2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு

2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு

அமேசானின் அலெக்சாவின்(Amazon’s Alexa) வருகையை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக Online Voice Shopping Deviceகளின் விற்பனை சிறப்பாக உள்ளது. ஆனால் தற்பொழுதைய ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்த குரலின் மூலம் இயங்கும் ஒலிபெருக்கியை கொண்டு பயனாளர்கள் அனைவரும் ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக என்னென்ன வாங்கலாம் என்ற பட்டியலை நிர்வகிக்கவே இந்த ஒலிபெருக்கியை(Voice Shopping Speaker) பயன்படுத்துகிறார்கள்.

தற்போதைய வலைதள செய்தி அறிக்கையின் படி அமேசான் பயனாளர்களின் இரண்டு சதவீதம் மட்டுமே இந்த அலெக்சா கருவிகளை பயன்படுத்தி ஆன்லைனில் குரலின்(online voice purchasing) மூலமாக பொருட்களை வாங்குகிறார்கள். இதைப்பற்றி நிபுணர்கள் 2022ம் ஆண்டிற்குள் Online Voice Shoppingன் விற்பனையானது 40 பில்லியனை தொடும் என்று கணிக்கிறார்கள் ஆனால் இது மற்ற நிறுவனங்களான கூகிள், சாம்சங், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்றவற்றை பொறுத்து மாறக்கூடும்.

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இணைய பயனாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்திய போது அவர்களில் பெரும்பாலானோர் Online voice Shopping பற்றி தெரியாமல் இருந்தனர் மேலும் சிலரோ இது சம்பந்தப்பட்ட கருவிகள்(online voice shopping device) இல்லாமலிருந்தனர். மேலும் ஒரு குறிப்பிட்ட 12% நபர்களோ இந்த Smart Speakerயை வெறும் வானிலையை அறிய மட்டும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.

தற்காலத்தில் NPR & EDISON குழுமத்தினர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி Smart Speakerயை பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் அதை கீழ்கண்ட தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

i) வீட்டு சாதன மின் கருவிகளை கட்டுப்படுத்தவும்.

ii) நமக்கு பிடித்த பொருட்களை பட்டியலில் இணைக்கவும்.

iii) நாம் என்னென்ன செய்ய வேண்டிய வேலைகள் என்பதை பட்டியலிடவும் உதவுகிறது.

இந்த Google, Microsoft, Apple, Amazon போன்ற நிறுவனங்களின் Online Voice Search தொழில்நுட்பமானது வருங்காலத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Share the knowledge