WORLD’S FIRST 5G SERVICE | TECHNOLOGY ARTICLE IN TAMIL
WORLD’S FIRST 5G SERVICE:
2019 ம் ஆண்டில் உலகில் முதன் முறையாக 5G அலைக்கற்றையை நாடு முழுவதும் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது தென் கொரியா. இந்த நாடு தங்கள் தொழில்நுட்ப சந்தையை மேம்படுத்தி பல விதமான வாடிக்கையாளர்களை பெற பல விதமான பில்லியன்களை செலவளித்திருக்கிறது. SK TELECOM நிறுவனத்தின் சில விளையாட்டு வீராங்கனைகளுக்கு மற்றும் ஒலிம்பிக்கின் தங்க பதக்க வீரர்கள், பாப் நட்சத்திரங்கள் ஆகியோர்களுக்கு முதல் 5G சேவை வழங்கி பயனாளர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் 27மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள அந்த நாட்டில் ஓர் ஆண்டிற்குள் 1 மில்லியன் பயனாளர்கள் இந்த சேவை மூலம் பயன் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை ஏற்பட காரணகர்த்தாவாக இருந்தது தொழில்நுட்ப சாம்ராட் என்றழைக்கப்படும் சாம்சங் நிறுவனமேயாகும்.
கைபேசி இணையத்தின் அடுத்த நிலையாக கருதப்படும் அதிக வேகம் மற்றும் அதிக பேண்ட்வித்தை இந்த 5G அலைக்கற்றை அளிக்கிறது. இது மேலும் பல துறைகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது உதாரணமாக கணினியில் Online Gamingல் Streamingஐ அதிகரிக்க மற்றும் தானியங்கி வாகனங்களிலும், IOT துறையிலும், ரிமோட்டை பயன்படுத்தி விர்சுவாலாக செயலாற்றும் எல்லா துறைகளிலும் இதன் தேவை அதிகமா காணப்படுகிறது.
மேலும் அலைக்கற்றை தொடர்பாக பலவிதமான குழப்பங்களும் கட்டுக்கதைகளும் நிலவி வருகின்றன அதாவது 5G Infrastructure நிறுவனமான ஹுவாய் மூலமாக சீனா தங்களை உளவு பார்க்க துணை போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி ஹுவாய் நிறுவனமானது இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது.
கடந்த வருடம் 2019 ஏப்ரல் மாதம் 3ம் தேதி இந்த அலைக்கற்றை சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி 2020 ஏப்ரல் மாதத்தையொட்டி தென்கொரியா வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த வெற்றியானது தொழில்நுட்ப உலகில் ஒரு செயற்கரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தொழில்நுட்ப ஜாம்பவான்களான அமெரிக்கா மற்றும் சீனாவை விட தென்கொரியா ஒருபடி முன்னிலையில் உள்ளது.
தென் கொரியா அமெரிக்காவை சில மணிநேரங்களில் தோற்கடித்து அதிவேக 5G மொபைல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய முதல் நாடாக மாறியது. இது பயனர்களின் முழு திரைப்படங்களையும் உடனடியாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. மூன்று தென் கொரிய நிறுவனங்களான – SK Telecom, KT மற்றும் LGUplus புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு 5G சேவைகளை அறிமுகப்படுத்தியது.
“ஏப்ரல் 3, 2019 இரவு 11 மணி நிலவரப்படி, கொரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பிரபலங்களுக்கு 5G சேவையை செயல்படுத்தியுள்ளதாக SK டெலிகாம் அறிவித்துள்ளது” என்று நாட்டின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டர் வியாழக்கிழமை ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய சேவை நிறுவனமான வெரிசோன் உலகின் முதல் 5ஜி சேவை வழங்கிய நாடு என்ற பெருமையை பெற முன்கூட்டியே திட்டமிட்டதால் அதை உடைக்க தென்கொரியாவின் S.K.TELECOM நிறுவனம் சில மணி நேரங்களுக்கு முன்பே இந்த 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலமாக பலவிதமான நன்மைகள் உள்ளன பயனர்கள் தங்களின் திரைப்படங்களை இணையத்தில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தின் வருகையால் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எனப்படும் தொழில்நுட்பம் மிக வேகமாக செயல்படுத்தப்படும். இந்த 5ஜி தொழில்நுட்பம் ஐஓடியின் முதுகெலும்பாக உள்ளது. மேலும் தானியங்கி ஊர்த்திகள் தொழில்நுட்பத்திற்கும் 5ஜி சேவையின் தேவை முக்கியமாக உள்ளது.