COGNITIVE COMPUTING IN TAMIL – மனிதனின் மூளையை போன்றே தன்னிச்சையாக இயங்கி முடிவெடுக்கும் COGNITIVE COMPUTING
இது Artificial Intelligence மற்றும் Signal Processing இந்த இரண்டு அறிவியலின் கலவையாகும். இந்த Cognitive Computing மூலமாக நாம் Machine Learning, Reasoning, Natural Language Processing, Speech recognition, Object recognition, Human Computer Interaction போன்ற பல துறைகளில் சிறப்பாக செயலாற்ற முடியும். இதன் மூலமாக நாம் புதியதாக ஒரு வன்பொருளை கட்டமைக்க முடியும். இதன் மூலமாக நாம் மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த மென்பொருள்களை வடிவமைக்க முடியும்.
இந்த கோக்னிடிவ் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மனிதனின் முடிவெடுக்கும் செயல்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. கோக்னிடிவ் கம்ப்யூட்டிங் ஆனது கோக்னிஷன் என்ற சொல்லில் இருந்து வந்தது இந்த கோக்னிஷன் ஆனது CONTEXT + REASONING இரண்டும் சேர்த்து உருவானதாகும்.
Cognitive Systemகள் மனிதனுடைய செயல்பாடுகளை பிரதிபலிக்கிறது அது கணக்கிடப்பட்ட நிகழ்தகவின் அடிப்படையில் தகவல்களை ஆராய்ச்சி செய்கிறது. கீழ்கண்டவைகளை Cognitive Systemsகள் சிறப்பாக புரிந்து கொள்கின்றன Subtleties, Idiosyncrasies, Idioms, Nuances of the Human Language. மேலும் மனிதனை போலவே தகவல் செயல்பாடுகளில் துல்லியமாகவும் சில சமயங்களில் மனிதரை விட துல்லியமாகவும் செயல்படுகிறது.
Cognitive Computing = Best of Human + Best of Computer
Cognitive Computing என்பது மனிதனும் கணினியும் இணைந்த கூட்டணியே மிகசிறந்த கூட்டணியாகும். உதாரணமாக சிறந்த Chess Player யாரென்றால் மனிதனும் கணினியும் இணைந்த கூட்டணியாகும். Cognitive computing மனிதனின் மூளை வேலை செய்வதை போன்று செயல்படுவதால் இந்த தொழில்நுட்பம் மூலமாக மனிதனின் உதவி இல்லாமலையே ஒரு பிரச்னையை தீர்க்க பயன்படுகிறது. தற்பொழுது Assistant மற்றும் Virtual advisor ஆக செயல்படும் சாதனங்கள் அனைத்தும் Cognitive computing கீழ் வருகிறது.
Example:- Siri, Google Assistant, Cortana, Alexa
FEATURES:-
1. ADAPTIVE
2. INTERACTIVE
3. ITERATIVE & STATEFUL
4. CONTEXTUAL
ADAPTIVE:-
ஒரு தகவல் மாற்றமடையும் போது ஒரு இலக்கு மாறும் போது அதை கண்டறிகிறது. இது தன்னை Real Time’ற்கு ஏற்றார் போல் Update செய்து கொண்டே இருக்க வேண்டும்.
INTERACTIVE:-
மூளை பல நரம்புகளோடு தொடர்பு கொண்டுள்ளதை போன்றே இந்த Cognitive computing ம் பல சாதனங்களோடு தொடர்பு கொள்கிறது. இது இருவழிகளிலும் தொடர்பு கொள்கிறது மனிதர்களின் உள்ளீடு மற்றும் சாதனத்தோடு தொடர்பு கொள்கிறது. Ex:- mitsuku
ITERATIVE & STATEFUL:-
இது ஒரு பிரச்சனைக்கு கேள்வி எழுப்பி அதற்கு தீர்வு கண்டுபுடிக்க பயன்படுகிறது.
CONTEXTUAL:-
இவைகள் Contextual Elementsஐ புரிந்து அவைகளை அடையாளம் காண வேண்டும். Context Elements களாவன Syntax, time, location, appropriate domain, regulations, user profile, process, task, goal etc.