WEB HOSTING IN TAMIL – நமக்கு வீடு முக்கியம் உங்க DOMAINக்கு HOSTING முக்கியம்

WEB HOSTING IN TAMIL – நமக்கு வீடு முக்கியம் உங்க DOMAINக்கு HOSTING முக்கியம்

WEB HOSTING IN TAMIL:

WEB HOSTING எனப்படுவது ஒரு ONLINE SERVICE ஆகும். அது உங்களுடைய WEB APPLICATION மற்றும் WEBSITEஐ இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் முழுக்க வெளியிட பயன்படுகிறது. தாங்கள் ஒரு WEB HOSTING சேவையில் உள்நுழையும் போது தாங்கள் இயற்கையாகவே சில இடங்களை(அதாவது கிளவுட்களை) தங்களுடைய சர்வரிடம் இருந்து கேட்கத் தொடங்குகிறீர்கள். அதன் மூலமாக தாங்கள் தங்களுக்கு தேவையான கோப்பு மற்றும் தகவல்களை தங்களுடைய சர்வரில் பதிவேற்றம் செய்து வைக்க முடியும்.

WEB HOSTING IN TAMIL
WEB HOSTING IN TAMIL

சர்வர் எனப்படுவது ஒரு வகையான கணினியேயாகும். ஆம், இது ஒரு வகையான PHYSICAL COMPUTER இது அனைவருக்கும் தங்கு தடையின்றி உலகம் முழுக்க யார் எப்பொழுது தங்களுடைய வலைத்தளத்திற்கு வருகை புரிந்தாலும் அது அவர்களுக்கு 24/7 நேரமும் காணக் கிடைக்கிறது. தங்களுடைய WEB HOSTING COMPANY ஆனது தங்களுடைய குறிப்பிட்ட வலைத்தளத்தினுடைய SERVER தடையில்லாமல் இயங்க பெரிதும் பயன்படுகிறது. தங்களுடைய WEB HOSTING நிறுவனமானது தங்களுடைய சர்வரை எந்தவிதமான MALICIOUS ATTACK தாக்காமலும் பாதுகாக்கிறது அதைத்தவிர தங்களுடைய தகவல்களான IMAGES, TEXT, AUDIO, VIDEO போன்றவற்றை நிர்வகிக்கிறது. இந்த தகவல்களான IMAGES, TEXT, AUDIO, VIDEO போன்ற அனைத்தையும் தங்களுடைய HOSTING PROVIDERலிருந்து பயனரின் BROWSER வரைக்கும் எடுத்துக் காட்டுகிறது.

WEB HOSTING IN TAMIL PLANS:

தாங்கள் எப்பொழுது ஒரு புதிய வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அப்பொழுது உங்களுக்கென்று ஒரு சிறந்த WEB HOSTING PROVIDERஐ தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். தங்களுடைய WEB HOSTING ஆனது தங்களின் அனைத்து விதமான கோப்புகள், விவரங்கள் மற்றும் டேட்டாபேஸ் போன்ற அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். யாரேனும் BROWSERல் தங்கள் WEBSITE URLஐ தட்டச்சு செய்தால் HOSTINGல் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து விதமான தகவல்களும் பரிமாற்றம் செய்யப்பட்டு தங்களுடைய வலைத்தளம் BROWSERல் காண்பிக்கப்படும்.

ஆகையால் தாங்கள் தங்களின் வலைத்தளத்திற்கு தேவையான சிறப்பான HOSTING PLANயை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் தாங்கள் வாடகைக்கு குடியிருக்கப் வீடு பார்ப்பீர்களே கிட்டத்தட்ட அதைப்போலவே ஆகும். தாங்கள் மாதந்தோரும் வீட்டிற்கு வாடகை கொடுத்தால் தான் குடியிருக்க முடியும் அதைப்போலவே தாங்கள் தங்களின் SERVER தொடந்து செயல்பட சரியான காலகட்டத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பல விதமான சிக்கல்களைக் குறைக்க ஒவ்வொரு HOSTING PLANம் 30 DAY MONEY BACK என்னும் திட்டத்தைக் கொண்டுள்ளது அதன் மூலமாக பயனர் தங்களுக்கு வசதியான HOSTING WEBSITEயை தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை தங்களுடைய வலைத்தளம் வெற்றிபெற்று அதிக TRAFFIC தங்களுடைய வலைத்தளத்திற்கு ஏற்பட்டால் தாங்கள் தங்களுடைய HOSTING PLANயை அடுத்த கட்டத்திற்கு மாற்ற முடியும்.

உண்மையிலேயே இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் தாங்கள் எந்தவிதமான PROGRAMMING KNOWLEDGE பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. தற்பொழுது பலவிதமான CONTENT MANAGEMENT SYSTEM எனப்படும் மென்பொருள்களான வலைத்தளம் வடிவமைக்க மிகவும் பயன்படுகின்றன.

WEB HOSTING ஆனது HOSTING வழங்குவதைத் தவிர்த்து பலவிதமான செயல்களைச் செய்கிறது.

  • One-click software installs for WordPress or Drupal and much more
  • Automated website backups,
  • Developer tools
  • 24/7 customer support service
  • Email hosting and page builders
  • SSL certificates

WEB HOSTING IN TAMIL TYPES:

பலவிதமான WEB HOSTINGS உள்ளன. தாங்கள் தங்களின் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அது ஒரு வலைத்தளமாகவோ அல்லது ப்ளாக் ஆகவோ இருக்கலாம். சில குறிப்பிட்ட HOSTING வகைகளை இங்கே கொடுத்துள்ளேன்.

  • Shared hosting
  • VPS hosting
  • Cloud hosting
  • WordPress hosting
  • Dedicated hosting

SHARED HOSTING:

ஹோஸ்டிங் வழங்குவோர் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட PLANSகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். இங்கே SHARED HOSTINGSல் மூன்று விதமான திட்டங்கள் காணப்படுகின்றன.

தாங்கள் ஒரு சிறிய SMALL BUSINESS அல்லது PERSONAL BLOGS ஆரம்பிக்க விரும்பினால் இந்த SHARED HOSTING மிகவும் சிறப்பானதாகும். இந்த SHARED HOSTINGல் தாங்கள் ஒரு இடத்தை பல CLIENTS உடன் பங்கிட்டுக் கொள்கிறீர்கள்.

ADVANTAGE:

  • குறைவான விலை
  • எந்தவித கணினி அறிவும் தேவையில்லை
  • முன்பே கட்டமைக்கப்பட்ட அம்சங்கள்
  • எளிமையான CONTROL PANEL
  • எளிமையான நிர்வாகம் மற்றும் வழிநடத்தல்

DISADVANTAGE:

  • SERVER CONFIGURATIONற்கு எவ்வித கட்டுபாடும் இங்கில்லை
  • மற்ற வலைத்தளத்தில் எற்படும TRAFFIC தங்கள் வலைத்தளத்தை பாதிக்கும்.

WEB HOSTING IN TAMIL VPS HOSTING:

தாங்கள் எப்பொழுது ஒரு VIRUTAL PRIVATE SERVERயை பயன்படுத்துகிறீர்களோ அப்பொழுது தாங்கள் தங்களுடைய SERVERயை மற்றவருடன் பங்கிட்டுக் கொள்கிறீர்கள். இங்கே HOSTING நிறுவனமானது தங்களுக்கு தனியான ஒரு சர்வர் இடத்தை வழங்குகிறது. இதனால் தங்கள் வலைத்தளமானது மிகவும் வேகமாக செயல்படும். இந்த வகை வலைத்தளமானது MEDIUM SIZE BUSINESS போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

ADVANTAGE:

  • தனிப்பட்ட சர்வர் இடம்
  • இங்கே தங்கள் வலைத்தள செயல்திறன் குறையாது
  • எளிமையாக சர்வரை ACCESS செய்ய இயலும்.

DISADVANTAGE:

  • மற்றைய HOSTINGயை விட இது விலை அதிகமாகும்.
  • தாங்கள் சர்வரை நிர்வகிக்க கணினி அறிவு வேண்டும்.

CLOUD HOSTING:

தற்பொழுது சந்தையில் பிரபலமாக வளர்ந்து வரும் HOSTING இந்த CLOUD HOSTING ஆகும். இந்த CLOUD HOSTINGல் தாங்கள் பலவிதமான சர்வர்களை பயன்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு சர்வரிலும் தங்களுடைய கோப்பு மற்றும் ஆவணங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.

தங்களின் ஏதாவது ஒரு சர்வர் மும்மரமாக இருந்தால் தங்களின் வலைத்தளமானது தானாகவே மற்றொரு சர்வருக்கு மாற்றப்படுகிறது.

ADVANTAGE:

  • இங்கே சர்வர் இழப்பு ஏற்படாது
  • தேவைக்கேற்ப பலவிதமான வளங்களைத் தருகிறது
  • பயன்படுத்தும் சேவைகளுக்கு மட்டும் பணம் கொடுக்கலாம்

DISADVANTAGE:

  • இதன் உண்மை விலையை மதிப்பிட இயலாது
  • எப்பொழுதும் ROOT ACCESS செய்ய இயலாது

WORDPRESS HOSTING:

இந்த WORDPRESS HOSTING ஆனது குறிப்பாக SHARED HOSTINGSக்கு மட்டும் பயன்படுகிறது. இது குறிப்பாக WORDPRESS நடத்துபவர்களுக்காக மட்டுமே பயன்படுகிறது. இங்கே தங்களின் வலைத்தளம் வேகமாகவும் துரிதமாகவும் செயல்படும். பலவிதமான PLUGINSகள் இங்கே காணப்படுகின்றன. இங்கே பலவிதமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

ADVANTAGE:

  • குறைந்த விலை
  • எளிமையான ONE CLICK WORDPRESS நிறுவல்
  • சிறந்த செயல்பாடு
  • முன்பே நிறுவப்பட்ட WORDPRESS PLUGINS & THEMES

DISADVANTAGE:

  • இது குறிப்பாக WORDPRESS வலைத்தளத்திற்கு மட்டுமே பயன்படுகிறது.

DEDICATED HOSTING:

இங்கே தங்களுக்கென்று தனியான PHYSICAL SERVER காணப்படுகிறது. இதன் மூலமாக தங்களுடைய வலைத்தளத்திற்கு சிறந்த FLEXIBILITY கிடைக்கிறது. இங்கே தாங்கள் முழுமையான வலைத்தளத்தையும் தங்கள் தேவைக்கேற்ப வடிவமைக்க முடியும். உண்மையில் DEDICATED SERVERS என்பது தாங்கள் தங்களுக்கென்று தனியாக சர்வர் இருப்பதற்கு சமமாகும். இது பெரும்பாலும் மிகப்பெரிய வலைத்தளத்திற்கு மட்டுமே பயன்படுகிறது.

ADVANTAGE:

  • முழுமையான கட்டுப்பாடு கிடைக்கிறது
  • சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது

DISADVANTAGE:

  • விலை அதிகம்
  • கணினி அறிவு அவசியமாகிறது

TO KNOW MORE ABOUT WEB HOSTING CLICK HERE….

Share the knowledge