KOTLIN IN TAMIL – ஆண்ட்ராய்ட் உலகத்தை ஆளப்போகிறான் கோட்லின் இனி வரும்காலம் கோட்லின் காலம்

KOTLIN IN TAMIL – ஆண்ட்ராய்ட் உலகத்தை ஆளப்போகிறான் கோட்லின் இனி வரும்காலம் கோட்லின் காலம்

KOTLIN IN TAMIL:

நாம் இந்தப் பதிவில் ஒரு புதிய பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி மொழி பற்றி அறிய உள்ளோம். அந்த மொழியின் பெயர் கோட்லின் ஆகும். இந்த மொழி தற்பொழு மொபைலில் இருக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்கப் பயன்படுகிறது. முன்பு நாம் ஜாவா எனப்படும் கணினி மொழியை பயன்படுத்தினோம் தற்பொழுது கூகுள் நிறுவனமானது 2017ம் ஆண்டு மே மாதத்தில் இந்த கோட்லின் கணினி மொழிக்கு முழு ஆதரவு அளித்ததன் மூலம் இனி வரவிருக்கும் ஆன்ட்ராய்ட் அப்களை கோட்லின் மொழி ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KOTLIN IN TAMIL

தற்பொழுது ஆண்ட்ராய்டு உலகை இரு விதமான கணினி மொழிகள் ஆட்சி செய்கிறது அவையாவன ஜாவா மற்றும் கோட்லின் ஆகும். என்னைப் பொருத்த வரையில் நான் தங்களுக்கு ஒரு மொழி பரிந்துரைக்க வேண்டுமானால் கோட்லின் என்று சொல்வேன். ஏனெனில் கோட்லின் என்பது ஒரு MODERN OBJECT ORIENTED LANGUAGE ஆகும். ஏற்கனவே பிரபலமான OBJECT ORIENTED PROGRAMMING வரிசையில் அதவாது PYTHON, SWIFT வரிசையில் இந்த KOTLIN மொழியும் உள்ளது.

இந்த கோட்லின் மொழியில் நாம் ஜாவாவில் பயன்படுத்தும் அனைத்து வசதிகளையும் இதில் பயன்படுத்த முடியும். மேலும் இது ஜாவாவைப் போலவே பல விதமான OS PLATFORMகளுக்கு ஆதரவளிக்கிறது. JVMல் காணப்படும் முக்கிய வசதிகளான PLATFORM INDEPENDENT, SECURITY, ROBUST போன்ற அனைத்துமே இங்கேயும் காணப்படுகிறது. ஜாவாவில் காணப்படும் அனைத்து வசதிகளைத் தவிரவும் சில சிறப்பம்சங்களையும் இந்த கோட்லின் மொழி கொண்டுள்ளது.

கோட்லின் மொழியில் நாம் ஜாவாவின் இறுதியில் SEMICOLON வைப்பதைப் போல இங்கே எந்தவித SEMICOLON வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாவாவில் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு விதமான பிழையாவது NULL POINTER EXCEPTION ஆனால் இங்கே கோட்லினில் அந்த பிழையானது ஏற்படுவது கிடையாது.

இதையெல்லாம் தாண்டிய ஒரு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் கோட்லின் மொழியை COMPUTER DESKTOPல் இயக்கலாம் அதைத்தவிர இம்மொழியை BROWSER எனப்படும் உலவியிலும் இயக்கலாம். அதாவது இம்மொழியானது JVM எனப்படும் VIRTUAL MACHINEல் செயல்படும் மேலும் JAVASCRIPTஆகவும் செயல்படும்.

மேற்கூறிய சிறப்பம்சங்களையெல்லாம் வைத்துப் பார்க்கையில் எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான செயலிகளும் கோட்லினைப் பயன்படுத்தி செயல்படும் என்று கருதப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜாவா புரோகிராமர்களுக்கு கோட்லின் புரோகிராமர்களாக மாறுவதற்கு தினசரி ஒரு மூன்று மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை செலவழித்தால் போதுமானது.

எவ்வாறு கோட்லினை இயக்குவது:

நாம் இந்த கோட்லின் கணினி மொழியை இயக்குவதற்கு IntelliJ IDEA எனப்படும் ஒரு மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் ஆனது ஒரு IDE வகையைச் சார்ந்ததாகும். IDE எனப்படுவது ஒரு INTEGRATED DEVELOPMENT ENVIRONMENT ஆகும். இந்த மென்பொருளில் இரண்டு விதமான பதிப்புகள் உள்ளன அவையாவன 1. ULTIMATE 2. COMMUNITY எனப்படும் இரண்டு வகைகள் ஆகும்.

இதில் COMMUNITY வகையைச் சார்ந்த மென்பொருளானது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான இலவச மென்பொருளாகும். ஆனால் ULTIMATE வகையைச் சார்ந்த மென்பொருளானது மிகப்பெரிய புரோகிராமர்கள் கமர்ஷியல் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது. COMMUNITY SOFTWARE மூலம் நாம் JVM மற்றும் ANDROID DEVELOPMENT போன்றவற்றை செய்ய முடியும். ஆனால் ULTIMATE மென்பொருள் மூலம் நாம் WEBSITE மற்றும் ENTERPRISE DEVELOPMENT என்ற இரண்டையும் செய்ய முடியும். மேலும் கோட்லின் சம்பந்தப்பட்ட FEATURES பற்றி அறிய தாங்கள் GITHUB.COM என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

LIST OF FETURES OF KOTLIN:

  • மற்ற கணினி மொழியைப் போல(C,C++,JAVA) இந்த மொழியில் வரியின் இறுதியில் எந்தவிதமான SEMICOLONகளும் வரியின் இறுதியில் தேவையில்லை.
  • இது ஒரு NULL-SAFE புரோகிராமிங் மொழியாகும்.
  • இது 100% ஜாவா கணினி மொழிக்கு ஒத்துப்போகக் கூடியது.
  • இதற்கு எந்தவிதமான PRIMITIVESகளும் கிடையாது.
  • இதற்கு RUNTIME EXCEPTIONS மட்டுமே உண்டு அதைத்தவிர எந்தவிதமான CHECKED EXCEPTIONSகளும் கிடையாது.
  • KOTLIN மொழியில் உள்ள CLASSகளுக்கு PROPERTIES மட்டுமே உண்டு FIELDSகள் இங்கே கிடையாது.
  • KOTLIN மொழியில் NEW எனப்படும் KEYWORD கிடையாது.
  • KOTLINல் மற்ற OBJECT ORIENTED LANGUAGES போலவே CONSTRUCTOR பயன்படுத்தி OBJECT உருவாக்கப்படுகிறது.
  • KOTLIN மொழியானது OPERATOR OVERLOADINGக்கு ஆதரவு அளிக்கிறது.
  • KOTLIN மொழி JAVASCRIPTக்கு நன்கு ஆதரவளிக்கிறது.
  • KOTLIN மொழி MUTABLE மற்றும் IMMUTABLE COLLECTIONSகளை நன்கு வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • KOTLIN மொழி CO-ROUTINESகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • அனைத்திற்கும் மேலாக தற்பொழுது ANDROID COMMUNITYன் OFFICIAL LANGUAGE ஆக இந்த KOTLIN விழுங்குகிறது.
Share the knowledge