KEYLOGGER IN TAMIL – நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை இவன் கணினியின் ஒற்றன் KEYLOGGER

KEYLOGGER IN TAMIL – நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை இவன் கணினியின் ஒற்றன் KEYLOGGER

KEYLOGGER IN TAMIL:

Keylogger என்பது ஒரு உலவு பார்க்கும் மென்பொருளாகும் இதை நாம் எந்தவொரு கணினியில் வேண்டுமானாலும் நிறுவ இயலும். இதை நாம் கணினியில் நிறுவவதன் மூலம் நாம் அந்த குறிப்பிட்ட கணினியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும்.

KEYLOGGER IN TAMIL
KEYLOGGER IN TAMIL

இந்த keyloggerகள் பல வகைப்படும் இதில் Basic Keylogger ஆனது கணினியில்  நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை சேமிக்கப் பயன்படுகிறது. இதன் மூலமாக நாம் இந்த மென்பொருளை நிறுவும் கணினியில் தட்டச்சு செய்யப்படும் அனைத்து விதமான வார்த்தைகளையும் கண்காணிக்க முடியும்.

இந்த keyloggerன் Advanced Model ஆனது Screenshots, Sending report to email, History monitoring போன்ற பலவிதமான செயல்களைச் செய்கிறது. நமக்கு இந்த keyloggerயை நிறுவுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும். இந்த keyloggerல் நாம் எந்த Email Addressயை கொடுக்கிறோமோ அதற்கு சேமித்து வைக்கப்பட்ட அனைத்து விதமான தகவல்களும் வந்து சேர்ந்துவிடும்.

இதன் மூலமாக நாம் keyloggerக்கு நன்றி தெரிவிக்கலாம் அதாவது சேமிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் நேரடியாக நமது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படுவதால் நம்மால் அதை நிர்வகிக்க எளிதாக இருக்கும். இதன் மூலமாக ஒருவர் வலைத்தளத்தில் எந்தப் பக்கத்திற்கு வருகை தந்தார் அவர் தட்டச்சு வார்த்தைகள் உட்பட அனைத்து விதமான தகவல்களையும் நாம் கண்கானிக்க முடியும்.

KEYLOGGER IN TAMIL:

தங்களுடைய கணினியை தங்களைத் தவிர வேறு யாரேனும் உங்களுக்கு தெரியாமல் உபயோகிக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறீர்களா?

தங்களுடைய ஊழியர்கள் நேர்மையாக வேலை செய்கிறார்களா? என்று சந்தேகிக்கிறீர்களா?

தங்களுடைய குழந்தை கணினி முன்பு தேவையில்லாமல் அதிக நேரம் செலவழிக்கிறதே என்று சந்தேகிக்கிறீர்களா?

எந்த Keylogger உபயோகிக்க வேண்டும்?

இரண்டு விதமான Keyloggersகள் உள்ளன அவையாவன Software Keyloggers and Hardware Keyloggers ஆகும். Hardware Keylogger என்றால் நாம் பெரும்பாலும் Keygrabber Wifi Premium 2GB PS/2 என்ற keyloggerயை PS/2 PORT மற்றும் KEYBOARD என்ற இரண்டிற்கும் இடையில் உபயோகிக்கலாம். இதற்கு மேலாக கூடுதலாக எந்தவொரு மென்பொருளையும் நிறுவவேண்டிய அவசியமில்லை ஏனெனில் விசைப்பலகையில் தட்டச்சு செய்யப்படும் அனைத்து வார்த்தைகளும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.

எப்படி தகவல்களை வாசிப்பது?

Keylogger ஆனது தகவல்களை முன்பே தீர்மானிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறது. HARDWARE KEYLOGGERம் கணிப்பொறி LOGS உடன் சேர்ந்து கோப்புகளை சேமிக்கிறது.

அதைத்தவிர ENCRYPTED KEYLOGGER ஆனது WINDOWS, ANDROID, LINUX போன்ற பலவிதமான ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் வேலை செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது ANTIVIRUS கண்ணிற்கு புலப்படாது.

மற்றொரு வகையான KEYBOARD KEYLOGGER மிகவும் எளிமையான மெனுவைக் கொண்டுள்ளது. ஒரு கோப்பில் மிகவும் முக்கியமான வார்த்தையை மட்டும் கண்டுபிடிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கண்டுபிடிக்கிறது. இது WEB PAGE மற்றும் E-MAIL முகவரியை HIGHLIGHT செய்கிறது.

அடுத்த வகையான SCREEN LOGGER ஒரு GRAPHICS CARD மற்றும் MONITOR இவற்றிற்கு இடையே காணப்படுகிறது. இது அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்களான WINDOWS, LINUX, ANDROID போன்றவற்றுடன் ஒத்துப் போகிறது.

விசைப்பலகையுடன் வரும் KEYLOGGERகள் பெரும்பாலும் தகவல்களை மின்னஞ்சலுக்கு அனுப்பாது. இவைகள் தகவல்களை கணினியின் மென்பொருளில் சேமித்து வைத்திருக்கும். இந்த வகையான KEYLOGGERல் தகவல்களைப் பார்க்க வேண்டுமானால் நாம் அதற்குரிய COMBINATION KEYயை அழுத்த வேண்டும்.

Share the knowledge