DEADLY VIRUS IN TAMIL | ஒரிஜினலாவே நான் வில்லன்மா

DEADLY VIRUS IN TAMIL | ஒரிஜினலாவே நான் வில்லன்மா

DEADLY VIRUS IN TAMIL | VIRUSES:-

கணினி வைரஸ் என்பது ஒரு வகையான கணினி மொழியால் எழுதப்படும் கோடிங் ஆகும். இது கணினியில் செயல்படும் போது இது பல வடிவங்களை எடுக்கிறது. தன்னை தானே பிரதி எடுக்கிறது கணினி ஆவணங்கள் போல உருமாற்றம் அடைகிறது. மேலும் இது தன்னுடைய கோடிங்யை பயன்படுத்தி மற்றவரின் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கணினி வைரஸானது எப்பொழுது கணினியின் நினைவகத்திற்கு வருகிறதோ அப்பொழுது அது இயக்கப்படுகிறது. மனித வைரஸ்களான எய்ட்ஸ், காலரா போன்றவை தானாக பரவாது அது உடலினுள் பரவ மனித செல் தேவைப்படுவதைப் போல கணினி வைரஸும் பரவ மென்பொருள் செயலிகள் தேவைப்படுகின்றன. இது ஒரு மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது எப்பொழுது பயனர் அந்த மென்பொருளை இயக்குகிறாரோ அப்பொழுது அந்த வைரஸ் இயங்கி கணினிக்கு ஆபத்தை உண்டு பண்ணுகிறது.

DEADLY VIRUS IN TAMIL

DEADLY VIRUS IN TAMIL | HISTORY:-

கணினி வைரஸ்(Computer Virus) என்ற வார்த்தையானது முதன் முதலில் Leonard M. Adleman என்பரால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலில் 1970ம் ஆண்டு CREEPER என்ற வைரஸானது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரவியது. க்ரீப்பர் வைரஸானது ARPANET இணையத்தில் TENAX ஒப்பரேட்டிங் சிஸ்டம் மூலமாக பரவியது. இந்த வைரஸானது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரவியது ஆனால் ஒரே நேரத்தில் பல கணினிக்கு பரவாது அப்படி ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரவுவதற்கு முன்னர் இது ஒரு குறுஞ்செய்தியை “I’M THE CREEPER : CATCH ME IF YOU CAN!” அனுப்பிவிட்டு மற்ற கணினிக்கு பரவுகிறது.

CREEPER வைரஸின் காலத்தை ஒட்டியே BRAIN என்ற வைரஸும் பரவியது மேலும் சிலர் கூறுகிறார்கள் உலகின் முதல் வைரஸ் என்ற பட்டமானது CREEPERக்கு கொடுக்காமல் அது BRAIN என்ற வைரஸிற்கு தான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஏனென்றால் CREEPER வைரசால் ஒரே நேரத்தில் பல கணினிக்கு பரவ முடியாது ஆனால் BRAIN வைரசால் ஒரே நேரத்தில் பல கணினிக்கு பரவ முடியும்.

1988 ம் ஆண்டு வெளியான மோரிஸ்(Morris) என்ற வைரஸானது மீடியா மற்றும் இணையத்தை குறிவைத்து தாக்கியது இது இணையத்திற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் இதை வைரஸ் பட்டியலில் யாரும் சேர்க்கவில்லை அதற்கு காரணம் இது முதலில் வைரஸ் அல்ல அதாவது வேறு ஒரு சோதனை முயற்சி மாறி Coding தவறான முடிவை கொடுத்து வைரஸாக மாறிவிட்டது.1990 ம் ஆண்டு இணையம் உலகில் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலம் அப்பொழுது CD, FLOPPY மற்றும் E-MAIL மூலமாக வைரஸ் பரவ தொடங்கியது.

DEADLY VIRUS IN TAMIL | TYPES OF DEADLY VIRUS:-

MELISSA VIRUS:-

மார்ச் 26ம் தேதி 1999 ம் ஆண்டு உருவான ஒரு வைரஸ் மெலிசா வைரஸ் ஆகும். இந்த வைரஸானது வேகமாக பரவும் மேக்ரோ(macro) வகையை சார்ந்தது. இந்த மெலிசா வைரஸானது E-mail மூலமாக பரவும் தன்மை கொண்டது. நீங்கள் உங்கள் E-Mailயை திறக்கும் பொழுது அது உங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்ட் 1997 & 2000 போன்ற படைப்புகளின் ஆவணங்களை நேரிடையாக தாக்குகிறது. அதை தாக்குவதோடு மட்டும் நில்லாமல் இது மைக்ரோசாப்ட் அவுட்லுக்கை(microsoft outlook) தீவிரமாக பாதிக்கிறது அதோடு உங்கள் E-Mailல் இருக்கும் முதல் 50 தொடர்புகளுக்கு இந்த மெலிசா வைரஸானது தானாகவே வைரஸை எலக்ட்ரானிக் குறுஞ்செய்தியாக அனுப்புகிறது.

ILOVEYOU VIRUS:-

இந்த வைரஸை சில நேரங்களில் Love bug அல்லது Love letter வைரஸ் என்றும் அழைக்கிறார்கள். மெலிசா வைரஸை தொடர்ந்து இந்த ILOVEYOU வைரஸானது பிலிப்பைன்ஸில் காட்டுத்தனமாக பரவியது. 2000 மாம் ஆண்டு மே 5 ம் தேதி இந்த வைரஸானது கிட்டத்தட்ட 10 மில்லியன் மேசை கணிணிகளை தாக்கியுள்ளது. முந்தைய வைரஸான மெலிசா வைரஸானது மேக்ரோ வைரஸ் குடும்பத்தை சார்ந்தது ஆனால் தற்போதைய ஐ லவ் யூ வைரஸானது Worm வகையை சார்ந்தது. Worm வைரஸ் என்பது யாருடைய உதவியும் இல்லாமல் நெட்ஒர்க்கில் தனக்கு தானே பல பிரதிகளை உண்டு பண்ணி நெட்ஒர்க்கில் பல்கிப்பெருக கூடியதாகும். இந்த வைரஸானது விஷுவல் பேசிக் ஸ்கிரிப்ட் என்ற மொழியால் உருவாக்கப்பட்டு .vbs என்ற எஸ்ட்டென்ஷனில் இருக்கும். ஆனால் பயனாளர்கள் இதை ஒரு சாதாரண .txt ஆவணம் என்று நினைத்து இதை திறக்கும் போது பயனாளர்கள் வைரசால் தாக்கப்படுகிறார்கள்.

SQL SLAMMER VIRUS:-

SQL Slammer என்ற வைரஸானது 2003 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளிவந்தது. இந்த வைரஸ் ஒரு Worm வகையை சேர்ந்த வைரசாகும். இந்த வைரஸானது Denial of Service attack மூலமாக பயனாளர்களை தாக்குகிறது. இந்த Denial of Service attack என்பது மற்றவர்களின் உரிமையை பறிப்பதாகும் அல்லது மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சேவையை தடுப்பதாகும். இந்த வைரஸ் இன்டர்நெட்டின் டிராபிக் வேகத்தை குறைக்கிறது மேலும் இந்த வைரஸ் உருவாக்கிய பின்பு முதல் பத்து நிமிடத்திலேயே இந்த வைரசானது 75,000 கணினிகளை தாக்கியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. இந்த வைரஸ்தான் வெளியான சில நிமிடங்களில் 75,000 கணினிகளை தாக்கிய வேகமான வைரசாகும் மேலும் உலகம் முழுக்க சுமார் 2,50,000 கணினிகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தென்கொரிய இணையத்தை முடக்கியது மேலும் அமெரிக்காவில் இது சுமார் 13,000 ATM சேவை மையங்களை இது முடக்கியது.

STORM WORM VIRUS:-

STORM Worm என்ற வைரஸானது 2007 ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த வைரஸானது Backdoor Trojan Horse வகையை சேர்ந்த வைரசாகும். இந்த வைரஸ் கணினியை தாக்கி அதை ஜூம்பி போல மாற்றுகிறது பின்னர் பயனாளரால் இதை கட்டுப்படுத்த முடியாமல் இது கட்டுக்கடங்காமல் பரவி கணினியை தாக்குகிறது.

MEBROOT/TORPIG VIRUS:-

இது ஒரு trojan type malware வகையை சேர்ந்த வைரஸாகும் இது மைக்ரோசாப்ட் ஒப்பரேட்டிங் சிஸ்டம்களை குறிவைத்து தாக்குகிறது. இந்த வைரஸானது தாக்கப்பட்டவரின் தனிப்பட்ட தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளை திருடுகிறது. இவ்வாறாக திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் Remote Method மூலமாக வைரஸை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கிறது.

MALWARE:-

Malware என்பது ஒரு அபாயகரமான மென்பொருள்(Softwares, Tools, Addons, Flash updates) ஆகும். இது கணினி இணையம் அல்லது பயனர் யாரையாவது தாக்கி அழிவை ஏற்படுத்தி சேதத்தை உண்டு பண்ண கூடியவை. மால்வார் என்பது வைரஸ் கிடையாது ஆனால் வைரஸ்(Virus) என்பது ஒரு வகையான மால்வார் ஆகும். சுருக்கமா கூறினால்“all viruses are malware, but not all malware is a virus” இவ்வாறாக கூறலாம்.

TYPES OF MALWARES:-

TROJAN HORSE MALWARE:

இது ஒரு அபாயகரமான மென்பொருள் வகையை சேர்ந்த மால்வார் ஆகும். இது எப்பொழுதும் தன்னை ஒரு நல்ல மென்பொருள்(Software), ஒரு கணினியின் கருவி(Tool) போலையோ அல்லது ஒரு பிளாஷ் டூல்(Flash tool) போலையோ காட்டிக்கொள்ளும். எப்பொழுது பயனாளர் தன்னுடைய கணினியில் அந்த டூல்களை தரவிறக்கம் செய்து நிறுவுகிறாரோ அப்பொழுது இந்த Trojan horse எனப்படும் மால்வார் கணினியில் பதுங்கி இருந்து கணினியை தாக்குகிறது. இந்த மால்வார் ஒரு முறை கணினியில் நுழைந்தவுடன் அது பயனாளரது system information, login, password, bank accound details போன்ற அனைத்தையும் திருடி விடுகிறது.

SPYWARE MALWARE:

இது உங்கள் கணினிகளில் என்ன நடக்கிறது என்று உளவு பார்க்கும் ஒரு விதமான மால்வார் ஆகும். உதாரணமாக நீங்கள் உங்கள் Browserல் என்ன தேடினீர்கள் மேலும் அதனுடைய வரலாறு பின்பு நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் பிறகு மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி போன்றவை அனைத்தையும் இது கண்காணிக்கும். இவ்வாறாக சேகரித்த தகவல்கள் அனைத்தையும் மலவாரை அனுப்பியவருக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும்.

RANSOMWARE MALWARE:

இது ஒரு வகையான மால்வார் ஆகும் இது ஒரு URL Link மூலமாகவோ அல்லது Email Phishing மூலமோ பயனாளர்களை தாக்கும். இது பயனர்களின் கோப்பு, அவர்களின் கணினி போன்றவற்றை பயன்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும். அவர்கள் மீண்டும் அதை பயன்படுத்த வேண்டுமானால் கணிசமாக ஒரு தொகையை பயனாளர்களிடம் இருந்து கோரிக்கை வைக்கும்.

WIPER MALWARE:

இந்த மல்வார்க்கு ஒரே ஒரு இலக்கு தான் இது சம்பந்தப்பட்ட கணினியை தாக்கி அந்த கணினியின் நெட்ஒர்க் மற்றும் அதன் தகவல்களை முற்றிலும் அழிப்பதே ஆகும். இந்த Wiper Malwareல் மிகவும் புகழ் பெற்றது Shamoon என்றழைக்கப்படும் மல்வாராகும் இது சௌதி அரேபியா எண்ணெய் நிறுவனங்களின் தகவல்களை திருடி பின்பு கணினியில் உள்ள எல்லாவற்றையும் அழிக்கிறது. தற்காலத்தில் சில Wiper malwareன் வகைகளாவன Stonedrill & Mamba ஆகும்.

WORM MALWARE:

இது ஒரு வகையான கணினியின் மால்வார் ஆகும். இந்த Worm ஆனது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு எந்தவித உள்ளீடும் இல்லாமல் பரவக்கூடியது.

ADWARE MALWARE:

உலகத்திலுள்ள அனைத்து கிரிமினல்களும் பணம் சம்பாதிப்பதே நோக்கம் அதை இந்த Adware ஆனது சிறப்பாக செய்கிறது. இதனால் தாக்கப்பட்ட கணினியானது பலவிதமான விளம்பரங்களை தொடர்ச்சியாக பயனாளர்களுக்கு காட்டுகிறது. அதன் மூலம் இது பயனாளர்களை வேறு வழியின்றி அந்த விளம்பரங்களை மற்றும் பாப்-அப்களை கிளிக் செய்ய வைக்கிறது.

BOTNET MALWARE:

இது இணையத்தில் இணைந்த சாதனங்கள் அனைத்தையும் தாக்குகிறது. இது இணையத்தில் இணைந்துள்ள கணினி மொபைல் போன் மற்றும் IOT சாதனங்களை தாக்கி தகவல்களை திருடுகிறது.

CRYPTOCURRENCY MINER MALWARE:

இது தற்பொழுது பிரபலமாகி வரும் Cryptocurrency யோடு தொடர்புடையது. இது மற்றவரின் அனுமதி இல்லாமல் அவரது கணினியை பயன்படுத்தி Mining பண்ணுவது ஆகும்.

FILELESS MALWARE:

இது ஒரு வகையான மால்வார் ஆகும். இது Legitimate Softwareகளின் வழியாக உங்கள் கணினியை தாக்கும். Legitimate Software என்பது நாம் நம்பக்கூடிய முறையான மென்பொருள்களாகும்.

Share the knowledge