ஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து உருவாக்கிய புதிய செயலி COVID-19 tracing tool கொரோனாவை கண்டறிய பயன்படுகிறது

ஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து உருவாக்கிய புதிய செயலி COVID-19 tracing tool கொரோனாவை கண்டறிய பயன்படுகிறது

ஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து புதியதாக Decentralized contact tracing tool என்ற ஒரு கருவியை கண்டறந்திருக்கிறார்கள். இதன் மூலம் யாரவது COVID-19 வைரஸ் மூலம் தாக்கப்பட்டுள்ளார்களா என்று அறிய முடியும். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இந்த வைரஸின் பரவலை கண்டறிந்து அதனால் பாதிப்படைத்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். மேலும் இந்த செயலி வைரசால் தாக்கப்பட்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவர்களையும் சேர்த்து அடையாளம் காண்கிறது.

இந்த செயலியின் முதல் நிலையாவது API என்றழைக்கப்படுகிறது அதாவது பொதுநல சுகாதார அமைப்புகள் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது நிலையானது பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பவரை Android மற்றும் IOS மூலம் OTPயை பயன்படுத்தி கண்டறிவதாகும். இந்த செயலியானது உள்பொதிக்கப்பட்ட ரேடியோவை கொண்டுள்ளது இது ஒரு விதமான ANONYMOUS ID என்று சொல்லப்படும் கண்ணுக்கு தெரியாத சமிக்கைகளை BLUETOOTHன் உதவியால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அனுப்ப பயன்படுகிறது. இந்த செயலி ஆனது தனது தரவில் பயனாளரது 14 நாட்களுக்கான செயல்பாடுகளை சேமித்து வைத்திருக்கும். ஏதேனும் அறிகுறி இருந்தால் அதை மற்ற அருகிலுள்ள கருவிகளுக்கும் அனுப்பி இதே அறிகுறி மற்றவர்களுக்கு இருக்கிறதா என்று பார்க்கும். ஒருவேளை நீங்கள் தொடர்பிலிருந்த மற்ற மூன்றாம் நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தால் அதை உடனே உங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும்.

ஒருவேளை நீங்கள் தொடர்பு கொண்ட மற்ற நபருக்கு கொரோனா தொற்று இருந்தால் அதை உங்களுக்கு தெரியப்படுத்தி உங்களை தனிமைப்படுத்தும்படி செயலி அறிவுறுத்தும். இதைப்போலவே சந்தையில் பல செயலிகள் செயல்பட்டு வந்த போதிலும் நமது MITன் BLUETOOTH யை பயன்படுத்தி மக்களின் தொடர்பை தடமறியலாம் என்ற ஒரு கருத்துதான் APPLE நிறுவனத்துக்கு இந்த செயலியை கட்டமைக்க அடித்தளமிட்டது. இதன் மூலமாக பயனாளரது தகவல்கள் திருடு போகாமல் இருக்க கூகிள் இதற்கு DATA PRIVACY PROTECTION அளிக்கிறது.

இது எவ்வாறு இயங்குகிறது:-

1.இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் அருகருகில் 10 நிமிடங்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

2.இந்த இரு நபர்களின் மொபைலில் உள்ள செயலி மூலம் ரகசிய IDஆனது ஒன்றுக்கொன்று பரிமாற்றப்படுகிறது.

3.பிறகு சிறிது நாளில் ஒரு நபருக்கு கொரோன அறிகுறி இருப்பது மருத்துவரால் உறுதியாகிறது அது உடனே அவரது செயலியிலுள்ள ID மூலமாக மற்றவருக்கு அவருடன் கடைசி 14 நாட்கள் தொடர்பிலிருந்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படுகிறது.

4.இதன் மூலமாக அந்த பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5.பிறகு செயலியானது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதையும் அறிவுறுத்துகிறது.

மற்ற நாடுகள்:

சிங்கப்பூர் நாடும் இதைபோன்றே ஒரு MoHFW செயலியை கொரோன தொற்றை கண்டறிய பயன்படுத்துகிறது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் கொரோனா வைரஸை கண்டறிய பயன்படுத்துகிறார்கள்.

Share the knowledge