தமிழ் தொழில்நுட்ப கட்டுரை | ONLINE TEACHING PLATFORM

தமிழ் தொழில்நுட்ப கட்டுரை | ONLINE TEACHING PLATFORM

தமிழ் தொழில்நுட்ப கட்டுரை:-

ஒரு தகவலை எப்பொழுது வேண்டுமானாலும் எந்நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற சிந்தனை சிறப்பானது மேலும் தற்பொழுதுள்ள சூழலில் இணையமானது உலகம் முழுக்க பறந்து விரிந்து கிடக்கிறது இந்த நூற்றாண்டில் அனைவருக்கும் முக்கியமாக எழக்கூடிய கேள்வி என்னவெனில் கணினியானது ஆசிரியரின் இடத்தை நிரப்பும் என்பதேயாகும் அதற்குரிய சரியான பதில் நிச்சயமாக இல்லை என்பதேயாகும் கணினி மற்றும் இணையம் போன்ற சாதனங்களை கொண்டு இனி ஆசிரியர் தொழில் நடக்கும் தவிர முற்றிலும் மனித இனம் இல்லாமல் எந்த தொழிலும் நடக்காது என்பதே மெய்யானதாகும்

தமிழ் தொழில்நுட்ப கட்டுரை

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா கொடிய காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் தவித்து வருகின்றனர் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதில் மிகவும் சிக்கல் உள்ளது மேலும் சமூகத்தில் அனைத்து வித துறைகளும் ஓரளவுக்கு செயல்படும் பட்சத்தில் கல்வித்துறை முற்றிலும் முடங்கி பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எதிர்காலத்திலும் இது தொடர வாய்ப்புள்ளது ஆகையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் நலன் கருதி இந்த கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல திறமையான ஆசிரியர்கள் எங்கிருப்பினும் அவர்கள் ஜொலிக்க முடியும் அதற்கு உதவிபுரியவே நான் கீழ்கண்ட வலைத்தளங்களை பற்றி உங்களுக்கு விளக்கவுள்ளேன் மேலும் பெரும்பாலான அன்பர்களுக்கு ஆன்லைன் வேலை மேலும் அதில் வருமானம் ஈட்டுவது என்பது மிகவும் கொலபமாக உள்ளது ஏனெனில் இங்கு ஏராளமான போலிகளே உள்ளனர் வாருங்கள் மிகவும் நம்பகமான இணைய வலைத்தளங்களைப் பற்றி பார்க்கலாம்

Tutor

இணையத்தில் இருக்கும் வலைத்தளங்களில் மிகவும் பழமையானதும் மற்றும் நம்ப தகுந்ததுமான ஒரு சிறந்த வலைத்தளம் இந்த www.tutor.com என்ற வலைத்தளமாகும். இந்த வலைத்தளத்தில் ஆசிரியர் மாணவர் என்ற இருவரும் கற்பித்தல் முறையில் பாடங்களை படிக்கலாம் மற்றும் நடத்தலாம். இங்கே கற்றல் மற்றும் கற்பித்தலை தவிர்த்து மேலும் கீழ்கண்ட சேவைகளையும் அளிக்கிறார்கள்.

Tutoring

 peer coaching

 professional development

 training

 career help 

இந்த வலைத்தளம் மிகவும் புகழ் பெற்ற வலைத்தளமாகும். ஆசிரியர்கள் இணைய கற்பித்தலுக்கு இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் இது மாணவர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த வலைத்தளமாக உள்ளது. இதை பற்றி tutor.comன் கருத்தானது மாணவர்கள் இந்த வலைத்தளத்தை மிகவும் விரும்புகிறார்கள் ஏனெனில் இது மாணவர்களுக்கு மிகச் சிறந்த கற்றல் அனுபவத்தைக் கொடுக்கிறது.

Uteach

இந்த வலைத்தளமானது இணைய கற்பித்தல் முறைக்கு முற்றிலும் புதுமையான முறையை கையாள்கிறது. இங்கே நீங்கள் உங்கள் Online Courseயை பதிவேற்றம் செய்ய மட்டும் அனுமதிக்காமல்இது உங்களுக்கென்று ஒரு தனியான Portal Websiteஐ உருவாக்க வழி செய்கிறது. இந்த Portal Website ஆனது தங்களுடைய ஒரு தனிப்பட்ட Personal Brandஆக தங்கள் விருப்பப்பட்ட Domain மற்றும் Designல் உருவாகிறது. ஒரு முறை தாங்கள் Platformல் பதிவேற்றம் செய்த பிறகு தாங்கள் தங்களுடைய Video courseயை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். மேலும் Utech தங்களுக்கு ஒரு Custom Blogஐயும் அறிமுகப்படுத்துகிறது. இங்கே தாங்கள் தங்களுக்கு தேவையான Niche Blogயை இங்கு ஏற்படுத்த முடியும்.

இந்த Portal லின் சிறப்பம்சம் என்னவென்றால் Digitalizationனின் அபார வளர்ச்சியினோடே உங்கள் Portalக்கு தேவையான அனைத்து Functionகளையும் உங்கள் Portalல் வளர்க்கிறது.

Chegg Tutors

ஒரு மணி நேர கட்டண படிப்பிற்கு Chegg Tutor ஒரு சிறந்த தளமாகும்.இந்த வலைத்தளமானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவிட ஏற்படுத்தப்பட்டது. இந்த வலைத்தளம் மேலும் பல சிறப்பம்சங்களை online textbooks, homework help, online tutoring, scholarships, and internship matching  வழங்குகிறது. இந்த Platform ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தை பெற வழிவகை செய்கிறது. ஒரு ஆசிரியர் எப்பொழுது ஒரு வகுப்பை முடிக்கிறார்களோ அப்பொழுது மாணவர்களால் Feedback கொடுக்கப்படுகிறது.

Udemy

Udemy என்பது மற்றொரு வகையான இணைய வழி கற்பித்தல் வலைத்தளம் ஆகும். இணைய ஆசிரியர்களால் 80,000கும் அதிகமான பாடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 27 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களும் உள்ளனர். மற்ற வலைத்தளத்தை போல் இல்லாமல் இந்த வலைத்தளம் ஒரு சிறப்பம்சம் பெற்றுள்ளது. இங்கே நாம் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் இணைய பாடத்திட்டத்தை உருவாக்குகிறோம். மாணவர்கள் தங்களின் பாடங்களை இணையத்தில் வாங்கும் பொழுது தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் அதன் மூலம் வரும்.

Tutor Hub

இந்த இணைய வழி கற்றல் வலைத்தளம் பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது மிகவும் பாதுகாப்பான வலைத்தளம் ஆகும். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். ஆசிரியர்கள் Tutor Hub மூலம் பாடங்களை ஒழுங்குபடுத்தி சிறந்த இணைய வகுப்பறையை உருவாக்க முடியும். இந்த வலைத்தளம் ஒரு சிறந்த வலைத்தளமாக அனைவருக்கும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

Buddy teacher

இது ஆசிரியர்களுக்கான ஒரு மிகசிறந்த வலைத்தளமாகும். இந்த வலைத்தளம் அனைத்து விதமான ஆசிரியர்களுக்கும் ஏற்றதாகும். ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை இங்கே பதிவு செய்ய வேண்டும். உங்கள் இணைய வகுப்பு மற்றும் நம்பகத்தன்மைகளை இங்கே முன்னேற்ற முடியும். புதிதாக இணைய வழி கற்பித்தலுக்கு வரும் ஆசிரியர்களுக்கு இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாகும். இது ஆசிரியர்களுக்கு மிகவும் பொருத்தமான வலைத்தளமாகும். புதிதாக வரும் ஆசிரியர்கள் தங்களின் பாடக் குறிப்புகளை சமர்பிப்பதன் மூலம் மாணவர்களிடம் எளிதாக புகழடைய முடியும். இதன் மூலம் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மாணவர்களை நம்பகமான வாடிக்கையாளர்களாக பெற முடியும்.

Vipkid

இது ஆங்கிலத்தை மட்டும் கற்பிக்கும் ஒரு வலைத்தளமாகும். அவர்கள் ஆசிரியர்களுக்கு என்று தனியே ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். ஆனால் இதில் பின்னடைவாக கருதப்படுவது இங்கே தாய் மொழி பேசும் ஆங்கில பட்டதாரி பேச்சாளர்களை மட்டுமே பணியமர்த்துகிறார்கள். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஆசிரியர்கள் பாடம் நடத்த ஏதுவான நேரத்தை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் தங்களின் வழக்கமான வேலை நேரத்தில் எந்த வித இடையூறும் இல்லாமல் இங்கே VIPKIDல் பாடம் நடத்த இயலும்.

Your Own Website:

நீங்கள் ஒரு மிகசிறந்த இணைய கற்பித்தல் வலைத்தளம் எது என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது தங்களுக்கென்று ஒரு சொந்த வலைத்தளம் பற்றி எப்பொழுதாவது யோசித்ததுண்டா ஆம் நண்பர்களே தாங்களே ஒரு சொந்த வலைத்தளம் தொடங்கலாம். அதன் மூலமாக தாங்கள் விரும்பும் அனைத்து வித சிறப்பம்சம்களையும் அதில் சேர்க்க முடியும். அதன் மூலம் நீங்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உங்கள் நாடு மற்றும் மொழிக்கேற்ற படி சிறந்த கல்வி சேவையை அளிக்க முடியும்.

Share the knowledge