LiFi Tamil Article – இவன் ஒளியின் மகன் வந்துவிட்டது LiFi இனி தேவை இல்லை WiFi ஒரு சிறப்பு பார்வை

இவன் ஒளியின் மகன் வந்துவிட்டது LiFi இனி தேவை இல்லை WiFi ஒரு சிறப்பு பார்வை

Li-Fi என்றால் Light Fedility என்று அர்த்தம் இது ஒரு Wireless Communication தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இது ஒளியின் மூலமாக தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. Lifi என்ற பதமானது முதன் முதலில் Harald Hass என்பவரால் 2011ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. Lifi ஒளியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தை மிக வேகமாக செயல்படுத்துகிறது. இது கண்ணிற்கு புலப்படும் ஒளிகள் மற்றும் Ultraviolet, Infrared spectrum போன்றவைகளை பயன்படுத்தியும் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையின் படி இது LED விளக்கை பயன்படுத்தி மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்கிறது.

Working Principle of Li-Fi

சுருக்கமாக கூறினால் இந்த Li-Fi என்பது Wi-Fi போன்றதேயாகும் Wifiல் நாம் radio சமிஞைகளை பயன்படுத்துகிறோம் Li-Fiல் நாம் ஒளியை பயன்படுத்துகிறோம். இதன் வேகமானது பொதுவாக ஒரு நொடிக்கு 100GB வரை பரிமாற்றம் செய்யும் ஆற்றல் உடையது. Lifi ஆனது Electro Magnetic சமிஞைகள் பாதிக்கப்படாமல் இது மருத்துவமனை, விமானம் மற்றும் ராணுவம் போன்ற இடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடியது. இந்த தொழில்நுட்பம் தற்பொழுது உலகம் முழுக்க பல பல நிறுவனங்களால் உபயோகிக்கபடுகிறது.

OPTICAL WIRELESS COMMUNICATION என்ற வாக்கியத்திலிருந்து வந்ததே இந்த Li-Fi என்ற வார்த்தையாகும். இது LED ஒளியை ஒரு ஊடகமாக வைத்து நெட்ஒர்க், மொபைல் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களை தொடர்பு கொள்கிறது. இது 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தொடர்ச்சியான 82% முன்னேற்றத்தை கண்டு வந்துள்ளது. Li-Fi இணையத்தின் தோராய மதிப்பு தற்பொழுது வரை ஒரு வருடத்திற்கு 6 பில்லியன் டாலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

Visible Light Communication (VLC) என்ற தொழில்நுட்பமானது LEDக்கு வரக்கூடிய மின்னோட்டத்தின் நிலையை மாற்றுவதன் மூலம் நடைபெறுகிறது. இதை மனித கண்களால் உணரமுடியாத அளவிற்கு மின்னோட்டத்தின் நிலை வேகமாக மாற்றப்படுகிறது. Li-Fi தகவல் பரிமாற்றம் செய்ய ஒளி தேவைப்பட்ட போதிலும் சில நேரங்களில் அதிகமான தகவல்களை எடுத்து செல்வதால் இதனுடைய ஒளி மங்கிவிடும் வாய்ப்புள்ளது அதனால் அது பயனரின் கண்களுக்கு புலப்படாது. Specturmயை பொறுத்த வரையில் இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Li-Fiன் தொழில்நுட்பம் நம்மை ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லிற்கு மாற அனுமதிப்பதால் Li-Fiக்கு இடையில் நாம் தடையற்ற பரிமாற்றத்தை நடத்தலாம். இதன் ஒளி அலைகள் சுவர்களுக்கு நடுவில் ஊடுருவ முடியாது இது மிக குறுகிய வரம்பிற்கு உட்பட்டது.

Wi-Fiயை நாம் எங்கெங்கு உபயோகிக்க விரும்புகிறோமோ அங்கெல்லாம் நாம் Electro Magnetic Signalக்கு இடையூறு இல்லாமல் Li-Fiயை பயன்படுத்த முடியும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் Wi-Fi மற்றும் Li-Fi இரண்டுமே Electromagnetic Spectrumல் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. Wi-Fi ஆனது Electro magnetic அலைகளை பயன்படுத்துகிறது Li-Fi ஆனது Ultraviolet & Infraredஅலைகளை பயன்படுத்துகிறது. Lifiன் Visible Light Spectrum ஆனது Wifiன் Radio Frequency Spectrumயை விட 10,000 மடங்கு பெரியதாகும்.

APPLICATIONS OF LIFI:

1. HOME AND BUILDING AUTOMATION:

2. UNDERWATER APPLICATION

3. AVIATION

4. HOSPITAL

5. VEHICLE

6. INDUSTRIAL AUTOMATION

7. ADVERTISING

8. EDUCATIONAL

HOME AND BUILDING AUTOMATION:

இனி வரும் காலங்களில் Li-Fi தொழில்நுட்பமானது வீடுகளில் பெருமளவு பயன்படுத்தலாம் என்று அறியப்படுகிறது. ஏனெனில் இந்த Li-Fi ஆனது சுவர்களை தாண்டி பரவாதத்தால் கணினி ஹேக்கரால் இதை எளிதில் ஹேக் செய்ய முடியாது.

UNDERWATER APPLICATION:

பெரும்பாலும் Remotely Operated Underwater Vehicle அதாவது தண்ணிக்குள் இயங்கும் வண்டிகள் அனைத்தும் Cable Wire மூலமாக தற்பொழுது இயக்கப்படுகிறது. இந்த cable wireகள் அதனுடைய நீளம் மற்றும் தடிமன் போன்ற அனைத்தையும் நிர்வகிப்பது தற்பொழுது பெரும் சிக்கலாக உள்ளது. நாம் அறிவியலில் படித்தது போல ஒளியானது தண்ணீருக்குள் ஊடுருவும் அதைப்போல நமது Li-Fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீருக்குள் இயங்கும் ஊர்திகளை இயக்கலாம்.

AVIATION:

விமான சேவையில் இணையத்தின் பங்கு தகவல் தொடர்பிற்கு மிகவும் முக்கியமானதாகும் நமது Li-Fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பை விட மிக வேகமாக சிறப்பாக நாம் தொலைத்தொடர்பு கொள்ள இயலும். Li-Fi ஆனது ஒளியை அடிப்படையாக வைத்து செயல்படுவதால் இது விமான சேவைக்கு நன்கு பயன்படும் மேலும் இது ரேடார் போன்ற வானொலி அலைகளில் செயல்படும் விமானத்தில் எந்த வித குறுக்கிடும் ஏற்படுத்தாமல் ஒளியின் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் செய்ய இயலும்.

HOSPITAL:

மருத்துவமனையில் தற்பொழுது இதனுடைய சேவை மிகவும் முக்கியமானதாகும் மேலும் பலதரப்பட்ட நோயாளிகளின் தகவல்களை டேட்டாபேஸில் நிர்வகிப்பதிலும் வேகமாக குறிப்பிட்ட நோயாளி ஒருவரின் தகவலை பார்ப்பதிலும் Li-Fi தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாததாகும். மேலும் இதை நாம் மருத்துவமனையில் உள்ள சில LED LIGHT உபகரணங்களை கொண்டே நாம் Li-Fi சேவையை எந்தவித ரேடியோ அலைகளின் குறுக்கீடும் இல்லாமல் வழங்கிட முடியும்.

VEHICLE:

வாகனத்தில் உள்ள Headlight மற்றும் Backlight உதவியுடன் தொழில்நுட்பமானது சிறந்த முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலமாக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்ய இயலும் மேலும் நமது அன்றாட வாழ்க்கையில் நமது தெருவில் உள்ள தெரு விளக்குகள் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் சிறந்த முறையில் செய்யலாம்.

INDUSTRIAL AUTOMATION:

Li-Fi ஆனது தொழில்துறையில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிக பங்கு வகிக்கிறது அனைத்து விதமான தொழில் துறைக்கும் தகவல் பரிமாற்றம் இன்றியமையாதது நமது Li-Fi தொழில்நுட்பம் ஏற்கனவே தொழில் துறையில் உள்ள Slip ring மற்றும் Sliding contacts, Industrial Ethernet போன்றவற்றிற்கு மாற்றாக உள்ளது. இது அனைத்து இடங்களிலும் பொதுவாக பயன்படுத்தும் Wireless Lanகளுக்கும் மாற்றாக உள்ளது.

ADVERTISING:

Li-Fiயை பயன்படுத்தி நாம் பலவிதமான விளம்பரத்தை செய்ய இயலும் விளம்பரத்துறைக்கு இது ஒரு சிறந்த வர பிரசாதமாகும் இது அனைத்து துறைகளுக்கும் பயன்படுகிறது உதாரணமாக ஒரு நபர் அவரது தெருவின் வழியாக நடந்து செல்கிறார் என்று வைத்து கொள்வோம் அவர் அந்த தெருவினுடைய தெரு விளக்கினை கடக்கும் பொழுது விளக்கின் மூலமாக அவரது கைபேசியில் விளம்பரத்தை காட்ட இயலும். அதே போல ஒரு நபர் கடைக்கு பொருள் வாங்க செல்கிறார் என்றால் கடையின் முகப்பு விளக்கு மூலமாக அந்த கடையினுடைய சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகள், புது வரவுகள் போன்ற அனைத்தையும் காட்ட இயலும்.

EDUCATION:

தற்பொழுது வாழ்க்கையில் அனைத்தும் இணைய வழியில் சேவை நடைபெறுகிறது இதற்கு கல்வி துறையும் விதிவிலக்கல்ல Li-Fi தொழில்நுட்பம் இணைய வழிக்கல்வியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களை இணைப்பதில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. மாணவர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசி அல்லது மடிக்கணினி மூலமாக தங்களின் ஆசிரியரை தொடர்பு கொள்வதன் மூலமாக Virtual Class Roomயை உருவாக்க முடியும். Online class படங்களை மாணவர்களுக்கு புரிய வைப்பதில் ஆசிரியர் மாணவர்களோடு இணைந்து செயலாற்ற Li-Fi தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Share the knowledge