TECHNOLOGY EMPOWERS IN TAMIL – இணையதள வலைப்பக்கங்கள் மூலம் நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள்

TECHNOLOGY EMPOWERS IN TAMIL – இணையதள வலைப்பக்கங்கள் மூலம் நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள்

TECHNOLOGY EMPOWERS IN TAMIL:

நாம் அனைவருக்கும் மனதில் உதிக்கும் ஒரு மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் இணையதளத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார்களே அது உண்மையா? அவ்வாறாக உண்மையாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் பலரும் குழம்பி உள்ளனர்.

TECHNOLOGY EMPOWERS IN TAMIL
www.tamilogy.com

மேலும் சிலரோ ஆன்லைன் கபடர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அதாவது தாங்கள் பலவலையான இம்மாதிரியான வேலைவாய்ப்புச் செய்திகளை கேட்டிறிப்பீர்கள் உதாரணமாக ONLINE CAPTCA PASTING WORK, ONLINE TYPING WORK, ONINE VIDEO WATCHING WORK போன்ற பலவகையான வேலைவாய்ப்புகளை கேட்டிறிப்பீர்கள் அதைத்தவிர தாங்கள் இந்த மேற்சொன்ன வேலைகளில் பணிபுரிய தங்களிடம் ஒரு முன்பணம் பெற்றுக்கொள்வார்கள். பின்பு அதைத் திருப்பித்தருவதாக கூறுவார்கள் இவர்கள் அனைவருமே நம்பத்தகுந்த நிறுவனங்கள் கிடையாது ஆகையால் நண்பர்களே தயவு செய்து இவர்களின் வலையில் சிக்கிவிடாதீர்கள்.

அப்படியெனில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறுகிறார்களே அது எப்படி என்ற சந்தேகம் மனதில் பலமாக எழுகிறது. யாரை நம்புவது என்ன செய்வது பணம் சம்பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியவில்லை என்று எண்ணுகிறீர்களா கீழ்கண்டு தொடர்ந்து படியுங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா இல்லையா? இதற்கான பதில் ஆம் முடியும் ஆனால் அது அவ்வளவு எளிது கிடையாது மிகவும் கடினமும் கிடையாது. தங்களிடம் யாராவது வந்து COPY PASTE WORK முறையில் தாங்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று கூறினால் தயவுசெய்து அதை நம்பாதீர்கள் மேலும் முன்பணமும் கொடுக்காதீர்கள். இணையத்தில் பணம் சம்பாதிக்கும் நேர்மையான வழிமுறைகளை நான் கீழே கொடுத்துள்ளேன்.

TECHNOLOGY EMPOWERS IN TAMIL:

ஆன்லைன் ஜாம்பவான்கள் என்று கூறப்படுகின்ற GOOGLE, YOUTUBE, FACEBOOK, GOOGLE PLAY STORE மேலும் இதைத் தவிர மற்ற சில நேர்மையான வலைத்தளங்கள் மூலமும் தாங்கள் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு தேவையானது சிறிது பொறுமையும் கொஞ்சம் கால அவகாசமும் வேண்டும்.வெற்றியடைய தங்களுக்கு வேண்டியது முயற்சி, திறமை, பொறுமை போன்றவையாகும்.

கூகிள்:

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை அள்ளி வழங்கும் கூகிள் நிறுவனம் மேலும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நிறுவனமாகும். கூகிளின் மூலம் நாம் கீழ்க்கண்ட முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.

  1. கூகிள் ஆட்சென்ஸ்
  2. கூகிள் ஆட்மொப்

கூகிள் ஆட்சென்ஸ்:

இந்த  கூகிள் ஆட்சென்ஸ் எனப்படுவது கூகிளின் மூலமாக பணம் சம்பாதிக்கும் முறைகளில் உலகத்திலேயே மிக நம்பத்தகுந்த முக்கியமான முறையாகக் கருதப்படுகிறது.

GOOGLE ADSENSE FOR WEBSITE/BLOG:

தங்களுக்கு WEBSITE எனப்படும் வலைத்தளப் பக்கங்களை உருவாக்குவதில் சிறந்த புலமை இருந்தால் இதோ ஆன்லைன் சம்பாத்யம் உங்கள் கையில் ஆம் தாங்கள் ஏதாவது ஒரு வலைத்தளமோ அல்லது ப்ளாகோ உருவாக்கி அதில் பயனுள்ள விவரங்களை மற்றும் கட்டுரைகளை எழுதுவதால் தங்களின் வலைத்தளம் பிரபலம் அடையும் மேலும் தங்களுடைய வலைத்தளம் GENUINE ஆக இருக்கும் பட்சத்தில் தாங்கள் எளிதாக கூகிள் ஆட்சென்ஸ் விண்ணப்பிக்க இயலும்.

ஆட்சென்ஸ்ல் தாங்கள் விண்ணப்பித்த பிறகு கூகிள் தங்களுடைய வலைத்தளப்பக்கத்தை நன்கு ஆராயும். கூகிள் நிறுவனம் பல விதமான விதிமுறைகளைக் கொண்டுள்ளது அவைகளின் அடிப்படையிலேயே அது ஒரு நபரின் வலைத்தளத்திற்கு ஆட்சென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும்.

ஆகையால் ஒரு நபரானவர் அனைத்து விதமான விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றினால் அவருக்கு ஆட்சென்ஸ் பெறுவது என்பது மிகவும் எளிமையான காரியமாகும். ஆனால் அதற்கு முன்பு நாம் அந்த விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அப்பொழுது தான் நாம் கூகிள் ஆட்சென்ஸைப் பெற மிக எளிமையாக இருக்கும்.

ஆட்சென்ஸைப் பெற வழிமுறைகள்:

  • முதலில் தங்கள் வலைத்தளமானது நேர்மையானதாக இருக்க வேண்டும் அதாவது அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் தங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • தாங்கள் வலைத்தளப்பக்கத்தில் தங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தொடப்பு கொள்வதற்கு வழங்கியிருக்க வேண்டும்.
  • தங்களின் வலைத்தளப்பக்கமானது கண்டிப்பாக CONTACT PAGE மற்றும் ABOUT PAGEயை கொண்டிருக்க வேண்டும்.
  • தங்களுடைய வலைத்தளப்பக்கமானது ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் இடுகைகள் அதாவது POSTS இடப்பட்டிருக்க வேண்டும்.
  • தாங்கள் மற்ற வலைத்தளத்திலிருந்து எந்த விதமான கட்டுரைகளையோ அல்லது வேறு தகவல்களையோ பிரதி எடுத்து தங்களின் வலைத்தளத்தில் இடுதல் கூடாது.
  • முக்கியமாக தங்களின் வலைத்தளத்தில் எந்த ஒரு ஆபாசப் படமோ அல்லது ஆபாசக் கதைகளோ எந்த வித ஆபாச வீடியோவும் இடப்பெற்றிக்க கூடவே கூடாது.

குறிப்பு:தங்களுக்கு ஒரு வினா கண்டிப்பாக மனதில் எழக்கூடும் அதாவது ஆபாச வலைத்தளங்களுக்கு பிறகு எப்படி விளம்பரம் காட்டப்படுகிறது என்று அதாவது ஆபாசப் படங்களுக்கான ஆட்சென்ஸ் என்றே ஒரு தனி உலகம் உண்டு. அதன் கீழ் அவர்கள் ஆட்சென்ஸைப் பெறுவார்கள்.

தொடர் கண்காணிப்பு:

தங்களுக்கு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் அப்பாடா நமக்கு கிடைத்து விட்டதென்று தாங்கள் தங்கள் இஷ்டத்திற்கு வேறு எந்த ஆபாச தகவல்களையோ அல்லது வேறு சில தகவல்களை பிரதி எடுத்து தங்களின் வலைத்தளத்தில் இட்டால் அப்பொழுதும் உடனே தங்களின் வலைத்தளத்திற்கு வழங்கப்படும் ஆட்சென்ஸ் எனப்படும் சேவை நிறுத்தி வைக்கப்படும். ஆகையால் தாங்கள் தங்களின் வலைத்தளத்தில் நம்பகத்தன்மையையும் மற்றும் நேர்மையையும் இந்த சமூகத்திற்கு காட்ட வேண்டியது அவசியமாகும்.

HOW IT IS WORKING:

உலகிலுள்ள பல்வேறு வகையான நிறுவனங்கள் கூகிள் மூலமாக தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை மற்ற வலைத்தளத்தில் காட்டுகின்றன. அதாவது ஒவ்வொரு நிறுவனமும் நம்பகமான TRAFFIC அதிகமாக இருக்கும் வலைத்தளத்தளத்தில் தங்களின் விளம்பரங்களை காட்ட விரும்புகின்றன.

DON’T DO ANY FRAUD ACTIVITES:

தாங்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தங்களின் வலைத்தளத்திற்கு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் தாங்களே தங்கள் வலைத்தளப் பக்கத்தில் தெரியும் விளம்பரத்தை கிளிக் செய்யக் கூடாது. ஏனெனில் கூகிள் எளிமையாக தங்களை கண்டுபிடித்து விடும். அதன் காரணத்தை தாங்கள் அறிய வேண்டுமானால் தங்களின் வலைத்தளத்திற்கு வரும் ஒவ்வொரு நபரும் எவ்வாறு தேடி அங்கு வந்தடைகிறார்கள் என்பதை கூகிள் நன்கு அறியும். மேலும் ஒவ்வொரு நபரும் அங்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் தங்களின் வலைத்தளத்திற்கு எவ்வளவு TRAFFIC உள்ளது போன்ற அனைத்து தகவல்களையும் கூகிள் நிறுவனம் கொண்டுள்ளது. ஆகையால் நேர்மை மற்றும் பொறுமை மிக முக்கியம்.

WHAT IS TRAFFIC:

TRAFFIC என்பது தங்களின் வலைத்தளத்தில் மொத்தம் எத்தனை இடுகைகள் POSTS உள்ளது. மக்கள் எவ்வாறு அதைப் பின்தொடர்ந்து தங்களின் வலைத்தளத்திற்கு வருகிறார்கள் என்பதே TRAFFIC ஆகும். ஒரு வலைத்தளத்தின் TRAFFIC அதிகமாக இருந்தால் அந்த வலைத்தளம் வெற்றியடைந்து விட்டது என்று கூறலாம் இல்லையேல் அதற்கு வெற்றி கிட்டவில்லை என்று கூறலாம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் தாங்கள் எத்தனை இடுகைகள் POSTS இடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல எத்தனை சிறப்பான இடுகைகள் POSTS இடுகிறீர்கள் என்பது தான் முக்கியம் நண்பர்களே.

ஆட்சென்ஸ்மொப் விளக்கம்:

ஆட்சென்ஸ்மொப் என்பது மொபைலிற்கு வழங்கப்படும் ஆட்சென்ஸ் பற்றியதாகும். நாம் முன்பு வலைத்தளத்திற்கு எவ்வாறு விளம்பரத்தைப் பெறுவது என்று விளக்கமாக பார்த்தோம் அதைப் போலவே இது மொபைலுக்கானதாகும். சரி இதை எவ்வாறு பெறுவது? அதற்கு முதலில் தாங்கள் MOBILE APP எனப்படும் மொபைல் செயலிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

MOBILE APP என்பது மொபைலுக்காக உருவாக்கப்படுவதாகும் இது ஆண்ட்ராய்டு எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே செயல்படும். எப்பொழுதெல்லாம் ஒரு பயனர் இந்த ஆண்ட்ராய்டு செயலியை திறந்து விளம்பரத்தைப் பார்க்கிறார்களோ அப்பொழுது அதன் மூலம் தாங்கள் வருமானம் ஈட்டுவீர்கள்.

யூட்டியூப் விளக்கம்:

பணம் சம்பாதிக்கும் மற்றொரு வழிமுறை இந்த யூட்யூப் ஆகும். இங்கே தாங்கள் காணொளியை பதிவேற்ற முடியும். பலவகையான யூட்யூப் சேனல்கள் உள்ளன. ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு செயலைச் செய்கின்றன. ஆகையால் தங்களுக்கு விருப்பமான ஒரு சேனலைத் தேர்ந்தெடுங்கள் அதில் சிறந்து விளங்குங்கள்.

இங்கே தங்களின் யூட்யூப் சேனல் MONETIZATION பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. தங்களுடைய சேனல் 1000 SUBSCRIBERS பெற்றிருக்க வேண்டும் மேலும் 4000 மணிநேரப் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

HOW TO UPLOAD:

மேற்சொன்ன வலைத்தளம் அல்லது மொபைல் செயலி இரண்டையும் நாம் கிளவுட் எனப்படும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

வலைத்தளத்தை நாம் கிளவுட் ஏற்றுவதற்கு பலவிதமான HOSTING WEBSITES உள்ளன. அங்கே தாங்கள் பதிவேற்றலாம். அதைப்போலவே மொபைல் செயலியை தாங்கள் கூகிள் PLAY STOREல் பதிவேற்றலாம்.

யூட்யூப் வீடியோ அனைத்தையும் தாங்கள் யூட்யூப் ப்ளாட்பார்மில் பதிவேற்ற வேண்டும் இது முழுக்க இலவசமாகும்.

Share the knowledge