IOT IN TAMIL – INTERNET OF THINGS தானியங்கி உலகத்திற்கு அடிகோலும் IoT தொழில்நுட்பம் பற்றிய ஒரு அறிமுகம்

  1. IOT IN TAMIL – INTERNET OF THINGS தானியங்கி உலகத்திற்கு அடிகோலும் IoT தொழில்நுட்பம் பற்றிய ஒரு அறிமுகம்

IoT என்பது உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான வன்பொருள் கருவிகள் இணையத்துடன் இணைக்கப்படுவதாகும் இந்த அனைத்து கருவிகளும் தரவுகளை சேகரிக்கவும் பகிரவும் பயன்படுகிறது.

HISTORY:-

பொருட்களுடன் உணர்வு(SENSOR) மற்றும் அறிதிறனை(INTELLIGENCE) சேர்ப்பது பற்றி 1980 மற்றும் 1990ல் பரவலாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. கெவின் அஸ்தோன் என்பவர் 1911ல் INTERNET OF THINGS என்று பெயரிட்டார்

UBIQUTOUS COMPUTING:-

ubiquitous computing தான் RFIDக்கு அடிப்படியாக உள்ளது. ubiquitous computing என்பது அனைத்து விதமான SMART OBJECTகளும் தகவல்களை பரிமாறிக்கொள்வது ஆகும். ubiqutous computing பொதுவாக கம்பியில்லா தந்தி(wireless & network technology) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

HOW IOT WORKS

இதில் கீழ்க்கண்டவை அனைத்தும் அடங்கும்,

i) mobile devices,

ii) embedded systems,

iii) wearable computers,

iv) radio frequency ID (RFID) tags,

v) middleware and software agents,

vi) voice recognition and artificial intelligence (AI)

UBIQUTOUS எனப்படுவது பயனாளர்களின் வேலையை எளிமையாக்குவது ஆகும். உதாரணத்திற்கு Apple watch இதில் நாம் மற்றவர்களுக்கு அழைப்பும் விடுக்கலாம்.

RFID:-

Radio frequency identification system (RFID) இது ஒரு தானியங்கி தொழில்நுட்பம் இது எந்திரம் மற்றும் கணினியை தானாகவே அடையாளம் கண்டுகொள்ள மற்றும் தரவுகளை பதிவேற்றவும் தனிப்பட்ட நபர்களின் நோக்கத்தை கட்டுப்படுத்தவும் ரேடியோ அலைகள் மூலமாக செயலாற்றுகிறது. இந்த RFIDயை Internetஉடன் இணைப்பதே IoT ஆகும். RFID என்பது IoTன் முன்னோடியாக கருதப்படுகிறது .

PROTOCOLS:-

IoT-க்கு வயர்லெஸ் கம்யூனிகேஷன் நெட்ஒர்க்ஸ் (Wireless Communication Networks) தான் அடிப்படை. வயர்லெஸ் நெட்ஒர்க்ஸ்-ல் பின்வரும் 3 ப்ரோடோகால்ஸ் பயன்படுத்தப்படுகின்றன:

1. Low-rate wireless communication

2. ZigBEE Wirless

3. Wi-Fi மற்றும் Wi-MAX

1. Low rate wireless communication:-

இதன் Standards LR-WPAN, IEEE 802.15.4-2015 ஆகும்.

2. Zigbee wireless:-

ZigBEE Wirless இன் அடிப்படை IEEE 802.15.4, இது Physical and Media access, MAC layers -ஐ வரையறுக்கிறது.

3. Wi-Fi மற்றும் Wi-MAX:-

மூன்றாவது ப்ரோடோகாலான Wi-Fi , IEEE 802.11 family of standards ஆல் வழிநடத்தப்படுகிறது. IoT இன் கடைசி ப்ரோடோகால் Worldwide Interoperability for Microwave Access. இது சுருக்கமாக WiMAX என்று அழைக்கப்படுகிறது. IEEE 802.16e Standard இந்த WiMAX இன் Standard ஆக அறியப்படுகிறது.

APPLICATIONS:

MEDICAL FIELD:

கையில் பட்டை போல் அணிந்து உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படும் சாதனங்கள் IoT யின் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று. இது மட்டுமல்ல, நீரழிவு மற்றும் இதய நோய் கொண்ட நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிப்பதிலும் பங்காற்றுகிறது.

உடலில் இணைக்கப்பட்ட சென்சார்கள், உடல் தன்மை, மருந்து உட்கொள்ளல், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி (Motion Tracking Sensors) முதலான தரவுகளை சேகரிக்கும். சுற்றுப்புற சென்சார்கள் நோயாளி இருக்கும் அறையின் காற்றின் தரம், வெப்பநிலை, மற்ற ஆபத்துகள் இவற்றை சேகரிக்கும்

இவை மைக்ரோ பிராஸஸர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலருக்கு அனுப்பப்படும். தரவுகள் ஆராயப்பட்டு கேட்வே மூலம் கிளவுடில் இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சிஸ்டம்களுக்கு அனுப்பப்படும். சரியான நேரத்தில் சரியான அளவில் (Dosage) மருந்துகளை வினியோகம் செய்யும் சாதனங்களிலும் பயன்படுகிறது.

AUTOMATIC HOME:

சூழல் மற்றும் நேரத்துக்கு தகுந்தாற்போல் தாமாகவே இயங்கும் விளக்குகள் (Smart Lightings and Smart Thermostats), துணிகளின் தன்மை, அழுக்கு இவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் சுழற்சியை முடிவு செய்து இயங்கும் துணி துவைக்கும் எந்திரங்கள் (Smart Washing Machines) என IoT இன் பயன்பாடுகளுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

இத்தகைய சாதனங்கள் பயனீட்டாளர்களின் வேலையை சுலபமாக்குவது மட்டுமின்றி, ஆற்றல் சேமிப்பிலும் (Energy Saving) முக்கிய பங்காற்றுகின்றன.

INDUSTRY 4.0:

அடுத்த தொழிற்புரட்சியாக கூறப்படும் இண்டஸ்ட்ரி 4.0-இல் Internet of Things (IoT) யின் பங்கு அளப்பரியது. ஸ்மார்ட் ஃபாக்டரிகளில், Internet of Things (IoT) ஆனது, சாதனங்கள், சென்சார்கள், எந்திரங்கள் மற்றும் தொழிற்சாலையின் மற்ற பல பாகங்ககளையும் இணைக்கிறது. Internet of Things (IoT) மூலம் கிடைக்கும் தரவுகளை பெரிதும் பயன்படுத்துவதன் மூலம் சிக்ஸ் சிக்மா (Six Sigma) போன்ற தொழில்நுட்பங்கள் நல்ல பலன்களை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன.

nternet of Things (IoT) இன் மூலம், சாதனங்கள் பழுது படுதல் (Equipment Downtime) 15 முதல் 95% வரை குறைக்கப் படுவதாக கூறுகிறார்கள். மேலும் Internet of Things (IoT) யினால் ஆலைகளில் தொழில்முறை கழிவுகள் (Process Waste) மற்றும் ஆற்றல் நுகர்வு (Energy Consumption) பல மடங்கு குறைவதாகவும் அறியப்படுகிறது.

தானியங்கி கார்கள் (Autonomous cars) மற்றும் ஃபிளீட் மேனேஜ்மென்ட் (Fleet Management) இவற்றில் IoT தொழில்நுட்பம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. ஃபிளீட் மேனேஜ்மென்ட் என்பது விற்பனை சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) யில் ஒரு முக்கிய அங்கம்.

பொருட்கள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து இறுதியாக நுகர்வோரிடம் சென்று சேரும் வர பல இடங்களுக்கு பயணிக்கின்றன. இவற்றை சுமந்து செல்லும் வாகனங்களை திறம்பட திட்டமிட்டு நிர்வாகம் செய்யும் துறைதான் ஃபிளீட் மேனேஜ்மென்ட் என்று அழைக்கப்படுகிறது.

இதில் வாகனங்களின் இருப்பு நிலை, தடங்கள் இவற்றை ட்ராக் செய்வது தகவல்களை திரட்டி அவற்றை ஆராய்ந்து திட்டமிடுவதற்கு IoT தொழிநுட்பம் பயன்படுகிறது

Cloud to Edge:

Internet of Things (IoT) -யினால் சேகரிக்கப்படும் தரவுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமானது. இது அத்தனையையும் ஆராய்வதற்க்காக கிளவுட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பெரிய தலைவலி. இதற்கு மாற்றாக எட்ஜ் டெக்னாலஜியை (Edge Technology) நோக்கி ஸிஸ்கோ, ஹெச் பி இ, டெல் போன்ற நிறுவனங்கள் பயணிக்கத் தொடங்கி உள்ளன.

இதன் மூலம் தொழில்நுட்பத்தில், கணிப்பொறி ப்ராஸஸர்கள், தகவல் திரட்டும் சாதனங்களுக்கு மிக அருகாமையிலேயே அமைக்கப்படுகின்றன.

இவை வெறும் தரவு மையங்களாக (Data Center) மட்டும் செயல்படாமல், கம்ப்யூட்டிங் ஆற்றலையும் உளளடக்கியவையாக இருக்கும். இதனால் தரவுகளை கிளவுடுக்கு அனுப்பும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு, நெட்ஒர்க் பயன்பாடும் பெருமளவு குறைக்கப்படுகிறது.

முன்பே சொன்னது போல் Internet of Things (IoT)-யினால் சேகரிக்கப்படும் தரவுகளின் அளவு மிக மிக பெரியது. இது அத்தனையையும் ஆராய்வதற்க்காக Big Data Analysis தொழில் நுட்பங்கள் மிக முக்கியம். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), எந்திரக் கற்றல் (Machine Learning) போன்ற தரவு அறிவியல் (Data Science) முறைகள் Internet of Things (IoT)-ஐ அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன.

Internet of Things சாதனங்களின் வருடாந்திர பயன்பாடு 31% வளர்ச்சி அடைந்து 2010 -ல் 8.4 பில்லியனை தொட்டது. இது 2020-ல் 30 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது. பண மதிப்பில் உலக அளவில் இது 7.1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என நம்பப்படுகிறது.

Share the knowledge