CROWDFUNDING IN TAMIL-நிதியைத் திரட்ட வந்துவிட்டது ஒரு புதுமை

CROWDFUNDING IN TAMIL-நிதியைத் திரட்ட வந்துவிட்டது ஒரு புதுமை

CROWDFUNDING IN TAMIL:

CROWFUNDING என்பது ஒரு வகையாக நிதியைத் திரட்டும் வலைத்தலமாகும். இதன் மூலமாக தாங்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே தங்களுடைய சொந்த படிப்பிற்கோ மருத்துவச் செலவிற்கோ அல்லது தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கோ நிதியைத் திரட்ட முடியும். CROWFUNDINGல் பலவிதமான முறைகள் உள்ளது உதாரணமாக தாங்கள் சுனாமிக்கா நிதியைத் திரட்டுகிறீர்கள் என்றால் நன்றாக செய்யலாம் அது GENERAL EARNING ஆகும் அல்லது தங்கள் தொழில் வளர்ச்சிக்காக நிதியைத் திரட்ட விரும்பினால் அது தொழில் துறையை மட்டுமே சார்ந்த NICHE EARNING ஆகும். நீங்கள் உங்களுக்காக நிதியை படிப்பிற்கோ அல்லது மருத்துவச் செலவிற்கோ திரட்ட விரும்பினால் அது PRIVATE EARNING ஆகும்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் CROWDFUNDING என்று கூறினால் அருகிலிருப்போர் நீங்கள் ஏதோ போர்த்துகீசிய மொழியில் சத்தியம் செய்து விட்டீர்களோ? என்று நினைப்பர் ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு அது ஒரு முக்கியமான விவாதப்பொருளாக மாறியுள்ளது. நீங்கள் CROWDFUNDINGஎன்றவுடன் மக்கள் மத்தியில் அது முக்கிய விவாத பொருளாக உள்ளது.

CROWDFUNDING IN TAMIL:

சந்தையில் தாங்கள் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு நிதி திரட்ட விரும்பினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பிற்கு நிதி வழங்க விரும்பினாலோ தாங்கள் CROWDFUNDING மூலமாக அதை நிறைவேற்ற முடியும். இம்முறையில் நிதி திரட்டும் செயலானது தற்காலத்தில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் இந்த துறையானது 2025ம் ஆண்டிற்குள் மிகப்பெரிய அளவில் வளரும் என்று கணக்கிடுகிறார்கள்.

Crowdfunding சம்பந்தப்பட்ட பல வகையான வலைத்தளங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

KICKSTARTER:

CROWDFUNDING பற்றி பேசும் பொழுது நமது நினைவிற்கு வரக்கூடிய முதல் வலைத்தளம் இந்த KICKSTARTER ஆகும். இது 2009ம் ஆண்டு நிறுவப்பட்டது இது பயனர்களுக்கு நன்கொடைகளை பரிசாக வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.  KICKSTARTER ஆதரவளிக்கும் பெரும்பாலான திட்டங்கள் யாவும் “CREATIVE IDEAS” வகையை சார்ந்ததாகும். ஆனால் இந்த வகையான CROWDFUND WEBSITEல் தாங்கள் CREATIVITY CONCEPTயை அதிகம் பயன்படுத்த வேண்டும் நீங்கள் சாதாரணமாக ஒரு வர்த்தக பரிவர்த்தனைக்காக மட்டும் இங்கே நிதி திரட்ட விரும்பினால் அது உங்களுக்கு வெற்றி தராது.    

இங்கே நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு CROWDFUNDயிலும் நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அந்த இலக்கை அடையும் வரை நிதி திரட்டுகிறோம். ஒருவேளை நம்மால் இங்கே வலைதலத்தில் நமது நிதி இலக்கை அடைய முடியவில்லை என்றால் நம்மால் ஏற்கனவே வலைத்தலத்தில் சேமிப்பான நிதியை கூட பெற இயலாது. ஆகையால் KICKSTARTER வலைத்தலத்தில் நாம் நமது திரட்டக்கூடிய நிதியின் இலக்கை அடைய வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

GOFUNDME:-

CROWDSFUNDING பற்றிய வலைத்தலங்களைப் பற்றிப் பேசும் பொழுது முக்கியமாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் ஒரு வலைத்தலம் GOFUNDME ஆகும். இந்த வலைத்தலம் பெரும்பாலும் தனி நபர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. ஆகையால் தனிநபர்கள் இந்த வலைத்தலத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய நிதியைத் திரட்ட முடியும். அந்த நிதி தங்கள் கல்வி சம்பந்தப்பட்டதோ அல்லது மருத்துவ செலவினம் சம்பந்தப்பட்டதோ எதுவாயினும் சரி.

GOFUNDME முக்கியமாக தனிநபர்களுக்கு ஆதரவு அளிப்பதால் இது பெரும்பாலும் தொழில் தொடங்குபவர்களுக்கும் மேலும் தொழில் அதிபர்களுக்கும் தங்கள் வணிகத்திற்காக நிதியைத் திரட்ட விரும்புவோர்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இங்கே தாங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் தங்களுடைய நிதி நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை எனில் தங்களால் நிதியைத் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

INDIEGOGO:

INDIEGOGO என்பது மற்ற WEBSITEகளைப் போல் இல்லாமல் அனைத்து விதமான FUNDRAISING PLATFORMகளையும் கொண்டுள்ளது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தாங்கள் வரையறுத்த தங்களுடைய நிதியின் இலக்கை எட்ட வேண்டும் என்ற விதி கிடையாது. தாங்கள் தங்களுடைய நிதியின் இலக்கை எட்டாமலேயே நிதியைப் பெற இயலும் ஆனால் அதற்கு சில விதிமுறைகள் மட்டும் உள்ளது.

இது அனைத்து விதமான FUNDRAISING PLATFORM விஷயங்களையும் உள்ளடக்கி இருப்பதால் அனைவரும் பயன்படுத்த ஏற்றதாகும். INDIEGOGO வலைத்தலமானது இரண்டு விதமான நிதி திரட்டல்களுக்கு உதவுகிறது அவையாவன FIXED FUNDING & FLEXIBLE FUNDING ஆகும். FIXED FUNDINGல் நாம் நிதியை ஒரு தரப்பிலிருந்து மட்டுமே பெறுகிறோம் FLEXIBLE FUNDINGல் நாம் நிதியை பல தரப்பிலிருந்து பெறுகிறோம்.

PATREON:

PATREON என்பது ஒரு Subscription Modelயை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இங்கே கொடையாளிகள் தொடர்ந்து நன்கொடை அளிக்கிறார்கள்.

ROCKETHUB:

நீங்கள் தானாக தொழில் தொடங்குபவராக இருந்தால் இந்த ROCKETHUB என்ற வலைத்தலம் உங்களுக்கு நிதி திரட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வலைத்தலத்தில் ELEQUITY FUNDING ROOM எனப்படும் ஒரு அறை உள்ளது அங்கே தாங்கள் உங்கள் ENTERPRENEURSHIP கருத்தை கூறலாம் மேலும் அது பார்க்கும் கொடையாளிகளின் கவனத்தை ஈர்க்கலாம். ROCKETHUB ஆனது கீழ்க்கண்ட துறையில் (art, business, science and social)  தொழில் முனைவோர்களுக்கு அதிக பயனுள்ளதாக உள்ளது.

GOGETFUNDING:

GOGETFUNDING எனப்படும் இந்த வலைத்தளமானது 2011ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது இருப்பினும் மக்களுக்கு இதைப் பற்றி பெருமளவில் அறியாமல் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு உதாரணமாக FUND RAISING PROJECTல் சில வசதிகளை விரும்புவோர்க்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. மேலும் இது பயனர் தங்கள் நிர்ணயித்த இலக்கை அடைந்தாலும் அடையாவிட்டாலும் இது நிதியின் இலக்கை கூட்டவோ குறைக்கவோ அனுமதிக்கிறது. இதன் முக்கிய குறை என்னவென்றால் இது அனைவரிடமும் வரியை 7 சதவீதம் வரை வசூலிக்கிறது.

ULULE:

ULULE எனப்படும் இந்த வலைத்தலத்தைப் பற்றி தாங்கள் கேட்டதுண்டா? அதற்கு காரணம் அது அமைந்திருக்கும் இடமே ஆகும். இந்த வலைத்தலம் ஐரோப்பாவின் முதல் நிதி திரட்டும் வலைத்தலம் ஆகும். இது தானாக தொழில் முனைவோருக்கு மற்றும் புதிய கருத்துகளை ஆலோசிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கே நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் தங்களுடைய நிர்ணயிக்கப்பட்ட நிதியின் இலக்கை அடையவில்லை என்றால் தங்களால் பணத்தைப் பெற இயலாது. தாங்கள் இங்கே நிதியை EURO நாணயத்தைத் தவிர மற்ற நாணயத்தின் மூலமாக நிதியைத் திரட்டினால் அதற்கு இங்கே வரியிடப்படுகிறது.

CIRCLEUP:

இது முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தொழில் அதிபர்களுக்கு நிதியைத் திரட்டுவதற்கு சிறந்த வாய்ப்பளிக்கிறது. எந்த நிறுவனம் நிதியை சுமார் ஒரு பில்லியன் அளவிற்கு மேல் ஈட்டுகிறார்களோ அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் இந்த வலைத்தலத்தின் முகப்பில் பட்டியலிடப்படுகிறது.

CROWDFUNDING IN TAMIL
GET MONEY FROM CROWDFUNDING DIFFERENT PLATFORMS
Share the knowledge