எதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு-TAMIL ARTICLE

எதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு.

அனைத்து விதமான செயல்களும் தற்காலத்தில் ஆன்லைனில் நடந்து வருகின்றன. இதில் பலவிதமான துறைகள் உள்ளன ஆன்லைன் ரயில்வே ரிசர்வேஷன், ஆன்லைன் வணிகம், ஆன்லைன் உணவகம் இந்த வரிசையில் இனி எதிர்காலக் கல்வியில் கோலோச்சப் போகும் ஆன்லைன் கல்வி இனி முக்கியதுவம் பெறப்போகிறது. ஏற்கனவே ஆன்லைன் கல்வி இணையத்தில் செயற்பட்டு வந்தாலும் 2020ம் ஆண்டு ஊரடங்கு காரணமாக இதன் தேவை அதிகமாக உள்ளது. அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. 

ஆன்லைன் கல்வியில் எந்தெந்த வலைத்தளங்கள் உள்ளன அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம். கீழ்கண்ட இணையதளங்கள் ஆன்லைன் கல்வியில் அதிக சிறப்பாக கட்டணமின்றி செயல்படுகின்றன.

  • ZOOM
  • GOOGLE MEET
  • NEARPOD
  • EDMODO
  • GOOGLE CLASSROOM
  • QUIZIZZ
  • KAHOOT

ZOOM:

ZOOM என்பது பிரபலமான மேகக்கணிமம் சார்ந்த காணொலி செயலி (CLOUD BASED VIDEO CONFERENCING) ஆகும். இதன் முக்கிய நோக்கமானது நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மற்றவர்களுடன் காணொலி மாநாடு நடத்துவதற்கு பயன்படுகிறது.  இதனுடைய ஆரம்ப வெளியீடானது(Basic Version) அனைவருக்கும் இலவசம் ஆகும். இது அணைத்து விதமான அடிப்படை வசதிகளையும் Basic Planதிட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. ZOOM செயலியானது கீழ்கண்ட அதனுடைய எளிமையான செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  

  • VIDEO TELEPHONY
  • ONLINE CHAT SERVICE
  • TELECONFERENCING
  • TELECOMMUTING
  • DISTANCE EDUCATION
  • SOCIAL RELATIONSHIPS

ZOOMல் நாம் 40 நிமிடம் தொடர்ச்சியான குறுகிய காணொளி மாநாட்டை நடத்த முடியும். இந்த ZOOMல் கட்டணம் செலுத்தும் முறையும் உள்ளது மாதத்திற்கு 1134 ₹ நாம் செலுத்த வேண்டியிருக்கும்  இதன் மூலம் மேலும் சில வசதிகளை  வாடிக்கையாளர்கள்  பெற முடியும். ZOOM ல் நீங்கள் ஒரு காணொளி மாநாட்டில் பங்கு பெற விரும்பினால் அதற்கு நீங்கள் செயலியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ZOOM செயலியை நிறுவி இருந்தாலே போதுமானது.

 ZOOMல் தங்கள் முகத்தை காட்ட விரும்பினாலும் காட்டலாம் அல்லது விரும்பாவிட்டாலும் மறைக்கலாம் அது உங்கள் விருப்பம். ZOOMல் குறுகிய காணொளி மாநாட்டை குறைந்தபட்சம் 100 பேர் கொண்ட நபர்களுடன் நடத்தலாம்.  ZOOMல் சில பாதுகாப்பு குறைபாடு இருந்தாலும் நாம் கல்வி சம்பந்தப்பட்ட சொற்பொழிவு வகுப்புகள் எடுப்பதில் எதுவும் சிக்கல் இல்லை.

GOOGLE MEET:

GOOGLE MEET என்பது ஆன்லைன் காணொளி மாநாடு நடத்தும் மற்றொரு செயலி ஆகும்.இது GOOGLE நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. GOOGLE MEETல் நாம் பாதுகாப்பாக ஆன்லைன் காணொளி மாநாட்டை 250பேர் வரை நடத்த முடியும். Google Meet ஆனது Gmail மற்றும் GOOGLE CALENDAR போன்ற செயலிகளுடன் இணைந்துள்ளது. நம்மளுடைய அட்டவணைப்படுத்தப்பட்ட மாநாடு GOOGLE CALENDARல் காட்டப்படும் நம்முடைய காணொளி மாநாட்டில் பங்குபெற விரும்புபவர்களுக்கு நாம் GMAIL மூலமாக GOOGLE MEET LINK அனுப்பலாம். இதில் நாம் காணொளி மாநாடு மற்றும் ஒலி மாநாடு போன்றவற்றின் மூலமாக மாநாடு நடத்தலாம்.

GOOGLE MEET மற்றும் ZOOM ஆகிய இரண்டு செயலியும் ஒன்றுக்கொன்று போட்டியாளராக உள்ள நிலையில் GOOGLE நிறுவனத்தின் நம்பகத்தன்மை காரணமாக ஏராளமானோர் அதைப் பின்பற்றுகின்றனர்.

NEARPOD:

NEARPOD என்பது மற்றொரு சிறந்த ONLINE EDUCATION PLATFORM ஆகும். இது மேற்சொன்ன மற்ற இரண்டு செயலிகளைப் போல் இல்லாமல் பலவித சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இது மூன்று விதமான பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

  • ADD CONTENT
  • ADD WEBCONTENT
  • ADD ACTIVITY

இந்த ADD CONTENT எனப்படுவது முக்கியமான பிரிவு ஆகும் இதன்கீழ் பல விதமான துணைப் பிரிவுகள் உள்ளன அதை நாம் பயன்படுத்தி மிகச் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பு எடுக்க முடியும். இதன் கீழே PPT, AUDIO, VIDEO போன்ற அனைத்தும் காணப்படுகின்றன.  

ADD WEBCONTENT மூலமாக நாம் ஒரு வலைத்தலத்தினுடைய URL ஐ உங்களின் மாணவர்களுக்கு பரிந்துரை செய்யலாம். உதாரணமாக தாங்கள் YOUTUBEல் ஒரு கல்வி சம்பந்தப்பட்ட காணொளியைக் காண்கிறீர்கள் அதை தாங்கள் உங்கள் மாணவர்களுக்கு பரிந்துரை செய்யலாம்.

ADD ACTIVITYன் கீழ் நாம் பல விதமான செயல்களைச் செய்யலாம் இதன் கீழே நாம் மாணவர்களுக்கு WORKSHEET, DRAWING,  போன்ற பல விதமானதைச் செய்ய இயலும்.

இங்கே ஆசிரியர்கள் தங்கள் குறிப்பு மற்றும் பாடங்களை கொடுத்த பிறகு அந்த குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரு CODE உருவாக்கப்படும். அந்த CODEஐ அவர்கள் மாணவர்களுக்கு கொடுத்தால் பாடங்கள் அனைத்தும் அவர்களைச் சென்று சேர்ந்துவிடும். இங்கே ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனி CODEகள் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

EDMODO:

இது ஒரு மற்றொரு செயலி ஆகும். இது ஒரு ONLINE CLASSROOM போன்றதாகும். இதை நாம் GOOGLE CLASSROOMற்கு ஒப்பாகக் கூறலாம். இதன் மூலமாக நாம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு அது சம்பந்தப்பட்ட குறிப்புகள், வீட்டுப்பாடம் போன்றவற்றை சிறப்பாக வழங்க இயலும். ஆசிரியர்கள் தாங்கள் எத்தனை வகுப்புகள் எடுக்கிறார்களோ அத்தனை வகுப்பறைகளை அவர்கள் இங்கு உருவாக்கலாம். உதாரணமாக அவர்கள் 5,6,7 போன்ற வகுப்புகள் எடுக்கிறார்கள் என்றால் அத்தனை வகுப்புகளுக்கும் அவர்கள் ஆன்லைன் வகுப்பறைகளை உருவாக்க முடியும். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர்கள் தங்கள் குறிப்பு மற்றும் பாடங்களை கொடுத்த பிறகு அவர்களுக்கென்று ஒரு CODE உருவாக்கப்படும். அந்த CODEஐ அவர்கள் மாணவர்களுக்கு கொடுத்தால் பாடங்கள் அனைத்தும் அவர்களைச் சென்று சேர்ந்துவிடும். இதைப்பற்றிப் பேசுகையில் GOOGLE CLASSROOM மற்றும் EDMODO ஆகிய இரண்டும் ஒரே மாதிரி இருந்த போதிலும் EDMODOவில் அதிகவசதி உள்ளது குறிப்பாக இது பெற்றோர்களும் இடமளிக்கிறது அதன்மூலமாக பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் எவ்வாறு நடக்கிறது என்று அறிய முடியும்.

GOOGLE CLASSROOM:

இந்த GOOGLE CLASSROOM என்பது மேற்சொன்ன EDMODOவைப் போன்றே செயல்படுவதாகும். அதைப்போன்றே இதுவும் ஒரு VIRTUAL CLASSROOM ஆகும். இதிலும் ஆசிரியர்கள் பாடங்களை பதிவேற்றிய பிறகு ஒரு CODE உருவாகும் அந்த CODEஐ மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலமாக அவர்கள் அனைத்து பாடங்களையும் அவர்கள் பெற இயலும்.

QUIZIZZ:

QUIZIZZ என்பது ஒரு அருமையான வேடிக்கையான கேள்வி பதில் சார்ந்த செயலியாகும். இந்த QUIZIZZ மூலமாக நாம் சிறு வகுப்பு குழந்தைகளுக் அவர்களுக்கு பிடித்தமான கேள்வி பதில் விளையாட்டுகளை உருவாக்க முடியும். மேலும் இதில் MEMES கள் இடம்பெறுவது சிறப்பம்சம். மாணவர்கள் சரியான பதில் கொடுத்தால் அவர்களுக்கு நல்ல பாராட்டுகள் சம்பந்தப்பட்ட MEMES களும் தவறாக பதில் கொடுத்தால் அதற்கேற்றாற் போலும் MEMES காட்டப்படும்.

KAHOOT:

இந்த செயலியும் மேற்சொன் போலே செயல்படுவதாகும். ஆனால் இங்கே அடிக்கடி விளம்பரம் போன்றவற்றின் தலையீடு மேலும் முதன்மைச் சந்தாதாரர்கான விளம்பரம் போன்றவை குறுக்கிடுவது பயனர்களை இந்த செயலியைப் பயன்படுத்துவதில் நாட்டமிழக்க வைக்கிறது. மற்றபடி முதன்மைச் சந்தாதார் ஆகிவிட்டால் பல வித வசதிகள் காணப்படுகிறது.

Share the knowledge