RPA IN TAMIL – ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன்

RPA IN TAMIL – ROBOTIC PROCESS AUTOMATION இவன் தானியங்கியின் தலைவன் கலியுகத்தின் இறைவன் எந்திரன்

RPA IN TAMIL:

நமது அன்றாட வாழ்வில் இந்த ROBOTIC PROCESS AUTOMATION(RPA) இன்றியமையாத பல பணிகளைச் செய்கிறது.

RPA IN TAMIL
ROBOTICS PROCESS AUTOMATION IN TAMIL

உதாரணமாக A என்னும் ஒரு நபர் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு நாளில் பல விதமான INVOICES, MONITORY TRANSACTIONS, LIABILITIES, CHECKS போன்றவற்றை அவர் கையாளவேண்டியுள்ளது. இதில் அவர் செய்யும் முக்கியமான பணி என்னவென்றால் மேற்கண்ட INVOICEகளில் இருந்து அவர் தகவல்களை EXCEL SHEETல் சேமிக்க வேண்டியுள்ளது. அவர் கீழ்கண்ட தகவல்களை INVOICESகளிலிருந்து சேமிக்கிறார்.

  1. NAME OF THE COMPANY
  2. INVOICE ID
  3. DATE OF PROCESSING

மேற்கண்ட தகவல்களோடு மற்ற சில நிதி விவரங்களையும் இணைத்து அவர் தனது மேலதிகாரிக்கு அறிக்கையை அனுப்பி வைக்கிறார். இவ்வாறாக இந்த வேலையானது நாள்தோறும் தொடர்கிறது மேலும் இந்த வேலையானது நேரத்தை அதிகமெடுப்பதுடன் திரும்ப திரும்ப நடைபெறும் ஒரு செயலாகவும் உள்ளது.

மேற்கண்ட செயல்கள் அனைத்தும் ஊழியர் இல்லாமலேயே தானாகவே ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செம்மையாக நடைபெற்றால்? ஆம் அது சாத்தியமே ROBOTIC PROCESS AUTOMATION எனப்படும் ஒரு தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் மேற்கண்ட செயல்கள் அனைத்தையும் தானியங்கி முறையில் நேர்த்தியாக செயல்படுத்த முடியும்.

இதன் மூலமாக ரோபோக்கள் நிறுவனத்துக்கு வரும் அனைத்து விதமான INVOICEகளையும் திரட்டி அதனுடன் கூடவே நிதி அறிக்கைகளையும் இணைத்து நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் தனது மேலதிகாரிக்கு எலக்ரானிக் மெயில்(E-MAIL) அனுப்புகிறது.

RPA IN TAMIL HISTORY:

ROBOTIC PROCESS AUTOMATION என்பது ARTIFICIAL INTELLIGENCE மற்றும் MACHINE LEARNING இவை இரண்டும் இணைந்து திரும்ப திரும்ப மனிதர்கள் செய்யும் செயல்களை தானியங்கி முறையில் எளிமைப்படுத்த பயன்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.

இவைகள் தானியங்கி முறையில் கீழ்க்கண்ட செயல்களை எளிமையாக்கப் பயன்படுகிறது.

  1. ADDRESSING QUERIES
  2. MATHEMATICAL CALCULATIONS
  3. MAINTANENCE OF RECORDS
  4. PERFORMING TRANSACTIONS

RPA தவறான புரிதல்கள்:

இது மனிதனைப் போன்று உள்ள ஒரு ரோபோ கிடையாது. மேலும் இது மனிதனுக்கு மாற்றும் கிடையாது.

இது மனிதனுக்கு மாற்றாகவோ அல்லது மனிதன் செய்யும் செயல்களுக்கு மாற்றானதோ இல்லை ஏனெனில் ரோபோவிற்கு மூளை கிடையாததால் அதனால் CRITICAL THINKING மற்றும் LOGICAL THINKING போன்றவற்றை செய்ய இயலாது.

FOUR PHASES OF RPA:

1. PLANNING PHASE

2. DEVELOPMENT PHASE

3. DEPLOYMENT & TESTING PHASE

4. SUPPORT AND MAINTANENCE PHASE

  • PLANNING PHASE

இது ஒவ்வொரு செயல்களையும் தானாகவே தானியங்கி முறையில் இயங்குகிறதா என்று பார்ப்பது இதனுடைய வேலையாகும். மேலும் TEST OBJECTS மற்றும் அதனுடைய IMPLEMENTATIONS METHOD போன்றவற்றையும் இந்த நிலையில் நிகழ்த்துகிறது.

  • DEVELOPMENT PHASE

இது தானியங்கி செயல்கள் அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்கிறது.

  • DEPLOYMENT & TESTING PHASE

இங்கே எந்தவொரு பிரச்சனையும் சிக்கலும் தானியங்கி செயல்களில் ஏற்படுகிறதா என்று மேற்பார்வையிடுகிறது.

  • SUPPORT AND MAINTANENCE PHASE

சிரியாக தானியங்கி முறையில் இயங்கும் செயல்கள் அனைத்தும் தொடர்ச்சியாக பயனர்களுக்கு UPDATE செய்யப்படுகிறது.

RPA TOOLS:

RPA TOOLS அனைத்தும் தானியங்கி செயல்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தவும் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் பயன்படுகிறது. RPA TOOLS என்பது தானியங்கி செயல்களுக்கு துணைபுரியும் சில மென்பொருள்களேயாகும்.

EXAMPLES OF RPA TOOLS:

  1. UIPATH SOFTWARE TOOL
  2. AUTOMATION ANYWHERE SOFTWARE TOOL
  3. BLUEPRISM SOFTWARE TOOL
  4. WORKFUSION SOFTWARE TOOL
  5. PEGA SOFTWARE TOOL
  6. REDWOOD SOFTWARE TOOL

RPA தரத்தைப் பற்றி பேசும் பொழுது இது பிழையில்லாத பொருட்களை தானியங்கி முறையில் சிறப்பாக உற்பத்தி செய்கிறது. மேலும் இது OPERATION RISKS அனைத்தையும் குறைக்கிறது. இதனால் இந்த RPA TOOL பயன்படுத்தும் பயனர்களுக்கு முழு மனநிறைவு ஏற்படுகிறது. மேலும் பொருட்களை கொண்டு சேர்க்கும் DELIVERY SERVICE போன்றவற்றிலும் RPA TOOLS சிறப்பாக செயல்பட்டு DELIVERY TIMING DELAY போன்றவற்றை குறைக்கிறது. மேலும் இது 24/7 முழு நேரமும் சிறப்பாக தானியங்கி முறையில் செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு முழு மனநிறைவு ஏற்படுகிறது.

EXAMPLES:-

இந்த RPA TOOLSகளைப் பயன்படுத்தி NASCOM என்ற நிறுவனமானது 65% அதன் தேவையற்ற வீண் செலவினங்களைக் குறைத்துள்ளது. மேலும் இது TRAINING EMPLOYEE, EASY SOFTWARE MIGRATION, IT RESOURCES போன்றவற்றையும் சிறப்பாக தானியங்கி முறையில் செய்கிறது.

RPA IN INDUSTRIES:

ரோபோ தானியங்கி முறை(RPA) என்னும் தொழில்நுட்பமானது தற்காலத்தில் பல துறைகளில் பயன்படுகிறது. அதில் கீழ்க்கண்ட துறைகளில் அதன் பங்கு அதிகளவில் உள்ளது. RPA தொழில்நுட்பமானது 2016ம் ஆண்டிலிருந்து சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் 2020ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய நோயால் மனித உழைப்பு குறைந்துள்ள நிலையில் இந்த RPA தொழில்நுட்பத்தின் தாக்கம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. மிகவும் புகழ் பெற்ற அறிஞரான MCKINSEY என்பவருடைய கருத்துப்படி RPA தொழில்நுட்பமானது 2025ம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தில் சுமார் 7 TRILLION DOLLAR அளவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.

RPA USE IN INDUSTRIES EXAMPLES:

  1. BANKING AND FINANCE
  2. IT INTEGRATION PROCESS
  3. HUMAN RESOURCES
  4. INSURANCE AGENCIES
  5. MARKETING AND SALES
  6. CUSTOMER RELATIONSHIP MANAGEMENT

போக்குவரத்தில் RPA:

 நாம் தினந்தோறும் செய்யும் வேலைகள் அனைத்தும் ROBOTICS PROCESS AUTOMATIONயை பயன்படுத்தி மிக நேர்த்தியாக செய்ய இயலும்.

ROBOTICSன் வளர்ச்சி நமது அன்றாட வாழ்க்கை முறையை ஒரு வழிகளில் இல்லாமல் பல வழிகளில் மாற்றியமைத்துள்ளது.

ARTIFICIAL INTELLIGENCE மற்றும் ROBOTICS இவை இரண்டின் வளர்ச்சி சமூகத்திலிருந்து நமது வீடு வரை ஒவ்வொரு நிலையிலும் வேறூன்றியுள்ளது.

இதற்கு போக்குவரத்து மட்டும் விதிவிலக்கல்ல. போக்குவரத்திலும் இந்த ARTIFICIAL INTELLIGENCE மற்றும் ROBOTICS அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒரு விஷயத்தை திட்டமிட்டு நடத்துவது என்பது மனிதர்களுக்கு சற்று சிக்கலான மற்றும் நேரத்தை எடுக்கும் காரியமாகும். ஆகையால் ROBOTIC PROCESS AUTOMATION மூலமாக நாம் விமானநிலையம், போக்குவரத்து அமைப்புகள், சொகுசு உணவகங்கள் போன்ற அனைத்திலும் சிறப்பாக செயலாற்ற முடியும். இவ்வாறாக கூறினால் NELFAIR WEBSITEயை பயன்படுத்தி போக்குவரத்து துறையில் எளிமையான வளர்ச்சியும் மற்றும் பல வித புணரமைப்புகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரையை சுத்தம் செய்யும் பணிகளிலும், பயணிகளை அடர்ந்த குகைகளுக்கும், மலைகளுக்கும் நடுவில் ரயிலில் ஏற்றிச் செல்லவும் மேலும் விமான நிலையங்களிலும் ROBOTIC PROCESS AUTOMATIONன் தேவை அதிகளவில் பயன்படுகிறது. JOSIE PEPPER, TROIKA, AND ROBIRD போன்ற ரோபோக்கள் விமான நிலையங்களில் தானாகவே சிறப்பாக AUTOMATIONயை முனிச், சியோல், கனடா போன்ற நாடுகளில் செய்து வருகின்றன. இந்த வகையான ரோபோக்கள் சிறப்பான செயல்களை செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் பயணிகளை வரவேற்பதற்கும், விமானத்தைப் பற்றி கூறுவதற்கும், வானிலை அறிக்கை வெளியிடுவதற்கும் மேலும் பறவைகள் விமானங்களோடு விபத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் பயன்படுகிறது.

SITAன் LEO எனப்படும் ரோபோ மற்றொரு வகையான ஒரு ரோபோ ஆகும். இது விமான நிலையங்களில் பரபரப்பான சூழ்நிலையில் பயனர்களின் LUGGAGEகளை சரியாக எடுப்பதற்கு உதவுகிறது. அதைத்தவிர ரோபோக்கள் விமானநிலையங்களில் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுகிறது. மினட்டா சான் ஜோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் PIPER, AMELIA, AND NORMA போன்ற ரோபோக்கள் பொழுதுபோக்கிற்காகப் (play music, dance, and click pictures)  பயன்படுகிறது. குறிப்பாக ரோபோக்கள் அனைத்தும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தொழிலாளராகப் ஆயுதங்களை சோதிக்கவும் கண்டறியவும் (TO SCAN WEAPONS & DETECT WEAPONS) பயன்படுகிறது. நியூயார்க் நகரத்தின் LAGUARDIA விமான நிலையத்திலுள்ள KNIGHTSCOPE’S ROBOTS ஒரு சிறந்த பாதுகாப்பு ரோபோ ஆகும்.

விமான நிலையங்களைத் தவிர அனைத்து விதமான உயர்ரக சொகுசு உணவகங்களும் தற்பொழுது RPA தொழில்நுட்பம் வாடிக்கையாளர் சேவையை ROBOTS & ARTIFICIAL INTELLIGENCE மூலமாக சிறப்பாக அளித்து வருகிறது. உணவுவிடுதிகள் அனைத்தும் ரோபோவை RECEPTIONISTS, BELLBOYS, CLEANING STAFF போன்ற பணிகளில் ஈடுபடுத்துகிறது. இவ்வாறாக RPA தொழில்நுட்பத்தின் பணியானது மிகவும் முக்கியமாக பல துறைகளிலும் இன்றியமையாததாக உள்ளது.

Share the knowledge