KALI LINUX IN TAMIL | இதோ வந்துவிட்டது தீர்வு காலி லினக்ஸில் WIFI-DRIVER நிறுவுவது எப்படி

KALI LINUX IN TAMIL | இதோ வந்துவிட்டது தீர்வு காலி லினக்ஸில் WIFI-DRIVER நிறுவுவது எப்படி

KALI LINUX IN TAMIL:

இந்த பதிவில் தாங்கள் காலி லினக்ஸில் ஒரு முக்கியமான பதிவைப் பற்றிப் பார்க்க போகிறீர்கள் நண்பர்களே ஆம். காலி லினக்ஸ் பயன்படுத்தும் பெரும்பாலோருக்கு WIFI DRIVER சரியாக இயங்காமல் இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்தப் பதிவில் நாம் காலி லினக்ஸ் என்றால் என்ன அதில் WIFI DRIVER எவ்வாறு நிறுவுவது மற்றும் என்னென்ன முறைகளில் நாம் காலி லினக்ஸின் WIFI DRIVERகளை நிறுவலாம் போன்றவற்றை பார்க்கலாம்.

KALI LINUX IN TAMIL INTRODUCTION:

காலி லினக்ஸ் என்பது DEBIAN OPERATING SYSTEMஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு வகையான OPERATING SYSTEM ஆகும். இதன் மூலம் நாம் சோதனைகளையும்(TESTING) ஆராய்ச்சிகளையும்(RESEARCH) தெளிவாக செய்ய இயலும்.

KALI LINUX IN TAMIL
SOLVE KALI LINUX WIFI PROBLEM

KALI LINUX ஆனது பலவகையான நுாற்றுக்கும் மேற்பட்ட TESTING TOOLகளைக் கொண்டுள்ளது. இவைகள் அனைத்தும் WEB TESTING மற்றும் ETHICAL HACKING போன்றவற்றை செயலாற்றவும் பயன்படுகிறது.

WHAT IS WIRELESS DRIVERS?

WIRELESS DRIVER என்பது கணினியில் நிறுவப்படும் ஒரு வகையான மென்பொருள் ஆகும். இது தங்களின் கணினியை இணையத்துடன் இணைக்கப் பயன்படுகிறது. இந்த WIRELESS DRIVER PROBLEM ஆனது பெரும்பாலும் சம்பந்தப்பட் குறிப்பிட்ட DRIVER தொலைந்து போவதாலும் மற்றும் நாட்கள் மீறிப்போவதாலும் மேலும் DRIVER கெட்டுப்போவதாலும் ஏற்படுகிறது.

வலைத்தளத்திலிருந்து டிரைவரை நிறுவுதல்:

தாங்கள் மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை போன்ற காலி லினக்ஸில் எந்தவொரு மென்பொருளையும் அவ்வளவு எளிதாக நிறுவுதல் இயலாது. இதை நாம் நமது சிஸ்டத்தை அப்டேட் செய்வதன் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

STEP1: தங்களது காலி லினக்ஸை இணையத்தோடு இணைக்கவும்.

STEP2: பிறகு CTRL+ALT+T போன்ற SHORTCUT அழுத்தி TERMINALஐ கணினியில் திறக்கவும்.

STEP3: ஒரு குறிப்பிட்ட கட்டளை மூலமாக அதவாது “nano/etc/apt/sources.list” மூலம் நாம் sources.list கோப்பைத் திறக்கவும்.

STEP4: பிறகு கீழே காணப்படும் இந்த இரண்டு வரிகளை source.list கோப்பில் இறுதியாகச் சேர்க்கவும்.

STEP 5: பிறகு CTRL+X அழுத்தி வெளியே வரவும்.

STEP 6: பிறகு கீழ்க்கண்ட கட்டளை மூலம் தாங்கள் காலி லினக்ஸை டெர்மினலில் அப்டேட் செய்யவும்.

sudo apt update && apt dist-upgrade

இதன் மூலம் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான மென்பொருள் மற்றும் டிரைவர்கள், கோப்புகள் போன்ற அனைத்தும் அப்டேட் செய்யப்படும்.

STEP 7: பிறகு இறுதியாக TERMINALல் கீழ்க்கண்ட கட்டளையை இடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான டிரைவர்கள் அனைத்தும் முழுமை பெறுகின்றன.

sudo apt install firmware-linux

STEP 8: பிறகு REBOOT செய்யவும்.

METHOD 2: FIX WIRELESS DRIVERS PROBLEM IN KALI LINUX

STEP 1: காலி லினக்ஸிற்கு தேவையான WIFI DRIVERஐ தாங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும்.

STEP 2: பிறகு தாங்கள் தரவிறக்கம் செய்த FILEஐ TERMINALல் திறக்க வேண்டும்.

STEP 3: பிறகு கீழ்க்கண்ட கட்டளையை அடிக்க வேண்டும்.

tar –jxvf filename

STEP 4: பிறகு கீழ்க்கண்ட கட்டளையை அடிக்க வேண்டும்.

cd compat-*

STEP 5: பிறகு கீழ்க்கண்ட கட்டளையை அடிக்க வேண்டும் ‘make unload’ மற்றும் ‘make load’

தாங்கள் மேற்கண்ட அனைத்து விதமான நிலைகளையும் முடித்த பிறகு Wireless Adapter தானாகவே இயங்கத் தொடங்கும்.   

Share the knowledge