IMAP PROTOCOL IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மின்னஞ்சல் தகவலின் தலைமகன் IMAP PROTOCOL ஒரு பார்வை

IMAP PROTOCOL IN TAMIL | இவன் மின்னஞ்சலின் மின்னஞ்சல் தகவலின் தலைமகன் IMAP PROTOCOL ஒரு பார்வை

IMAP PROTOCOL IN TAMIL:

IMAP என்பது INTERNET MESSAGE ACCESS PROTOCOL என்பதாகும். இது ஒரு வகையான APPLICATION LAYER PROTOCOL ஆகும் இதன் பயன் என்னவென்றால் இது ஒரு மின்னஞ்சலை செர்வரிலிருந்து பெறப் பயன்படுகிறது. அதாவது ஒரு மின்னஞ்சலை ஒரு இடத்திலிருந்து(Source) மற்றொரு இடத்திற்கு அனுப்ப SMTP எனப்படும் புரோட்டோகால் பயன்படுகிறது.

IMAP PROTOCOL IN TAMIL
IMAP PROTOCOL IN TAMIL

இது ஒரு வகையான CLIENT/SERVER MODEL போன்ற அமைப்பைப் பின்பற்றுகிறது. நாம் இங்கே CLIENT SIDE ஒரு CLIENTயை அதாவது IMAP CLIENTயை பயன்படுத்துகிறோம் இது CLIENT SIDEல் கண்டிப்பாக இருக்கும் PROCESS ஆகும். அதே போல் செர்வர் பக்கம் ஒரு IMAP SERVERயை பயன்படுத்துகிறோம் இது செர்வர் பக்கம் கண்டிப்பாக RUN ஆகக் கூடிய மற்றொரு PROCES ஆகும். இரண்டு கணிப்பொறிகளும் நெட்வெர்க்கில் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த IMAP புரோட்டோகால் TCP/IP TRANSPORT LAYERக்கு நடுவில் இருக்கிறது. அதன் மூலமாக இது முழுமையான நம்பிக்கையைப் பெறுகிறது. ஒருமுறை TCP இணைப்பானது IMAP CLIENT மற்றும் IMAP SERVERக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டால் IMAP SERVER ஆனது தானாகவே PORT 143 பயன்படுத்துகிறது. ஆனால் இந்த PORT எண்ணானது மாற்றத்திற்குள்ளானது ஆகும். PORT 143 என்பது ஒரு வகையான NON-ENCRYPTED IMAP PORT ஆகும். ஒருவேளை IMAP CLIENT ஆனது பாதுகாப்பாக இணையத்தில் செயல்பட விரும்பினால் PORT 993 பயன்படுத்தப்படுகிறது.

நாம் ஏன் POP3க்கு பதிலாக IMAP பயன்படுத்த வேண்டும்:

TCP/IP MAILBOXல் இருந்த மின்னஞ்சல் பெறுவதில் POP3 எனப்படும் புரோட்டோகால் முன்னிலை வகிக்கிறது. இது ஒரு வகையான OFFLINE MAIL ACCESS MODELற்கு ஆதரவளிக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் அனைத்து மின்னஞ்சலும் செர்வரில் இருந்து RETRIVE செய்யப்பட்டு LOCAL MACHINEல் சேமிக்கப்படுகிறது பிறகு MAIL SERVERல் இருந்து DELETE செய்யப்படுகிறது.

தற்காலத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியை பெறுவதற்கு  POP3 PROTOCOLகளை பயன்படுத்துகின்றனர். மேலும் இது OFFLINE ACCESS MODELன் காரணமாக அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை. தற்பொழுது நடப்பில் நாம் ONLINE MODELயையே பரவலாக இந்த IDEAL WORLDல் பயன்படுத்துகிறோம்.

ONLINE MODELல் நாம் எப்பொழுதும் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டிய தேவையுள்ளது. நாம் POP3 PROTOCOLஐ OFFLINEல் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கலானது மின்னஞ்சல் அனைத்தும் நிரந்தரமாக செர்வரில் இருந்து நீக்கப்படுகிறது. இதனால் பல்வேறு கணினிகளில் இருந்து மின்னஞ்சலை பெற இயலாது. இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு என்னவென்றால் நாம் அனைத்து மின்னஞ்சலையும் லோக்கல் செர்வரில் சேமிக்காமல் REMOTE SERVERல் சேமிக்க வேண்டும்.

POP3 PROCOLOL ஆனது தகவல் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளையும் கொண்டுள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வு DISCONNECTED ACCESS MODEL பயன்படுத்துவதால் கிடைக்கிறது. இந்த DISCONNECTED ACCESS MODEL மூலம் நாம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டையும் செயல்படுத்த முடியும். இந்த MODEL மூலம் இணையத்தின் துணை இல்லாமலேயே பயனர் ஒரு மின்னஞ்சலை LOCAL SERVERல் RETRIEVE செய்து பயன்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் தாங்கள் செய்யக் கூடிய எந்த ஒரு மாற்றமும் CLIENT மற்றும் SERVER இரண்டிலும் SYNCHRONIZE செய்யப்படும். ஆனால் தங்களின் மின்னஞ்சலோ எப்பொழுதும் செர்வரில் சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த DISCONNECTED ACCESS MODELல் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக பழைய மற்றும் புதிய மின்னஞ்சல் இரண்டும் ஒரே நேரத்தில் RETRIVE செய்யப்பட்டால் அங்கே சிக்கல் உண்டாகிறது.

ஆகையால் இப்பிரச்சனையைத் தீர்க்க 1980ன் நடுவில் ஒரு சிறந்த புரோட்டோகாலை உருவாக்க வேண்டிய தேவை STANFORD UNIVERSITYக்கு தேவைப்பட்டது. ஆகையால் இது IMAP PROTOCOL என்ற ஒரு புதிய புரோட்டோகாலை உருவாக்கியது.

HISTORY OF IMAP PROTOCOL IN TAMIL:

IMAP ஆனது 1988ம் ஆண்டு JULY மாதம் IMAP VERSION 2 உருவாக்கப்பட்டது. 1990ம் ஆண்டு இது VERSION 3 ஆக UPDATE செய்யப்பட்டு IMAP உருவானது. இந்த IMAP PROTOCOL ஆனது பின்னாளில் EXTEND செய்யப்பட்டு MIME அதாவது MULTI PURPOSE INTERNET MAIL EXTENSION போன்ற பண்பிற்கு ஆதரவு அளித்தது.

IMAPன் பண்புகள்:

IMAP ஆனது ஒரு பயனர் மின்னஞ்சலை மின்னஞ்சல் பெட்டியில் இருந்து எவ்வாறு பெறுகிறார் என்பதைக் குறிக்கிறது. இது மூன்று வழிகளில் வேலை செய்கிறது. அதாவது 1.ONLINE 2.OFFLINE 3.DISCONNECTED MODE ஆகும்.

இதன் பண்புகள்:

  • ஒரு மின்னஞ்சலை REMOTE SERVERல் இருந்து எடுக்கிறது.
  • ஒரு MESSAGE FLAGயை அமைப்பது
  • பல்வேறு வகையான MAILBOXஐ நிர்வகிப்பது.
  • ஒரு கோப்பை தரவிறக்கம் செய்வதற்கு முன்னால் உணர்த்துவது.
  • ஒரு குறிப்பிட்ட பகுதி குறுஞ்செய்தியை மட்டும் நம்மால் தரவிறக்க முடியும்.
  • செர்வரில் பலவகையான மின்னஞ்சலை ஒழுங்குபடுத்த முடியும்.
  • மின்னஞ்சல் ஒரு HIRERCY ORDERல் ஒழுங்குபடுத்த முடியும்.

IMAP செயல்பாடுகள்:

IMAP என்பது ஒரு CLIENT-SERVER PROTOCOL ஆகும். இது POP3 மற்றும் ஏனைய TCP/IP PROTOCOLகளைப் போன்று செயல்படுகிறது. IMAP4 புரோட்டோகால் என்பது இது செர்வரில் இருக்கும் போது மட்டுமே செயல்படும். IMAP PROTOCOL ஆனது TCP PROTOCOLயை ஒரு தகவல் சரியாக போய் சேர்ந்து விட்டதாக என்று சோதிப்பதற்கு பயன்படுத்துகிறது. இது PORT NUMBER 143யை பயன்படுத்துகிறது. 

IMAP PROTOCOL செயல்படும் விதம்:

IMAP PROTOCOL IN TAMIL
FUNCTIONS OF IMAP

IMAP PROTOCOL ஆனது தனக்கு வெவ்வேறான சாதனங்களில் இருந்து வரும் மின்னஞ்சல் அனைத்தையும் SYNCHRONIZE செய்கிறது. இதன் மூலமாக தாங்கள் எப்படிப்பட்ட சாதனங்களைப் உபயோகம் செய்தாலும் அதாவது ANDROID, LAPTOP, NOTE, TAB, PERSONAL COMPUTER போன்ற எந்த வகையான சாதனம் மூலம் மின்னஞ்சல் அனுப்பினாலும் தங்களது மின்னஞ்சல் SYNCHRONIZE செய்யப்படுகிறது. இங்கே SYNCHRONIZE என்னும் சொல்லிற்கு அர்த்தம் கீழே விளக்கப்பட்டுள்ளது.

SYNCHRONIZE EXAMPLE: உதாராணமாக தாங்கள் LAPTAB மற்றும் ANDROID போன்ற சாதனங்களில் EMAIL APPLICATION பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தாங்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது ஒரு மின்னஞ்சல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதை தாங்கள் ANDROID PHONEல் OPEN செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது பின்னாளில் தாங்கள் லேப்டாப் மூலமாக மின்னஞ்சலைப் பார்த்தாலும் அது READ செய்யப்பட்டதாகவே காட்டும்.

சுருக்கமாக SYNCHRONIZE என்றால் ஒரு சாதனத்தில் தாங்கள் மின்னஞ்சல் OPEN செய்தால் மற்றொரு சாதனத்திலும் அது OPEN செய்யப்பட்டதாகவே காட்டும். நாம் ஒரு சாதனத்தில் மின்னஞ்சலை DELETE செய்தால் அது தானாகவே செர்வரில் DELETE செய்யப்பட்டு விடும்.

Share the knowledge