DISTRIBUTED CLOUD IN TAMIL – ஒரே நேரத்தில் இவன் இங்கேயும் இருப்பான் அங்கேயும் இருப்பான் எங்கேயும் இருப்பான்

DISTRIBUTED CLOUD IN TAMIL – ஒரே நேரத்தில் இவன் இங்கேயும் இருப்பான் அங்கேயும் இருப்பான் எங்கேயும் இருப்பான்

Distributed cloud என்பது ஒரு வகையான Public cloud Computing Service ஆகும். இந்த Public Cloud Computing Service ஆனது அனைவருக்கும் தகவலை எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு பிரித்துக் கொடுப்பது ஆகும். இந்த Public Cloud Computing Service சேவையானது பல்வேறு இடங்களில் Public Cloud Infrastructureயை இயக்குகிறது. இது தங்களுடைய Cloud Provider அல்லாமல் மற்றவருக்கும் ஒரே Control Panelல் எல்லாத் தகவலையும் நிர்வகிக்கிறது.

distributed cloud in tamil
Distributed Cloud in Tamil

இவ்வாறாக நன்கு கட்டமைக்கப்பட்ட Public cloud services மூலமாக தங்களுடைய வணிகமானது மென்பொருளை பல இடங்களில் பல நேரங்களில் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது. Distributed Cloud நாம் பயன்படுத்துவதன் மூலம் Hybrid Cloud மற்றும் Multi Cloud போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை நாம் களைய முடிகிறது.

Distributed Cloudன் அபரிவிதமான வளர்ச்சி Edge Computing என்னும் புதிய தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கிறது. இந்த Edge Computing என்பது Server மற்றும் Applicationsகளை அது உருவாக்கும் இடத்தில் இருந்தே இயக்குகிறது.

தற்பொழுது வளர்ந்து வரும் Internet of Things, Artificial Intelligence, Telecommunications போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக Distributed Cloud மற்றும் Edge Computingன் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. மேற்கண்ட மூன்று தொழில்நுட்பங்களும் பெரிய அளவிலான தகவல்களை Real Timeல் இயக்க தேவைப்படுகிறது.   

Distibuted Cloud பல்வேறு வகையான வேறுபட்ட Geographical Locationல் செயல்படுகின்றன. தகவல் தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை ‘Distributed’ எனும் சொல்லிற்கு அர்த்தம் தகவலானது ஒரு நேரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு கணினிகளுக்கு அனுப்பப்படுகிறது. Disributed Cloud மூலமாக உலகளாவிய சேவை விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் எந்தவொரு பகுதிக்கும் நாம் Responsive Communication வழங்க இயலும்.

Types of Distributed Cloud:

பல்வேறு வகையான Ditributed Cloud இருக்கின்றன. அவற்றுள் கீழ்க்கண்டவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

Public Resource Computing:

இது Cloud Computingன் ஒரு துணை வகை என்று அறியப்படுகிறது. இந்த வகையான Distributed Cloud ஆனது Cloud Computingன் ஒரு விரிவுபடுத்தப்பட்ட வரையாகக் காணப்படுகிறது. மேலும் இந்த Public Resource Computing பெரும்பாலும் Cloud Computingயை விட Distributed Computingயை ஒத்துள்ளது.

Volunteer Cloud:

இந்த வகையான தொழில்நுட்பமானது Cloud Computing மற்றும் Public Resource Computingன் ஒன்றிணைந்த தொழில்நுட்பமாகும். இம்முறையில் Cloud Computing வடிவமைப்பானது Volunteered Resource அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இம்முறையில் பல விதமான சவால்கள் இருக்கின்றன. இம்முறையை நாம் Peer to Peer Cloud அல்லது ad-hoc cloud என்றும் அழைக்கலாம்.

Benefits of Distributed Computing:

  • Distributed Cloud Computing ஆனது Dependability, Repition, Georeplication போன்ற தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பண்புகளைப் பெற்றுள்ளது.
  • Distributed Cloud Computing ஆனது Remote Replicas எனப்படும் தானாகவே பிழைகளை சரிசெய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • Distributed Cloud Computing ஆனது Wide Area Trafficயைக் குறைக்கிறது.
  • Distributed Cloud Computing ஆனது சிக்கலான பிரச்சனை மற்றும் தகவல்களை சிறுசிறு துண்டுகளாக பிரித்து பல்வேறு கணினிகளுக்கு அனுப்பி Processing செய்கிறது.

Drawbacks of Distributed Cloud:

  • Distributed Computing System அனைத்தையும் நிர்வகிக்க மற்றும் பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் கஷ்டமாக உள்ளது.
  • இங்கே குறிப்பிட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் மென்பொருளை மட்டும் அல்லாமல் இங்கே வன்பொருளையும் நிர்வகிக்க சிரமாக உள்ளது.
  • மற்ற ஏனைய சிஸ்டம்களோடு ஒப்பிடுகையில் Distributed Computingன் Deployment Cost அதிகம்.
  • Distributed Systemகளில் அனைத்து விதமான தகவல்களும் Centralized Computing Systemகளில் இருந்து எடுக்கப்படுவதால் இதனின் பாதுகாப்பை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

Use cases for distributed cloud and edge computing:

Distributed Cloud மற்றும் Edge Computing இணைந்து Multicloud Managementல் அனைத்தையும் எளிமையாக மாற்றி உள்ளன. இவைகள் இணைந்து Scalability, Development Velocity, Deployment of state of art, Automation, போன்ற அனைத்தின் செயல்பாடுகளையும் அதிகரித்து உள்ளது. இவற்றின் பிற பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Improved Hybrid Cloud and Multi Cloud Management

Efficient, cost-effective scalability and agility     

Easier industry or localized regulatory compliance

Faster content delivery

IoT, (AI) and machine learning applications

மேற்கண்ட அனைத்து விதமான பண்புகளையும் இந்த Distributed cloud and Edge Computing பெற்றுள்ளது. மேற்கூறிய பண்புகள் அனைத்தும் Multicloud Managementல் அனைத்து வேலைகளையும் எளிமையாக மாற்றி உள்ளன.

Distributed cloud in Future:

Distributed cloud தற்காலத்தின் நவீன பேசும் பொருளாக உள்ளது. இது பல வகையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் Public Cloud Infrastructureயை தங்கள் இருப்பிடத்திற்கே கொண்டு வருகிறது. இந்த Public Cloud Infrastructure என்ற பண்பானது Public Cloudல் ஏற்படும் பலவகையான சிக்கல்களை சரி செய்கிறது. கீழ்க்கண்ட சில சவால்களை நாம் உதாரணங்களாக கூறலாம்.

  • Regulatory issues when migrating applications to the public cloud
  • Lack of control over your public cloud

Regulations and Distributed Cloud:

ஒவ்வொரு Public cloud vendorம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறப்பாக செயல்படுகின்றன. உதாரணமாக IBM CLOUD கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பாக இயங்குகின்றன.

  • Dallas, Texas
  • Washington, D.C.
  • Frankfurt, Germany
  • London, England
  • Sydney, Australia
  • Tokyo, Japan

மேற்கூறிய குறிப்பிட்ட இடங்களில் IBM CLOUD சிறப்பாக செயல்படுகின்றன.

Share the knowledge