எதிர்கால இணையத்தில் புரட்சியை ஏற்படுத்தி உலகத்தில் அனைத்து இணைய சாதனங்களையும் இணைக்கும் IPV6 ப்ரோடோகால்-TAMIL ARTICLE

எதிர்கால இணையத்தில் புரட்சியை ஏற்படுத்தி உலகத்தில் அனைத்து இணைய சாதனங்களையும் இணைக்கும் IPV6 ப்ரோடோகால்

இன்டர்நெட் ப்ரோடோகால் ஆனது எவ்வாறு இரண்டு கணினிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கிறது என்பதற்கு பயன்படுகிறது. வீடு மற்றும் நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக் மெயில் இருப்பதைப்போல இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் IP Address என்ற ஒன்று இருக்கும். எப்பொழுது கணினி ஒரு குறுஞ்செய்தியை மற்றொரு கணினிக்கு அனுப்புகிறதோ அப்பொழுது அது பெருநரினுடைய IP Address முகவரி மற்றும் அனுப்பரினுடைய IP Address முகவரியோடு அனுப்புகிறது.

IPV4 இன்டர்நெட் ப்ரோடோகாலில் அதனுடைய இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியானது கீழ்கண்டவாறு இருக்கும். IPV4 ல் இதனுடைய விகிதம் 0லிருந்து 255வரை ஆகும்.

Example: 192.168.1.113

IPV6 இன்டர்நெட் ப்ரோடோகாலில் அதனுடைய இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியானது கீழ்கண்டவாறு இருக்கும். IPV6ல் எட்டு ஹெக்சா டெசிமல் இலக்கங்களை கொண்டுள்ளது ஒவ்வொரு ஹெக்சா டெசிமலும் நான்கு இலக்கங்களை கொண்டுள்ளது

Example: 2001:0db8:0000:0042:0000:8a2e:0370:7334

இன்டர்நெட் ப்ரோடோகாலின் தற்போதைய புதிய வெளியீட்டு பதிப்பு IPV6 ஆகும் இது பல இணையங்களினூடே நமது எலக்ட்ரானிக் பொருளை நெட்ஒர்க்கில் அடையாளம் காண்கிறது. இணையத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதன் இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது உதாரணமாக நீங்கள் யாருக்காவது கடிதம் அனுப்பினால் அவர்களின் முகவரி மற்றும் தெருவை வைத்து கடிதம் அனுப்பதைப்போல இங்கே இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியை வைத்தே இணையத்தில் பிறருடன் தொடர்பு நிகழ்கிறது

இன்டர்நெட் ப்ரோடோகாலின் தற்போதைய படைப்பான IPV4ல் நாம் 4.3 பில்லியன் எலக்ட்ரானிக் சாதனங்களை இணைக்க முடியும். மேலும் அந்த சமயத்தில் 4.3 எலக்ட்ரானிக் கருவிகள் வரை இணைக்க முடியும் என்ற இலக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அபரிவிதமாக பெருகி வரும் இணைய சேவை மற்றும் ஸ்மார்ட் போன்கள் கணினிகள் தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றின் காரணமாக சமூகத்திற்கு ஏராளமான இணைய முகவரிகள் தேவைப்படுகின்றன.IPV6 பற்றி நாம் குறிப்பிடும் பொது அது நாம் IPV4ல் உள்ளது போல் ஏதும் வரையறை நிர்ணயிப்பதில்லை.

IPV4 ஆனது 32 Bit முகவரியையும் IPV6 ஆனது 128 Bit முகவரியையும் கொண்டுள்ளது. IPV4 மூலமாக நாம் 4.29 பில்லியன் முகவரிகளை உருவாக்க முடியும். ஆனால் IPV6 ஆனது 600 Quadrillion புதிய முகவரிகளை ஒரு சதுர கிலோமீட்டருக்கு உருவாக்க முடியும். IPV6 மூலமாக எப்பொழுது இணையத்திலிருக்கும் ஒவ்வொரு கருவிக்கும் ஒரு புதிய தனித்துவமான அடையாளம்(Unique ID) கிடைக்கிறதோ அப்பொழுது நமக்கு NAT(Network Address Translation)ன் உதவி தேவையில்லை. நேரடியாகவே நாம் Peer to Peer முறையில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். நெட்ஒர்க் முகவரி மாற்றம் என்றழைக்கப்படும் NAT(Network Address Translation)ல் ஏற்படும் தாமதத்தை குறைக்க நாம் IPV6 ற்கு மாற வேண்டியுள்ளது இங்கு NAT என்பது தனிப்பட்ட இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியை(Private Address) பொதுவான இன்டர்நெட் ப்ரோடோகால் முகவரியாக(Public address) மாற்றும் தொழில்நுட்பமாகும்

இந்த IPV6 தொழில்நுட்பம் மூலமாக இருவழி தகவல் பரிமாற்றமான IP Telephony, Video Conferencing, Gaming போன்றவை சிறப்பாக செயல்பட முடியும். மேலும் இது ஒரே நேரத்தில் பல விதமான சாதனங்களை இணைப்பதால் இதன் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என்ற ஐயம் எழக்கூடும் ஆனால் இதில் பாதுகாப்பு பல மடங்கு சிறப்பாக உள்ளது ஏனென்றால் இங்கு இது தனக்கென IPSEC என்ற ஒரு Protocolஐ கொண்டுள்ளது. இது IETF(Internet Engineering Task Force) என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது. இன்டர்நெட் ப்ரோடோகால் IPV4 பதிப்பு ஆனது நான்கு அமைப்புகளான ஒன்று முதல் மூன்று இலக்க எண்கள் வரை கொண்டுள்ளது. ஆனால் இன்டர்நெட் ப்ரோடோகால் IPV6 பாதிப்பு ஆனது எட்டு அமைப்புகளை கொண்ட நான்கு இலக்க Hexadecimal எண்களால் ஆனது.

TCP/IP MODEL அமைப்பின் கீழ் IP LAYER ன் கீழ் இந்த IPSECஆனது செயல்படுகிறது. IPSEC Protocol ஆனது பலவிதமான பாதுகாப்பு சேவைகளான Encryption, Authentication, Integrity, Replay Protection போன்றவற்றை கொண்டுள்ளது. IPSEC PROTOCOL ஆனது இணையத்தில் அனுப்பப்படும் ஒவ்வொரு Data Packetயையும் Encrypt செய்கிறது. IPSEC ப்ரோடோகால் இரண்டு விதமான Authentication Header(AH authentication header & ESP extension header)மூலமாக செயலாற்றுகிறது. நீங்கள் ஒவ்வொரு முறையும் இணையத்துடன் இணையும் பொது தங்களுடைய இணைய சேவையை வழங்கும் நிறுவனம்(INTERNET SERVICE PROVIDER) மூலமாக தங்களுக்கு Internetயை Dynamicஆக கொடுப்பதே public ip address எனப்படும்.

BENEFITS OF IPV6:

சிறந்த செயல்பாடு (BEST PERFORMANCE)

சிறந்த திறமை (BEST EFFICIENCY)

சிறந்த பாதுகாப்பு (BEST SECURITY)

Routing Table அளவைக் குறைக்கிறது

IPV5 ஒரு பார்வை

இன்டர்நெட் ப்ரோடோகால் பதிப்பு 5 (IPV5) என்ற ஒரு ப்ரோடோகால் இருந்தது அதனுடைய மற்றொரு பெயர் இன்டர்நெட் ஸ்ட்ரீம் ப்ரோடோகால்(Internet Stream Protocol) ஆகும்.இது சுருக்கமாக ST என்றழைக்கப்பட்டது. இது வாய்ஸ் மற்றும் வீடியோவிற்கு ஆதரவளிக்கும் வகையில் Connection oriented communicationற்கு உதவுகிறது. இருப்பினும் IPV4ல் இருக்கும் அதே பிரச்சனை இதிலும் காணப்பட்டது ஆம் இதுவும் அதை போன்றே 32 bit address scheme ற்கு ஆதரிப்பதால் இது பெரிதாக வெற்றியடையவில்லை.

Share the knowledge