2) போன்ற அனைத்து நெட்ஒர்க்குகளையும் Hacking செய்கிறது.

2. Nmap

Nmap என்றால் Network Mapper இது பெரும்பாலும் Nmap என்றே அனைவரிடமும் அறிமுகமாகி உள்ளது. Nmap மூலமாக நாம் Network Discovery & Security Auditing போன்ற அனைத்தையும் செய்ய இயலும். இது நெட்ஒர்க்கில் உள்ள IP Packetsகளை திருட்டுத்தனமாக உபயோகித்து எந்த நெட்ஒர்க்கிற்கு Host அருகில் உள்ளது என்று கண்டறிகிறது. அந்த Host எந்தவிதமான Service களை அளிக்கிறது மேலும் எந்த Operating Systemல் அது இயங்குகிறது அதன் Packet/Firewall Filterஎன்ன போன்ற பல பண்புகளை ஆராய்கிறது.

Nmapயை பயன்படுத்தி கீழ்கண்ட செயல்களை எளிமையாக செய்ய முடியும் என்று பல Network adminகள் கூறுகிறார்கள்.

* Network Inventory

* Managing service upgrade schedules

* Monitoring host or service uptime

3. THC Hydra

தாங்கள் Remote Authentication முறையில் Brute force attackயை பயன்படுத்த விரும்பினால் உங்களுக்கு சிறந்த தேர்வாக THC Hydra tool அமையும். இது telnet, FTP, HTTP, HTTPs, SMB போன்ற 50ற்கும் மேற்பட்ட ப்ரோடோகாலில் Rapid dictionary attack நடத்தும் சக்தி கொண்டது. இது Web scanner, Wireless network, Packet crafter போன்ற அனைத்தையும் Hack செய்ய பயன்படுகிறது.

Brute force attack using THC Hydra

4. Nessus:-

Nessus என்பது ஒரு வகையான Remote scanning tool ஆகும். இதன் மூலமாக நாம் கணினியில் ஏதும் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா என்று அறிய முடியும். உங்கள் கணினிக்கு ஏதும் பாதுகாப்பு பிரச்சனை(virus, malware) போன்றவை வந்தால் இது உடனே அதை active block செய்யாது ஆனால் நீங்கள் உங்கள் கணினியை scan செய்தால் உடனடியாக வைரஸ் மல்வார் போன்றவற்றை வெளியேற்றி விடும்.

5. Wireshark:-

இது ஒருவகையான Packet analyser ஆகும். இதை பயன்படுத்தி தாங்கள் நெட்ஒர்க்கின் நடவடிக்கைகளான pcap file access, customizable reports, advanced triggers, alerts போன்றவற்றை பார்க்க முடியும். இதுதான் உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும் network protocol analyser ஆகும்.

Share the knowledge