IOB IN TAMIL | INTERNET OF BEHAVIOUR

IOB IN TAMIL | INTERNET OF BEHAVIOUR:

IOT எனப்படும் INTERNET OF THINGS தொழில்நுட்பத்தை துல்லியமாக வரையறுப்பது கடினமானதாகும். யதார்தத்தில் எந்தவொரு இயற்பியல் பொருளும் IOTன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, எப்பொழுதென்றால் அது இணையத்துடன் தொடர்பு கொள்ள கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தகவல்களை பரிமாறிக் கொள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பொழுது.

IOB IN TAMIL

இங்கே WEBCAMER முதல் SMART APPLIANCE வரை தாங்கள் SMARTPHONE பயன்பாட்டின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்தும் IOTன் சாதனமாகும் தற்காலத்தில் SELF DRIVING CAR மற்றும் AEROPLANES கூட IOTன் சானங்களாக மாறி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக பெரிய ஜெட் மற்றும் கப்பல்களில் பொருத்தப்பட்ட ACTUATORS & SENSORSகள் திறமையாக செயல்படுகின்றன.

IOTல் பல விதமான எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கம்யூட்டர் நெட்வொர்கில் தங்களின் பிரத்யேகமான IP ADDRESS மூலமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்டிருக்கின்றன. இவ்வாறாக இணைந்து இருக்கும் எலக்ட்ரானிக் சாதங்களில் இருந்து பல விதமான தரவுகள் IOT தொழில்நுட்பத்தின் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.

இந்த தரவுகள் அனைத்தும் மதிப்பு வாய்ந்த தகவல்களை கொடுக்கிறது அதாவது இது ஒரு பயனரின் முக்கியமான தகவல்களை USER INTEREST, USER BEHAVIOUR, USER PREFERENCE போன்ற அனைத்தையும் தருகிறது. இந்த மதிப்பு வாய்ந்த தகவல்களையே நாம் IOB என்கிறோம். இவ்வாறாக IOTல் ஒரு பயனரைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவர் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளை வழங்குவதே INTERNET OF BEHAVIOUR ஆகும்.

IOB IN TAMIL – BEHAVIOURAL PSYCHOLOGY:

IOB ல் பயனரின் தகவல் அவரவர்களுடைய BEHAVIOURAL PSYCHOLOGY உளவியல் முறையிலான நடத்தையின் அடிப்படையில் ஆராயப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இது ஒரு புதிய அணுகுமுறையை நிறுவனத்திற்கு பரிந்துரை செய்கிறது. அதன் மூலமாக நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருள்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்று அறிந்து கொள்ள முடிகிறது. இது மூன்று விதமான தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து செயல்படுகிறது.

  • BEHAVIOURAL SCIENCE
  • EDGE ANALYTICS
  • INTERNET OF THINGS

IOB ஆனது ஒரு தகவலை சேகரித்து ஒருங்கிணைத்து பின்னர் அதை ஆராய்ச்சி செய்கிறது, இவ்வாறாக சேகரிக்கப்படும் தகவலானது பலவகையான மூலங்களில் இருந்து வருகிறது. அதாவது கையில் அணியக்கூடிய SMART WATCH வீட்டில் உபயோகப்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகள் மேலும் ஒரு நபரின் இணைய செயல்பாடுகளைப் பொருத்து இந்த தகவலானது திறட்டப்படுகிறது.

இவ்வாறாக சேகரிக்கப்பட்ட தகவலானது பின்னர் MARKETING DEPARTMENTற்கு அனுப்பபட்டு எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் எந்த மாதிரி பொருள்களை வாங்க விருப்பமாக இருக்கிறார்கள் என்று அறிய உதவுகிறது.

IOB IN TAMIL – NETWORK NODE

IOTன் முக்கியமான வேலை என்னவென்றால் IOTன் NETWORK NODEகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மிகப் பெரிய தரவுகளை சந்தைப்படுத்துபவர்களுக்கு அதாவது MARKETERSக்கு புரிய வைத்து அதன் மூலமாக வருவாய் ஈட்டுவதாகும்.

IOB எனப்படும் இந்த தொழில்நுட்பமானது கீழ்கண்ட துறைகளில் முக்கி பங்காற்றுகிறது.

  • E-COMMERCE
  • HEALTH CARE
  • CUSTOMER EXPERIENCE MANAGEMENT
  • SEARCH ENGINE OPTIMIZATION
  • IOB USE CASE:

வாகனங்களில் DESIRED BRAKE மற்றும் ACCELERATION PATTERN பற்றி தொடர்ந்து புதுமைகளை தெரிவிக்கும் ஓட்டுநர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் சலுகைகளை வழங்குதல்.

ஒரு SUPER MARKETல் தாங்கள் வர்த்தகம் செய்யும் மளிகைப் பொருட்களை ஆராய்ச்சி செய்து அது தொடர்பான செய்திகளை உங்களுக்கு எதிர்காலத்தில் பரிந்துரை செய்தல்.

தற்பொழுது நடப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களில் விற்பனை மையங்களின் விவரங்களை சேகரித்து அதில் USER REVIEW RATINGSன் அடிப்படையில் உங்களுக்கு பரிந்துரை செய்கிறது.

இது FITNESS தொடர்பான உபகரனங்களில் இணைந்து செயலாற்றி அவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதை தெரிவிக்கிறது. இவ்வாறாக ஒரு தனி நபரின் உடல் ஆரோக்யத்தின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கிறது.

Share the knowledge